Friday 25 October 2019

தெரிந்து கொள்வோம் மியூச்சுவல் பண்டின் மொழிகளை

Mutual funds Jargon buster 

மியூட்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ் ஐ பி போன்ற வார்த்தைகள் நமக்கு பழக்கம்தான். நாமும் அவ்வப்போது சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறோம். என் றாலும் படிக்கும் போதோ, பேசும்போதோ நமக்குப் புரியாத தெரியாத பல சொற்கள் நம்மிடம் வந்து சேர்கின்றன. அதைப் பற்றி முற்றிலும் புரிந்து கொள்ளாமல் நாம் முதலீடு செய்யும் போது சில சமயம் நமக்கும் நஷ்டம் வர வாய்ப்புகள் உள்ளது எனவே மியூட்சுவல் ஃபண்டில் உள்ள மொழிகளையும், சொற்களையும் நன்கு புரிந்து முதலீடு செய்வோமா? மேலும் படியுங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்  பயன்படுத்தப்படும் சொற்கள் மொழிகள் பற்றி நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள்...

மியூட்சுவல் ஃபண்டில் பயன்படுத்தப்படும் பொதுவான சொற்களும் அதன் உபயோகங்களுக்கு அர்த்தங்களும்:

நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (AUM) : நிர்வாகத்தில்  திட்டத்தில் இருக்கும் சொத்து மதிப்பு அதாவது மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் அன்றைய தேதியில் இருக்கும் மொத்த சொத்து மதிப்பு ஆகும். திட்டத்தில் இருக்கும் சொத்து மதிப்பு   பத்தாயிரம் கோடி என்றால்,  அந்த திட்டத்தில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு பத்தாயிரம் கோட.  இந்த திட்ட மதிப்பு அதிகமாக அதிகமாக அந்தத் திட்டம் மிகவும் பிரசித்தமானது என்று அர்த்தம் 

என் எ வி (NAV - Net Asset Value): ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் யூனிட்டுகளில் அன்றைய மதிப்பு என் எ வி எனப்படும் இது நாளுக்கு நாள் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்க்கு ஏற்பமாறுபடும் இது ஒரு யூனிட்டின் மதிப்பு ஆகும். திட்டத்தின் சந்தையின் மொத்த மதிப்பை ( செலவினங்கள் போக) அந்த திட்டத்தில் உள்ள யூனிட்டுகளில் வகுத்தால்  கிடைக்கும் தொகையே என் எ வி  ஆகும். இது நாள்தோறும் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு நாளும் சுமார் இரவு எட்டு மணி அளவில் ஏ எம் எப் ஐ (AMFI) தகவல் பக்கத்தில் பதிவு செய்யப்படும். சில மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் சந்தையில் விற்று வாங்கப்படுகிறது, சந்தை விலை, என் எ வி  யை விட குறைவாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். திட்டதின் சந்தை விலையும், எண் ஏவி இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறு, இதைப் புரிந்து கொள்ளவும். எண் ஏவி  அதிகம் இருந்தால் ரிஸ்கான திட்டம், எண் ஏவி   குறைவாக இருந்தால் நல்லது  என்று நினைக்க வேண்டாம் அது தரும் லாபத்துக்கும், எண் ஏவி  க்கும் ஏதும் சம்பந்தமில்லை

பெஞ்சு  மார்க் (Bench Mark): சந்தையில் பல்வேறு நிறுவனங்கள், என்ணிலடங்கா  திட்டங்கள் உள்ளது. இதில் எது நல்ல திட்டம், லாபம் தரும் திட்டம் எது பழுது பட்ட திட்டம், என்று நாம் அறிவது சற்று கடினமே. அதே சமயம் ஒன்று சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும்  இன்னொன்று பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும் இரண்டையும் ஒரே தராசுத் தட்டில் வைத்து எடைபோட முடியாது. பின் எப்படித்தான் முதலீடு செய்வது. ஒரு வழி உள்ளது, நமது திட்டத்தின் குறிக்கோள் படியே முதலிலீடு செய்யும், கம்பெனிகளை போன்றே மும்பை பங்குச்சந்தையில் மற்றும் தேசிய பங்குச் சந்தையில் குறியீடு இருக்க வாய்புகள் உள்ளது. நமது திட்டம் கடந்த ஒரு வருடத்தில் எவ்வளவு லாப நஷ்டம் தந்துள்ளது என்பதை, குறிப்பிட்ட குறியீட்டு எண் எவ்வளவு லாப நஷ்டம் தந்துள்ளது என்பதை பார்த்து அதிகமா குறைவா என்று புரிந்து கொள்ளலாம். எந்த குறியீட்டு எண்னை உபயோக படுத்திகிறோமோ அந்த குறியீட்டிற்கு, திட்டத்தின் பெஞ்ச்மார்க் என்று பெயர். உதாரணமாக ஆக்சிஸ் ஈக்விட்டி ஃபண்ட், நிப்டி 50 ( Nifty 50) பெஞ்ச்மார்க்  ஆக கொண்டு உள்ளது. ஆக்சிஸ் மிட் கேப் பண்ட் மும்பை பங்கு சந்தையின்  மிட் கேப்  குறியீட்டு எண்னை ( S&P BSE Midcap), பெஞ்ச்மார்க்  ஆக கொண்டு உள்ளது

