Wednesday 21 September 2016

விருப்பங்கள் பலவிதம் - தேர்ந்தெடுப்பது எவ்விதம் – Selection of scheme options in MF

Read/download this article in magazine/pdf format

கடந்த சில இதழ்களில், விகிதாசாரங்கள், உதாரணமாக லாப விகிதம் செலவு விகிதம் என்றெல்லாம் பார்த்தோம். நிதி மேலாண்மையில் விகிதாசாரங்கள் பார்ப்பது மிக மிக அவசியம் தான். சரி பார்த்து, புரிந்து.. திட்ட நிறுவனங்கள், திட்டங்கள் என்றெல்லாம் முடிவு செய்து ஆகிவிட்டது. வேலை முடிந்த்தா? அதுதான் இல்லை.. முதலீடு செய்ய படிவம் பூர்த்தி செய்யவேண்டுமே!! அங்கு தான் படித்த பட்டதாரிகளுக்கே திரும்பவும் +2 பரிட்சை எழுத்துவதுபோல் இருக்கிறது. இதற்கு choice கிடையாது. அவசியம் நிரப்ப வேண்டிய * ஸ்டார் குறியீட்டு இடங்கள் பல இருக்கின்றன. எனவே திட்டங்கள் வாங்கும்போது காகிதத்திலோ அல்லது ஆன்லைனிலோ (online)  சரியாக புரிந்து நடப்பது அவசியம். கோட்டை விட்டால் படிவம் Fail ஆகி, சுவற்றில் அடித்த பந்து திரும்பி வருவது போல் நமக்கே திரும்பி வந்துவிடும்!! இதனால் நாம் நினைத்த நேரத்தில் சந்தையின் சரியான நேரத்தில் பங்குகளையோ திட்டங்களையோ வாங்காமலோ விர்க்காமலோ போய் விடலாம். சரி பரிட்சையில் "பாஸ்" செய்வது எப்படி , பொறுங்கள், கூறுகின்றேன்...

முதலில், நமக்கு மிகவும் பிடித்த நன்றாக தெரிந்த விடைகளில் கூட சிலருக்கு சிக்கல் வருகிறது. என்னவென்று தெரிந்ததா..?? நம் பெயர் தான்!! படிவத்தில் பெயர் எழுதும் போது அவசியம் பான் (PAN) கார்டில் எந்த பெயர் உள்ளதோ அதே வகையில் அதே ஸ்பெல்லிங்கில் எழுதவேண்டும். ஸ்பெல்லிங்கை மாற்றினால் படிவம் Pass ஆகாது.

அடுத்து என்ன? விலாசம் தான்.. ஒவ்வருவருக்கும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விலாசங்கள் உள்ளன. எந்த திட்டத்திற்கு எந்த விலாசத்தை கொடுத்தோம் என்பது ஞாபகம் இருப்பதில்லை. எனவே தற்போதிருக்கும் விலாசத்தை படிவத்தில் நிரப்புவதே சரியான வழி. அந்த விலாசத்திற்கு அடையாள அட்டை இருக்க வேண்டும். அச்சிகள் ஆத்தா வீட்டு விலாசத்தில் அடையாள அட்டை வைத்துக்கு கொண்டு, செட்டியார் வீட்டு விலாசத்தில் திட்டங்கள் வாங்க முயற்சி செய்வது சரியாக வராது. திருமணமானவுடன் புதிய அடையாள அட்டை புது விலாசத்தில் வாங்குவது சிறப்பாக இருக்கும்.

அடுத்து, யார் பெயரில் திட்டங்கள் வாங்குவது?? ஆச்சி பெயரிலா (மதுரை), செட்டியார் பெயரிலா (சிதம்பரம்) இல்லை புத்தம் புதிதாக பிள்ளை பெயரிலா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நான் எதுவும் சொல்வதற்கில்லை!! ஆனால் அதன் சாதக பாதகங்களை சற்று விளக்குகிறேன். உதாரணமாக, வரி விலக்கு வேண்டி வரி  விலக்கு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் யாருக்கு வரி விலக்கு வேண்டுமோ அவர்கள் பெயர் முதலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொத்தம் பொதுவாக குழந்தைகள் பெயரில் திட்டங்கள் வாங்கினாலோ தாய் தந்தை அல்லது காப்பாற்றுபவர் பெயர் கட்டாயம் கொடுக்க வேண்டும். (Parent or Guardian) மேலும் தனியாக ஒருவர் மட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக இருவராக சேர்ந்து வாங்குவது சாலச் சிறந்தது. அதிக பட்சமாக மூன்று பேர் பேரிலும் திட்டங்கள் வாங்கலாம். இருவர் அல்லது மூவராக வாங்கும் பொழுது யார் வேண்டுமானாலும் அந்த திட்டத்தை நிர்வகிக்க ஏற்றவாறு ( any one or survivor ) படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். ஒருவர் இன்னொருவரை ஏய்த்து விட்டு முதலீட்டை ஏப்பம் விட்டுவிடுவதாக கடுகளவு சந்தேகம் வந்தாலும் ( Joint)  என்று பூர்த்தி செய்து பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளவும். முன்னர் கூறியபடி முதல் முதலீட்டாளரே வரி சட்டங்களின் படி அந்த திட்ட முதலீடுகளுக்கு பொறுப்பாவார்கள்.

