Wednesday 28 August 2019

Tit Bit 43 – New age investments – Mutual funds


Take Away from the chart: 

Mutual funds are most popular investment medium now, growing in the last four year at the CAGR of 30%

Have you missed the mutual fund bus? If you said YES, get in quickly now.. this may be good time!!






Read My recent article to understand how to calculate your investment returns and learn more about the difference between returns from Fixed Deposits vs Mutual Funds. Links below:

Monday 26 August 2019

நிலையான வட்டி வருவாயும் மாறி வரும் சராசரி ஆண்டு வருமான விகிதமும் ( Fixed vs Variable Returns)

நிலையான மற்றும் சராசரியான வருமானம்

முதலாவதாக வருடாவருடம் குறிப்பிட்ட தேதியில் வரும் வட்டி வருவாயும், இரண்டாவதாக, முதலீட்டுக்கென்றே  பரவலாக கூறப்படும்  சராசரி ஆண்டு வருமான வட்டி விகிதமும் சற்றே மாறுபட்டது. முதல் வகைக்கு உதாரணம் வங்கிகளில் வைக்கபடும் நிரந்தரவைப்புகள் (Fixed deposit). இவை நிலையான வட்டி வருவாய் தருபவை.    இரண்டாவது வகைக்கு உதாரணம் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் பண்ணப்படும் முதலீடுகளில் வரும் வருமான பற்றி அந்த நிறுவனங்கள் மூலமாகவோ,  அல்லது  முகவர்கள் மூலமாகவோ நமக்கு சொல்லபடும்.  ஆண்டு வருமான வட்டி விகிதம் (CAGR /XIRR) என்று  மாறிவரும் வருமான விகிதம் ஆகும், நிச்சியமாக நிலையானது இல்லை. ஏற்ற இறக்கங்களுடன் வருமானம் தருபவை. கவனிக்கவும் முதலில் கூறியது நிலையான வட்டி  வருவாய். இரண்டாவது கூறியது சராசரி வருமான விகிதம்.

முதலீடும் அது சாரந்த நிதர்சனமும் ( Investment realities)

பெரும்பாலானோர் விரும்புவது முதல் வகையான நிலையான வட்டி  வருவாய். இதில் கிடைக்கும் வட்டி விகிதம் பெரும்பாலும் சற்று குறைவாக இருப்பதால்,  நமக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும், பணம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு குறுகிய காலத்தில் அதிக பணம் பண்னும், துடிப்போடு பங்குகளையும் மீயுச்சுவல் பண்டுகளையும், பொதுவாக சொல்லபடுகின்ற, சமூக வலை தளங்களில் எளிதாக கிடைக்கின்ற ஆண்டு சராசரி வருமான விகிதத்தை பார்த்து நாடுகிறார்கள், முதலீடும் செய்கிறார்கள்.  பத்து வருட ஆண்டு சராசரி வருமான விகிதத்தை பார்த்து  முதலீடு செய்யதுவிட்டு, இரண்டு ஆண்டில் முதலீட்டை முடிக்கிறார்கள். கிடைத்த வருமானம், எதிர்பார்த்ததைவிட, சமூக வலை தளங்களில் பார்த்தைவிட, நிலையான வட்டி வருவாயை விட குறைவாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த சுழலில் அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு, சந்தை ஏற்ற இறக்கங்களை ஒரு கணம் மறந்து விட்டு இந்த வட்டி விகிதங்கள் எப்படி கணக்கிடப்படுகிறது, இதை எவ்வாறு உபயோகப்படுத்துவது, எங்கெங்கு உபயோகப்படுத்துவது என்று தெரிந்தபின் முதலீடு செய்வது சாலச் சிறந்ததாகும். அதை இங்கு சற்று விரிவாக காண்போம்.

பாலபாடம்

கணித பாடத்தில், வட்டி விகிதம் கணக்கிடும் முறையாக,   தனிவட்டி மற்றும்  கூட்டுவட்டி என்று  பத்தாம்  வகுப்பு வாகில் படித்த பாலபாடம்.  பலருக்கு மறந்தும் இருக்கலாம். அறிந்தவர்கள் முதல் அறியாதவர்களை  வரை அதை எப்போது எப்படி உபயோகிப்பது என்பதில் சிக்கல் ஏனெனில் பெரும்பாலும் மனனம் செய்து மார்க் வாங்கியவர்கள் தானே நாம், அதனால்தானோ என்னவோ,  சமீபத்தில்  நடந்த முதலீட்டாளர்கள் கலந்துரையாடலில் அதிகம்  கேட்கப்பட்ட கேள்வி கூட்டு வட்டி முறையில் எப்படி நீண்ட காலத்தில் பணம் பெருகுகிறது? இது எவ்வாறு நமது பங்கு மற்றும் மீயூச்சுவல் பண்டின் வருமான கண்க்கில் சம்பந்த படுத்த படுகிற்னது? 

