Tuesday, 9 May 2017

பாமரனின் பார்வையில் செட்டிநாட்டு செந்தமிழ் கம்ப விழா

This Paper was presented by me  in 4th World tamil conference conducted by Karaikudi Kamban Group on 9th April 2017 at Kottaiyur near Karaikudi

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா …….. (புறம்: 192)

சமுதாயத்திற்கு, கனியன் பூங்குன்றனார் தந்த செந்தமிழ் வாக்கு!

குகனொடும் ஐவர் ஆனேம்
    முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
    எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
    நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து,
    புதல்வரால் பொலிந்தான் நுந்தை.
(யுத்த காண்டம் - வீடணன் அடைக்கல படலம் – 6635)

இன்று காரைக்குடியிலிருத்து கணடா வரை அனைவரும் முகநூலில் இனைவு. அன்றய வாக்கு, இன்றைய நிதர்சனம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு
. (குறள் 423)
இது எக்காலத்தக்கும் பொருந்தும் வள்ளுவன் வாக்கு நமது தமிழில்

கற்றது, கைமன் அளவு , இது ஒளவை வாக்கு. இது அனைத்தையும்  உற்று நோக்கினால், ஒன்று தெள்ள தெளிவாகும். செந்தமிழ் தந்த முத்துகள் அனைத்தும் எக்காலத்தக்கும் மனிதனை வழிநடத்தும், மகோன்தமான கருத்துக்கள்.

கருத்துகள் மட்டுமா, ரசிக்க, சுவைக்க, எதுகையும், மோனையும், உவமைகளாக, எத்துணை , எத்துணை  பாடல்கள்

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)

என்று பெயர், ஊர் தெரியாத், சங்க புலவன்  பாடி சென்றிக்கின்றான், என்னவொரு உவமை, செம்மன்னும் , நீரும், சேரந்தால்,பிரித்து பார்க முடியாதது போல, தலைவனும், தலைவியும், கலந்தார்கள். கருத்தான உவமை, ரசிக்க, ரசிக்க திகட்டாத உவமை

அன்று தோள் கண்டார், தோளே கண்டார்என்பான் கம்பன், இன்று, கைபேசி கண்டார், கைபேசியே கண்டார், என்று அறிவோம்

தோள் கண்டார் தோளே கண்டார்;
    தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
    தடக் கை கண்டாரும் அஃதே;
வாள் கண்ட கண்ணார் யாரே
    வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கண்ட சமயத்து அன்னான்
    உருவு கண்டாரை ஒத்தார்.
(பால காண்டம், உலாவியற் படலம் 1166)

என்னவொரு மொழியாக்கம், காட்சியை கவிபடுத்தவதில்.

இதில் சில பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்ததுண்டு. படித்தவர், படிக்காதவர், முதியவர், பாமரர் , அணைவருக்கும், நல்ல வாழ்வியல் சிந்தனைகளை, கொண்டு சேர்க்க, மொழி ரசனைய வளர்க்க, விழாக்கள், தமிழ், இலக்கிய விழாக்கள் தேவை. இதில் குறிப்பாக, செட்டிநாடு, தோற்றுவித்து, நடத்தி வருகின்ற விழாக்கள், கம்பன், விழா, குறள் விழா ஆகும்.

செந்தமிழ் வளர்த்த செட்டிநாட்டில் உதித்த கம்பன் கழகத்தை, முதல் கம்பன் கழகத்தை பற்றி பகிரலாம் என்று தலைப்பை பார்த்தவுடன் எண்ணம் வந்தது. முதலில் செட்டிநாட்டில் பிறந்தவன் என்பதாலும் அறியாப்பருவத்திலே அரிய தமிழை, கம்பன் கழகத்தின் தரையிலிருந்து கேட்டவன் என்பதாலும் தெரிந்ததை, அறிந்ததை, உணர்ந்ததை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள தருகின்றேன்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் அறிமுகம் நெடுங்காலம் முன் நிகழ்ந்தது. காரணம் திரு சா.கணேசன். செட்டிநாட்டு வழக்கில் அம்மான்”, பொது வழக்கில் மாமா.