திட்டத்தின் வகை பெயர் (Nature of Schemes): திட்டம் எங்கு முதலீடு செய்கின்றது என்பதைப் பொறுத்து இந்த வகை  செய்ய படுகின்றது. ஒரு திட்டம் இக்விட்டியில் முதலீடு செய்யிகிறதா? இல்லை
கடன் பத்திரத்தில் முதலீடு செய்கிறதா? இல்லை இரண்டும் கலந்து கலவையான முறையில் முதலீடு செய்கிறதா என்று பார்க்க வேண்டும். இக்விட்டியில் மட்டுமே அது பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறதா இல்லை சிறு நிறுவனங்களில் முதலீடு செய்கிறதா என்றும் பார்க்க வேண்டும் இதை பொறுத்தே அந்த திட்டத்தின் வகை அமையும். திட்டத்தின் முதலீடு செய்யும் தன்மைகளைப் பொறுத்து அந்த திட்டத்தின்  வகை பிரிக்கப்படுகிறது

எஸ் ஐ பி – (SIP – Systematic Investment Plan) என்பது,குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதே ஆகும்.

எஸ் டபுள்யு பி – (SWP – Systematic Withdrawal Plan) என்பது,குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் இருந்து நாம் திருப்ப பெறுவது ஆகும்.

எஸ் டி பி (STP – Systematic Transfer Plan) என்பது குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்தில்  மா ற்றுவது

பண்டு மேனஜர் அல்லது திட்ட மேலாளர் (Fund Manager) நமது திட்டங்களை நிர்வாகம் செய்பவர்  திட்ட மேலாளர் எனப்படுவர் இவர் நமது முதலீடுகளை பங்குகளிலும் பத்திரங்களையும் முதலீடு செய்து நமது முதலீட்டை சரிவர நடத்த   காரணமாக இருப்பவர் திட்ட மேலாளர்

ஹோல்டிங்ஸ் – (Holdings) : திட்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் மற்றம் கடன் பத்திர விபரம் இந்த ஹோல்டிங்ஸ் ஆகும் நமது திட்டம் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளது என்பதை பற்றி இதன் மூலம்நன்கு அறிய முடியும்

வெளியேற கட்டணம் – Exit load : மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்  இருந்து வெளியேறுபவர்கள் சிறு தொகை கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு எக்ஸிட் லோடு என்று பெயர் உதாரணமாக திட்டத்தின் என் எ வி  ரூபாய் 12  இருக்கும் போது, முதலீட்டாளருக்கு கிடைக்கும் விலை ரூபாய் 11.88 ஆக இருக்கும் - இதில் எக்ஸிட் லோடு 1%  சதவீதமாகும். இக்விட்டிதிட்டத்தில்  இருந்து ஒரு வருடத்திற்குள் வெளியேறினால் கட்டணம் இருக்கும். இதே நேரத்தில் கடன் பத்திரங்கள் இருந்து ஆறு மாதத்துக்குள் வெளியேறினால் கட்டணம் இருக்கும், பெரும்பாலும் லிக்வுட் பண்டில் இருந்தும் வெளியேறும் போது எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் கட்டணம் இருக்காது.

திட்டத்தின் செலவினம் (Expense ratio): திட்டத்தின் செலவினம் என்பது திட்டத்தை நிர்வகிக்க ஆகும் செலவாகும் நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் செலவினம் குறைவாக இருக்குமாறு தேர்வு செய்யலாம். ஏனெனில் நமக்கு கிடைக்கும் லாப விகிதம் திட்டத்தின் லாபத்தில் செலவினம் போக மீதம் தான் நமக்கு கிடைக்கும்.

