Monday, 17 August 2020

Vikatan Q&A

விகடன் கேள்வி பதில்

கேள்வி 24 

29-06-24


மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஆப்களின் மூலம் முதலீடு செய்யலாமா அல்லது ஷேர் புரோக்கிங் நிறுவனங்களின் ஆப்களின் மூலம் முதலீடு செய்யலாமா? எது சிறந்தது என விளக்கி சொல்லவும்.


பதில்:


மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் (AMC) ஆப்கள் மூலம் முதலீடு செய்வதே சிறந்தது.

காரணங்கள்: 1. நேரடி முதலீடு: AMC ஆப்கள் மூலம் நேரடியாக முதலீடு செய்வதால், இடைத்தரகர் கட்டணம் ஏதேனும் இருந்தால் தவிர்க்கப்படுகிறது. இது உங்கள் லாபத்தை அதிகரிக்கும். 2. பாதுகாப்பு: AMC ஆப்கள் SEBI ஆல் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன, இது உங்கள் முதலீட்டிற்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது. 3. எளிமை: புதிய முதலீட்டாளர்களுக்கு AMC ஆப்கள் மிகவும் எளிமையானவை. திட்டங்களைப் புரிந்துகொள்ளவும், தேர்வு செய்யவும் எளிதாக இருக்கும். 4. நேரடி ஆதரவு: ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், நிறுவனத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும். 5. வெளிப்படைத்தன்மை: AMC ஆப்கள் மூலம், திட்டங்களின் செயல்திறன், இடர் மதிப்பீடுகள், போர்ட்ஃபோலியோ விவரங்கள் போன்றவற்றை நேரடியாகப் பார்க்க முடியும்.


டைரக்ட் vs ரெகுலர் திட்டங்கள்:

டைரக்ட் திட்டங்கள்: இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக AMC-களிடமிருந்து வாங்கப்படும் திட்டங்கள். இவை குறைந்த செலவு விகிதத்தைக் கொண்டுள்ளன, இதனால் அதிக வருமானம் கிடைக்கும். ஆப்பில் முதலீடு செய்யும்போது, உங்கள் நன்மைக்காக டைரக்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. ரெகுலர் திட்டங்கள்: மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் அல்லது தரகர்கள் மூலம் வாங்கப்படும் திட்டங்கள். இவை டைரக்ட் திட்டங்களை விட அதிக செலவு விகிதத்தைக் கொண்டுள்ளன. கூடுதல் பரிந்துரை: ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒவ்வொரு AMC-களின் ஆப்களை டவுன்லோடு செய்வதற்கு பதிலாக, பல AMC-களின் திட்டங்களில் ஒரே இடத்தில் முதலீடு செய்ய விரும்பினால், MF Utility ஆப்பைப் பயன்படுத்தலாம். இது ஒரு பொதுவான தளம், அனைத்து AMC-களின் திட்டங்களையும் ஒரே இடத்தில் வழங்குகிறது.

முக்கியம்: எந்த ஆப்பைத் தேர்ந்தெடுத்தாலும், அது SEBI பதிவு பெற்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முதலீடு செய்வதற்கு முன் நிறுவனத்தின் செயல்திறன், கட்டணங்கள் மற்றும் விதிமுறைகளை கவனமாக படியுங்கள்.


கேள்வி 23 ஒய்வு கால முதலீடு


நான் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றேன். என்னிடம் ஓய்வுக் கால தொகுப்பு நிதியாக ரூ.1.5 கோடி இருக்கிறது. இவற்றை நான் எந்த வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்? மாதம் தோராயமாக எவ்வளவு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை விளக்கி சொல்லவும். 

என் பதில்


பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிக்கனமான வருமானம் மிகவும் அவசியம். ரூ.1.5 கோடி ஓய்வூதியத் தொகையை பின்வரும் முறையில் முதலீடு செய்யலாம்:


I. குறைந்த அபாய முதலீடுகள் (20%):


    வங்கிகளின் நீண்டகால வைப்புகள் (Bank Fixed Deposits) - அவசரகால செலவுகளுக்காக. ஆண்டுக்கு சுமார் 6-7.5% வருமானம்


II. கலப்பு மியூச்சுவல் பண்டுகள் (Hybrid mutual funds) (40%):


    பாலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டுகள் (Balanced Advantage Funds)


    மல்டி அஸெட் பண்டுகள் (Multi Asset Funds)


    ஆண்டுக்கு சுமார் 6-10% வருமானம்


கலப்பு மியூச்சுவல் பண்டுகள் (Hybrid mutual funds) பற்றி படிக்க தொடவும் 


III. பாதுகாப்பான முதலீடுகள் (40%): 


    முதியோர் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme - SCSS) 8.2% வட்டி


    வட்டி விகிதம் மாறுபடும் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் (RBI Floating Rate Bonds) - சுமார் 8% வட்டி


வாழ்க்கை முறையை எளிமையாகவும், கணவன்-மனைவி செலவுகளுக்கு முன்னுரிமை அளித்தும் வாழுங்கள். தனிநபர் கடன்களை தவிர்த்து, ஓய்வுக்காலத்தில் மருத்துவக்காப்பீடுகளையும் செய்யுங்கள்.


இம்முறையில் முதலீடு செய்தால், மாதம் சுமார் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கும். ஆனால், சந்தை நிலைமைகளைப் பொறுத்து கலப்பு மியூச்சுவல் பண்டுகளில் அபாயங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்.


நமது முதலீட்டுத் திறனை மேம்படுத்த, பெஞ்சாமின் கிராஹாம் அவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றுவது அவசியம். அவரது நூல்களிலிருந்து எங்களுடைய முக்கிய பகிர்வுகளைப் பார்க்க, முகநூல் இணைப்பைக் கிளிக் செய்யவும்.


நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் இந்தப் பதிவையும் முகநூல் பக்கத்தையும் பகிர்ந்து, அதிக விரிவாக்கத்திற்கு உதவுங்கள். அதைப் பிடித்தால் "லைக்" செய்யுங்கள்.



கேள்வி 22 மருத்துவக் காப்பீடு


60  வயது மூத்தக் குடிமகனுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்தால் ஆண்டுக்கு தோராயமாக எவ்வளவு பிரீமியம் கட்ட வேண்டி வரும்?  பாலிசி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ஏதாவது இருக்கிறதா?


என் பதில்

60 வயது மூத்தக் குடிமகனுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்தால் ஆண்டுக்கு தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.40,000 வரை பிரீமியம் கட்ட வேண்டி வரும். இந்த பிரீமியத்தின் அளவு, காப்பீட்டு நிறுவனம், காப்பீட்டுத் திட்டத்தின் வகை, காப்பீட்டாளரின் உடல்நலம் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது.

பாலிசி எடுக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:

காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக 1) மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது ஒவ்வொரு நாளுக்கும் எவ்வளவு தங்கும் அறை  வாடகை தருகிறார்கள் என்று தெரிந்து கொள்வது நல்லது . 2) மருத்துவ செலவு முழுவதுமாக ஏற்றுக் கொள்வார்களா? குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் ஏற்றுக் கொள்வார்களா என்று தெரிந்து கொள்வது அவசியம்.