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் நன்கு புரிய நான்கு  வட்டி மற்றும் வருமான லாப கணக்குகள் போட தெரியவேண்டும். அல்லது போடும் முறையில் தெளிவு இருக்க வேண்டும் அவை 

  1. தனி வட்டி, (Simple Interest)
  2. கூட்டுவட்டி,  (Compound Interest)
  3. கூட்டுவட்டி முறைபோல் பெறப்படுகின்றன சராசரி ஆண்டு வருமான  விகிதம் (CAGR) ( Compounded Annual Growth Rate)
  4. மேம்படுத்தப்பட்ட பரவலாக மீயூச்சுவல் பண்டின் வருமானம்  பார்க்க பயன் படும் எக்ஸ் ஐ ஆர் ஆர். ( XIRR)

  
இப்போது ஒவ்வொன்றாக  விரிவாகபார்க்கலாம்

I - நிலையான வட்டி வருவாய் (Fixed Returns)

தனி வட்டி - (Simple Interest)

வருடாவருடம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட வட்டி வருமானம் பெறுவது பொதுவாக தனி வட்டி விகிதம் ஆகும். இந்த தனி வட்டி என்பது நாம் அறிந்த மிகச் சாதாரணமாக எளிமையாக வட்டி கணக்கிடும் முறையாகும்.  

உதாரணமாக ரூபாய் ஒரு லட்சத்தை (P) , 7% வட்டி விகிதத்தில் (R) , மூன்று வருடங்கள் (N) முதலீடு செய்து ஏழாயிரம் ரூபாய் வருடா வருடம்  பெறுவதே தனி வட்டி முறையாகும்.  மொத்தம் கிடைத்த வட்டித் தொகை 21 ஆயிரம். 

இதன் சூத்திரம் -> PNR / 100

மொத்தம் கிடைத்த வட்டித் தொகை  = (1,00,000 * 3*7)/100 = 21000

கூட்டுவட்டி - (Compound Interest)

அதே வட்டியை வருடாவருடம் பெறாமல் முதிர்வு தொகையோடு சேர்த்து பெற்றால் அது கூட்டு வட்டியாகும். 

இதன் சூத்திரம் , முடிவில் கிடைக்கும் தொகை = P+(1+R)^N

முடிவில் கிடைக்கும் தொகை = 100000+(1+(7/100))^3 => 122504
வட்டித் தொகை = 22504

மேற்கண்ட இரண்டு முறைகளிலும் வட்டி கணக்கிடப்படும் போது  கூட்டுவட்டி முறையில் கிடைக்கும் வட்டித் தொகை. தனி வட்டி முறையில் கிடைக்கும் வட்டித் தொகையை விட அதிகமாக உள்ளது. எப்பொழுதுமே கூட்டு வட்டியில் கிடைக்கும் தொகை அதிகமாகவே இருக்கும். இது  கூட்டு வட்டியின் மிகச்சிறந்த அம்சமாகும். ஏனெனில் இங்கு வட்டிக்கு வட்டி கிடைக்கின்றது.
வருடத்திற்கு ஒருமுறை வட்டிக்கு வட்டி போடாமல், அரையாண்டுக்கு ஒரு முறை,  காலாண்டு ஒரு முறை,  என்ற முறையில் வட்டிக்கு வட்டி  சேர்த்துக் கணக்கிட்டால் வட்டி வரும் தொகை இன்னும் அதிகமாகும். அருகில் உள்ள அட்டவணையில் இதை காணலாம். இது கூட்டு வட்டியின் இன்னொரு சிறப்பம்சமாகும். எனவே நாம் வங்கியில் வைப்பு செய்யும்போது அல்லது நிறுவனங்களில் என்சிடி (NCD) மூலம் முதலீடு செய்யும் பொழுது குறுகியகாலத்தில் வட்டிக்கு வட்டி கணக்கடிடபட்டல் அதில் முதலீடு செய்வது லாபகரமானது. அதே சமயம் நாம் வங்கியில் கடன் வாங்கும்போது  பின்  அதிக வட்டி செலுத்துமாறு அமைந்துவிடும்.  சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும். 