ஆல்பா, விகிதங்கள் (Alpha): ஆல்பா என்பது நமது திட்டம் சந்தையின் லாபத்தை விட எவ்வளவு அதிகமா தந்துள்ளது என்பதாகும். உதரணமாக, ஒரு வருடத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடு எண் 17% ஏற்றமாக இருக்கும்போது நமது திட்டம் 22% ஏறி இருந்தால் ஆல்பா என்பது 5%. எனவே நாம் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஆல்பா தரும் திட்டமாக இருக்க வேண்டும்
பீட்டா விகிதங்கள் (Beta) : அடுத்ததாக எல்லார்க்கும் தெரிந்த விஷயம் தான்... சந்தை ஏறும்போது நமது திட்டத்தின் மதிப்பு கூடுகிறது. அதேபோல் இறங்கும் போது இறங்குகிறது. இதைத்தான் பீட்டா என்று கூறுவார்கள். நமது திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையோடு ஒத்து இருந்தால் பீட்டா 1 என்று பெயர்.

சார்பே  விகிதம் Sharpe Ratio : நமது திட்டத்தின் பீட்டா எண் குறைய குறைய திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையின் ஏற்ற இரக்கத்தை விட குறைவாக இருக்கும். எனவே, ஆல்பா அதிகமாகவும் பீட்டா குறைவாகவும் இருக்கும் திட்டங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். இது இரண்டையும், மேலும் திட்டத்தின் ரிஸ்கையும் சேர்த்து பார்ப்பதற்கு உள்ள விகிதத்தின் பெயர் Sharpe Ratio. இது positive எண்ணாக இருக்க வேண்டும்.

டிராக்கிங் எரேர் (Tracking Error) : இ டி எப் திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும். நமது இ டி எப்  திட்டத்தில் எவ்வளவு லாப நஷ்டம் வந்துள்ளது,  இ டி எப் ( ETF – Exchange Traded Funds)  அடிப்படையாகக் கொண்ட குறியீட்டில் எவ்வாறு லாப நஷ்டம்  உள்ளது என்று பார்ப்பது.  இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் உத்தமம் ஆனால் சிறிது வேறுபாடு இருக்கும் இந்த வேறுபாட்டை பிழை என்று கொள்ளலாம். - உதாரணமாக, சென்செக்ஸ் மற்றும் சென்செக்ஸ் இ டி எப் திட்டங்களுக்கு இருக்கும் லாப நஷ்ட வேறுபாட்டை டிராக்கிங் எரேர்  எனலாம்

கடன் பத்திரம்  சார்ந்த மொழிகள்  

யில்டு டு மெச்சிரியூட்டி (YTM – Yield to Maturity) : கடன் பத்திரத்தின்  முதலீடுகளை அதன் முதிர்வு காலம்வரை வைத்திருந்தால் எந்த விதத்தில் அதற்கு லாபம் கிடைக்கும் என்பது இந்த யில்டு டு மெச்சிரியூட்டி ஆகும். 
கடன் பத்திரத்தின்   வட்டி விகிதம், பத்திரத்தின் முடிவு காலம் தற்போது  அதன் விலை, ஆகியவற்றைக் பொறுத்து யில்டு டு மெச்சிரியூட்டி  மாறும். இது கடன் பத்திரத்தின் வட்டி விகிதத்தை விட கூடவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் கடன் பத்திரத்தின் தற்போதைய விலை இதன் முக்கிய காரணி ஆகும்

மாடிபைடு டியூரேஷன் – (Modified duration) : மியூச்சுவல் பண்ட்களில் மிகவும் கடினமான புரியாத புதிரான வாரத்தை இது.  மாடிபைடு டியூரேஷன்  என்பதைப் பற்றி முடிந்தவரை எளிமையாகச் சொல்கிறேன். ஒரு கடன் பத்திரத்தில்,  குறிப்பிட்ட அளவில் யில்டு மாறும்போது அதன் விலை எவ்வாறு மாறும் என்பதைக் குறிப்பது மாடிபைடு டியூரேஷன்  ஆகும்

