Sunday, 23 July 2017

அசலுக்கு ஆபத்தில்லா திட்டங்கள் (Capital Protection orientated Funds - CPOF)

Click here to read the same article in pdf format which was published in Namathu chettinad tamil magazine.

Those who are interested can Click here to access the original excel file which has the example for CPOF.

தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு நன்றி!
தொடர்புகொண்டவர்களுக்கு கூடுதல் நன்றி!!

அடியேன் அறிந்து கொண்டது, ஆச்சிகளும் ஆர்வத்தோடு தொடர்ந்து படித்தும், பேசியும் வருகிறார்கள். மகள் கலியாணத்திற்க்கு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், மேலோங்கிறது புரிகிறது. கட்டுரைகளின் நோக்கம் நிறைவேறும் என்ற அறிகுறி தென்படுகிறது. ஆனாலும் என்ன  நோக்கம்
சேமிப்பாக மாறாமலே இருப்பதாக தோன்றுகிறது. காரணம்? ஆச்சி சொன்னால், செட்டியார் கேட்பதில்லை இன்னும் சிலர் இருக்கிறார்கள் போலும்! செட்டியார் சொன்னால் ஆச்சி கேட்பதில்லை!! ஆக எண்ணம் சேமிப்பாக மாறாமலே தடைபட்டுவிடுகின்றது. தடைக்கான காரணங்களை, அவர்கள் வாயாலே அறிந்து கொண்டேன். சரியான விளக்கம், தெளிவான புரிதல் இருந்தால், தடை விலகலாம், மகள் கலியாணத்திற்க்கு சேர்க்க சேமிப்பு தொடங்கலாம், என்றே இந்த கட்டுரை!! மேலே படியுங்கள்…

நான் புரிந்துகொண்டவரை, பரஸ்பர நிதி திட்டங்களின் வருமானம் சந்தையை ஒட்டியே இருப்தால் அசலுக்கு மோசம் வந்துவிடுமோ என்ற அச்சமே பலருக்கும் மேலோங்குவதாக புலப்படுகின்றது. இந்த முன்ஜாக்கிரதை முத்தாட்ச்சிகளுக்கு ( முத்தணாவை, முத்தாட்ச்சியாக்கிவிட்டேன்) என்றே சில சிறப்பு பரஸ்பர நிதி திட்டங்கள் உள்ளன. Capital Protection orientated Fund (CPOF) என்பது, பெரும்பாலும் அசலுக்கு மோசமில்லை, வகையான திட்டம்தான்! இங்கு பரஸ்பர நிதி பற்றி தெரிந்தவர்களுக்கு, ஒரு கேள்வி எழலாம். அரசாங்கத்தின் SEBI ( Security exchange board of India) சட்ட திட்டங்களின் படி, எந்த பரஸ்பர நிதி நிறுவனமும், எந்த திட்டத்திற்கும் உத்தரவாதம் ( Guarantee/Warranty ) தருவது எளிதில் சாத்தியமல்ல. அப்புறம் எப்படி அசலுக்கு மோசமில்லை? பொறுங்கள்… அதன் தாத்பரியத்தை விளக்குகின்றேன்.

நீங்கள், உங்களது ரூ 100 ஐ இந்த CPOF திட்டத்தில் பொது வெளியீட்டில், ( New Fund offer - NFO) முதலீடு செய்கறீர்கள். அந்த நிதி நிறுவனம், ரூ 100 ஐ , இரண்டு பகுதிகளாக பிரித்துகொள்வார்கள். முதல் பகுதி, A என்பது ரூ 80 முதல் ரூ 85. எனவே, மிச்ச இரண்டாவது, பகுதி B என்பது ரூ 20 முதல் ரூ15. இந்த முதல் A பகுதியை, அரசாங்க பத்திரங்கள், மற்றும் திட்ட மேலாளருக்கு நம்பிக்கை தரகூடிய, Risk குறைவான, AAA கடன் பத்திரங்களில் பெரும்பாலும் முதலீடு செய்வார்கள். இது சுமார் 5% முதல் 9% வரை லாப விகிதம் தரும் என்று எதிர்பார்கலாம். ஆக நமது பகுதி A , 3 அல்லது 4 வருடங்களில் ரூ 100 ஆகிவிடும். அப்பாடா அசல் கிடைத்துவிட்டது!! என்ன, ரூ 100 கொடுத்து ரூ 100 வாங்குவது, பெரிய கம்பசூத்திரமா? இது எதுக்கு எங்களுக்கு, என்ற எண்ணமா? சற்றே பொறுங்கள்… “பொறுத்தார் பூமி ஆழ்வார்”…. நான் இன்னும் முடிக்கவில்லை..

