Sunday 27 December 2020

மியூச்சுவல் ஃபண்ட் வாங்கும் விலை என்.ஏ.வி ( NAV) தேதி மாற்றங்கள்

 

பண்ட் வாங்கும் விலை

நாம் பண்டு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யும் போது நமக்கு யூனிட்டுகள் வாங்கும் விலை நிர்ணயம் செய்யபடும் என் எ வி தேதி ( NAV date) குறித்த விதி முறைகள்  மாறி கொண்டே உள்ளது. தற்பொழுது 01-01-2021 முதல் புது விதி முறைகள்  நடைமுறைப்படுத்த பட உள்ளது. அதை விபரமாக இங்கு பார்கலாம்

வாங்கும் விலைக்கான காரணீகள்

 

யூனிட்டுகள் வாங்கும் விலை நிர்ணயம் செய்யபடும் என் எ வி  தேதியை நிர்ணயம் செய்வதற்கு தேவையான மூன்று முக்கியமான அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம்

1.      நாம் எந்த தேதியில் பண்டு வாங்கும் படிவத்தை பூர்த்தி செய்து நிறுவனத்தில் எந்த நேரத்தில் சமர்பித்தோம் என்ற விவரம்

2.      நமது முதலீட்டு பணம் பண்டு நிர்வாகத்திற்கு எந்த தேதியில் எந்த நேரத்தில் போய் சேர்ந்தது என்ற விவரம்

3.      நாம் வாங்கும் பண்டு எந்த வகையானது என்பது

 மேற்கூறிய காரணீகளில் எந்த நேரத்தில் கொடுத்தோம் என்பதை செபி  குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக கொடுத்தோமா?  பின்னராக  கொடுத்தோமா என்று பார்க்கப்படும் இதை ஆங்கிலத்தில்  Cut off Time என்று சொல்லுவார்கள்

பண்டு எந்த வகையானது

பண்டு எந்த வகையானது என்பதை முதலில் பார்ப்போம் இதை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் முதல் பிரிவு லிக்விட் மற்றும் ஓவர்நைட் பண்டு கள் ( Liquid and overnight)  இதில் அடங்கும்.  இதைத் தவிர மற்ற எல்லா பண்டுகளும் இரண்டாவது பிரிவில் அடங்கும்

முதல் பிரிவான லிக்விட் மற்றும் ஓவர்நைட் பண்டு களின் வாங்கும் விலையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.  இரணடாவது பிரிவில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றது

பண்டுகளின் இரண்டாவது பிரிவில் ( லிக்விட் மற்றும் ஓவர்நைட் பண்டு தவிர)  வாங்கும் என் எ வி கணக்கிடபடும் முறை

 

லாக் டவுனுக்கு முந்தைய வாங்கும் என் எ வி கணக்கிடபடும் முறை

இந்த முறையில் மதியம் 3 மணிக்கு முன்னர் செலுத்தபடும் படிவங்களில் முதலீடு தொகை இரண்டு லட்சங்களுக்கு குறைவாக வாங்கும் பொழுது அன்றைய தேதியில் என் எ வி கணக்கிடபடும். இதற்கு அப்பாற்பட்ட வகைகளில் என் எ வி கணக்கிடபடும் முறை மாறுபடும்

 

புதிதாக அமலுக்கு வரும் வாங்கும் என் எ வி கணக்கிடபடும் முறை – 01-01-2021முதல்

புதிதாக நடைமுறைக்கு வரவுள்ள முறையில் 2 லட்சத்திற்கு மேல் கீழ் என்ற வேறுபாடு இல்லாமல் முதலீட்டுத் தொகை நிறுவனத்திற்கு வந்த தேதியும், நேரமும் பிரதானமாக கொள்ளப்பட்டு வாங்கும் என் எ வி. கணக்கிடப்படும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது

கணக்கிடப்படும் முறையின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது

முதலீடிற்க்கான விண்ணப்பம் தந்த நாள் / தேதி

குறிப்பிட்ட காலமான மதியம் மூன்று மணிக்கு முன்னர் பின்னர் தரப்பட்டது

முதலீட்டு தொகை பண்டு நிறுவனத்திற்கு வந்த நாள்

முதலீட்டு தொகை பண்டு நிறுவனத்திற்கு வந்த நேரம்

குறிப்பிட்ட காலமான மதியம் மூன்று மணிக்கு முன்னர் பின்னர்

பண்டு வாங்கிய  என் எ வி கணக்கிடப்படும் நாள்/ தேதி

வரிசை எண்

திங்கள்

முன்னர்

திங்கள்

முன்னர்

திங்கள்

1

திங்கள்

முன்னர்

திங்கள்

பின்னர்

செவ்வாய்

2

திங்கள்

பின்னர்

செவ்வாய்

முன்னர்

செவ்வாய்

3

திங்கள்

பின்னர்

செவ்வாய்

பின்னர்

புதன்

4

திங்கள்/04-01-2021

பின்னர்

வியாழன் /07-01-2021

பின்னர்

வெள்ளி /08-01-2021

5

 

மாற்றத்தின் தாக்கங்கள்

நீண்ட கால முதலீட்டு முறையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஒரு நாள், இருநாள்  என் எ வி மாற்றங்கள் பெரிய பாதிப்பு எதையும் தராது. அதே நேரத்தில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தேதியிலேயே என் எ வி கிடைப்பதற்கு முதல் வகை தவிர மற்ற வகைகளில் கிடைக்கப்போவதில்லை.  எனவே நாம் இன்று சந்தை மிகவும் இறங்கியுள்ளது உடனே இன்றைய என் எ வி ல்  வாங்கி விடுவோம் என்று முறையில் செயல்படுவது அவ்வளவு எளிதாக இருக்காது

 

நினைவில் கொள்ள வேண்டியவை

 

நாம் பண்டு விண்ணப்பம் செய்யும் தேதிக்கும், முதலீட்டு தொகை  பண்டு நிறுவனத்திற்கு கிடைப்பதெற்கான காலதாமதம் ஓரிரு நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு மேல் கூட ஆகலாம். (வரிசை எண் 1) நாம் ஆன்லைன் தளங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து ஆன்லைன் மூலமாக பணத்தை செலுத்தும் போது அன்றைய தேதியில் என் எ வி  கிடைக்க சாத்தியமானது. அதேசமயம் (வரிசை எண் 5) வங்கிகள் மற்றும் இடை நிறுவனகளில் ஏற்படும் கால தாமத்தால், பணடு நிறுவனத்திற்கு பணம் கிடைக்க நான்கு நாள் ஆகின்றது. 

 

பண்டு நிறுவனத்திற்கு பணம் கிடைக்க காலதாமதம் ஏற்பட காரணங்கள்

1.     செலுத்தும் முறை

a.     நேரடியாக செலுத்துகிறமோ அல்லது மூன்றாம் நிறுவனம் போன்ற எம்   எப் யூ (MFU) மூலம் செலுத்துவது

2.     செலுத்தும் வடிவம்

a.     காசோலை ( cheque0) / ஆர் டி சி எஸ் (RTGS) / நிப்ட் (NEFT) ,

3.     சம்பந்த பட்ட  வங்கிகளின் பரிவர்த்தனை முறை

 

நமது வங்கி கணக்கில் பணம் கழிக்க பட்ட நேரம் அல்ல. பண்டு நிறுவனத்திற்கு பணம் கிடைத்த நேரமே கணக்கில் கொள்ளப்பட்டு வாங்கும் என் எ வி கணக்கிடபடும்

 

இங்கு படித்த / பிடித்த பதிவுகளை உங்கள் சமூக ஊடகங்களில் பகிரலாமே 

நன்றி

முந்திய பதிவுகள் 

---------------

எஸ் ஐ பி பற்றி படிக்க

சிறுக சிறுக சேமிக்கலாம்

எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்

ஸ்.ஐ.பி முதலீடு... தெரிந்ததும் தெரியாததும்!