ரேட்டிங் புரோபைல் – (Rating Profile) கடன் வாங்குபவர்களின், வட்டியும் அசலும்  திரும்பி கொடுக்கும் தன்மையை, - கிரெடிட் ரிஸ்க் என்று கூறுவோம்.  இதை அளவிடும் முறையுள்ளது. இதற்கான குறியீடு, AAA, AA+, AA-, A என்றெல்லாம் உள்ளது. மூன்று AAA இருந்தால் ரிஸ்க் குறைவு. ஒரு A  இருந்தால் ரிஸ்க் அதிகம். இந்த குறியீடு, கம்பெனி கடன் பத்திரங்கள் , வைப்பு நிதிகளுக்கு கொடுக்கப்படுகின்றது. கடன் பத்திர திட்டங்களில் முதலீடு செய்துள்ள பத்திரங்களின் கிரெடிட் ரிஸ்க் தனமையை குறிப்பிடுவது இந்த ரேட்டிங் புரோபைல் ஆகும்


மற்ற பொது தகவல்கள்

ஏஎம்சி (AMC – Assent management company)  எனப்படுவது நமது மியூச்சுவல் பண்ட் திட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனம்

செபி (SEBI – Securities and exchange board of India) எனப்படுவது மத்திய அரசாங்கத்தால் மியூச்சுவல் பண்ட் மற்றும்  பங்கு வர்த்தகத்தை கவனிக்கும் நிறுவனம் ஆகும்

கஸ்டாடியன் (Custodian)  என்பவர்கள் நமது திட்டத்தில், நமது திட்டத்திற்கு வாங்கப்பட்ட பங்குகளையும்
பத்திரங்களையும் பத்திரமாக பாதுகாக்கும் நிறுவனம் ஆகும்

டிரஸ்டி (Trustee) என்பவர்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை
மேற்பார்வை பார்க்கும் நிறுவனம் ஆகும்

ஆர் . டி. எ  (RTA -Registrar and Transfer Agents) : இவர்களை ஆங்கிலத்தில் Intermediary  என்பார்கள், நாம் தமிழில், இடைதரகர்கள் /இடைப்பட்ட  சேவை நிறுவனங்கள் என்று கொள்ளலாம். நாம் எந்த திட்டதில், எந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தாலும். நமது பெயர் விபரம், வாங்கிய தேதி, போன்ற, தனிநபர் முதலீட்டு விபரங்களை நிர்வகிப்பவர்கள், இந்த இடைப்பட்ட நிறுவனங்களே. உதாரணம் கேம்ஸ் (CAMS)  மற்றும் கார்வி (Karvy) ஆகும்


Sunday 20 October 2019

கடன்  ஃபண்டுகளின் முதலீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

Click here to read this article directly from Nanayam Vikatan.
Click here to read this article in English in this blog.

தற்போது பாலைவனத்தில் சோலையாக மாறுவது கடன்  ஃபண்டுகள் 

இந்திய பொருளாதாரம் குறைந்து வருகின்றது என்று உலகமே சொல்லுகின்றது.  அதாவது  6.1 சத  வீதமாக  இருக்கும் என்று  இன்டர்நேஷனல் மொனிட்டரி  ஃபண்ட் சொல்கின்றது ( சர்வதேச நாணய நிதியம் / International Monetary fund). இது  சமீபத்திய செய்தி. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்பது போல் 8+ சதவீதத்திற்கு மேல் இருந்த வளர்ச்சி வீதம் 6.1 ஆக மாறிவிட்டது.  இதுபோன்ற தருணங்கள் பங்கு அல்லது பங்கு சார்ந்த ஃபண்டுகள் முதலீடுகளுக்கு பலன் தரப்போவதில்லை. சரி வங்கி வைப்பு  பக்கம் போகலாம் என்று பார்த்தால், பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு ஆர்பிஐ (RBI) வட்டி விகிதங்களை குறைத்து வருவது வங்கி வைப்புக்கு உகந்தது ஆக  இல்லை. அதேசமயம் மஹாராஷ்டிராவின்  பி. எம் .சி (PMC) கதைகள் கனவில் வந்து போகின்றது. சரி சரி வங்கி இல்லாத நிதி நிறுவனங்களில் ஒரு சதவீதம் அதிக வட்டி கிடைக்கும் என்று அந்த பக்கம் திரும்பினால், வட்டி  கிடைக்கிறதோ இல்லையோ அசலே கிடைக்குமா என்று உத்தரவாதம் ஏதும் இல்லாத நிலைமை.  எந்த பக்கம் திரும்பினாலும் சிக்கல்.  இந்தச் சிக்கலில் இருந்து முதலீட்டாளர்கள் முதலீட்டில் முன்னேற என்ன வழி? இந்தப் பாலைவன தருணங்களில் சோலையாக காணப்படுவது என்னவோ மியூச்சுவல் ஃபண்டுகள் தான்.  அங்கும்  கேட்டதெல்லாம் கிடைத்து விடுமா என்றால் சந்தேகமே.  மியூச்சுவல் ஃபண்ட் கடன்  திட்டங்களிலும் என் எ வி  (NAV)  ஏறி இறங்கி பயம் காட்டுது. சில திட்டங்கள் முடிவு காலம்  முடிந்த பின்னும் பணப்பற்றாக்குறையால் நீட்டிக்கப்படுகிறது. சில திட்டங்களில் ரைட் ஆப் (Write off) எனப்படும் முறையில் தொகை குறைக்கப்படுகின்றது. அங்கு இருக்கும் தடைகளை தாண்டி கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து முதலீட்டார்கள் எப்படி முன்னேறுவது என்று விரிவாகப் பார்ப்போம். எப்போதும்  போராடி ஜெயிப்பது தானே வாழ்க்கை. அதுதானே நிதர்சனம்.  