ஒருவழியாக யார் பெயரில் வாங்குவது என்று கலந்தோலாசித்து, இல்லை வழக்கம் போல் உயர்ந்த கை முடிவாகிவிட்டதா, அடுத்தாக வங்கி கணக்கு!! நமது திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பதிந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஒரு வங்கி கணக்கு அவசியம். திட்டத்தின் முதல் பெயர்தாரர் வங்கி கணக்கிலும் அவர் பெயர் இருக்க வேண்டும். வங்கி கணக்கை சரியாக கொடுப்பதனால் தற்காலத்தில் நாம் திட்டங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் காசோலைகள் மற்றும்  online transfer உபயோக படுத்துவதை தவிர்க்கலாம். வாங்கும்போது வங்கி கணக்கிலுருந்து நேரடியாக பணத்தை கழித்துக்கொண்டு திட்டத்தை வாங்குவார்கள். விற்கும் போது அல்லது டிவிடெண்ட் வரும்போது நேரடியாக வங்கி கணக்கில் வரவைத்து விடுவார்கள். இது ஒரு எளிய வழி. இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இன்னும் சில இதழ்கள் காத்திருக்கத்தான்வேண்டும்!

இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம்.. திட்டத்தில் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் தான் திட்டத்தில் வாங்கவும் விற்கவும் முடியும். உதாரணமாக, உங்கள் பெயரில் இருக்கும் திட்டத்திற்கு உங்கள் தம்பி வங்கி கணக்கிலிருந்து காசோலையில் கையெழுத்திட்டு பணம் கொடுத்து திட்டத்தை வாங்க முடியாது. அவசியம் வாங்க வேண்டும் என்று வரும் பொழுது அதெற்கென்று தனியாக படிவம் பூர்த்தி செய்து அவரது பான் (PAN) கார்ட் விவரங்கள் தர வேண்டும். அதுபோலவே விற்கும்போது விற்று வரும் பணம் உங்கள் கணக்கில் மட்டுமே வர வைக்கப்படும். வேறு கணக்கில் வர வைக்க மாட்டார்கள். நல்லது தானே!! பணம் பத்திரமாக இருக்கும்.. "புரிந்தது புரிந்தது, எங்களுக்கென்ன எட்டு கணக்கா உள்ளது? ஒன்றே ஒன்று கண்ணே கண்ணேவென்று ஒரு கணக்கு தானே இருக்கிறது".. என்று சொல்பவர்கள் மேலே படிக்கவும்!!

Growth’ஆ அல்லது dividend’ஆ..  Payout’ஆ அல்லது reinvestment’ஆ..?  எதை தேரந்தெடுப்பது என்றெல்லாம் சந்தேகம் வருவது சகஜம் தான். அதன் விவரம் இதோ..

Growth: நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் வரும் லாபத்தை அவர்களே நிறுவனமே  வைத்துக் கொள்வார்கள். அதை திரும்பவும் முதலீடு செய்து நமது பணத்தை பெருக்குவார்கள். நாம் திட்டத்தை முடிக்கும்போது அன்றைய தேதியில் இருக்கும் மதிப்பை நமக்கே திருப்பி தந்துவிடுவார்கள். முதலீடு செய்த தேதி மற்றும் திரும்ப பெரும் தேதி, இதற்கு இடைப்பட்ட காலங்களில் dividend வட்டி என்று எதுவும் தர மாட்டார்கள்.