காப்பீட்டுத் தொகை உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

காப்பீட்டின் காத்திருப்பு காலம் எவ்வளவு என்பதை சரிபார்க்கவும். காத்திருப்பு காலத்தில் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்கு காப்பீடு கிடைக்காது. பிரீமியம் கூடும் போது காத்திருப்பு காலம் குறைகின்றது 

முன்கூட்டியே இருக்கும் நோய்களுக்கு காப்பீடு கிடைக்கிறதா என்பதை சரிபார்க்கவும். சில திட்டங்களில், முன்கூட்டியே இருக்கும் நோய்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை 

சில நிறுவனங்கள் உங்களுக்கு.மருத்துவ மற்றும் உடல் பரிசோதனை செய்ய சொல்லி கேட்கலாம்.

காப்பீட்டு நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும். சில நிறுவனங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவருக்கு திட்டங்களை வழங்குவதற்கு விரும்புவதில்லை. 

இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பாலிசி எடுத்தால், மூத்த குடிமகனின் மருத்துவ செலவுகளைப் பாதுகாக்க முடியும்.

கேள்வி 21: ரூ 10,000 சிப் 5 வருட முதிர்வு தொகை 


06-நவம்பர் -2023 


மாதந்தோறும் ரூ.10,000 வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். எனக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் எது? இந்த முதலீட்டுக்கு என்ன வருமானம் கிடைக்கும்?


என் பதில்


ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள். உங்களுக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டம் கலப்பின திட்டம் ஆகும். கடன் திட்டத்தில் லாப விகிதம் குறைவாக இருப்பதாலும், ஈகிவிட்டி திட்டத்தில் முதலீட்டு அபாயம் சற்று அதிகம் இருப்பதாலும், கலப்பின திட்டங்களை முதலீடு செய்ய பரிந்துரைக்கிறேன்.


கடந்த ஐந்து ஆண்டுகளில், கலப்பின திட்டங்களில் லாப வீதம் 10 முதல் 13 சதவீதத்திற்குள் கிடைத்துள்ளது. அதே வகையில் பார்த்தால், உங்களுக்கு சுமார் ஏழரை லட்சத்தில் இருந்து எட்டரை லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.


பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால், லாப விகிதம் சந்தையின் அபாயத்துக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் லாபம் கிடைக்கலாம், இதே மாதிரி கிடைக்க வேண்டும் என்பதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


வெவ்வேறு வகையான திட்டங்களில் முதலீடு செய்தால், இதுவரை கிடைத்த சராசரி லாபத்தைக் கொண்டு, எவ்வளவு தொகை உங்களுக்கு கிடைக்கும் என்பதை கீழே உள்ள அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.


வெவ்வேறு வருடங்களுக்கு வெவ்வேறு தொகைகளுக்கு வெவ்வேறு வட்டி வீதத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை நீங்களே 

கூகுள் ஷீட் வடிவத்தில் கணக்கிட்டு பெற்றுக்கொள்ள இந்த தொடர்பை தொடவும். 

கேள்வி 20: பண்டு வரி சேமிப்பு இப்பொழுது உதவுமா 

03-அக்டோபர் - 2023

என் வயது 23. பெங்களூரில்  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் நான்மாதம் 50,000-க்கும் சற்றுக் கூடுதலாக வருமானம் பெறுகிறேன். இப்போதைக்கு குறிப்பிடத்தக்க பெரிய செலவுகள் ஏதுமில்லை. வருமான வரி விலக்குப் பெறும் வகையில் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வழிகாட்டவும்.


என் பதில்

பெங்களூரில் உள்ள உங்களால்  வருமானம் மற்றும் செலவுகள் அடிப்படையில், மாதம் 20,000-25,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த தொகையை நீங்கள் வருமான வரி விலக்குப் பெறும் வகையில் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


உங்களுக்கான சிறந்த திட்டம் ஒரு ஈக்விட்டி அடிப்படையிலான இ எல் எஸ் எஸ்  ஆகும்.(Equity linked savings scheme)  இந்த திட்டங்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்கின்றன, எனவே நீங்கள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய தயாராக இருந்தால், அவை உங்களுக்கு நல்ல வருமானத்தை வழங்கும்.


உங்கள் எஸ்.ஐ.பி தொகையை 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை தொடங்கலாம். நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு உங்கள் முதலீட்டை எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்க. 


நீங்கள்  மிரே அஸெட் டாக்ஸ்  சேவர் (Mirae asset tax saver) அல்லது கோடாக்  டாக்ஸ்  சேவரில் (kotak tax saver)  முதலீடு செய்யலாம். இவை கடந்த மூன்று வருடங்களில் 25 சதவீதத்திற்கு அதிகமாக வருமானம் தந்துள்ளது. சந்தை  அதிகமாக இருப்பதால் இந்த வருமானம் அதிகமாக உள்ளது. பொதுவாக ஈகுட்டி வகை பண்டுகளின் வருமானம் 12% லிருந்து 16%  போல்  கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 


இரண்டாவதாக இந்த திட்டத்தில் சேமிக்கும் பணத்திற்கு, நீங்கள் வரி விலக்குக்கு (80 சி ) மூலமாக 1.5 லட்சம் ரூபாய் வரை பயன் பெறலாம். இப்படி வரி விலக்கு பெற்று வரி கணக்கிடும் முறை பழைய முறை என்று சொல்லப்படுகின்றது. எந்த வரி விலக்கும்,  கழித்தலும் இல்லாத முழு வருமானத்திற்கும் குறைந்த வரி கட்டும், புதிய முறையும், நடைமுறையில் உள்ளது. தற்பொழுது இரண்டு முறையில் எந்த முறையை  வேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் வரும் காலங்களில் பழைய முறை, முற்றிலும் மறைந்து. புதிய முறை மட்டும் நடைமுறையில் வர சாத்தியங்கள் அதிகம். இந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


மூன்றாவதாக அப்படியே பழைய முறை அழிந்து போனாலும், நீங்கள் போட்ட முதலீடுக்கு சுமார் 12 - 16% வருமான லாப விகிதம் வரும் வாய்ப்புகள் இருப்பதால் ஈகுட்டி வகை முதலீடுகள், இந்த இ எல் எஸ் எஸ்  வகை முதலீடுகள் சிறந்த முதலீடாகவே இருக்கும். 


கேள்வி 19: ஓய்வு கால சேமிப்பிற்கான வழி.

10-07-2023

என் வயது 42.  ஓய்வு பெறும் வயது 60. எனது ஓய்வு கால சேமிப்பதற்காக ஜூலை 2023 முதல் 1000 ரூபாய் ல் துவங்கி வருடம் 1000 ரூபாய் அதிகரிக்கும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டயர்மென்ட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளேன். எனக்கு  ஏற்ற திட்டத்தை கூறவும்.

