மலேசியாவின் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைக்கழகத்தில், தமிழ் பண்பாட்டு மையம் (அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி) மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை) இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கம் 28/03/2018 வெகு சிறப்பாக நடைபெற்றது. அக்கருத்தரங்கத்தில் பங்கு பெற்று, "தமிழும் தொழிநுட்பமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தேன். அனைவரிடத்திலும் அக்கட்டுரை நல்ல வரவேற்பு பெற்றது. அக்கட்டுரையை இங்கே வாசிக்கலாம்...
ஆரம்பம்
மொழி சைகைகளில் ஆரம்பித்து, குரலில் பிறந்து, எழுத்தில் வடிவமானது. எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் எத்தனையோ. ஆனால் சொன்ன சொற்களை மனதில் பதிய வைப்பதற்கு, பிற்பாடு அதைப் பார்த்து புரிந்து கொள்ள, எழுத்து வடிவம் வேண்டியதாக உள்ளது. நமது புரதான தமிழ் பல நூற்றாண்டுகளாக நமது பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இது, புதிதாக பிறந்த குழந்தை பல மாற்றங்களோடு வளர்ந்த மனிதர்களாக மாறிவருவது போல, பல மாற்றங்களுக்கு உட்பட்டு நம்மால் உபயோகபடுத்தபட்டு வருகின்றது. மாற்றங்களை நிர்ணயிப்பது பெரும்பாலும் இன்றைய தகவல் தொழில்நுட்பம் என்று என்ன வேண்டாம். கற்காலத்தில் இருந்து மொழியின் எழுத்து வடிவம் மாறிவருகின்றது. எழுத்தின் வடிவமும், எழுதுவதின் வேகமும் எப்படி வளர்ந்து வந்துள்ளது, இனி வருங்காலம் எப்படி இருக்கலாம் எனறு பார்ப்போம்.
எழுதுகோலும், எழுதப்படும் பொருளும்
எழுத்தின் வடிவம் எதால் எழுதப்பட்டது, எதில் எழுதப்பட்டது என்பதை பொருத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் கருதுகின்றேன். ஒருமுறை ஒரு சொற்பொழிவில் கேட்டேன், தமிழின் ஒலி வடிவத்தில் மாற்றங்கள் குறைவு, எழுத்தின் வடிவத்தில் மாற்றங்கள் அதிகம். ஒலி வடிவம் ஒரே மாதிரியாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதை நம்புகிறேன். பல நூற்றாண்டுகளாக எழுத்தின் வடிவம் மாறிகொண்டே வந்திருக்கின்றன. காரணம் தொழில்நுட்பம். உதாரணங்கள் பல. தொழிநுட்பத்தால் எழுதுகோலும், எழதப்படும் பொருளும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இன்னும் நிச்சியம் மாறும்.
எழுதுகோல்
|
எழுதப்படும் பொருள்
|
குறிப்பு
|
கடினமான கல்
|
பாறை
|
மொஹஞ்சதாரோ ஹரப்பா காலம்
|
உளி இரும்பாலானது
|
மலைகள், கற் சுவர்கள்
|
தஞ்சை கோவில் கல்வெட்டுகள்
|
இரும்பாலான எழுத்தாணி
|
ஓலை சுவடிகள்
|
கம்பராமாயணம் பாடல்கள்
|
பென்சில் மற்றும் மை கொண்டு எழுதப்படும் கருவிகள்
|
காகிதம்
|
கடிதங்கள்
|
அச்சாலான எழுத்துக்கள்
|
காகிதம்
|
புத்தகங்கள்
|
தட்டச்சுக்கருவி ( Typewriter)
|
காகிதம்
|
அலுவலக கடிதங்கள்
|
தட்டச்சுபலகை ( Keyboard)
|
கணனியில் குறிப்பிட்ட சில பாகங்கள் ( Local computer
hard drive)
|
மின்னணு முறையில் தமிழ்
புத்தகங்கள்- #1 (Tamil E books)
|
மேம்படுத்தப்பட்ட உள்ளீட்ட கருவிகள் (Improved Language
Input Tools - #2)
|
நேரடியாக இனையத்தில் ( on Cloud)
|
வலைபூக்கள் - #3 ( Tamil blogs)
|
எழுத்து வடிவம் நிறைய மாறியிருப்பது என்பதற்கு நமது வாழ்க்கையிலேயே பல உதாரணங்கள் உள்ளன. நமது தாத்தா எழுதிய பத்திர வாசகங்களையும் நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை. முன்னர் சிறிய பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் போது சேர்த்து எழுதும் முறை இருந்து வந்திருக்கின்றது (கூட்டெழுத்து எனப்படுவதாக ஞாபகம்). அதே முறையில் பின்னர் பத்திர பதிவுகள் நடந்து இருக்கலாம், ஆகவே சேரத்து எழுதப்பட்ட வார்தைகளை படிப்பதில் இக்காலத்தவர்க்கு சிரம்ம் ஏற்படுகின்றது.