Dividend: திட்டம் லாபம் சம்பாதிக்கும் போது திட்டமேலாளரின் முடிவின் படி வரும் லாபத்தை நமக்கு பகிர்ந்தளிப்பார்கள். இது வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை பல முறையோ இல்லை பல வருடங்களுக்கு ஒரு முறையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்குள் இரண்டு வகை உள்ளது. ஒன்றின் பெயர் Dividend Payout - இதில் வரும் லாபம் நமது வங்கி கணக்கில் வரவு வைக்கைப்படும். Dividend Reinvestment - வரும் லாபம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது, அதே திட்டத்தில் திரும்ப முதலீடு செய்யப்படும். என்ன குழப்புகிறீர்கள், இது தானே growth என்பது..? என்று கேட்டவர்கள் , நீங்களே உங்கள் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள்.. புத்திசாலிகள் தான்!! இரண்டிற்கும் உள்ள சிறிய வேறுபாடு, இந்திய வரி துறை இரண்டையும் எப்படி பார்க்கிறது என்பது தான். Growth மூலம் வரும் லாபத்திற்கு capital gain எனப்படும். Dividend ஆக வரும் லாபம் தற்போதைய சட்டங்களின் படி வரி விளக்கு பெற்றது. மேலும் விவரம் வேண்டுமெனில், எழுதுங்கள் எனக்கு இன்னொரு இதழில் பார்ப்போம்...

வாழ்க்கையில் அன்றாட தேவைகளுக்கு பணம் வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு dividend payout  என்ற வகையை பங்கு திட்டங்களில் தேர்வு செய்யலாம். மற்றவர்கள் growth முறையை தேர்வு செய்யலாம். கடன் திட்டங்களில் வரும்போது இது சற்று மாறுபடும். தற்போதைய இந்திய வரி சட்டத்தின் படி, திட்ட நிறுவங்கள் வரும் லாபத்தில் dividend distribution tax கட்டிய பிறகு மீதம் இருப்பதை நமக்கு பகிர்ந்திடுவார்கள். இதனால் வரும் லாபம் சற்று குறையலாம். இந்த நிலைமையில் growth முறையா இல்லை dividend payout முறையா என்பது அவரவர்கள் வரிக்கட்டும் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இதை புரிந்து கொண்டு நமக்கு எது சாதகமோ அதை தேர்வு செய்யவேண்டும்.

FATCA - மத்திய அரசின் புதிய கொள்கையின் படி சமீப காலமாக இந்த படிவமும் பூர்த்தி செய்யவேண்டும். இதன் படி நாம் இந்தியாவில் மட்டும் கணக்கு வைத்திருக்கிறோமா இல்லை அயல் நாடுகளில் கணக்கு இருந்தால் அந்த கணக்கையும் வரி கட்டும் விவரம் ஆகிவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

DMAT / Physical Mode - நமது பரஸ்பர நிதி திட்டங்களை இந்த இரண்டு வகையிலும் வைத்துக்கொள்ளலாம். Phyiscal mode என்றால் கற்காலம் ( Stone age) என்று என்ன வேண்டாம். Phyiscal mode திட்டத்தின் விவரங்களையும் கணினியில் இணையத்தில் பார்க்கலாம்.

இணையம் மூலம் வாங்குவது, விற்பது, கைப்பேசியை இதற்கு உபயோகப்படுத்துவது, போன்றவற்றை வரும் காலங்களில் பார்ப்போம்!

Tuesday 13 September 2016

விரல் நுனியில் தகவல்கள் - Technology: One touch away


This article has been recently published in "Nanayam Vikatan" dated 18/09/2016. Here's the link to read my article online, if you have online access in vikatan group. The same article is given below.

http://www.vikatan.com/nanayamvikatan/2016-sep-18/mutual-fund/123296-mutual-fund-tips.art

சமீபகாலமாக கையில் கருப்பு கலரில் ஒரு சென்சார் கட்டிக்கொன்டு திரிகின்றேன். அது எவ்ளோ தூரம் நடந்தேன் எவ்ளோ நேரம் தூங்கினேன் என்று என்னவெல்லாமோ, கையில் திரட்டிய தகவல்களை கைபேசியில் தருகிறது. காரணம்??? என்ன, தெரிந்ததுதானே!!! தகவல் தொழில்நுட்பம் தான்.. தற்போது யுவன்களும் யுவதிகளும் பயன்படுத்தும் செயலிகள் (Mobile Apps) நிறைய பேருக்கு சற்றும் பரிச்சியம் இல்லாதவை. ஆனால் பலன்களோ அதிகம் தான்!! இந்த தகவல் தொழில்நுட்பத்தை முதலீட்டு  தகவல்களை திரட்ட எப்படி பயன் படுத்தலாம் என்று பார்ப்போமா...