என் பதில்

ஓய்வுக்கால வருமானத்திற்குப் இப்பொழுதே சேமிப்பு செய்வது மிக உசிதமான செயல். அதுவம் வருடாவருடம் சம்பளம் ஏறுவதற்கு ஏற்றவாறு ரூபாய் 1000 எஸ் ஐ. பீல் கூடுதலாக செலுத்துவதும் நல்ல சிந்தனை. பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் ஓய்வூதிய திட்டங்கள் சுமார் 9 இல் இருந்து 10 சதவீத லாபம் கிடைக்கும். ஹைப்ரீட் பண்டு வகையாக இருக்கும். அதே சமயம் டைவர்ஸ்ஸ் ஈகுவீட்டி வகையில் முதலீடு செய்தால் 12 இருந்து 14 சதவீத லாபம் பெறலாம். இரண்டு வகையிலும் உங்களது எஸ்பிஐ பார்வை செய்வோம்

ஈகுட்டி எஸ் ஐ. பீ (Equity SIP)

நீங்கள் ஈகுட்டி திட்டத்தில் எஸ் ஐ பி ரூபாய் 1000, வருடம் 1000 ரூபாய் அதிகரிக்கும் வகையில்  முதலீடு செய்துவந்தால் உங்கள் 60 வயதில் சுமார் ரூபாய் 60 லட்சம் முடிவாக இருக்கும். அதே திட்டத்தில் மாதாமாதம் நீங்கள் எஸ் டபுள் பி (SWP)  செய்து வந்தால் சுமார் மாதாமாதம் ரூபாய் 70,000 கிடைக்கும். கனரா ரொபகோ ப்ளூசிப் பண்டு ஏற்றதாக இருக்கும். (Canra Robeco Bluechip fund).


ரிடயர்மென்ட் திட்டத்தில் எஸ் ஐ. பீ (Retiremnet savings Hybrid scheme SIP)


இதேபோன்று நீங்கள் ரிடயர்மென்ட் திட்டத்தில் சேமித்து வந்தால், சுமார் ₹40 லட்சம் முடிவில் கிடைக்கும். அதற்கு மாதாமாதம் சுமார் ரூபாய் 35000 மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். அது உங்களது செலவுக்கு போதுமானதாக இருக்காது. அன்றைய ரூபாய் 35,000 இன்றைய ரூபாய் 12,000 என்பதை நினைவில் கொள்ளவும். எச்டிஎஃப்சி.ரிடயர்மென்ட் சேவிங்ஸ் ஈக்விட்டி ஃபண்டு வகையில் ஈகுட்டி சதவிகிதம் அதிகமாக இருப்பதால் கூடுதல் லாபம் கிடைக்க ஏதுவாக உள்ளது. (HDFC Retirment savings equity fund)


ஸ்பிரெட்ஷீட் (Excel) எப்படி கணக்கு செய்யப்படுகின்றது - கூகுள் ஸ்பிரெட்ஷீட்


இந்த படிவத்தில், உங்களுக்கு எவ்வளவு? மாதாந்திர தொகையை கிடைக்கும் என்பதை விரிவாக விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்பிரெட்ஷீட் எப்படி கணக்கு செய்யப்படுகின்றது என்ற விவரமும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தின் பயன்பாட்டில் எவ்வாறு SIP மாதாந்திர தொகை மற்றும் கிடைக்கக்கூடிய லாப தொகை விகிதம் Rate முதலியவற்றை மாற்றி விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. 

கேள்வி 18:  வீடா இல்லை பண்டா? 

என் வயது 50. எங்கள்பூர்விகசொத்துவீடு, சிதிலமடைந்தநிலையில்இருக்கிறது. தற்போதையசந்தைமதிப்புரூ 1 கோடி. வாடகைவருமானம்இல்லை.  என்ஓய்வுகாலத்திற்கு (60 வயது) தேவையானபணத்தைநான்இதுவரைமுதலீடுசெய்யவில்லை.  இந்தபூர்விகவீட்டைவிற்று, ஓய்வுகாலபணத்தேவைகளைசமாளிக்கமுடிவுசெய்துள்ளேன். இப்போதேவிற்று, அப்பணத்தை   பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள்மற்றும்கடன் சந்தைஃபண்டுகளில்சரிசமமாக  எஸ்டிபி (STP) மூலம்முதலீடுசெய்யலாமாஅல்லதுபத்துவருடம்கழித்துபூர்விகவீட்டைவிற்கலாமா? ஆலோசனைகூறவும்

என் பதில்

அசையா சொத்துக்களின் விலை எவ்வாறு இருக்கும், என்பது இடத்திற்கு இடம் மாறுபடும். அதன் தற்போதைய வளர்ச்சி மற்றும் வருங்கால, பத்தாண்டுகளில் வரப்போகின்ற வளர்ச்சி, அதைப்பொறுத்து அந்த இடத்தின் விலை ஏறுவது மாறுபடும். நாம்   மனதிலும் கொள்ள வேண்டிய விஷயம், மியூச்சுவல் ஃபண்டுகளில் ஈஇக்விட்டி  மற்றும் கடன் சந்தைகளில் கிடைக்கும் வருமானத்தை விட தாங்கள் வைத்திருக்கும் இடம் இன்னும் பத்தாண்டுகளில் கூடுதல் விலை கிடைக்குமா என்பதைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் கட னும் ஈகிவிட்டி சேர்ந்த அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்ட்கள் 12.8 சதவிகித லாபம் தந்துள்ளது. இதை விட லாபம் அதிகம், தங்களது இடத்தில்  இன்னும் பத்தாண்டுகளில் கிடைக்குமென்றால் அதை அப்படியே வைத்திருப்பது நல்லதுதான். தங்களது பழைய சிதலமடிந்த வீட்டிற்கு மிகப்பெரிய விலை ஏதும் கிடைக்காது. இடத்திற்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வீட்டை பத்தாண்டுகள் பராமரிப்பதற்கு செலவுகள் அதிகம் ஆகும் என்றால் அதைப் பற்றியும் நன்கு யோசித்து கொள்ள வேண்டும். வீட்டை பராமரிப்பது,  கடினம் என்று தோன்றினால், அந்த இடத்தை தற்பொழுது விற்று வரிகள் போக மீதமுள்ள பணத்தை கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து தாங்கள் கூறியபடி எஸ். டி பி. (STP) மூலம் ஈக்விட்டி ஃபண்ட்க்கு மாதா மாதம் மாற்றி வருவது உசிதமே. 10 வருட ஈகுட்டி எஸ். டி.பி 12 - 16%.லாபம் தர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 10 வருடங்களுக்கு பிறகு.அன்று உங்கள் மியூச்சுவல் ஃபண்ட், சேமித்த லாபம் கூடிய தொகையிலிருந்து, மாதாமாதம் உங்கள் செலவிற்கு எஸ் டபிள்யூ பி (SWP) மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. வீடாக இருந்தால் இடையில் பணத்தை எடுக்க முடியாது. பண்டாக இருந்தால் எடுக்கலாம். ஆனால் இது ஓய்வூதிய பணம் என்பதால் இடைப்பட்ட காலங்களில் பணத்தை எடுக்காமல் இருப்பது நல்லது.