தடை  ஒன்றை தவிர்ப்போம்: செபி குறியீட்டில் கடன் பண்டுகளில் எவ்வாறு தேர்ந்தெடுப்பது?  

தற்போது கடன் ஃபண்டுகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகையில் உள்ளது. இந்தப் பத்து வகையில் எந்த வகையில் முதலீடு செய்வது, தற்சமய சூழலுக்கு மிகவும் சிறந்தது, ஏற்புடையது என்று பார்க்க வேண்டும். முதலில் எதை தவிர்ப்போம் என்று பார்ப்போம். அதாவது கிரெடிட்  ரிஸ்க் ஃபண்ட் ( credit risk) எனப்படும் வகையில் (Sebi Category /கேட்டகிரியில்) முதலீடுகளை செய்யாமல் இருப்பது சாலச் சிறந்ததாகும். இந்த வகை ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகமாக இருக்கும், எனவே தான் அதன் நாமகரணம். எந்த வகையில் முதலீடு  செய்யலாம் என்பது அடுத்த கேள்வி எழலாம். தற்போது உள்ள நிலைமையில் பேங்கிங் அண்ட் பிஎஸ் யூ ( Banking and PSU Debt )எனப்படும் வகையில் (கேட்டகிரியில்)  உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்வது நலம் பயக்கலாம். இந்த வகையில்  வங்கி மற்றும் அரசாங்க நிறுவனங்களில் மட்டுமே முதலீடு இருக்கும். ஆகவேதான் கடந்த 6 மாதங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பண்டுகளின் முதலீட்டு தொகை கிரெடிட்  ரிஸ்க் வகையில்  குறைந்து வருகின்றது.  அதே சமயம் பேங்கிங் அண்ட் பிஎஸ் யூ ஃபண்டுகளில் முதலீடு செய்யும் தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

தடை இரண்டை தாண்டுவோம்: ரிஸ்க்கும் முதலீடும்

கடன் பண்டுகளில்  கிரெடிட் ரிஸ்க் ( Credit risk) ஒன்று மற்றொன்று இன்ட்ரஸ்ட் ரேட் ரிஸ்க் ( Interest rate risk) . கடன் திட்டங்களை தேர்வு செய்யும் போது நாம் மிக கவனமாக கையாள வேண்டும். உதாரணமாக கிரெடிட் குவாலிட்டி அதிகமாக இருக்கும் திட்டங்களிலும், இன்டெரெஸ்ட் ரேட்  ரிஸ்க் குறைவாக உள்ள திட்டங்களிலும் முதலீடு வேண்டும். இதுபோன்ற தகவல்கள் இல்லாத போது  உங்கள் முதலிட்டு ஆலோசகரிடம் கேட்டு பெறலாம் அல்லது மார்னிங் ஸ்டார் டாட்.காம் ( Morningstar.in)  மற்றும் வேல்யூ ரிசெர்ச் ஆன் லைன் ( Valueresarchonline.com) போன்ற தளங்களில் இருந்து எளிதாக பெற முடியும். எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கு அருகில் உள்ள படத்தை பார்க்கவும். இது  ஐடிஎப்சி லோ டுரேஷன் ஃபண்டின் தகவல். ( IDFC Low Duration fund)