அன்றாடம் ஆயிரம் செயலிகள் (apps) வந்த வண்ணம் உள்ளன. விரல் நுனியில் வங்கி, பணம் என்றெல்லாம் வந்துவிட்டது. பரஸ்பர நிதி மட்டும் என்ன விதிவிலக்கா? அதுவும் உங்கள் ஆள்காட்டி விரலின் அடியில் தான் இருக்கிறது. தொடுங்கள், பெறுங்கள் யூனிட்டுகளை (unit). பரஸ்பர நிதி திட்டங்கள் பலருக்கு போய் சேரவில்லை என்று அரசாங்கத்திற்கு ஆதங்கம். திட்டங்கள் வைத்திருப்போரும் விடாமல் தினந்தோறும் படிவங்கள் பூர்த்தி செய்தவாறு உள்ளனர். இது மாற, எளிமையான புது உலகத்திற்குள் நுழைவோம்!! நேற்றுவரை KYC என்பது பெரியதொரு வேலை. இன்று அது maggi போல தான். புரிந்ததா?? online மூலம் இரண்டு நிமிடங்களில் adhaar அட்டையும், pan அட்டையும் இருந்தால் KYC தயார்!! தற்பொழுது kyc க்கு புதியதொரு நடைமுறை நடைமுறை வந்துள்ளது. இதனால் நாம் வங்கி கணக்கு, பரஸ்பர நிதி கணக்கு, அஞ்சல் அலுவுலக கணக்கு, காப்பீட்டு கணக்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக kyc செய்ய வேண்டாம். ஓர் இடத்தில kyc இருந்தால் போதுமானது. அது உங்கள் ஊருக்கு வர நாள் ஆகலாம், விசாரிப்பது உசிதமானது.

இரண்டாவதாக, வாங்குவதற்கோ, விற்பதற்க்கோ அதற்கான படிவங்கள் இல்லாதவர்கள் online மூலம் அணைத்து பரஸ்பர நிதி பரிமாற்றங்களை பண்ண முடியும். இதை கைபேசி செயலி மூலம் அல்லது கணினி , tablet மூலம் (மாத்திரை என நினைத்துக்கொள்ள வேணாம்..) அந்தந்த நிறுவனத்தின் வளையதளங்களுக்கு சென்று செய்ய முடியும். இந்த online வசதி பெறுவதற்கு பல படிவங்கள் பூர்த்தி செய்து, முத்திரை தாளில் கைநாட்டு போட்ட காலங்கள் மலையேறிவிட்டது. நாலே (4) கேள்வி தான்… பதில் சரியாக சொன்னால் அடுத்த நிமிடம், online access!! என்ன, நாலு கேள்வியை தெரிந்து கொள்ள ஆசைதானே..?? அந்த கேள்வியை நான் leak செய்து விடுகிறேன்!!
1) மின்னஞ்சல்
2) கைபேசி எண்
3) வங்கி கணக்கு எண்
4) பாண் அட்டை எண்

நீங்கள் ஒவ்வொரு நிதி நிறுவனங்களிலும் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தால் ஞாபகாமா online access வாங்க அதே மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டும். ஞாபக மறதி இருந்தால் சிக்கல் தான்!! பொதுவாக நான் கூறிய நாலு கேள்விகள் தான். ஆனாலும் அது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடலாம்.

ICICI Prudential பரஸ்பர நிதி நிறுவனத்தின் online access பெறுவதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம் - https://www.icicipruamc.com/ அதனுடைய தகவல் பக்கத்தின் மாதிரி இங்கு தரப்பட்டுள்ளது.


செயலி என்று வரும்போது android மற்றும் iphone ஆகிய கைபேசிகளுக்கு நிறைய நிதி நிறுவன செயலிகள் உள்ளன. ஆனால் windows கைபேசியில் பார்க்க அவ்வளவு செயலிகள் இல்லை. அதற்காக அவர்கள் கவலை கொள்ள தேவை இல்லை. அதே சேவைகளை கணினி மூலம் பெறலாம். online மூலம் என்ன தான் பெற முடியும் என்று பார்த்துவிடுவோம்...
1) உங்களது கணக்கின் சமீபத்திய மதிப்பு , யூனிட்களின் கூட்டு தொகை ஆகிய summary விவரங்களை பார்க்கலாம். ICICI Prudential மாதிரி summary sheet தரப்பட்டுள்ளது.


Folio
Fund Name
Balance Units
NAV
Cost Value
Dividend Reinvested Value
Current Value
GainLoss (in Rs)
Return (XIRR)
XXX
Infrastructure Fund
2,222
15.8
27,180
0
35,112
7,932
27.70%
XXX
Dynamic
2,319
22.2
30,018
10300
51,564
21,546
13.13%
XXX
India Recovery Fund Series 1
9,990
10.0
99,900
0
99,800
-100
-0.24%
XXX
FMP Series 64
990
12.7
9,900
0
12,590
2,690
8.39%
XXX
Interval Fund Series VI
1,500
12.4
15,000
0
18,557
3,557
9.11%

2) மேலும் சில தளங்கள் மட்டும், உங்களுக்கு கிடைக்கும் வருடாந்தர லாப சதவீதம் (XIRR) திட்டவாரியாக கிடைத்தது என்ற தகவலை தரும். மாதிரியில்  காண்பித்திருக்கும் summary sheet இல் XIRR காணலாம். ஆனால் எல்லா நிறுவன தளங்களும் இவற்றை காண்பிப்பது இல்லை. எல்லா தளங்களும் தர வேண்டும் என்று சட்டங்கள் வந்தால் நல்லது!