"செவுக்குண வில்லாத போழ்து
சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" (குறள் 412)

என்பது வள்ளுவன் வாக்கு. அந்தக்காலத்தில், எனது சிறு வயதில் வயிற்றுக்கு கம்பன் கழகத்தில் உணவு கிடைத்த போது, செவிக்கு உணவும் கம்பன் கழகத்தில்  ஒலி பெருக்கிகள் மூலம் வந்து விழுந்தது. அது தான் விதையோ ? எனக்கு இன்றிருக்கும் தமிழ் ஆர்வத்தின் மூல காரணமோ?

முதலில் கம்பன் விழா, காரைக்குடி மீனாட்சி பெண்கள் பள்ளியில் நடைபெற்று வந்தது. அங்கு செல்லாமல் எங்கள் வீட்டில் இருந்தபடியே முழு பேச்சையும் கேட்க ஒலிபெருக்கிகள் உதவி செய்தன. வருடா வருடம் செட்டிநாடு தந்த செந்தமிழை கேட்டே வளர்ந்திருந்தோம். குடுமியை தன் அடையாளமாகக் கொண்டுள்ள ராதா கிருஷ்ணன் , க.கு.கோதண்டராம கவுண்டர் , அ.ச.ஞானசம்பந்தன் , நீதிபதி ஐயா முகம்மது இஸ்மாயில் , கோவை தொழிலதிபர் ஜி.கே.சுந்தரம், முதல்வர் கருணாநிதி , கவிஞர் கண்ணதாசன் என்று எத்தனையோ பேரின் செந்தமிழ் கேட்டு இருக்கின்றேன், அவர்களை பார்த்திருக்கிறேன். மேலே குறிப்பிட்ட பெயர்களை பார்க்கும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவர் அந்தணர், மற்றொருவர் கவுண்டர், இனொருவர் முகமதியர் மற்றும் முதல்வர், கவிஞர் என்று சமுதாயத்தில் பல நிலைகளில் இருப்பவர்கள்.  இவர்கள்  சாதி மதம் இனம் கடந்தவர்கள். தமிழால் இணைந்தவர்கள். காரைக்குடி கம்பன் கழகத்தில் இணைந்தவர்கள். இது செட்டிநாட்டில் மத சார்பின்றி தமிழை வளர்த்தற்கு சான்றாகும். இத்துணை பேர் இருந்தும் எந்தவித அசம்பாவிதமோ நெருடல்களோ கேள்விப்பட்டதில்லை, பார்த்ததில்லை. இணக்கமான செந்தமிழை வளர்க்கும் முயற்சியை கண்டிருக்கிறேன். அன்று புரியாத வயது. இன்று இதை எண்ணி பார்க்கும்போது இது எவ்வளவு கடினமான செயல், இதை கம்பன் கழகம் எவ்வாறு வெற்றிகரமாக கையாண்டு கொண்டிருக்கிறது என்று நினைத்து பெரும் மதிப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. மற்றொரு ஆச்சிர்யமான அனுபவம் இது போன்று பல் நிலையில் உள்ள அதிகாரத்தில் இருப்பவர்களை வைத்து விழா நடத்தும் போதும் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் விழாவை ஆண்டாண்டு காலமாக நடத்தி வருவது நிச்சயமாக எளிதான செயல் அல்ல. இந்த காலத்திலும் அந்த மரபு விட்டுவிடாமல் தொடர்ந்து வருவது பாராட்ட தக்க விஷயம்.