கேள்வி 17: வீட்டுக் கடன்

01-Jan-2023

என் வயது 25. இப்போதுதான் சென்னையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். எனக்கு இப்போது பிடித்தம் எல்லாம் போக ரூ.35,000 கைக்கு கிடைக்கிறது. சென்னை ஓ.எம்.ஆர். பகுதியில்  இன்னும் 8-10 ஆண்டுகளில் வீட்டுக் கடன் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வாங்க திட்டமிட்டுள்ளேன்.  அதற்கு முன் பணம் திரட்ட நான் எது போன்ற மியூச்சுவல் திட்டங்களில் முதலீடு செய்து வர வேண்டும் என விளக்கி சொல்லவும்

என் பதில்

இளம் வயதில் வீடு வாங்க திட்டமிட்டு பணம் சேர்ப்பது சிறப்பு. ஓ. எம். ஆர். பகுதியில் இன்றய  விலையில் இரண்டு படுக்கை அறைகொண்ட அடுக்குமாடி வீடு சுமார் ரூ 50 லட்சமாக ஆகும். இன்னும் 10 ஆண்டுகளில் 5% வருட உயர்வில், வீட்டின் விலை.80 லட்சமாக இருக்கும்.அதற்கு முன் பணமாக (மார்ஜின் மணியாக) நீங்கள் 20 சதவீதத்தில் சுமார் ரூ 16 லட்சமாக கட்ட வேண்டும்.10 வருடங்கள் என்பதால்.மியூச்சுவல் திட்டங்களில் ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.வருட வருமானம்15% என்று எடுத்துக்கொண்டால், நீங்கள் மாதம் மாதம் கட்ட வேண்டிய எஸ்ஐபி தொகை ரூபாய் 6000 ஆகும். அதேசமயம் எட்டு வருடங்களில்.வீட்டுக் கடன் வாங்குவது என்றால், நீங்கள் கட்ட வேண்டிய எஸ்ஐபி மாதா மாதம் 9000 என்ற அளவில்இருக்கும். இந்த எஸ்பிஐ நீங்கள்.டைவர்ஸ் ஃபைன்ட் ஈகுட்டி(Diversified Equity) அல்லது. பிளேக்சி காப் ஈகுட்டி(Flexi cap equity) என்ற வகையில் முதலீடு செய்யலாம்.

இதற்கான template (google sheet) பெற தொடர்புகொள்ள கிளிக் செய்யவும் 

கேள்வி 16: பேலன்ஸ் அட்வாண்டேஜ் ஃபண்ட் Vs மல்டி அசெட் ஃபண்ட்

21-11-2022

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்  உள்ள பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் மல்டி அசெட் ஃபண்ட்க்கும் என்ன வித்தியாசம் உள்ளதுஇரண்டில் எது சிறந்தது?   

என் பதில்

இரண்டு வகையான பண்டுகளின் தன்மையை அட்டவணயில் பார்ப்போம்


பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட் 

மல்டி அசெட் ஃபண்ட 

கடன் (Debt)  முதலீடும் பங்குகளில் (Equity) முதலீடும் இரண்டும் இருக்கும் 

கடன்  முதலீடு , பங்கு முதலீடு, இந்த இரண்டும் தவிர மேலும் கமாடிட்டி (Commodity) எனப்படும தங்கம், வெள்ளி போன்ற வகையான  முதலீடுகளும் இருக்கும் 

பெரும்பாலும் சந்தையின் நிலவரத்துக்கு ஏற்றவாறே, பங்கு சதவிகிதம் குறைந்தும் கூடியும வரும் 

கடன், பங்கு, மற்றும் கமாடிட்டி சதவிகிதம பெரும்பாலும் மாறாது. உதாரணம் (பங்கு  60%, கடன் 30%, தங்கம் 10%). 

ஏற்ற இறக்கங்கள் பங்கு சதவிகிதம் பொறுத்து மாறும் 

ஏற்ற இறக்கங்கள் குறைவாக இருக்கும். 

பங்கு சதவிகிதம் கூடும் போது லாபம் கூட கிடைக்க வாய்ப்புகள் அதிகம்  

லாபம் சாதாரணமாகத்தான் இருக்கும்  

இரண்டு வகை . அகிறீஸிவ் மற்றும் கான்செர்வ்டிவ்  

தங்கத்திற்க்கு பதிலாக வெள்ளி இருக்கலாம்  


லாபம் அதிகம்  இருக்க வேண்டும் என்று எண்ணினால். அக்ரீஸிவ் பேலன்ஸ் அட்வாண்டேஜ் ஃபண்ட் வகைகளிலும், ஏற்ற இறக்கங்கள் குறைந்து  இருக்க வேண்டும், என்று எண்ணினால்,  ரிஸ்க் எடுக்க தயக்கம்  என்றால் மல்டி அசெட் ஃபண்ட முதலீடு சரியானதாக இருக்கும். பொதுவாக சந்தையில். ஒரு வகையான முதலீடு ஏறும் பொழுது அடுத்த வகையான முதலீடு. இறங்கும் என்பது ஒரு எழுதப்படாத சட்டமாக இருந்து வருகின்றது. இந்த வகையில் பார்த்தால், ஒன்று இறங்கும், இரண்டு ஏறும். எனவே. இந்த வகையான மல்டி அசெட் ஃபண்ட்களில்  ஏற்ற இறக்கங்கள் மிக குறைவாக இருக்கும்.

 

கேள்வி 15 : உயர்கல்வி தேவை

30-10-2022

என்னிடம் ரூ 10 லட்சம் இருக்கிறது. இந்த பணம் இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து என் மகளின் உயர்கல்வி தேவைக்கு வேண்டும். நான் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

என் பதில்

நீண்ட காலம் என்றால் ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். குறைந்த காலமென்றால் கடன் ஃபண்டுகளில் முதலீடு என்று எளிதாக சொல்லிவிடலாம். ஐந்து வருடம் என்பது, ரெண்டுங்கெட்டானாக நடுவில் உள்ளது. இரண்டாவதாக, உலகம்  வர்த்தகத்தில் மந்த நிலை நோக்கி போகின்றது என்று நம்பப்படுகின்றது ( Recessionary pressures). இது இந்தியாவை தவிர என்ற  அபிப்பிராயமும் உள்ளது. வியாபார மந்தம், இந்தியாவை பற்றிக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மூன்றாவதாக மருத்துவ உயர்கல்வி, வெளிநாட்டு உயர்கல்வி என்ற வகையில் பார்த்தால் அதிகம் செலவாகலாம். எனவே தங்களிடம் இருக்கும், தற்போதைய முதலை, ஹைபிரிட் ஃபண்ட் வகையில் பேலன்ஸ் அட்வாண்டேஜ் பிரிவில் முதலீடு செய்யலாம். ( உதாரணமாக- Edelweiss Balanced Advantage Fund Growth, கடந்த 5 வருட லாப விகிதம் 12%). மற்றும்.கடன் வகை ஃபண்டுகளில் மத்திய கால முதலீடாக முதலீடு செய்யலாம் (உதாரணமாக SBI Magnum Medium Duration Fund, கடந்த 5 வருட லாப விகிதம் 7%) 

09-10-2022

என் வயது 50. சமீபத்தில் விரும்ப ஓய்வு (VRS) பெற்றேன். எனக்கு ரூ.1 கோடி தொகை அந்த நிறுவனத்திடமிருந்து கிடைத்தது. இதற்கிடையே வேறு ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளம் ரூ,2 லட்சத்துக்கு வேலை கிடைத்துள்ளது. நான் ரூ. 1 கோடியை எனக்கு 60வது வயதில் பென்ஷன் போல் கிடைக்க எதில் முதலீடு செய்தால் லாபமாக இருக்கும்?