3) விரிவாக பார்க்கவேணுமெனில் உங்கள் எல்லா பரிமாற்றங்களும் (நிதி பரிமாற்றம், நிதி இல்லா பரிமாற்றம்) போன்ற விவரங்களை பெரும்பாலும் pdf file ஆக தரவிறக்கம் (download) செய்யலாம். நாம் மேற்கொண்டு கூட்டி கழித்து பார்ப்பதற்கு pdf file ஆக இல்லாமல் excel ஆக இருப்பது உத்தமம். ஆனால் எல்லா தளங்களும் இவ்வாறு excel ஆக கொடுப்பது இல்லை. கொடுத்தால் உபயோக படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பது என் அவா.

4) மேற்கொண்டு online மூலமாக நீங்கள் வாங்க விற்க, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற முடியும் (switch)

5) முன்னர் கூறியபடி நிதி அல்லாத பரிமாற்ற சேவைகள் சிலவற்றை online மூலம் செய்யலாம். ஆனால் மிக முக்கியமாக வங்கி கணக்கு எண் மாற்றுவது போன்றவற்றை online மூலம் செய்ய முடியாது. காரணம்?? நமது நன்மைக்காக தான்... அதற்கு முதலீட்டாளர்கள் கையெழுத்திட்ட படிவங்கள் தேவை.

6) சமீபத்தில் அனைவரும் கடந்த வருட வரி கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்த்திருப்பீர்கள் (IT Return) , இந்த வரி கணக்கு சமர்ப்பிப்பதற்கு முக்கிய தேவை, பங்கு அல்லது பரஸ்பர நிதிகளில் எவ்வளவு லாப நஷ்ட விவரம் வேண்டும். இவற்றை மிக எளிதாக online மூலம் பெற்றுவிட முடியும். மேலும் உங்களுக்கு எவ்வளவு டிவிடெண்ட் கிடைத்தது என்பதையும் இந்த தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். வரி கணக்கு சமர்ப்பிப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும். இந்த capital gain , dividend distribution விவரங்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணக்காளர்களிடம் (auditor ) கொடுத்து விடலாம். இல்லை நீங்களே online மூலம் வரி கணக்குகளை சமர்ப்பிக்கும் முறைகளும் உள்ளன. அதை பற்றி தெரிந்து புரிந்து கொண்டு கணக்காளர்கள் இல்லாமல் நாமே நேராக return file செய்து விடலாம்.

தற்சமய நிலவரபடி இந்த செயலிகள், இணையதள உபயோகங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு ஆகும் செலவை திட்ட செலவினங்களோடு சேர்த்துவிடுவார்கள். எனவே ஏன் இன்னும் தயக்கம்?? நல்ல பயன்களை அனுபவித்து கொள்வோம். இதனால் நிதி நிறுவனங்களுக்கு நேரே செல்லும் பெட்ரோல் செலவு சிக்கனம் ஆகலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது தானே!! இதே போல் நாம், நமக்கு வரும் தகவலை ஈமெயில் மூலமாக பெறுவதால் காகிதங்களில் அச்சிடப்படுவது குறைகிறது. இது சுற்று சூழலுக்கு மிகவும் நல்லது. எனவே பங்கு, பரஸ்பர நிதி உபயோகிப்பவர்கள் வருடாந்திர கணக்கு புத்தகங்களை (Annual Report ) ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.

Thursday 1 September 2016

முதலீட்டுத் தெளிவு – Selection of Investments

முதலீட்டு வகைகள் , அதன் நெளிவு சுளிவுகள், லாபம் ஈட்டும் தன்மை என்று பலவாறு பார்த்தோம். அடுத்து எல்லோருக்கும் எழக்கூடிய சகஜமான கேள்விகள் என்னென்ன?
1) பல பரஸ்பர நிறுவனங்கள் உள்ளன
2) நமக்கு பிடித்த முதலீட்டு வகையிலேயே பல திட்டங்களும் உள்ளன. உதரணமாக, நாம் கேட்கும் சம விகித பங்கு/கடன் திட்டங்கள் உள்ளன
3) இதில் பிரம்மப்ரயர்தனம் என்னவென்றால்... இவைகளில் எதை நாம் தேர்வு செய்வது??


