Tuesday 21 March 2017

எஸ்.ஐ.பி யில் லாபத்தை அதிகரிக்கும் 6 வழிமுறைகள்

அறிந்ததும் அறியாததும் (SIP – Let us know it better)

எஸ் ஐ பி  தற்போது மிகவும் புழக்கத்தில் உள்ள மந்திர வார்த்தைநிதி ஆலோசகர்கள், வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், ஊடக ஆய்வாளர்கள் என பலதரப்பினரும் பேசும் வார்த்தை. இந்த எஸ் ஐ பி  இவ்வளவு தூரம் பேசப்பட்டாலும், இதன் தாத்பரியத்தை முதலீட்டாளர்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளார்களா என்பது, கேள்வி குறியே.

நான் சந்தித்த/ கேட்ட வாசகங்கள் :
" எனக்கு பரஸ்பர நிதியில் முதலீடு செய்யவேண்டும், அப்புறம் எஸ் ஐ பி  யில் முதலீடு செய்யவேண்டும் "
நல்ல திட்டம், ஒன்று சொல்லுங்கள், அது போக, எஸ் ஐ பி  யில் முதலீடு செய்யவேண்டும்"
ஸ்டேட் பாங், எஸ் ஐ பி   யில்  முதலீடு செய்யவேண்டும்"
இந்த வாசகங்களின் அடிநாதமாக உள்ள கருத்து, எஸ் ஐ பி  வேறு , திட்டம் வேறு என்பது போல் உள்ளது. இந்த கண்ணோட்டத்தில் பலர் பேசுகிறார்கள். இது தவறான கருத்து  மற்றும் கண்ணோட்டம் - ஸ்டேட் பாங் எஸ் ஐ பி    என்று தனியாக ஏதும் இல்லை. ஸ்டேட் பாங் பரஸ்பர நிதியில்  பல திட்டங்கள் உள்ளன, அதில், ஒன்றை தேர்நதெடுத்து, அத்திட்டத்தில் எஸ் ஐ பி   தொடங்கவேண்டும். எஸ் ஐ பி என்பது திட்டம் இல்லை - அது ஒரு முதலீட்டு முறை.

எஸ் ஐ பி  என்பது,குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதே ஆகும்.

இடைவெளி என்பது, மாத மாதம், காலாண்டிற்கு ஒரு முறை, அரையாண்டற்கு ஒரு முறை, வருடத்திற்கு ஒரு முறை, என்று நமது விருப்பத்திற்கு ஏற்றவாறு முடிவு செய்யலாம். காலம் என்பது, ஒன்று, இரண்டு, ஐந்து வருடங்கள், என்று நமது தோதிற்கு பணம் செலுத்தலாம். முதலீட்டின் ஆரம்ப தேதி குறிப்பிட்டுவுட்டு, முடிவு தேதி சொல்லாமல் பணம் செலுத்தி வரலாம், முடியாதபோது நிறுத்தி கொள்ளலாம். நமது சேமிப்பு தொடரந்து வர இது உபயோகமாக இருக்கும். தொகையானது, ரூ 500 முதல், எவ்வளவு, தொகை வேண்டுமானலும் இருக்கலாம்.

Option - 1: பிக்சட் எஸ் ஐ பி (Fixed sip)

இது மாதிரியான மாத மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் எஸ் ஐ பியை  அடிப்படை எஸ் ஐ பி / சாதாரண எஸ் ஐ பி  /குறிப்பிட்ட தொகை எஸ் ஐ பி என்று எப்படி வேண்டுமானாலும்  கூறலாம்.

Period
Nav
Amount invested
Units bought
1
10
5000
500
2
12
5000
416.6666667
3
11
5000
454.5454545
4
9
5000
555.5555556
5
7
5000
714.2857143
6
8
5000
625
7
10
5000
500
8
12
5000
416.6666667
9
13
5000
384.6153846
10
14
5000
357.1428571
11
15
5000
333.3333333
12
13
5000
384.6153846
Total Amount
60000
Total Units
5642.427
Final Value
73351.55

இதுவரை அறிந்ததை பாரத்தோம், எஸ் ஐ பி  புரிதலை மேம்படுத்திக்கொண்டோம். இனி பரவலாக அறியபடாத மேம்படுத்தபட்ட  , எஸ் ஐ பி   பற்றி பாரப்போம்.

Option - 2: டாப் அப் எஸ் ஐ பி  ( Top up SIP)  
இளைஞர்கள், வேலை கிடைத்தவுடன், தொடங்கும் எஸ் ஐ பி தொகை பெரும்பாலும், சிறியதாக இருக்கும்.  வேலை உயர்வு கிடைத்து அவர்களது, சம்பளம் உயரும் போது அந்த எஸ் ஐ பி  அன்றய சம்பளத்திற்கு மிகவும் சிறியதாக இருக்கும். நாளடைவில் அந்த சேமிப்பு பற்றாதபடி ஆகிவிடலாம். இதை தவிர்க, டாப் அப் எஸ் ஐ பி  - இதில் இரண்டு வகை உள்ளது. வருடா, வருடம், குறிப்பிட்ட கூடுத்ல் தொகையை எஸ் ஐ பி  உடன் சேர்து செலுத்தலாம்அல்லது குறிப்பிட்ட கூடுதல் சதவிகிதத்தை  , எஸ் ஐ பி  உடன் சேர்து செலுத்தலாம் - பார்க அட்டவணை

Period
Amount invested in fixed sip
Amount invested % top up sip at 10% increment
Amount invested Rs 500 incremental  top up sip
1
5000
5000
5000
2
5000
5500
5500
3
5000
6050
6000
4
5000
6655
6500
5
5000
7321
7000
6
5000
8053
7500
7
5000
8858
8000
8
5000
9744
8500
9
5000
10718
9000
10
5000
11790
9500
11
5000
12969
10000
12
5000
14266
10500