கூட்டுவட்டி கணக்கிடும் முறை

முதலீட்டு தொகை  - P
100000
வட்டி விகிதம் - R
7%
முதலீட்டு வருடங்கள் - N
3
முடிவில் கிடைக்கும் தொகை

வட்டிக்கு வட்டி  - ஆண்டுக்கு ஒரு முறை
₹ 122,504.30
வட்டிக்கு வட்டி  - அரையாண்டுக்கு ஒரு முறை
₹ 122,925.53
வட்டிக்கு வட்டி  - காலாண்டுஒரு முறை
₹ 123,143.93
வட்டிக்கு வட்டி  - மாதம் ஒரு முறை
₹ 123,292.56
வட்டிக்கு வட்டி  - தினசரி
₹ 123,365.32

இரண்டுமே நிலையான வருவாய் தரும் முதலீடு  என்றே வகைபடுத்தபடும் 

II -மாறி வரும் சராசரிஆண்டு வருமான விகிதங்கள் (Variable Returns)

சராசரி ஆண்டு வருமானம் விகிதம் (CAGR – Compounded Annual Growth Rate)

முன் இரண்டு உதாரணங்களிலும்  முதலீட்டுத் தொகை, வட்டி விகிதம் , மற்றும் முதலீட்டு வருடங்கள் ஆகியவை நன்கு புலப்படும், தெரியும். முடிவு தொகை மட்டும் சூத்திரங்களை கொண்டு கணக்கிடலாம். உதாரணம் வங்கி வைப்பு முதலிடு.  
மீயூச்சுவல் பண்டு , பங்குவர்த்தகத்தில் முதலீட்டுத் தொகை தெரியும். முடிவு தொகையோ, வட்டி விகிதமோ புலப்படுவதில்லை. முதலீட்டு முடிவில் நமக்கு கிடைத்த முடிவு தொகை கொண்டு கிடைத்த லாப விகித்தை கணகிடுவதே சராசரி ஆண்டு வருமானம் விகிதம்.

இதன் சூத்திரம்:
சராசரி ஆண்டு வருமானம் விகிதம் = (122504/100000)^(1/3) -1 = 7%
{ (முடிவில் கிடைக்கும் தொகை / முதலீட்டு தொகை)^(1/n)} – 1

வருடாவருடம் நிலையான வட்டி கிடைத்து வரும் போது, ஆண்டு முடிவில் கிடைக்கும் முடிவு தொகை நேர் கோட்ட்டில் எறும்.  நாம்  ஃபண்டுகளிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வரும் வகையில் இரண்டு வருடம் கழித்து அதற்கு ஏற்றவாறு தொகை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  ஒரு லட்ச ரூபாயை இரண்டு வருடங்கள் முதலீடு செய்து, முடிவில் ₹1,14,490 வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆணால் கிடைத்திருப்போது ₹ 1,01,243.31
இதற்கு காரணம், பண்டுகளிலும், பங்கு சந்தையிலும் முதலீடு செய்து வரும் லாபம் சீராக இல்லாததால் ஆண்டு முடிவில் கிடைக்கும் முடிவு தொகை நேர் கோட்டில் இருப்பதில்லை. பார்க்க படம்.   மூன்று வருடம் கழித்து, நிலையாண வட்டி, சராசரி லாபம், என்ற இரண்டு உதாரணத்திலும், அதே 7% வட்டி/லாப விகிதம் கிடைத்தாலும், இராண்டவது வருட முடிவில் கிடைக்கும் தொகை குறைவாக உள்ளது.

நிலையான ஆண்ட வருமானம்
வருடங்கள்
வருட ஆரம்ப தொகை
வட்டிவகிதம
வருட முடிவு தொகை
1
₹ 100,000.00
7%
₹ 107,000.00
2
₹ 107,000.00
7%
₹ 114,490.00
3
₹ 114,490.00
7%
₹ 122,504.30

சராசரிஆண்டு வருமானம்
CAGR
7%
மாறி வரும் சராசரிஆண்டு வருமானம்
வருடங்கள்
வருட ஆரம்ப தொகை
லாபவகிதம்
வருட முடிவு தொகை
1
₹ 100,000.00
6.6%
₹ 106,571.90
2
₹ 106,571.90
-5.0%
₹ 101,243.31
3
₹ 101,243.31
21.0%
₹ 122,504.40

CAGR

7%

பண்டு நிறுவனங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் உள்ள ஒரு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம், 10 வருடம், லாப விகிதஙகள் (Point to point returns) தரும்போது அது இந்த ஆண்டு வருமான கூட்டுவட்டி முறையிலேயே கணக்கிடப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம்.

எக்ஸ் ஐ ஆர் ஆர் ( XIRR)

நாம் பணம் செலுத்தும் தேதி வெவ்வேறு காலங்களில் இருக்குமானால் (Random investments) ஒரு வரையருக்கபட்ட முறை இல்லாமல் தேவைப்பட்டபோது முதலீடு செய்யும் போது லாப விகிதஙகள் பார்ப்பதற்கு இன்னும் மேம்படுத்தப்பட்ட முறையில் லாபக் கணக்கீடு செய்ய வேண்டும், இதற்கு எக்ஸ் ஐ ஆர் ஆர் என்ற பெயர்.