பங்கு வர்த்தகத்தில் ஜெய்க்கும் குதிரையை நாம் தேர்வு செய்வது கடினம் ஆனால் பரஸ்பர நிதிகளில் குதிரையை தேர்ந்தெடுப்பது சுலபம் தான். இதில்லாபம் கிடைக்க வாய்புகள் மிக அதிகம். இன்னும் ஒரு கூடுதல் போனஸ்... இதில் நமக்கேற்றவாறு சேவையும் நன்கிருக்கும். அதை எப்படி சல்லடை போட்டு சலித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இனி பார்க்கலாம் வாருங்கள்!!

முதலாவதாக, எந்த பரஸ்பர நிதி நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்று முடிவு செய்யவேண்டும். சற்று பெரிய நிதி மற்றும் நல்ல நிதி மேலாண்மை உள்ள நிறுவனமாகவும் தேர்வு செய்யலாம். அட்டவணை 1'ல் பரஸ்பர நிதி நிறுவங்களின் பெயரும் அதன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை பார்க்கலாம். (AUM - Assets under Management)

Mutual fund house AUM data as on 31/3/2016 - Table 1 (Figure in Lakhs. Source: AMFI Data)
Mutual Fund Name
Average AUM
ICICI Prudential Mutual Fund
        1,75,88,087
HDFC Mutual Fund
        1,75,77,939
Reliance Mutual Fund
        1,58,40,845
Birla Sun Life Mutual Fund
        1,36,50,341
SBI Mutual Fund
        1,06,78,078
UTI Mutual Fund
        1,06,30,922
Franklin Templeton Mutual Fund
           66,94,692
Kotak Mahindra Mutual Fund
           58,49,515
IDFC Mutual Fund
           52,12,899
DSP BlackRock Mutual Fund
           39,13,331
Axis Mutual Fund
           37,68,787

இரண்டாவதாக, நாம் தேர்வு செய்யும் நிறுவனம் நல்ல சேவை அளிக்குமா என்று பார்க்கவேண்டும். சேவை என்று வரும்பொழுது  தற்போதுள்ள "Technology" யுகத்தில் அந்த நிறுவனத்தின் திட்டங்களைப் பற்றி தகவல் வாங்குவது ( buy), விற்பது (Redeeem) , ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுவது ( Switch) , சொத்து மதிப்பு பார்ப்பது ( Networth) வாடிக்கையாளர் சேவை தரம் , பதில் அளிக்கும் வேகம் ஆகியவற்றை பரிசீளிக்கவேண்டும். இதெல்லாம் பார்த்த பின், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களை தேர்ந்தெடுங்கள். அடுத்து, அந்த நிறுவனங்களின் சிறந்த திட்டங்களை எப்படி தேர்வு செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.
திட்டத்தின் செலவினம் (Expense ratio): நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் செலவினம் குறைவாக இருக்குமாறு தேர்வு செய்யலாம். ஏனெனில் நமக்கு கிடைக்கும் லாப விகிதம் திட்டத்தின் லாபத்தில் செலவினம் போக மீதம் தான் நமக்கு கிடைக்கும்.

திட்டத்தின் லாப விகிதம் பரஸ்பர நிதிகளில் பங்குத் திட்டங்களில் லாப விகிதத்தை 3, 5, 10 வருட இடைவெளியில் எவ்வாறு கிடைத்துள்ளது என்பதை பார்த்து தேர்வு செய்யலாம். பங்கு திட்டங்களில் 1 வருடத்திற்கு குறைந்த லாப விகத்தை பார்க்கும்பொழுது Absolute return பார்க்க வேண்டும். இதை ஆண்டிற்கு மாற்றி பார்ப்பது அவ்வளவு உசிதம் அல்ல. உதரணமாக , பங்கு திட்டங்களில் ஒரு காலாண்டில் 10% லாபம் கிடைத்தால் அதை வருடத்திற்கு 40% என்று எண்ணி வருடா வருடம் 40% கிடைக்கும் என்று கொள்ளக்கூடாது. இருந்தாலும் 5 - 10 வருடங்களில் நிலையான லாபம் தந்திருந்தால் அந்த நிதி திட்டம் நல்ல நிதி மேலான்மையோடு செயல்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளவும். 