வருடா வருடம் சம்பள உயர்வு, பெற்று,  3, 5 வருடங்களில் உங்களது சம்பளம் கனிசமாக உயர்ந்து இருக்கும் போது, சேமிம்பும் உயர இது ஒரு சிறந்த முதலீட்டு முறை இதனால், பணம் அதிகம் இருக்கும் போது, இன்னொரு எஸ் ஐ பி   தொடங்க வேண்டாம்
எஸ் ஐ பி  பற்றி இன்னொரு  தவறான கருத்து  மற்றும் கண்ணோட்டமும் உள்ளது. எஸ் ஐ பி  முறையில் முதலீடு செய்தால், நஷ்டமே வராது. லாபம் மட்டும்தான். இதவும் மிக தவறான புரிதல்.
எஸ் ஐ பி   என்பது, ஒழுங்கு முறையில், பணம் சேமிக்க உதவும் கருவி.
லாப நஷ்ட என்பது, திட்டம், அதன் செயல்பாடு, சந்தை நிலவரம், பொறுத்து நாளுக்கு நாள் மாறும்.

Option - 3: பிளெக்ஸ் எஸ் ஐ பி  (Flex SIP)
இந்த SIP தவணையின் முதலீட்டு தொகை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், பங்கு சந்தை  கரடியின் கையில் இருக்கும் போது நிறைய முதலீட்டு தொகையும், பங்கு சந்தை  காளையின் கையில் இருக்கும் போது குறைந் முதலீட்டு தொகையும் இருந்தால் நன்றாகத்தானே  இருக்கும். இதற்க்கும் SIP உள்ளது.  இந்த மேம்படுத்த  பட்ட திட்டத்தின் பெயர் Flex SIP.  இந்த Flex SIP மிகவும் சிறந்த முறையாகும். ஆனால் நிறைய பேருக்கு தெரிவதில்லை. இப்போது தெரிந்துகொண்டு இனி Flex SIP  முதலீடு செய்யுங்கள்.

Period
Nav
Value
Amount invested
Units bought
1
10
5000
500
2
12
6000
5000
416.6666667
3
11
10083.33
5000
454.5454545
4
9
12340.91
7659
851
5
7
15555.48
9444
1349.142857
6
8
28570.84
5000
625
7
10
41963.55
5000
500
8
12
56356.26
5000
416.6666667
9
13
66469.28
5000
384.6153846
10
14
76966.92
5000
357.1428571
11
15
87821.7
2896
193.0666667
12
13
78622.01
0
Total Amount
59999
Total Units
6047.847
Final Value
78622.01

Formula for calculating investment amount in Flex sip = whichever higher of {(Fixed amount per instalment x no. of instalments including current) - Market Value} or Fixed amount

Option - 4: Variable investment Plan - VIP
இன்னொரு வகையான SIP , VIP எனப்படும். இது முன்னர் பார்த்த FLEX SIP ஒட்டியே உள்ளது. முக்கிய வித்யாசம் நாம் தவணையில் கட்டும் தொகை  இந்த FLEX SIP இல் அதே அளவு அல்லது அதற்கு அதிகமான அளவாக இருக்கும். VIP இல் இது குறைந்தோ கூடியோ இரண்டு வகையிலும் இருக்கலாம். இதன் விவரம் அட்டவணையில் உள்ளது.

Option - 5: STP in the name of SIP
இது போக சந்தையில் பல நிறுவனங்கள் SIP என்ற பெயரில் மேலும் சில வழிமுறைகளை நடை முறை படுத்தி உள்ளார்கள். பெரும்பாலும் இவை SIP இல்லமால் STP போன்றே செயல் படுகிறது. உதாரணமாக Edelweiss Mutual Fund's prepaid SIPs என்பது நாம் குறிப்பிட்ட பணத்தை கடன் பாத்திரத்தில் முதலீடு செய்த பின் எப்பொழுதெல்லாம் சந்தை ஒரு சதவீதத்திற்கு குறைவாக இறங்குகிறதோ அன்றெல்லாம் கடன் பத்திரத்திலிருந்து பங்கு பத்திர திட்டத்திற்கு மாற்ற படும். 

Option - 6: PE-STP
இன்னொரு வகையாக IDFC PE STP என்பது குறிப்பிட்ட தேதிகளில் PE மதிப்பை பொறுத்து 1x ,2x ,5x  கடனிலிருந்து பங்கிற்கு மாற்ற படும். இதே போன்று சிறு சிறு மாறுதல்களுடன் SWING TP என்ற பெயரில் HDFC பரஸ்பர நிதியிலும் POWER SIP என்ற பெயரில் DHFL நிறுவனத்திலும் இந்த SIP /STP  வழிமுறைகள் நடை முறையில் உள்ளது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ஏறுகின்ற சந்தையில், முழு தொகையையும், முதலில் முதலீடு செய்வது, எஸ் ஐ பி   விட, நல்ல பலன் தரும். இறங்குகின்ற சந்தையில், முழு தொகையையும், முதலில் முதலீடு செய்வது, எஸ் ஐ பின்  நஷ்டம் குறைவாக தரும்நல்லதுதான் என்றாலும், நஷ்டம் நஷ்டம்தான். ஏறி இறங்கி பக்கவாட்டில் இருக்கும் சந்தையில் எஸ் ஐ பி   சிறப்பாக செயல்படும்.

Market trend
Remarks
In Bull market - Market raising
SIP will give less return than lump sum investments
In bear market - falling market
There is no guarantee, sip will give positive return - loss will be less than lump sum
Listless market - market in side ways
sip will give better return than lump sum