நாம் எல்லா முதலீட்டையும், ஒரே நாளில் செய்வது இல்லை. பங்கு சாரந்த முதலீடு என்று வரும்போது அது உகந்த்தும் இல்லை. உதாரணமாக 01-01-2016 அன்று Rs 25000 மீயூச்சுவல் பண்டு எஸ் பி ஐ  மேகனம் மல்டி கேப் திட்டங்களில் (SBI Magnum Multi cap) முதலீடு செய்திருப்போம். திரும்பவும் 01-04-2016 அன்று Rs  25000 அதே பங்கு /  நிதி திட்டங்களில் முதலீடு செய்திருப்போம். இப்படியாக 4 முறை முதலீடு செய்து மொத்தில் Rs 1,00,000 முதலீடு செய்திருப்போம். திரும்ப சுமாராக 40 மாதங்கள் கழிந்த பின் Rs 1,34,537 பெற்றால், லாப விகிதம் 9.6%. இவ்வாறு வெவ்வேறு கால இடைவெளியில், வெவ்வேறு தொகை வருமானமகவோ, செலவாகவோ இருக்கும் பட்சத்தில் வருமானவிகிதம் அறிய எக்ஸெலில் உள்ள  எக்ஸ் ஐ ஆர் ஆர்  பங்ஷன் (XIRR Function in excel) உபயோகபடுத்தலாம்.

சீரான காலத்தில் இல்லாத முதலீட்டில் சராசரி வருமானம்
பண்டின் பெயர்



எஸ் பி   மேகனம் மல்டி கேப்


காலம் 
சுமாராக 43 மாதங்கள்
முதலீட்டு தொகை 
4*25000
         100,000
முடிவில் பெறும் தொகை
2857.023*47.09
         134,537




தேதி
முதலீட்டு தொகை
என் வி
யூனிட்
தேதி
Cash flow
01-Jan-16
25000
33.84
738.7707
01/01/16
-25000
01-Apr-16
25000
32.54
768.2852
01/04/16
-25000
01-Jul-16
25000
35.64
701.459
01/07/16
-25000
30-Sep-16
25000
38.55
648.5084
30/09/16
-25000
14-Aug-19

47.09
2857.023
14/08/19
                                        134,537




Xirr
9.6%

மாறி வரும் சராசரி ஆண்டு வருமான விகிதங்களில் நாம் கவனிக்கவேண்டிய முக்கிய  அம்சங்கள்:

  1. லாப விகித கணக்கிடும் போது நாம் முதல் தொகையும் முடிவு தொகையை மட்டுமே கொண்டே கணக்கிடிக்கின்றோம். இடையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொள்வதில்லை. இதை மிக மிக நன்கு கவனித்துப் புரிந்து கொள்வது அவசியம்.
  2. மூன்று வருட சராசரி லாப விகிதம் 7% என்றால், ஒவ்வொரு வருடமும் 7% சதவீகிதம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை.
  3. லாபவிகிதம் கணக்கிடும் போது லாபத்தை பாதிக்கும் ரிஸ்க்  காரணிகள், ஸாண்டேர்ட் டீவியேஷன், (Standard deviation) பீட்டா, (Beta) என்று  எதுவும் இந்த கணக்கில் கொள்ளப்படுவதில்லை.

எனவே முடிவாக, நாம் முதலீடு செய்யும் பொழுது சராசரி லாப வருமான விகிதத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்யாமல், லாபத்தை பாதிக்கும் ரிஸ்க் காரணிகளையும் பார்த்து அதன் பின்னே முடிவு செய்ய வேண்டும். 


உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

Tuesday 20 August 2019

APP - WEB Links

In generational mobile phones, all transactions are done through mobile applications.
Mutal fund investments are not an exception!
This page will help investors who don't know the name of the app or how to make online request, this page is for them.
In this page you will know which app to use for which fund house. The links will take you to Google play store for downloading the required app. 
Links are also available for web portals of mutual fund house.


AMC
WEB LINK
APP LINK
APP NAME
Axis
EasyApp
Adity Birla Sun Life
Aditya Birla Sun Life MF FinGo
PPFAS



DSP
DSP Mutual Fund
Edelweiss



Franklin Templeton
Franklin Templeton® India- Mutual Fund App
HDFC
HDFC MFOnline Investors: Mutual Fund Investor App
IDFC
No app

Icici Prudential
IPRUTOUCH
IP

iSave-IPruMF
Kotak
Kotak Mutual Fund
L&T
LTMFSFA
Sundaram
Sundaram Mutual Fund
SBI

SBI Mutual Fund - InvesTap
UTI
UTI Mutual Fund
IndiaBulls

Indiabulls Saral - Liquid Fund App
Reliance
Reliance MutualFund
Principal

Principal Mutual Fund
India Info Line

Mutual Funds A service by IIFL



If you find this info useful, please share this page with your contacts and friends, who may need this handy info. If you are not finding the required info / face any difficulty / if the links are not working - write to us through "contact us" form, we will check and do the needful.