என் பதில்

ஓய்வூதியம் பெறுவதற்காக இப்போது முதலீடு செய்வது நல்லது. பெரும்பாலான அரசாங்க ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்வதற்கு 60 வயது பூர்த்தியாக இருப்பது அவசியம். தங்களது வயது 50 என்பதால், இன்னும் ஒரு பத்தாண்டு காலத்திற்கு கிடைத்த பணத்தை, பத்திரமாக முதலீடு செய்து, பின்னர் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

இந்த பணம் பத்திரமாக இருக்குமாறு முதலீடு செய்யப்பட வேண்டும். அதற்கேற்றவாறு நான்கு வகையான முதலீடு திட்டங்களை உங்களுக்குத் தருகின்றேன்

1.     சுமார் 25 சதவீத பணத்தை ஆர்பி பிளோட்டிங்  ரேட் பாண்டில் முதலீடு செய்யலாம் (RBI Floating rate bond). தற்பொழுது.வட்டி வீதங்கள் ஏறிக் கொண்டிருப்பதால் கூடுதல் வட்டி கிடைக்கலாம் வட்டிக்கு வரி உண்டு. பணம் பத்திரமாக இருக்கும். அரையாண்டு வட்டியை இக்விட்டி பண்ட் இல், எஸ் பி யாக முதலீடு செய்யலாம் 

2     மற்றுமொரு 10 சதவீதத்தை.போஸ்ட் ஆஃபிஸின்.மந்த்லின் இன்கம ஸ்கீமில் முதலீடு செய்யலாம்(Post office monthly income scheme). வட்டிக்கு வரி உண்டு. பணம் பத்திரமாக இருக்கும். வரும் மாதாந்திர  வட்டியை இக்விட்டி பண்ட் இல் எஸ் பி யாக முதலீடு செய்யலாம் 

 

3.     மூன்றாவது 40 சதவீதத்தை, கன்சர்வேட்டிவ் ஹைபிரீட் பண்டில்( Conservative Hybrid fund)  அல்லது ஓய்வூதிய திட்ட பண்டில் ( Retirement funds) முதலீடு செய்யலாம்


4.     கடைசியாக உள்ள 25 சதவீதத்தை பேலன்ஸ் அட்வண்டாஜ் பண்டில் (Balanced advantage fund)  முதலீடு செய்யலாம்.

        10 வருடங்கள் முடிந்த பின் உங்களுக்கு வயது 60 ஆகும் பொழுது, இதில் கிடைக்கும் பணத்தை, அன்றைய தேதியில் உள்ள ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். உதாரணமாக.பிரதமரின் ஓய்வூதிய திட்டம் (PMVVY) வயதானவர்களுக்கான ஓய்வூதிய திட்டம் (SCSS) போன்றவற்றில் முதலீடு செய்யலாம்

       இந்த பணம் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கு ஏற்றவகையில் முதலீடு செய்யப்படுவதால் அவசரப்பட்டு அவர் சொன்னார் , இவர் சொன்னார் என்று  முதலீடு செய்ய வேண்டாம்


       இன்சூரன்ஸ் திட்டங்களில் கிடைக்கும் லாபம், சற்றே குறைவாக இருப்பதால் அது போன்ற திட்டங்களை  நான்  உங்களுக்கு தரவில்லை . தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கடன் கொடுப்பது, நிலங்கள், வீடுகளில் முதலீடு செய்ய நினைப்பது, போன்றவற்றை தவிர்க்கலாம்


கேள்வி 13 : சந்தையும் பண்டு முதலீடும்

Date 17-Sep-2022

தற்போதைய சூழ்நிலையில் எந்த மியூச்சுவல் ஃபண்டில் ஒரு முறை மொத்த முதலீடு  செய்வதற்கு உகந்தது? அப்படி முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏதாவது இருக்கின்றனவா?

என் பதில்

தற்போதைய நிலைமை என்பது பல வகையான முதலீட்டுக் காரணிகளில் ஒன்றாக கொள்ளலாம் பொதுவாக உங்களது நிதி நிலைமை மற்றும் தேவைகளை குறித்து முதலீடு செய்யும் திட்டம் மாறிக்கொண்டே இருக்கும் அது போன்ற விவரங்கள் இல்லாததால் பொதுவாக நான் பதில் தருகின்றேன் தற்பொழுது ஆர்பிஐ என் வட்டி விகிதம் ( Bank interest ) ஏறிக்கொண்டு வருவதாலும் பணவீக்க சூழ்நிலையாலும்  ( inflationary pressure) சந்தை சாதாரணமாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் ( market volatality)  என்பதாலும் கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட் ( Conservative Hybrid fund) போன்றவற்றில் முதலீடு செய்வது உசிதம் என்று தோன்றுகின்றது


கேள்வி 12 : சந்தையில் சரிவும் பண்டில் லாபமும்

Date 08-Mar - 2022

திருமணத்திற்காக நிதித் திட்டமிட்டு 15 ஆண்டுகளாக  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வரும்போது. திருமண சமயத்தில் பங்குச் சந்தையில் மிகப் பெரிய சரிவு ஏற்பட்டால் என்ன செய்வது?

என் பதில்

நல்ல கேள்வி . பண்ட் முதலீடும் ரிஸ்க்கு  உட்பட்டதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டிய கேள்வி. பொதுவாக 15 வருடங்கள் முதலீடு செய்து பின் திருமண தேவைக்கு பணம் எடுக்கும் போது சந்தை குறைந்து இருந்தாலும் வரும் வருமானம் லாபகரமாக இருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம். பதினைந்து வருட இடைவெளியில்  ரோலிங் ரிட்டன் ( rolling return)  முறையில் சந்தையின் லாபத்தை பார்த்தால் அது எப்பொழுதும் லாபம் தந்து  இருக்கின்றது. மேலும் இதுபோன்ற சந்தை குறைந்துள்ள தருணங்களில் பணம் எடுக்கும் அசௌகரியங்கள் தவிர்க்க , திருமணம் அல்லது பணத் தேவைக்கு ஓரிரு வருடங்கள் முன்னதாகவே சந்தை நிலவரத்தை பார்த்து ஈக்விட்டி முதலீட்டில் இருந்து கடன் முதலீட்டிற்கு தவணை முறையில் மாற்றிக் கொண்டு விடுவது சந்தையின் ஏற்ற இறக்கங்களை கூடியவரை தவிர்க்க உதவிகரமாக இருக்கும்


கேள்வி 11: குழந்தைகளுக்கு சேமிப்பு

Date 19-Feb - 2022

என் அம்மா தன் சேமிப்பில் என்  இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ. 2 லட்சம் ரூபாய் கல்விக்கு பயன்படுத்த அளித்துள்ளார். எவ்வாறு சேமித்தால் 10 வருடம் கழித்து நல்ல பலன் கிடைக்கும்?