Alpha, விகிதங்கள்: ஆல்பா என்பது நமது திட்டம் சந்தையின் லாபத்தை விட எவ்வளவு அதிகமா தந்துள்ளது என்பதாகும். உதரணமாக, ஒரு வருடத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடு எண் 17% ஏற்றமாக இருக்கும்போது நமது திட்டம் 22% ஏறி இருந்தால் ஆல்பா என்பது 5%. எனவே நாம் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஆல்பா தரும் திட்டமாக இருக்க வேண்டும். இங்கு இன்னொரு தகவல், நிதி திட்டங்களில், மற்றொரு வகை பிரிவும் உள்ளது. ஒன்று, Active Investing என்று பெயர். அடுத்து Passive investing முதல் வகையில், திட்ட மேலாளர் Fund Manager திட்டத்தை நன்கு பராமரித்து, Alpha  தரவேண்டும். இதில் Expense ratio சற்று கூடுதலாக இருக்கும்.

Beta விகிதங்கள்: அடுத்ததாக எல்லார்க்கும் தெரிந்த விஷயம் தான்... சந்தை ஏறும்போது நமது திட்டத்தின் மதிப்பு கூடுகிறது. அதேபோல் இறங்கும் போது இறங்குகிறது. இதைத்தான் பீட்டா என்று கூறுவார்கள். நமது திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையோடு ஒத்து இருந்தால் பீட்டா 1 என்று பெயர். திட்ட மேலாளர் திறமையில் நம்பிக்கை வைக்காதவர்கள், சந்தை குறீயீட்டு என் சார்ந்த திட்டங்களில் ( index funds)  மூதலீடு செய்யலாம். இதற்கு Passive investing என்று பெயர். இதில் Expense ratio சற்று குறைவாக இருக்கும். நமது லாபம் சந்தையை ஒட்டியே இருக்கும். Beta 1 ஆக இருக்கும்.

Sharpe Ratio  : நமது திட்டத்தின்பீட்டா எண் குறைய குறைய திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையின் ஏற்ற இரக்கத்தை விட குறைவாக இருக்கும். எனவே, ஆல்பா அதிகமாகவும் பீட்டா குறைவாகவும் இருக்கும் திட்டங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். இது இரண்டையும், மேலும் திட்டத்தின் ரிஸ்கையும் சேர்த்து பார்ப்பதற்கு உள்ள விகிதத்தின் பெயர் Sharpe Ratio. இது positive எண்ணாக இருக்க வேண்டும்.

நிதி நிறுவன அறிக்கைகளை எடுத்து இந்த விவரங்களை பார்த்து "நமக்கு நாமே" முடிவு செய்து திட்டத்தை தேர்வு செய்வது சற்று கடினம் தான்... நமக்கு வாழைபழத்தை உரித்து கொடுத்தால் தானே சாப்பிட்டு பழக்கம்!!  ஒரு சில ஆச்சிமார்கள் மாம்பழத்தை தோல் சீவி, நறுக்கி, நன்றாக இருக்கிறதா, இனிக்கிறதா என்றெல்லாம் பார்த்து செட்டியாருக்கு சாப்பிட குடுப்பது போல (செட்டியார்களுக்கு ஆசைதான்), இந்த திட்டங்களை அலசி ஆராய்ந்து முதலீடு செய்ய ஏற்றதா என்று திட்டங்களை தர வரிசை படுத்தி நட்சத்திர குறியீடு குடுக்கும் இணையங்கள் சில உள்ளன. நட்சத்திர திட்டங்கள் மேலானவை. 1 நட்சத்திர திட்டங்கள் தவிர்க்கவேண்டியவை. இது போன்று தர வரிசை தரும் இணையங்கள், இதோ உங்களுக்காக சில:
1) http://www.morningstar.in/
2) https://www.valueresearchonline.com/

Morning star என்பது அமெரிக்க இணையதள நிறுவனம். இதன் இந்திய இணையதளம் எந்த நிதி நிறுவன சார்பும் இன்றி நடு நிலையாக திட்டங்களை ஆராய்ந்து தர வரிசை அளிக்கிறது.
Value research online என்பது  இந்திய பரஸ்பர நிதி இணையத்தளத்தில் முதன்மையான ஒன்று. இதன் தரவரிசையும் தரம் வாய்ந்ததுதான்.
நாம் நல்ல திட்டங்களை தேர்வு செய்ய கீழ் கண்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

1) திட்டம் எந்த வகையை சார்ந்தது - பங்கு, கடன், கலப்பு
2) இது Growth வகையா, value வகையா
3) Large, small, midcap வகையா
4) 3 , 5 வருட லாப விகிதங்கள்
5) திட்டம் எந்த பங்குகளில் - கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது என்ற முழு விவரம்
6) திட்டத்தின் டிவிடெண்ட் குடுத்த சரித்திரம்
7) நான் மேல் கூறிய expense ratio, alpha, beta, sharpe ratio ஆகிய விவரங்கள்