இரண்டாவது பகுதி B இருக்கின்றதே அதை நல்ல தேர்ந்தெடுத்த பங்குகளில் முதலீடு செய்வார்கள். இந்த முதலீடு சந்தையின் ஆதிக்கத்தில் லாபமோ, நஷ்டோமோ தரலாம். எருது சந்தையில் ( Bull market) நமது B பகுதியான , கூடிபகுதி, போட்டதற்கு மேல் கூட கிடைக்கலாம், அல்லது, அலைபாயும் சந்தையில் ( listless trade), போட்டது போட்டபடி கிடக்கலாம், அல்லது நமக்கும், நம்மோடு சேர்ந்த முதலீட்டாளர்களுக்கும் நேரம் சரியில்லையெனில், கரடி சந்தையில் ( Bear Market) போட்டதற்கு கிழ் கிடைக்கலாம். ஆக A பகுதியில் கிடைத்த நூறோடுநூறோ, , அதனுடன் B பகுதியில் அதற்கு மேலோ கிடைத்த தொகையும் சேரத்து திட்ட முடிவில் தருவார்கள். இந்த திட்டத்தின் தாத்பரியம் புரிந்துவிட்டால், ஒன்று தெளிவாக தெரிந்திருக்கும். இத்திட்டத்தின் பலனை சரியான முறையில் பெற, 3 - 4 வருடங்கள், திட்டத்தில் இருக்க வேண்டும். எனவே இந்த திட்டங்கள் எல்லாம், Close ended Funds என்ற திட்ட வகையை சார்ந்தவை. முதலீட்டை திட்ட முடிவில் மட்டுமே எடுக்க முடியும். இப்பொழுது படத்தை பாருங்கள், தெளிவாகும்..

இப்போது அடுத்த படத்தை பாருங்கள், கடந்த பத்து வருட இடைவெளியில், ஒவ்வொரு 3.5 ஆண்டுகள் இடைவெளியில், பங்கு ( 20% of B @17.6% Return ) மற்றும் கடன் (80% A @ 7.9% Return) சராசரியாக எவ்வளவு லாபவிகிதம் தந்தது என்ற விபரம் உள்ளது. இதை வைத்து , இந்த திட்டதின் லாபவிகிதம் கணக்கிட்டால் 10% லாபவிகிதம் வருகிறது. அட்டவணை பார்கவும். இது மாதிரியே, நம்க்கு கிடைக்கும் லாபவிகிதம் சந்தையை பொறுத்து மாறும்.


ஆக…

  1. எருது சந்தையில், நமக்கு லாபம், வங்கி நிரந்தர வைப்பு வட்டியை விட கூட.
  2. அலைபாயும் சந்தையில் வங்கி நிரந்தர வைப்பு வட்டியை ஒட்டி.
  3. கரடி சந்தையில் வங்கி சேமிப்பு வட்டி மாதிரி கிடைக்க வாய்புகள் இருக்கின்றது.அசலுக்கு மோச வாய்புகள் மிக மிக குறைவு.

பரஸ்பர நிதி நிறவனங்கள், முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டு, அசலோடு ஓடியதாக எனக்கு தெரிந்து இல்லை… லாபம் முன்னே பின்னே வரலாம்.

என்ன ஆச்சிகளே சந்தேகம் தீர்ந்ததா? தடைகள் விலகியதா? அச்சத்தோடு பரஸ்பர நிதி தொடங்க எண்ணுபவர்களுக்கு ஏற்ற திட்டம் இது. முதலில் இதில் (CPOF) தொடங்கி, பின்னர் சரிவிகித திட்டத்திற்கு ( Balanced) மாறி, அனுபவ முதிர்ச்சி பெறும் போது பங்கு ( Equity) திட்டதிற்கு போகலாம்.

இன்னும் என்ன தயக்கம்… முதல் அடியை எடுத்து வையுங்கள்! பயந்துகொண்டு காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. தொடங்குகள், வாழ்த்துக்கள்!!

இதுபோல் பலருக்கு சந்தேகங்கள் இருக்லாம்… எழுதுங்கள், முடிந்தவரை விளக்குகின்றேன். 