என் பதில்:

குழந்தைகளின் கல்விக்காக பணம் சேமித்து, அவர்களை.படிக்க வைப்பது, அவர்களது வருங்காலத்துக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். மியூச்சுவல் பண்டு திட்டங்களில், குழந்தைகளுக்கான தனிப்பட்ட.திட்டங்கள் உள்ளது. மற்ற திட்டங்களில் இருந்து இந்த குழந்தைகளுக்கான திட்டம் சற்று மாறுபட்டது. காரணம், குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு முதலீடு செய்யும் தொகையை.இடையிலேயே எடுத்துவிடாமல், குழந்தைகளின் வயது 18 ஆன பிறகு எடுக்குமாறு இந்த திட்டங்கள் வகை செய்யப்பட்டுள்ளது. தாங்கள்.அம்மா கொடுத்த தலா ரூ. 2 லட்சம் ரூபாயை அந்த அந்த குழந்தைகளின் பெயரில்.இந்த திட்டத்தில் முதலீடு செய்தால்.அவர்கள் 18 வயதிற்கு பின்னர்.அதில் வரும் தொகையை.அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வசதி உள்ளது. அந்த நேரத்தில் அதை எடுத்து அவர்களது படிப்புக்கு பயன்படுத்த ஏதுவாக.இருக்கும். 

கடந்த ஐந்து வருடங்களில்.குழந்தைகள் மியூச்சுவல் பண்டு திட்டத்தின்.ஆண்டு லாப விகிதம் சதவிகிதத்தில் கீழே தரப்பட்டுள்ளது 

மியூச்சுவல் பண்டு நிறுவனம் 

5 வருட லாப சதவிகிதம் 

HDFC

15.34

Axis

13.59

sbi

11.93

வாசகர் கேள்வி 1:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தவர்  இறந்துவிட்டால் புதிதாக ஒருவரை நாமினியாக நியமிக்க முடியுமா? அதற்கான நடைமுறை என்ன என்பதை விளக்கி சொல்ல முடியுமா?

என் பதில்:

நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தவர்  இறந்துவிட்டால் புதிதாக ஒருவரை நாமினியாக நியமிக்க முடியும். முதலீட்டாளர்கள், தங்களது பண்டு கணக்கில் நாமினேஷனை, எப்போழுது வேண்டுமானாலும் பதியலாம். முன்னால் பதிந்ததை மாற்றவும் முடியும். எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்றவும் முடியும். 

நாமினேஷனை புதிதாக பதியவோ அல்லது மாற்றவோ, பண்டு நிறுவனங்களிடம் இருந்து அதற்க்கான நாமினேஷன்  படிவத்தை பெற்று புதிய நாமினேஷன் பெயர்களை பூர்த்திசெய்து, கணக்கு வைத்து இருக்கும் எல்லா முதலீட்டாளர்களும் கையெழுத்து இட்டு பின் பண்டு நிறுவனத்திடம்  தரவேண்டும் . அல்லது பூர்த்தி செய்த படிவத்தை கேம்ஸ் (Cams)  அல்லது கே பின் டெக்கில் (K Fin Tech -பழைய கார்வி) பண்டு நிறுவனத்திற்கு ஏற்றவாறு தரவேண்டும். இரண்டு, மூன்று வாரங்களில், பதிவு செய்த விபரம் உங்களுக்கு வரும். 

வாசகர் கேள்வி 2:

என் வயது 34  நான் தனியார்  நிறுவனம் ஒன்றில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிகிறேன். எனது தொழிலாளர் வைப்பு நிதியில் மாதம் 7200 செலுத்தி வருகிறேன் . எனது இந்த சேமிப்பின் மூலம் எனது ஓய்வு வயதான 58 வயதில் ரூ. 1 கோடி பெற திட்டமிட்டுள்ளேன். இது சரியான முதலீடாக இருக்குமா ?

என் பதில்:

மாதாமாதம் ரூ 7200 தொழிலாளர் வைப்து நிதியில் சேமிப்பது 58 வயதில் ஒரு கோடியாக மாறுவது சற்று கடினமே. நீங்கள் கேள்வியில் குறிப்பிடாத விஷயம் தற்போது வைப்பு நிதியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று. எனவே நான் இருவகையில் பதில்  தருகின்றேன். 1) தற்போது முதல் சேமித்தால் ரூ 14000 மாத மாதம் சேமிக்க வேண்டும். 2) நீங்கள் 25 வயது முதல் சேமித்து வருவதாக இருந்தால் மற்றும் வருடந்தோறும் 3% முதல் 5% வாகில் மாத சேமிப்பு அதிகரிப்பதாக கொண்டால் உங்களது சேமிப்பில் 58 வயதில் ரூபாய் ஒரு கோடி கிடைக்க தற்போதைய   சேமிப்பு ரூ 7200 போதுமானதாக இருக்கலாம். கிடைக்கும் வட்டி விகிதம் 7.5% முதல் 8.5% வரை என்று கணக்கிடபட்டுள்ளது. இது குறையும் பட்சத்தில் நமது மாத சேமிப்பு கூட வேண்டும்.


வாசகர் கேள்வி 3:

நான் சமீபத்தில் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வீடு மாறினேன். பான் கணக்கில் முகவரியைப் புதுப்பித்தேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முகவரியைப் புதுப்பிக்க வேண்டுமா, அதற்கான நடைமுறை என்ன?

என் பதில்:

பான் கணக்கில் முகவரி மாற்றிவிட்டால், மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளிலும் தானாக மாறிவிடாது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர் கே.ஒய்.சி (KYC) புதுப்பித்தல் வழியாக முகவரி மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும். இதை உங்களின் நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் ஏஜென்ட், மியூச்சுவல் ஃபண்ட் கிளை நிறுவனம், கேம்ஸ் (CAMS), கார்வி (Karvy) போன்ற ஆர்.டி.ஏ நிறுவனங்கள் ஏதாவது ஒன்றின் மூலம் மேற்கொள்ளலாம். முகவரி மாற்றம் கே.ஒய்.சி-யில் புதுப்பிக்கப்பட்டதும், இந்தப் புதிய முகவரி ஒருவரின் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளிலும் மாறிவிடும். கே.ஒய்.சி-யை படிவத்தை நிரப்பிக் கொடுத்து மாற்றலாம் அல்லது கேம்ஸ், கார்வி-யில் ஆன்லைன் மூலம் மாற்றலாம். புதிய முகவரி மாற்றம் செய்யப்பட்ட ஆதார் கார்டு, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதாவது ஓர் ஆதாரம் தர வேண்டும்.