இவற்றை பார்த்து திட்டங்களை முடிவு செய்வது நல்ல பலன் தரும் என்று எதிர் பார்க்கலாம்மேலும் ஒரு எச்சரிக்கை.. கடந்த கால லாப விகிதங்கள் மற்றும் தரவரிசை எல்லாம்,  ஒரு குறியீடே! அதே போல் எதிர்கால லாபம் இருக்கும் என்று நிச்சியம் இல்லை என்று புரிந்துகொள்ளவேண்டும். இந்த கட்டுரையில் கூறிபடி, நல்ல திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். லாபம் சந்தையின் கையில்

All you need to know about KYC, CAN and MFU for mutual fund investments

Being in the mutual fund industry for quite some time, I am aware how difficult it is to fill the hard copy forms for every transaction. Even if you have online access to mutual fund house websites, it becomes very tedious to transact multiple funds in the same fund house or across various fund house.

To overcome this hassle, a new innovative solution is now available which is called MF Utility (MFU). This online transaction portal reduces duplication and increases efficiency. MFU is approved by AMFI / SEBI. It is jointly developed by mutual funds to make transacting easier and efficient.

ADVANTAGES OF MFU
  • You can see all your funds, across various fund houses in one single screen/window.
  • It is similar to single “sign on” in technical terms – no need for multiple log-in to various fund houses.
  • There are no charges for using MFU platform.
  • You can buy / redeem / switch for any funds in the same place.
  • As your mutual fund advisor, I can register your buy / redeem / switch etc and your job gets easier - you just need to approve.
  • You can approve even without using internet. It can be done through sms.

STEPS TO OBTAIN COMMON ACCOUNT NUMBER (CAN) IN MFU:

CAN is based on PAN number and combination of holding.

If you have solo holding and as well as joint holding, you have to get more than one CAN.It is a one-time process. Rest assured, we can transact in any mutual fund online without filling any hard copy form or visiting bank sites for transfer of funds.
  1. Select this link - https://www.mfuindia.com/CANFormFill
  2. Fill online CAN request form (This is an online form which needs to done online)
  3. Enter my code ARN 4367 also EUIN - E032684 in the form
  4. Fill all other requested details
  5. Once filled, save it, print it and sign it.
For bank transfers, one time mandate has to be given - by this no need to write any cheque later, or visit the bank site for transfer every purchase.

STEPS FOR PAYEZZ REGISTRATION:
  1. Select this link - https://www.mfuindia.com/downloads/PayEezz-Mandate-Fillable.pdf
  2. Download the form from this link.
  3. Fill the pdf file, save it and then take print out. (This is a fillable pdf file)
  4. Sign in the respective places
  5. Being Bank related form, NO corrections/ overwriting/ strike through is allowed.
  6. Payezz registration will take up to 15 to 30 days
  7. You can fill maximum amount, you can invest in single go - this amount is only approval amount and will not get debited from your account
  8. I’m providing an example for easy understanding: If you fill the maximum amount as 1,00,000 - next time when make online purchase of Rs 10,000 it will still be processed and only 10,000 will get debited from your account. But any amount more than 1,00,000 will be rejected.
Once both CAN and PAYEZZ forms are done, you can transact in any fund at any time.
Please reach out to me in this regard.

FOLLOWING ARE REQUIRED FOR DOCUMENTATION:
  1. Filled and printed CAN form with Signatures
  2. PAN copies (Self attested)
  3. Pay ezz forms
  4. Blank cancelled chq with name printed on the cheque. Else provide latest 3 month bank statement with your name on it
SIP: 
      Please download fillable pdf from the following link and fill the forms - take a print out
       https://www.mfuindia.com/downloads/CTF-SIP-Fillable.pdf

KYC:

If you have KYC compliant, then there is no need to provide any further documentation for mutual funds in this regards. If not, the first step is to provide KYC documents. If you are not aware if you are KYC compliant or not, you can verify in the following link by supplying your PAN number - https://www.cvlkra.com/ (Go to KYC Inquiry tab)

If not, please complete KYC documentations for investing in mutual funds.

STEPS FOR KYC:
  1. Please download the KYC form from this link – given in point 3
  2. From Feb 1, 2017, we need to use the ney central kyc form - use this link to download the form from the link given below in point 3
  3. Take printout
  4. Fill the details in the form
  5. Affix recent passport size photograph - sign below the photo - not across the photo
  6. In person verification / attesation has to be done by Authorised person, usually Bank managers
  7. 2 signatures are required – one below the photo and one at the bottom of the form
  8. Self-attested PAN copy is required and original should be available for verification.
  9. Self-attested address proof is required and original should be available for verification.