தடை மூன்றை தவிர்ப்போம் : தரமும் முதலீடும்  

இரண்டு கடன் திட்டங்களுக்கு மேற்கண்ட படம் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனால் அதன் தரம் ஒரே மாதிரி இல்லாமல் சற்று மாறுபடலாம். உதாரணமாக இரண்டு திட்டங்களிலுமே AAA நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம். அந்த நிறுவனங்களின் தரத்தை பொறுத்து நமது திட்டத்தின் தரமும் மாறுபடுகிறது. உங்களது தகவலின்படி வட்டியும் அசலும்  திருப்பித்தரும் தண்மையுள்ள நிறுவனங்கள் மற்றும் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று  நினைக்கிறீர்களோ , அந்த  நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கடன் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். நம்பகத்தன்மை குறைவாக அல்லது தற்போது சிக்கலில் உள்ள அல்லது வருங்காலங்களில் சிக்கலில் மாட்ட கூடிய நிறுவனங்களின் முதலீடுகள் இருந்தால் அந்தத் திட்டங்களை தவிர்த்துவிட வேண்டும். எனவே நம்பகத்தன்மை குறைவாக உள்ள கடன் திட்டங்களை தவிர்த்து நம்பகத்தன்மையை அதிகமாக உள்ள திட்டங்களில் சேரவேண்டும்.

தடை நான்கு : கவனம் தேவை - கடன் பண்டு நிறுவன பாங்கு 

  • ஒய் .டி.எம் : செப்டம்பர் 2018 க்கு முன் ஒய் .டி.எம் ( Yield to Maturity – YTM) அதிகமிருந்தால் அதில் முதலீடு செய்து வந்தோம். தற்போதும் அதே வகையில் முதலீடு செய்வது ஆபத்தானது.  ஒய் .டி.எம் அதிகமாக இருக்கும் திட்டங்களில் மேற் கூறப்பட்டுள்ள முதலீட்டின் தரத்தையும் , நம்பகத்தன்மையையும் அவசியம் பார்க்க வேண்டும். 
  • திட்டத்தின் முதலீடு தொகை : நாம் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகையை ( Scheme AUM) கடந்த ஒரு வருடத்தில் சீராக இருந்தால் நல்லது. ஏறி  வருகிறதா அதுவும் நல்லதே. குறைந்து வந்தால் கவனம் தேவை. இந்த  திட்டங்களில் முதலீடு செய்வதை சற்று தவிர்க்க வேண்டும்.  காரணம் அந்தத் திட்டங்களில் சிக்கலான கடன் பத்திரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் . 
  • பரவலான முதலீடு : நாம் முதலீடு செய்யும் திட்டம் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அதிக பணம் இல்லாமல் இருக்க வேண்டும், ஏனெனில் ஏதாவது ஒரு காரணத்தால் அந்த கடன் சிக்கலாகும் போது , சில தவறுகள் நடக்கும் போது நஷ்டம் குறைவாக இருக்கும். கான்சன்ட்ரேட் போலியோவாக ( concentrated folio)  இல்லாமல் டைவர்சிபைட் போலியோவாக ( Diversified folio) உள்ள திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். 
  • நிர்வாக திறமை : கடன் பண்டுகளை நிர்வகிக்கும் திறமையும் முறையும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகின்றது. கடந்த சில மாதங்களில் அதாவது ஒரு வருடத்தில் சில மியூச்சுவல் பண்டுகள் அடிக்கடி சிக்கலை சந்தித்து வருகின்றது. சில நிறுவனத் திட்டங்கள் எந்த வகையான சிக்கலுக்கும் உள்ளாகவில்லை. இந்த பாங்கு அந்த நிறுவன கடன் திட்ட மேலாளரை சார்ந்தே இருக்கின்றது.  இனிவரும் காலங்களில் கடன் திட்டங்களில் முதலீடு செய்யும்போது நல்ல முதலீட்டு மேலாளர்கள் பார்த்து அவர்களது திட்டங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டும்.  இந்த விவரங்கள் உங்களுக்கு எளிதாக தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால், முதலீட்டாளர்கள்  இது விஷயத்தில் முதலீடு  ஆலோசகர்களை நன்கு விசாரித்து அதன்பின் முதலீடு செய்ய வேண்டும். 