வாசகர் கேள்வி 4: 
நான் ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி முறையில் லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்களில் தலா ரூ. 5,000 முதலீடு செய்து வருகிறேன். இப்போது பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறேன். முதலீட்டு தொகை மாதம் ரூ. 6,000 எனக்கு ஏற்ற 3 பார்மா ஃபண்ட்களை பரிந்துரை செய்யவும்.

என் பதில்:

நீங்கள் பார்மா பண்டு  வாங்குவதற்கு முடிவு செய்தது நல்லது. பார்மா பண்டுகளை நெடுநாட்களாக பண்டு நிறுவனங்கள்  வழங்கி  வருகிறது. நீங்கள் இந்த மூன்றில் ஒரு பண்டில் முதலீடு செய்யலாம்  ஒன்று மிரே அஸெட் ஹெல்த்  கேர் இரண்டாவது ஐ சி ஐ சி ஐ பார்மா அண்ட் ஹெல்த்  கேர்  மூன்றாவது நிப்பான் இந்தியா  பார்மா. கடந்த ஒரு வருடத்தில் பார்மா பண்டுகள் நல்ல லாபம் தந்துருக்கிறது  அது தொடரும் என்ற நம்பிக்கையில் நாம் புதிய எஸ்ஐபி தொடங்கலாம் அதேசமயம் பார்மா போன்ற செக்டர் பண்டுகளில்  10 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்ய வேண்டாம்

வாசகர் கேள்வி 5: 30-05-2021

என்.வயது 25. ஆரம்பச் சம்பளமே மாதம் ரூ. 60,000 என்பதால் வருமான வரியை சேமிக்க இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். இதனை நான் அதன் லாக் இன் பிரீயட் மூன்று ஆண்டுகள் கழித்து நீண்ட கால முதலீடாக வைத்துக்கொள்ளலாமா? இந்த முதலீட்டின் மூலம் நான் வேறு என்ன வகையில் லாபம் அடைய முடியும்?

என் பதில்:

இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டில் செய்த முதலீட்டை, மூன்று வருட லாக் இன்னுக்கு பிறகு உடனே எடுக்க வேண்டும் என்றில்லை. தங்களது வருமானம் அன்றாட செலவுகளுக்கு போதுமானதாக இருப்பதால், இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டில் செய்த முதலீட்டை நீண்ட கால முதலீடாக கருத்தில கொண்டு தொடர்ந்து வரவும். இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டின் சராசரி ஆண்டு வருமான விகிதம் முறையே 1,3,5,10 வருடங்களுக்கு 63% , 9 %,14%, 13%  கிடைத்துள்ளது. இது ஈக்விட்டி பண்டு என்பதால் ஏற்ற இறங்க்கள் இருக்கலாம், அதே சமயம் மற்ற முதலீடுகளை விட லாபம் கூட கிடைக்க வாய்புகள் அதிகம். எனவே இ.எல்.எஸ்.எஸ் ஐ தொடரலாம். 

வாசகர் கேள்வி 5: 26-06-2021

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் யூனிட்களை விற்று பணமாக்கும் போது எத்தனை நாள்களுக்குள் வங்கிக் கணக்கு பணம் வந்து சேரும்? கொஞ்சம் விரிவாக விளக்கி சொல்லவும்.

என் பதில்:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் யூனிட்களை விற்று பணமாக்கும் போது கீழ்க்கண்டவாறு பணம் உங்கள் வங்கிக்கு வந்து சேரும் 

1 லிக்விட் மற்றும் ஓவர் நைட்  ஃபண்ட் என்றால் ஒன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் கிடைக்கும்

2 கடன் ஃபண்ட் என்றால் 2 லிருந்து 3 நாட்களுக்குள் கிடைக்கும்

3 ஈக்விட்டி  ஃபண்ட் என்றால் 3 லிருந்து 4 நாட்களுக்குள் கிடைக்கும்

4 ஃபண்ட் ஆப் ஃபண்ட் என்றால் 5 நாட்கள் ஆகலாம்

5 ஓவர் சீஸ் ஃபண்ட் ஆப் ஃபண்ட் என்றால் ஓரிரு வாரங்கள் ஆகலாம்

பெரும்பாலும் மேற்கண்டவாறு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் அதேசமயம் ஃபண்ட் நிறுவனத்திற்கு ஏற்ற வகையில் சற்று மாறுதலுக்கு உள்ளாகும்

சந்தை  நடைபெறும் தினத்தில் மாலை 3 மணிக்கு முன்னதாக ஃபண்ட் நிறுவனத்திடம் / அவர்களது ஆர் டி  எ  விடம் விற்பதற்கான விண்ணப்பம் சென்றடைய வேண்டும் 

மேற்கண்ட நாட்கள் கணக்கு நாம் விண்ணப்பிக்கும் நாள்  மற்றும் விடுமுறை நாட்களையும் தவிர்த்தது

வாசகர் கேள்வி 6: 08-08-2021

என் வயது 25. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். மாதச் சம்பளம் ரூ. 40,000. நான் எப்படி காப்பீடு மற்றும் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும்?

என் பதில்:

இளம் வயதில் முதலீடு மற்றும் காப்பீடு செய்ய நினைப்பதற்கு வாழ்த்துகள். இளம் வயதில் முதலீட்டை ஆரம்பிப்பதால், அதுவும் ஐந்தாண்டு இலக்குடன் ஆரம்பிப்பதால் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.   சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் மாதம் 5,000 ரூபாயை ஃபிளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவில் முதலீடு செய்து வரலாம். அல்லது  சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இண்டெக்ஸ் ஃபண்ட்கள் அல்லது இடிஎஃப் களில் முதலீடு செய்யலாம். காப்பீட்டுக்கு குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பாலிசி எடுத்துகொள்வோம். ஆன்லைனில் பாலிசி எடுப்பது மூலம் பிரீமிய செலவை குறைக்க முடியும்.  தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் குரூப்  இன்ஷூரன்ஸ் இருந்தால்  அதை பயன்படுத்திக்கொள்வதோடு, தனியே ரூ. 2 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது

வாசகர் கேள்வி 7: 05-09-2021

என் மகள் இன்னும் 7 ஆண்டுகளில் கல்லூரி செல்வாள். அவளின் மூன்றாண்டு கல்விச் செலவு சுமார் ரூ. 5 லட்சம் ரூபாயாக இருக்கும். நான் மாதம் எவ்வளவு தொகையை எந்த வகை மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்து வர வேண்டும்?

