Monday 27 July 2020

பிரிக்கப்பட்ட பண்டுகளுக்கு ஆதாய வரி கணக்கிடுவது எப்படி?

To read the same article in English click here - 

பிரிக்கபட்ட பண்டுகள் (segregated folios) 
கடன் பண்டுகளில் இருந்து நிறுவன கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி தராத நிலையில், அந்த  கடன் பத்திரங்கள் தணியாக நிலுவையில் வைத்து பராமரிக்கபடும், அந்த பண்டை பிரிக்கபட்ட பண்டு என்று வைத்து கொள்வோம்.

பின்னர் அந்த கடன் திரும்ப பெற படுகின்றபோது,  எந்த அளவிற்கு பணம் திரும்ப  வந்ததோ,  அந்த அளவில் முதலில் முதலீடு செய்திருந்த  முதலீட்டாளரகளுக்கு திருப்பி தர படுகின்றது.

பிரிக்கபட்ட பின் மீதமுள்ள, நடைமுறையில் உள்ள பண்டை தற்போதய பண்டு (Current Scheme/Fund under operation) என்று கொள்வோம். பிரிப்பதற்கு முன் நாம் வாங்கும் போது இரணடும் சேரந்து இருந்த போது வாங்கியதால், அதை வாங்கிய பண்டு என்போம் ( original Scheme / fund).

சில பண்டு நிறுவனகள் மேற்கூறிய  நடைமுறையை பின்பற்றி, வராக்கடன் பத்திரங்களை தனியாக பிரிக்கபட்ட பண்டு ஆக பராமரித்து வருகின்றது.  அந்த வகையில் ப்ராங்களின், (Franklin)  ஆதித்ய பிர்லா (Adithya Birla) யூடி ஐ (UTI) போன்ற நிறுவனங்கள் வோடபோன் ஐடியா (Vodafone idea)  மற்றும்   ஜீ கல்வி ( Zee Education) நிறுவனத்திற்கு கொடுத்த  பணம் குறிபிட்ட காலத்தில் திரும்ப வராத போது பிரிக்கப்பட்ட பண்டுகளை ஏற்படுத்தியது. பின்னர் பன்டிற்கு பணம்   திரும்ப வரும்பொழுது, பண்டு பிரிக்கபட்ட போது இருந்த முதலீட்டாளரகளுக்கு பணம் திரும்பி தரபட்டது. இது சந்தோஷமான செயலே.  இப்போது இதன் மூலம் கிடைத்த பணத்திற்கு வரி உண்டா? அந்த வரியை எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்? என்பதே  புதிய வேலை. வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம். உதாரணத்துடன் புரிந்து கொள்வோம்.

ஆதாய வரி கணக்கு
ஆதாய வரி கணக்கிட, வைத்திருந்த காலம், வாங்கிய மற்றும் விற்ற விலை  தெரிய வேண்டும். 

பண்டு வைத்திருந்த காலம்
இந்த பிரிக்கப்பட்ட பண்டுகளில் வைத்திருந்த காலம் கணக்கிட நாம் பண்டு வாங்கிய தேதியிலிருந்து பணம் திரும்பி வந்த  காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக  பண்டு பிரிக்கப்பட்ட தேதி தேவை இல்லை.  இரண்டாவது இன்னும் சற்று கடினமானது அதவாது வாங்கிய விலை கணக்கு.  

வாங்கிய விலை கணக்கு  
பண்டு பிரிக்கப்பட்ட போது, பிரிக்கப்பட்ட தேதியில், பிரிக்கப்பட்ட தொகைக்கும்.  தற்போதய பண்டு தொகைக்கும் உள்ள விகிதாச்சாரத்தில் நாம் பண்டு வாங்கிய  விலையை மாற்ற வேண்டும். உதாரணமாக பண்டு பிரிக்கப்பட்ட போது, பிரிக்கும் முன் என்.ஏ.வி 20 பின்னர் பிரிக்கபட்ட பண்டுகள் என்.ஏ.வி  4, தற்போதய பண்டு என்.ஏ.வி 16 இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (இன்னொரு விதமாக பிரிக்கப்பட்ட பண்டு தொகை 400 கோடி, தற்போதய பண்டு தொகை 1600 கோடி) வாங்கிய பண்டு  விலை ரூ 10 (நாம் முதலில் பண்டு வாங்கிய விலை) என்றால் பிரிக்கபட்ட பண்டுகள் வாங்கிய விலை ரூ 2. தற்போதய பண்டு  வாங்கிய விலை ரூ 8 என்றும் கொள்ள வேண்டும்.