முடிவாக, தற்போதைய  சூழ்நிலையில் பங்கும் பங்கு சார்ந்த முதலீடுகள் தவிர்த்தும் கடன் சார்ந்த முதலீடுகளையும் செய்யும்போது மிக கவனமாக முதலீட்டு தண்மைகள் அந்த முதலீடு மேலாளரின் தன்மைகள் அந்தத் திட்ட நிறுவனத்தின் பாங்கு  போன்ற பல காரணிகளை அலசி ஆராய்ந்து அதன் பின்னரே முதலீடு செய்ய வேண்டும்.

இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம்.

உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி .

Friday 18 October 2019

Tips for selecting debt funds

In the current scenario debt funds are like oasis in the desert

The world is saying that the Indian economic trend is weak. The International Monetary Fund indicated that the expected growth is at 6.1%. This is the latest news. Earlier, the growth rate was above 8% and now it has weakened to around 6. These statistics will not benefit investment in stock or stock-based mutual funds. Alternatively, if we look at bank deposits, the interest rates are low. The RBI is keeping this at a low value to boost economic growth but reduced interest rates in the bank deposits is a deterrent for investors. Meantime, stories about Maharashtra PMC bank are daunting investors even in their dreams. What is the way out for investors to get decent returns for their investments? Mutual funds debt schemes is the only answer, but there is no guarantee that it is always beneficial. Mutual fund debts are also having their story of bad times. Some debt funds NAV’s are oscillating like their equity counterparts. Some schemes are extended beyond maturity date because of non-receipt of principle from borrowers. Few schemes have written-off part of their principles. There is problem everywhere. What is the way for investors to overcome these problems? In these desert-like situations, the oasis is selective debt schemes in mutual fund space which are not caught in the storm. Let us elaborate on how to choose these debt funds which are not in the storm and which are likely to sail safe.

Selection of debt funds based on SEBI category:
There are currently more than ten debt funds as per sebi category. All these 10 schemes are not suitable for the current environment. The best way is to avoid credit risk funds altogether. The name itself says that they are having inherent credit risk, which is not suitable for current environment. The next question may be where to invest? Investment in the Banking and PSU debt can be beneficial in the current juncture. These schemes invest only in banking and government institutions. That is why in the last 6 months, scheme AUM of credit risk is dwindling and at the same time, the investment in banking and PSU is increasing.

Risks in debt funds:
There are two risks in debt funds. The first one is credit risk and the other is interest rate risk. We must be very careful when choosing debt schemes. We must choose high credit quality with low interest rate risk. If you do not have this info, you can ask your Financial Advisor or get it from morningstar.in or valueresarchonline.com. See the next image to understand this better. This information is for IDFC Low Duration Fund


Credit quality and investment:
For 2 debt schemes, the above picture may be identical, but its quality can vary. For example, both schemes could have invested in AAA papers of companies. Depending on the quality of those companies, the scheme’s qualities will change. Based on the available information, choose schemes having invested in good quality paper. Avoid schemes having troubled papers and those that are holding potential/likely candidates for troubles in the days to come.

Key points to consider:
  • Y. T. M: Before September 2018, we had invested by seeing higher yield to Maturity values (YTM). It is risky to use the same formula now.  It is necessary to look at the quality and reliability of the investment as mentioned above.
  • Size of the AUM: For debt schemes we must closely monitor or review last one year's scheme AUM. If it is consistent or increasing, indications are positive and then we can go ahead and invest in those schemes. If the scheme AUM is consistently dropping, it indicates that they are holding troubled papers. It is a sure sign for avoiding those schemes.
  • Diversified Folio: The plan we invest in should have invested in more number of companies. The scheme investment should not be concentrated to contain losses in the case of defaults. Hence it is always better to choose schemes which has diverse folios than concentrated folios.
  • Executive talent: In the last one-year, storm in the debt markets have exposed the efficiency and inefficiency of the fund managers who managed debt portfolios. It is now time to understand debt fund managers capability and track their records. If found good, we can go ahead and invest in schemes managed by them.
In a nutshell, it is time to dig deep before investing in debt schemes, understand the nitty gritty of debt portfolio, fund manager capabilities, credit qualities and interest rate risk they carry.

Please provide your honest feedback about this article by clicking here

If you like this article, please share this on your WhatsApp / Facebook / Twitter. This would be a special gift which you would be giving to our blog.