Tuesday 4 April 2023

எஸ் ஐ பி ஒரு அலசல்.


March 2023


வளரும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீடு..! இடையில் நிறுத்துவது ஏன்?




எஸ்பி மூலம் முதலீடு செய்வது நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது முதலீட்டாளர்கள் எஸ்ஐபி முதலீட்டின் நன்மைகளை நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள. கடந்த ஏழு ஆண்டுகளில் எஸ்பி மூலம் முதலீடு செய்யப்பட்ட தொகை அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வருட வளர்ச்சி விகிதம் சதவீதம் 20 ஆகும். கடந்த இரண்டு வருடங்களில் இந்த வளர்ச்சி விகிதம் 30%, 25% வகையில் உள்ளது. AMFI தலைவரும், ஆதித்ய பிர்லா ஃபைன்ட் நிறுவன தலைவரும் ஆன திரு பால சுப்பிரமணியன் சமீபத்தில் கூறியுள்ளார, இன்னும் மூன்று வருடங்களில் எஸ்பி மூலம் முதலீடு செய்யப்படும் தொகை இரண்டு மடங்காக மாறும் என்று கூறுகின்றார்.அதாவது தற்போது மாதம் 13,000 கோடி ரூபாய் அளவில் எஸ்ஐபி.வந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று வருடங்களில் இது மாதம் 26,000 கோடி அளவில் வரும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகின்றார்.

புதுப்புது எஸ்பி தொடங்குவோர் எண்ணிக்கை வளர்ந்து வரும் போது எஸ்ஐபி நிறுத்துவோர் எண்ணிக்கையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். புதிய எஸ்பி தொடங்குவது போல் எஸ்ஐபி ம் நிறுத்தப்படுகின்றது. உதாரணமாக 100 sip புதிதாக தொடங்கப்பட்டால் 56 எஸ்பி நின்று விடுகின்றது மீதம் 44 எஸ்பி மட்டுமே தொடர்ந்து வருகின்றது. இதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

தற்போது வங்கி வட்டி விகிதம் ஏறிக்கொண்டு வருகின்றது. வீட்டுக் கடன் கட்டுபவர்களுடைய மாத இஎம்ஐ கூடி வரலாம், எனவே சிலர் எஸ் பி யை நிறுத்துகிறார்கள்

வங்கியில் வட்டி விகிதம் ஏறுவதால் எஸ் பி யில் முதலீடு செய்யாமல் வங்கியில் வைப்பு நிதியில் பணம் முதலீடு செய்ய சிலர் முயலலாம்.

மேலும் தற்போது பணவீக்கம் அதிகமாகி வருவதாலும், பொருளாதார சிக்கலான சூழ்நிலையால் சந்தை தொடர்ந்து இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் எஸ் பி யை நிறுத்துவோர் சிலர் இருக்கலாம்

இது போன்ற காரணங்களால் எஸ்ஐபி நிறுத்துவோர் எண்ணிக்கை போன வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக இருப்பதை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்



பொதுவாக ஈக்விட்டி மற்றும் ஹைபிரிட் பண்டுகளில் எஸ்பி நிறுத்தப்படுகின்றது. குறிக்கோளுடன் செய்யப்படும் முதலீடான ஓய்வூதிய முதலீடுகள் குழந்தை வளர்ப்புக்கான முதலீடுகள் பெரும்பாலும் நிறுத்தப்படுவதில்லை இந்த வகையான முதலீடுகளில் 100 sip தொடங்கப்பட்டால் 75 எஸ்பி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது குறிக்கோளுடன் செய்யப்படும் முதலீடு எப்போதும் தொடரும் என்பது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் கண்கூடாக தெரிந்த தகவல் ஆகும்.

ஆக எப்படி பார்த்தாலும் வரும் காலங்களில் எஸ்ஐபி முதலீடு வளர்ந்து கொண்டு போகும் என்பது எதிர்பார்ப்பு.

எஸ் ஐ பி  பற்றி மேலும் படிக்க 

சிறுக சிறுக சேமிக்கலாம் 

எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள் 

எஸ்.ஐ.பி முதலீடு... தெரிந்ததும் தெரியாததும்! 

எஸ்.ஐ.பி யின் லாப விகிதம் எக்செல்லின் துணையோடு

எஸ் ஐ பி யை நிறுத்துவது எப்படி?

எஸ் ஐ பி