வரி கணக்கிட்டு உதாரணம் 
இந்த அடிப்படை அம்சங்களை புரிந்துகொண்டு, கொடுத்துள்ள அட்டவணையை  கவனித்து நோக்கினால்  பிரிக்கப்பட்ட பண்டில்  இருந்து  வரும் தொகைக்கு ஆதாய வரி எவ்வாறு  கணக்கிட படுகின்றது என்பது புலனாகும்.

பிரிக்கப்பட்ட பண்டில் வரி கண்கிடுவதை புரிந்து கொள்ளுதல் சற்று கடினமான செயலாகவே இருக்கும். கவலை வேண்டாம், இணையத்தளங்களில் இருந்து கிடைக்கும் ஆதாயவரி தகவல்கள் இதையொட்டியே இருக்கும்.


Thursday 23 July 2020

Capital Gains working for segregated folios

If the borrowers of a debt fund are not repaying their respective loans within a given period, then their debt troubled papers are kept aside in a separate account for management. This type of segregation of debt papers is called side pocketing or segregated folios. The original investors of the scheme are paid when the borrowers repay their loan.

Three avatars of the same scheme
1) The original scheme/fund is the scheme that we bought
2) After the separation of segregated folio, the fund under operation with good papers is represented as the current scheme 
3) The separated portfolio consisting of the defaulted papers is called the segregated folio

Some mutual funds follow the above practice of side pocketing and maintain bad debt bonds as segregated folios. Mutual fund houses like Franklin, Aditya Birla and UTI had created segregated folios when the money lent to Vodafone Idea and Zee Education did not return within a specified period. Later when the money was returned to the fund, the investors who were present at the time of split were refunded. This is good news for investors. The difficult part of this exercise is calculating tax on this income. The top question on the minds of investors is, do we need to pay tax for this income? If yes, how should that tax be calculated? Come with me, let's learn about it. Let’s understand this with an example.

Capital gain tax for segregated folio income receipts
To calculate the capital gain tax, the period of possession and the purchase and sale price should be known.

Period of holding of the scheme
To calculate the period of holding of a scheme in these segregated folios, we must take the date of purchase of the original scheme. There is no need for the date of the split.

Bought price of segregated folios
Arriving at the price is a bit harder. We have to consider the ratio of purchase price of the segregated folio and the current scheme is the same as the ratio of original scheme aum and the segregated aum (in other words, the ratio of purchase price of segregated fund and of current fund, and the ratio of nav of segregated scheme and original scheme should be considered the same). Let us take an example where the nav of a fund before segregation is 20, the nav after segregation is 4, and the present fund nav is 16. The price of the original scheme purchased was Rs 10 (the first price we
bought the scheme with). Later the unit purchase price of the segregated fund becomes Rs 2. And the current scheme purchase price is Rs. 8.

Example of tax calculation
The following table shows how the capital gain tax is calculated for the amount received from the segregated folio.

It is a difficult task to understand the complex calculation of tax working on the income received from a segregated folio. But don't worry, you can get the capital gain workings for mutual funds including segregated folios from usual web sites. The following working will help you understand how the tax is calculated for income from segregated folios

Description 
Workings 
Numbers 
Buy Details 


Initial Investment 

150000 
Initial Investment NAV 

15 
Initial Bought Units 
150000/15 
10000 
Date of Purchase 

1/1/2017 
Segregated Folio Details 


Segregation Date 

1/1/2020 
Fund Assets before Segregation 

5000 
Segregated Assets 

1000 
NAV before Segregation 

20 
NAV of Segregated Fund 
(1000/5000)*20 
4 
NAV of Current Fund after Segregation 
20-4 
16 
Revised buy cost of Segregated Fund 
(1000/5000)*15 
3 
Revised buy cost of Current Operating Fund 
15-3 
12 
Part Redemption of Segregated Fund 


Segregated Fund part Redemption Date 

7/17/2020 
Fund House receipt in the Segregated Fund 

250 
% of units redeemed in the Segregated Fund 
250/1000 
25% 
Redeemed units from Segregated Fund 
25%*10000 
2500 
Amount Received by Investor from Segregated Fund 
2500*4 
10000 
Tax Workings 


Holding period in years 
(7/17/2020 - 1/1/2017)/365 
3.542466 
Purchase cost for redeemed segregated units 
2500*3 
7500 
CII for 2016 -17 

264 
CII for 2020-21 

301 
Revised purchase cost 

         8,551  
Capital gains 
10000-8551 
         1,449  
Tax 
20%*1449 
            290