TitBit - 12

TITBIT - 12 - SENSEX DANCE

Date: 23-07-2017

See the image below.


The Take away:
" No one knows " how high it will go!! Really very fair statement about sensex.

Are you risk averse?
Mathematical model based dynamic equity funds remove the risk of timing the markets to certain extent and decide how much equity at the given time based on algorithms.

Read more about Axis Dynamic fund click the links give below
https://radhaconsultancy.blogspot.in/2017/07/axis-dynamic-equity-fund.html

Invest on line in Axis dynamic equity fund click here - https://goo.gl/FtGvMr

Image source : Times of India


TitBit - 11

TITBIT - 11 - EMOTIONS Vs RETURNS

Date: 16-07-2017

Emotions play a majore role in our Investment Returns

See the graph below




The Take away:
even though we are investing in equity, at the end of the day, return in the hands of investor is low, because our entry and exit time are not optimal due to our strong emotions like fear and greed.

The Way out:
Mathematical model based dynamic equity funds remove this emotions to certain extent and decide how much equity at the given time based on models rather than emotions.


Read more about axis dynamic fund click the links give below
https://radhaconsultancy.blogspot.in/2017/07/axis-dynamic-equity-fund.html

Invest on line in Axis dynamic equity fund click here - https://goo.gl/FtGvMr

Source
Axis mutual fund

Wednesday, 12 July 2017

Axis Dynamic Equity fund

Axis Dynamic Equity fund 

New Fund offer - NFO period 11th July  to 25 July 2017

It is very clear that the market is in RED, over heated zone!! The current market PE of 23.2 is very high than the long term average PE of around 16. History suggests that, 80% investors make below average returns because they invest when the market is highly priced with a 3 - 5 year horizon. It is imperative that, it is better to play safe than sorry. The way forward is, investing in dynamic equity  funds, that too in periodical manner, preferably in SIP for the next one year or so.




What is dynamic investing ??

Keeping all the eggs in a single basket is not advisable as we know. It is very well applicable to investments in mutual funds too. Hence, instead of keeping all the money in fully equity funds, some special type of funds are available for investments in the market. Dynamic investing suits the current time. In these funds, equity portion will dynamically vary from approximately 30 to 95 percent. Rest will be mostly debt portion. The fund name itself suggests that, this variation would be done dynamically depending upon the market




Why Axis dynamic equity fund ??

It has 3 PILLAR APPROACH 
P/E - Has Measures market valuations
Volatility - Captures market risk
Trend - Captures  market direction


To read more about the fund, click here for one pager
https://drive.google.com/file/d/0ByYrHYaBcEzCS2Nxa211NnhRZE0/view?usp=sharing

Click here for detailed ppt
https://drive.google.com/file/d/0ByYrHYaBcEzCN0dxTmdUUFRfRVE/view?usp=sharing

Reach us to invest in this scheme  / click here to invest on line


Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Friday, 7 July 2017

ஏறுகிற சந்தையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

This article of mine got published in Nanayam Vikatan on 6th July.

Market is in its peak period!!
Eager to know how to invest in Equity in Mutual funds and get benefited?
Read further..


பங்குச் சந்தை ஏறிக் கொண்டே இருக்கிறது. தினம், தினம், முந்தைய உச்சியை கடக்கிறது.  கடந்த 6 மாதத்தில் பங்குச் சந்தையின் ஏற்றம் 19.6% சதவிகிதமாக உள்ளது. கடந்த  2013 ம் ஆண்டுவாக்கில், நிறுவனப் பங்குகள் மற்றும் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த  மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தவர்கள் வாயெல்லாம் சிரிப்பு தான். இதை எப்படி தக்கவைத்து கொள்வது  என்று அறிவது அவசியமே! காரணம் நாம் அறிந்தது தான். பங்குச் சந்தை மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல்ஃபண்ட் முதலீட்டில்  ஏற்றமும் இறக்கமும் சகஜமே. "காகித லாபம் கறிக்கு உதவாது" லாபத்தை தக்க வைக்க என்ன வழி என்று பார்ப்போமே. 
 
பல முதலீட்டாளர்களுக்கு, தற்போது ஒரு பகுதி மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்பதா அல்லது முற்றிலும் விற்பதா என்பதில் குழப்பம்.   பங்குச் சந்தை செயல்பாடு எப்படி உள்ளது, இன்னும் ஏறுமா இறங்குமா என்பதை எப்படி அறியலாம்? ஓர் அணுகுமுறையை உற்று கவனிப்போம்.. 