எஸ்.ஐ.பி முதலீடு, தெரிந்ததும் தெரியாததும்! (10 அம்சங்கள்)

--------------

முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் 

பண்டுகளில்  ரிஸ்க் அளவீடு செய்வது எப்படி

விகடனில் படிக்க - என்து வலைபூவில் படிக்க

நாமினேஷன் விபரம் அறிய 

விகடனில் படிக்க - என்து வலைபூவில் படிக்க

ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் - 

நிதி பராமாரிப்பில் நிதியில்லா விபர பராமாரிப்பு

Friday 25 December 2020

NAV allotment date is undergoing a major change

 

Posted on 25th Dec 2020

Fund Buying Price

When we invest money in mutual fund schemes, the units are allotted to us based on the NAV date and the rules with respect to buying units is changing now. As per SEBI, the new rules are to be implemented from 01/01/2021. Let us understand this better in this article.

Components determining NAV buying price date

There are three essential elements which usually determines the NAV date of the purchase price of units.

1.      The date we submitted the application with relevant documentation

2.      The date and time when our investment money reached the fund management team

3.      The type of fund we are buying

SEBI has specified cut off time depending upon the type of fund. It is very important as to when the application is submitted, if it is before or after the designated cut off time.

Grouping of funds with respect to cut off time

All the funds can be grouped into two categories. The first category includes liquid and overnight funds.  All other funds are included in the second group.

In the first group, no changes have been made to the purchase price of liquid and overnight funds. Second group is subject to change with effective from 01/01/2021.

Determining NAV date for purchase price of second group

Pre-Lockdown Purchase NAV Calculation method

In this method, NAV date will be arrived based on the date of submitting the application and whether it is submitted before or after the cut off time and if the investment amount is below or above 2 lakhs.

Proposed Purchase NAV date Calculation method from 01-01-2021

In the new process, the investment amount being above or below 2 lakhs does not matter. Another major change is instead of giving weightage to date of application, now the NAV date will be determined based on when the money reached the fund management team.

The following table provides how the NAV date will be arrived for all funds except liquid and overnight funds under various scenarios

Day/Date of Application for Investment 

Is the application submitted before or after the cut off time of 3 PM 

Day/Date of Money received at Fund Management 

Is the Money received at Fund Management before or after the cut off time of 3 PM 

Date/Date   of NAV considered for purchase of units 

Monday 

Before 

Monday 

Before 

Monday 

Monday 

Before 

Monday 

After 

Tuesday 

Monday 

After 

Tuesday 

Before 

Tuesday 

Monday 

After 

Tuesday 

After 

Wednesday 

Mon/04-01-2021 

After 

Thursday/07-01-2021 

After 

Friday /08-01-2021 

 Impacts of Change  

These one or two-days NAV changes will not have much impact on long-term investment for stakeholders. At the same time, the current option available for small investors to get same day NAV is gone for good, except they can make purchase and payment online and ensure payment is done before cut of time as shown in row 1 of the above table. Buying units on the same day when market crashes is going to be difficult for most of the investors. 

Things to Remember

The difference between the date of application and date of money received at fund management team is going to be varied from one day to few days. If the purchase and payment is made online and ensured both succeeds before cut off time, then it is possible to get same day NAV as shown in row 1 of above table. But if there is some delay at the bank or some intermediary level, then as shown in row 5 it could take a couple of days or more.

 Reasons for delay in payment receipt by fund management team

1.     Payment Method: Paying directly to the fund house or through third party such as MFU  

2.     Payment mode: Cheque / RTGS / NEFT / Net banking / other payment methods

3.     Transaction process followed by the banks are not uniform. Depending upon the process followed by your bank, clearing time may be less or more.

Finally let us understand the important take away, Nav Allotment date is not arrived based on the time when money was deducted from your bank account. Nav Allotment date is arrived based on the time of payment received by the fund management team.

If you like this article, please share in your social media

Have any suggestion for future articles, please give your feedback here

Read my previous articles 

SIP dilemma

Time for Caution in investments / Time for Caution in investments in pdf format

Robbin Hood investors (New breed of investors)

Nomination