விழா அமைப்பாளர்களுக்கு மேலாண்மை தெரிந்தவர்களும் தெரியும் இது எவ்வளவு கடினமான செயல் என்று. இருந்தும் காலம் தவறாமையை கண் போல் காப்பது கம்பன் கழகத்தின் சிறப்பு.
இது இளவயது நியாபகங்கள் பின்னர் கல்லூரி சென்று பொறியியல் படிக்கையில் விஞ்ஞானத்தின் தாக்கத்தால் கம்பனும் செந்தமிழும் இரண்டாம் பட்சமாக தோன்றிய காலங்கள். ஆயிரம் வருடம் முன் கம்பன் எழுதிய பாடல்களுக்கு இன்று என்ன தேவை இருக்கப்போகிறது. இந்த பட்டிமன்ற விவாதங்கள் ராமனையும் இலக்குவனை பற்றியும் தேவையா என்றும் தோணுவது உண்டு. விஞ்ஞானமும், பொருள் ஈட்டலும் தந்த அர்த்தங்களை தமிழ் தருவதாக அர்த்தமுள்ளதாக தோன்றவில்லை. காலங்கள் உருண்டபோது கம்பனை படித்த போது புரிந்தது. கம்பனும் கம்பராமாயணமும் காலத்திற்கு அப்பாற்பட்டவர்கள். காரணம், விஞ்ஞானம் வேறு தமிழ் ரசனை வேறு. அவரவர் எண்ணங்கள் படி இரண்டும் தேவைப்படுகிறது. சிற் சில கால கட்டங்களில் ஒன்றை ஒன்று மிஞ்சி விடுகின்றது. கம்பனின் கவிதைகள் படிப்பதற்கு ரசிப்பதற்கு ஏற்றது.
கீழ்கண்ட பாடலில் கம்பன் எத்தனை வண்ணங்களை காட்டுகிறான்.

இவ் வண்ணம் நிகழ்ந்த வண்ணம்,
    இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய் வண்ணம் அன்றி, மற்று ஓர்
    துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரின்
    மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்,
    கால் வண்ணம் இங்குக் கண்டேன்.
(பாலகாண்டம், அகலிகைபடலம், 559)

ராமாயணம் மூலமாக கம்பனின் கருத்துக்கள் வாழ்வதற்கேற்றது. விஞ்ஞான படி சீதை இந்தியாவிலுருந்து இலங்கைக்கு ராவணனோடு பறக்க முடியுமா என்று பார்ப்பதை விட சீதையின் கற்பு நிலை குணநலன்கள் இன்றைய வாழ்விற்கு ஏற்றதாக இருக்குமா? ராமனின், கோதண்ட ராமனின் எளிமையான பண்பு நலன்கள் நாம் பார்த்து பயன் பெறலாமா என்ற கண்ணோட்டத்தில் அது இன்றும் தேவையே! அர்த்தமுள்ளவையே! பிரபஞ்சத்தில் மனிதன் மனிதனாக வாழ மானுடம் வென்றதம்மாஎன்று கூறப்படும் ராம காதை அர்த்தமுள்ளதே! அறிந்தேன், இன்று வரைந்தேன் இந்த கட்டுரையை, வணங்கினேன் கம்பன் கழகத்தை.

நான் கோவையில்  பொரியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எனது அம்மான்  திரு சா.கணேசன் கோவை மருத்துவமனையில் காலமானபோது நானும் அங்கிருதேன். அன்றுலிருந்து இன்று வரை செட்டிநாடு செந்தமிழை மறந்து விடவில்லை, வளர்ந்துதான் வருகிறது. எனவே கம்பன் கழகம் என்பது தனி மனித ஆராதனை அல்ல. 75 ஆண்டுகளாக பவள விழா கண்ட கம்பன் கழகமும், தொடர்ந்து பீடு நடை போட்டு வருகின்றது. இது தமிழர்களின் வாழ்வியலுக்கான கம்பன் விழா. இது என்ன புது வார்த்தை வாழ்வியலுக்கான ? ஆம், எனக்கு புரிகின்றது. ராமகாதை என்பது வாழ்வியலுக்கான காவியம் அதை கம்பன் எத்தனையோ இடங்களில் எளிதாக சுவையாக பசுமையோடு தந்துள்ளான். எனவே கம்பனை படிப்பதும், கம்பன் கழகங்களில் கம்பனை கேட்பதும் நமது ஆழ் மனதை பண்படுத்தும், அது மனிதகுல மேன்மைக்கு ஆதாரம். ராமாவதாரம் மனிதனை உய்வு படுத்த வந்த செயலே என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். கம்பன் கழகங்கள் என்பது ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி என்று ஒரு பொழுது போக்கு சாதனம் அல்ல. வாழ்வியலை வளமாக்கும் பாடல்கள் கொட்டிக்கிடக்குது எங்கள் கம்பனில் . இதோ சில.

யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின்
போர் ஒடுங்கும் புகழ் ஒடுங்காது; தன்
தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின்
வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? ‘
(அயோத்தியா காண்டம் ,மந்தரை சூழ்ச்சிப் படலம்1508)

இங்கு யார்கூடவும் பகை கொள்ளக்கூடாது, என்ற கருத்து முன்னிருத்தபடுகின்றது. இது மக்களுக்கும் மந்திரிக்கும் மன்னர்களுக்கும் பொருந்தும் தானே.

இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
நினையும் நீதிநெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ?
(அயோத்தியா காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம் – 1513)
கம்பன் அன்று அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெளிவுபட கூறுகிறான். இன்று தமிழ்நாட்டின் முதல்வர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு இதை விட வேறு விளக்கம் வேண்டுமா? கம்பனை படித்து பின்பற்றினால் அன்றும் இன்றும் என்றும் சமுதாயத்திற்கு நல்வழியே.

வண்மை இல்லை, ஓர்
    வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, நேர்
    செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய்
    உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல்
    கேள்வி மேவலால்.
(பால காண்டம், நாட்டுப் படலம் – 84)

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால், அதாவது பெறுவோர் இல்லாததால் கொடுப்பவர்கள் இல்லை. இதையே பிற்கால கவிஞன் நல்ல தமிழில் வறுமைக்கு வறுமை வைப்போம் என்றான் .
இந்த பாடல்கள், படிப்பவரை மீண்டும் , மீண்டும்  படிக்க தூண்டும் பாடல்கள், ரசிக்க தக்க பாடல்க்ள