சமீப காலங்களில் டயனாமிக் அசெட் அலோகேஷன் (Dynamic Asset Allocation ) ஃபண்ட்கள் பிரபலம். இதன் தாத்பரியம், சந்தை நிலைமைக்கேற்றவாறு பங்கு முதலீட்டு விகிதாச்சாரத்தை குறைந்தபட்சம்  30% ஆகவும் அதிகபட்சம் 95% ஆகவும் இதன் ஃபண்ட் மேலாளர்கள் வைத்திருப்பார்கள்.
 
சந்தை குறைந்திருக்கும் போது இந்த ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் பங்கு சதவிகிதம் அதிகமாக்கப்படும். மேலும், சந்தை ஏறுமுகமாக இருக்கும் போது பங்கு சதவிகிதம் குறைக்கப்படும்.  எனவே, மறைமுகமாக சந்தையின் நிலைமையை அறிந்து கொள்ள, இந்த ஃபண்ட்களில் பங்கின் சதவிகிதம் எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கலாம். இதன் விவரம் அட்டவணையில் உள்ளது. அட்டவணை இரண்டு பகுதியாக இருக்கிறது. முதல் பகுதியில், டைனமிக் ஃபண்ட் திட்டங்களில், பங்கின் அளவு குறைந்து வருகிறது. ஆக மொத்த்தில் சராசரியாக 60 சதவிகிதத்திற்கு குறைவாகவே இந்த ஃபண்ட்களில் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.




இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது நிறைய ஃபண்ட் மேலாளர்கள், சந்தை ஏறியதாக கொண்டு, பங்கு  முதலீட்டு சதவிகிதத்தை குறைத்துள்ளார்கள். இப்போது தெள்ளத்தெளிவாக தெரிவது, சந்தை நன்கு ஏறிவிட்டது. ரிஸ்க்கை (Risk ) குறைக்க வேண்டும் என்று பங்கு  முதலீட்டு சதவிகிதத்தை குறைத்து கொண்டு வருகிறார்கள்.  
 
எனவே ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் சந்தை மிக அதிகமாக எறியுள்ள இந்தக் காலகட்டத்தில், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் இருக்கும்பட்சத்தில், ஒரு பகுதியை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கோ அல்லது    பேலன்ஸ்ட் ஃபண்ட்களுக்கோ, மற்ற கலப்பின திட்டங்களுக்கோ மாறுவது நல்ல பலன் தரும் என்று எதிர்பார்க்கலாம். மேற்கண்ட குறிப்பு  முன்னரே முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களுக்காக. 

இனி வருவது "காண மயிலாட கண்ட வான்கோழி" என்பது போல அடுத்தவர்கள் லாபம் அடைவதை பார்த்து தற்போது சந்தையில் நுழைய, பங்கேற்க நினைப்பவர்களுக்கு ஒரு மாற்று கருத்து.
 
இந்தக் காலகட்டத்தில் எடுத்தவுடன் முற்றிலும் பங்குச் சார்ந்த முதலீட்டில் முதலீடு செய்யாமல்,  முன்னர் கூறியபடி டைனமிக் அஸெட் ஃபண்டுகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
 
மேலும் தொகையை ஒரே தடவையில் (ஒரே தவணையில்) முதலீடு செய்யாமல் முதலீட்டை எஸ்.ஐ.பி  (SIP ) முறையில் முதலீடு செய்வது சாலச் சிறந்ததாகும். 

Wednesday, 5 July 2017

NFO - New Fund Offer


Get insights on latest "New Fund Offer" launched by Mutual Fund houses.
Reach out to us for applying for this NFO's

Fund House
Fund Name
   Open 
   Close 
Link
Type
Birla Sunlife
Birla Sunlife Resurgent
23/06/17
07/07/17
Close ended
India Fund - Series 4
Axis
Axis Dynamic Equity Fund
11/07/17
25/07/17
Open ended

TitBit - 10

TITBIT 10 - GST and MUTUAL FUND

Goods and Services Tax - Is this really good for Mutual Fund Investors?
  1. Securities Transaction will become expensive
  2. Compliance burden of mutual funds will go up substantially
  3. Investors will suffer with higher expense ratios
  4. Mutual Fund advice will also cost more.

Image source: Economic Times

To Read more:


http://economictimes.indiatimes.com/mf/analysis/how-gst-will-impact-your-mutual-fund-investments/articleshow/58802103.cms