என் பதில்:

தங்களது மகள் கல்லூரி செல்லும் பொழுது பண வீக்கத்தினால் தற்பொழுது தேவையான ஐந்து லட்ச ரூபாய் சுமார் 8 லட்சமாக  உரு மாறி இருக்கும். கல்லூரி படிப்பிற்கான இந்த எட்டு லட்ச ரூபாயை பெறுவதற்கு தாங்கள் மாதாமாதம் சுமார் 7500 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். அதில் 5000 ரூபாயை மிரே அசெட் ஹைபிரிட் ( Mirae Asset Hybrid Equity) அல்லது சுந்தரம் ஈக்விடி ஹைபிரிட் ஃபண்ட் ( Sundaram Equity Hybrid) என்ற வகையில் முதலீடு செய்யலாம் மற்றுமொரு 2500 ரூபாயை நிப்டி நெக்ஸ்ட் 50 ( Nifty next  50 )வகையான இன்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 7- வருடம் என்பது சற்று நீண்ட கால முதலீடு என்பதால் அதிக ஈக்விட்டி உள்ள  பண்டுகள் இங்கே தரப்பட்டுள்ளது.

வாசகர் கேள்வி 8: 19-09-2021

மியூச்சுவல் ஃபண்டில் செக்ரிகேட்டு யூனிட்கள் (Segregated units) என்றால் என்ன? அந்த யூனிட்களை எப்போது விற்று பணமாக்க முடியும்?

என் பதில்:

செபி, டிசம்பர் 2018 இல் ஒரு சுற்றறிக்கையால் அறிவிக்கப்பட்டதின்  படி வரா கடன் அல்லது சந்தேகத்திற்கு இடமான கடன் இருக்கும் தருணத்தில் பண்டு நிறுவனம்   ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்களை, அந்த வரா  கடனுக்கு ஏற்றவாறு பிரித்து வைத்துக்கொள்ளலாம். இதற்கு செக்ரிகேட்டு யூனிட்கள் (Segregated units) என்று பெயர். இதனால் நாம் வைத்துஇருக்கும் நல்ல யூனிட்களின் ( NAV) என் எ வி . குறையும். இந்த செக்ரிகேட்டு யூனிட்களை  விற்கவோ / ர்டீம் ( Redeem)  செய்யவோ முடியாது.  அந்த பண்டு நிர்வனத்திற்கு கடன் பணம் திரும்ப வரும் போது, வந்த விகிதத்தில்  செக்ரிகேட்டு யூனிட்கள் வைத்து இருப்பவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும்

கேள்வி 9: 23-11-2021

நான் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால் எவ்வளவு காலத்துக்கு பிறகு இந்த ஃபண்டிலிருந்து வேறு ஃபண்டுக்கு முதலீட்டை மாற்ற வேண்டும். விளக்கி சொல்லவும்.

என் பதில்:

தாங்கள் முதலீடு செய்துள்ள  ஃபண்ட்  கடன் வகையா அல்லது ஈக்விட்டி வகையா என்று குறிப்பிடவில்லை. அது மிகவும் முக்கியம்.  கடன் வகையாக இருந்தால் வருமானம் சற்று குறைவாகத்தான் இருக்கும் வங்கி வட்டியை விட அதிகம் கிடைத்தால், நன்மையை என்று முதலீட்டை தொடரவும். அதேசமயம் ஈக்விட்டி வகையில் வருமானம் மிகவும் குறைவாக இருந்தால் அது சற்று கூர்ந்து பார்க்க வேண்டிய விஷயமே. தற்போது சந்தை மிகவும் உயரத்தில் இருப்பதால் ஈக்விட்டி வகையான ஃபண்டுகளில் வருமானம் அதிகமாக தான் இருக்கும். தாங்கள் முதலீடு செய்துள்ள  ஃபண்டில் வருமானம் மிகமிக குறைவாக இருந்தால் அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயல வேண்டும். அதே வகையான ஃபண்ட்கள் சந்தையில் குறைந்த வருமானம் கொடுத்துக் கொண்டு வந்தால் அதில் கவலை பட ஏதும் இல்லை. அந்த வகை பிடித்திருந்தால் அதை தொடரலாம். அதே சமயம் தாங்கள் முதலீடு செய்து இருக்கும் பண்டு வகையில் மற்ற ஃபண்ட்கள் மிக அதிக வருமானம் கொடுத்தால், ஏன் நமது ஃபண்ட் மட்டும் குறைந்த வருமானம் தருகிறது, எத்தனை வருடமாக குறைந்த வருமானம் தருகின்றது, என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். 3 அல்லது 4 வருடங்கள் தொடர்ந்து குறைவாகவே வருமானம் வந்திருந்தால், அதை சற்று மாற்றிக் கொள்ளலாம். யோசித்து முடிவு செய்யவும். அவசரப்பட்டு அடிக்கடி பண்டுகளை மாற்றுவதில் எந்தவித பலனும் இல்லை.

கேள்வி 10: 09-01-2022

நான் ஒரு கார்பெண்டர் எனக்கு நிரந்தர வருமானம் கிடையாது.. ஆனால் என்னால் ஒரு மாதம் ரூ. 7,000 வரை சேமிக்க முடியும்.. எனக்கு 20 வருடம் கழித்து ரூ. 50 லட்சம் வேண்டும். நான் எந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்..?

என் பதில்:

வருங்கால வளமான வாழ்விற்கு சேமிக்க வேண்டும் என்ற தங்களது முனைப்பிற்கு, வாழ்த்துக்கள். மாதா மாதம் ரூபாய். 7000 வீதம். 20 வருடம் சேமித்து பின்.ரூபாய் 50,00,000 பெற உங்களுக்கு கிடைக்க வேண்டிய வட்டி விகிதம் 9.5%. 20 வருட முதலீட்டில். இந்த வட்டி விகிதம் பெற.நல்ல டைவர்ஸ் ஃபைன்ட் ஈகுட்டி ஃபண்டுகளில் ( Diversified equity fund) முதலீடு செய்யலாம். ரிஸ்க் எடுக்க தயக்கம் எனில்.ஹைபிரீட் வகையான பேலன்ஸ் அட்வாண்டேஜ் ஃபண்டு களில் ( Aggressive balanced advantage fund) முதலீடு செய்யலாம். 

நிரந்தர வருமானம் இல்லாத காரணத்தால் நீங்கள் ஓரிரு மாதங்கள்.பணம் கட்டாமல் விட்டாலும் மியூச்சுவல் பண்டு முதலீடுகளில் எந்த சிக்கலும் கிடையாது.அதே சமயம் நீங்கள் மூன்று மாதம் தொடர்ந்து பணம் கட்டாமல் இருந்தால் உங்களது எஸ்ஐபி நின்று போய்விடும்.

2 comments:

  1. நான் Nippon india Taiwanequity fund இல் மாதம் 3000 ரூபாய் செலுத்தி வருகின்றேன். தற்போது அதன் மதிப்பு -28.50℅ உள்ளது. இதன் மதிப்பு உயருமா. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணன்.

    ReplyDelete
  2. please respond with your email, contact details with name through contact us form https://radhaconsultancy.blogspot.com/2016/10/email-me.html - I (Kannan) will respond to you. thanks for your interest

    ReplyDelete