தற்போது தொலைக்காட்சிகளில் சிறப்பு  விடுமுறை தினங்களில் பட்டிமன்றங்கள் மிக மிக பிரபலமே. சில ஒற்றுமைகளை வேற்றுமைகளையும் பாப்போம். இந்த பட்டிமன்றங்களின் மூலம் கம்ப கழக பட்டிமன்றங்களே. அங்கிருந்த ரசனை செந்தமிழ் உச்சரிப்புகள் கவிதை வளம் இன்று குறைவே. செந்தமிழ் கேட்க கம்ப கழக பட்டிமன்றங்களுக்கு செல்ல வேண்டும். பண்பாடு பற்றி பார்த்த ஒரு செயலை பகிரலாம் என்று  எண்ணுகிறேன். தற்போது தலைவர் பேச்சாளர்களது பேச்சை முடிக்க காலம் கருதி மணி அடிப்பது இடை மறுப்பது என்று பல வற்றை பார்க்கின்றோம். கம்பன் கழகத்தை பார்த்தவன் என்ற முறையில் இது எனக்கு சற்று நெருடலாகவே தோன்றும். மணி அடிக்காமல் பொது மக்களுக்கு தெரியாமல் எப்படி காலத்தை நிர்ணயம் செய்து பேச்சுகளை வழி நடத்தினார்கள் என்று தோன்றலாம். அது ஒரு சிறு ரகசியமே. காலத்தை கணிப்பதற்கு என்று தனியாக திரு லெ.கணேசன் போன்றவர்கள் தனியாக மேடையின் ஒரு பக்கம் இருப்பார்கள். பொது மக்களுக்கு தெரியாமலும் பேச்சாளர்களுக்கு தெரியும் படியும் நமது போக்கு வரத்து விளக்குகள் போன்று மஞ்சள் சிவப்பு விளக்குகளை இயக்கி பேச்சாளர்களுக்கு சத்தமின்றி தெரிவிப்பார்கள். மஞ்சள் விளக்கு வரும்பொழுது சீக்கிரம் முடிக்க வேண்டும். எனவே பொது மக்களுக்கு தொந்தரவில்லை, அதே சமயம் பேச்சாளர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டது, என்ன ஒரு நேர்த்தியான பண்பாட்டின் உச்சம். இதை நான் வியக்கதா நாளே இல்லை. செட்டிநாட்டின் பண்பாட்டிற்கு இது ஒன்றே இலக்கணம். இன்னொரு பண்பாட்டையும் பார்த்துவிடுவோமா.. விழா மேடைகளில் ஒலி வாங்கி கிடைத்தால் அதை விட்டு விடாமல் ஐந்து மணித்துளிக்கு பதில் ஐம்பது மணித்துளிகளுக்கு பேசுபவர்கள் ஏராளம். அதுவும் அவர்கள் நடத்துனர்களாக இருக்கும் பட்சத்தில் இன்னும் மணித்துளி கூடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அப்படி இருக்கையில் காரைக்குடி கம்பன் கழகத்தில் "கம்பன் வாழ்க" "கன்னி தமிழ் வாழ்க" என்று இரண்டு கோஷங்களை தவிர வேறு எதுவும் திரு சா.கணேசன் பேசுவதில்லை. தனது கழகத்தில் தானே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை  அடுத்தவர்கள் பேச ஆயிரம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த பண்பாடே.
இலக்கிய விழாவிற்க்கு வருபவர்களை, பொது ஜனம், என்பார்கள், இது வடமொழி, சொல், பார்வையாளர்கள், பரவாயில்லை, சொல்லாம், காரை கம்பன் கழகம், கற்று தந்த, செந்தமிழ், சொல், நோக்கர்கள். அது என்ன நோக்கர்கள், கேட்ட சொல்லாக இல்லையே. வாருங்கள். கம்பனுக்குள் செல்வோம்,
அண்ணலும், நோக்கினால், அவளும், நோக்கினாள், மிகவும், எடுதாளப்பட்ட, சொற்றொடரத்தான், நோக்குவதிலிருந்து. நோக்கர்கள் வந்திருக்கலாம்.
அது சரி, நோக்கர்கள் வார்த்தை, கம்பன் கழகத்தில் எங்கு பயன்பாடானது. இதுகாறும் அறிய சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.
தற்போதைய தொலைகாட்சி பட்டிமன்றத்தில், இல்லாத, நல்ல வழக்கம். அன்று இருந்தது. நீதிமன்றங்களில், உயர் நீதிமன்றம், தலைமை நீதிமன்றம் என்று இருப்பது போல, அன்றே காரை கம்பன் கழகத்தில், பட்டிமன்ற வழக்கத்தில் வெவ்வேறு நிலைகளில், பட்டிமன்ற வழக்கை விசாரித்து நீதி வழங்கும் முறை இருந்தது. அதாவது, முதல் நாள் பட்டிமன்றத்தில், வழக்கின் விவாதம், முடிந்த பிறகு, நீதிபதியின் தீர்பின், முன்னர், நோக்கர்கள், வாக்களித்து, ஒரு கட்சியை விலக்கிவிடுவார்கள். அந்த கட்சி, மறுநாள் , மேல் முறையீட்டு பட்டிமன்றத்தில் , நீதிபதிகள், (கவனிக்க, பன்மை) முன்னிலையில் வாதிட்டு, தீர்ப்பு பெறலாம்

தற்பொழுது எங்கெங்கும், நடன நிகழ்ச்சிகள், நடைபெறுகின்றது. ஆனால், அதற்க்கு, சரியான, தமிழ் சொல், பரத நிருத்தியம் , என்பதை கம்பன் விழா அழைப்பிதழ் மூலம் அறிந்துகொண்டேன்.
நாம் அன்றாட வாழ்வில் உபயோகபடுத்தும் கனித என்கள், அராபிக் வகையை சேரந்த்து. இதற்கு சரியாக தமிழ், எழுத்க்கள், உள்ளது, மாலை 5  மனிக்கு தொடங்கும். நிகழ்சியை, ரு எனறு தமிழ் எழுத்க்கள் மூலமாக அழைப்பிதழிள் குறித்து இருப்பராகள.

இது போல் செட்டிநாட்டில், செந்தமிழ் வளரத்த  கம்பன் கழகதின், மான்பை, சிறப்பை, அடுக்கி கொண்டே போகலாம், இடம் கருதி, இத்துடன் முடிக்கின்றேன்.

No comments:

Post a Comment