எழுத்தாணி கொண்டு ஓலை சுவடிகளில் எழுதவதற்க்கும், பென்சில் மற்றும் மை கொண்டு காகித்தில் எழுதவதற்க்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. எழுத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு நமது எண்ணங்களும், வந்து விழும் தமிழ் வாரத்தைகளும் மாறுகின்றன. பின்னர் அச்சுக்கூடங்கள் வந்த போது அதற்கேற்றவாறு எழுத்து வடிவம் மாற்றப்பட்டது. கடினமான எழுத்துகளை கையால் எழதுவதின் சிரமத்தை குரைக்க, முன்னால் வேறுமாதிரி எழுதப்பட்ட எழுத்து மாறி "லை" யானது. தமிழும் தொழிநுட்பமும் பின்னி பிணைந்துள்ளதை இது காட்டுகிறது.
கணினியும் தமிழும்
கடந்த இருபது ஆண்டுகளில் கணினி ஆதிக்கத்தில் தமிழும், எழுத்தும் எப்படி கையாள படுகின்றது என்று பார்கலாம். நான் அவ்வப்போது சொல்வதுண்டு, தமிழில் 248 எழுத்துக்கள் ஆனால் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள். கணினியில் இந்த 248 எழுத்துக்களை உள்ளீடு (input) செய்வது மிகவும் கடினமாக இருக்கின்றது. இதனால் முதல் பத்து வருடங்களில் கணனியில் தமிழை கொண்டு வருவதிலும், உபயோகிப்பதிலும் சிக்கல்கள் இருந்து வந்திருக்கின்றன. தற்சமயம் இந்த கணினியில் தமிழை வளப்படுத்தும் தொழில்நுட்பம் முன்னேறி வருவதால் தமிழை உபயோகிப்வர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது, கணினியின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை கணினியில் உபயோகபடுத்தும் தொழிநுட்ப முறை வளராத காரணத்தால், தமிழின் உபயோகம் பின்தங்கி, ஆங்கிலத்தின் உபயோகம் அதிகமானதாகவே எனக்கு தோன்றுகிறது. இந்த தடையை மீறி தமிழ் திக்கெட்டும் பரவ, கணினியின் வருங்கால தொழிநுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழை உபயோகபடுத்தும் தொழிநுட்ப முறைகளும், மென்பொருள்களும், உள்ளீடு கருவிகளும் வளர்ந்து வர வேண்டும். கணினியில் தமிழ் இதுவரை எவ்வாறு உள்ளீடு செய்யப்பட்டு வந்தது, அதன் சிரமங்களை தற்கால கணினி உள்ளீட்டு கருவிகள் எவ்வாறு மேம்படுத்தி உள்ளது, பிற்காலத்தில் இதன் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
ஒருங்குறி முறை (யூனிகோடு-Unicode)
ஆதி காலத்தில் கணினியில் ஆங்கில தட்டச்சு பலகை கொண்டு, தமிழ் பாண்டுகளில் (Font) தமிழ் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்தது. தகவல்களை சொல்லுபவர் இடத்திலும், தகவல்களை பெறுபவர்கள் இடத்திலும் இந்த தமிழ் பாண்டுகள் இருந்தால் மட்டுமே கணினி திரையில் தமிழ் எழுத்துகள் தெரியும். தகவல்களை பெறுபவர்கள் பெரும்பாலும் தமிழ் பாண்டுகளை வைத்திருக்காத காரணத்தால் தமிழ் தொடர்புக்கு தடை இருந்துகொண்டே இருந்தது. இந்த தமிழ் பாண்டுப் பிரச்னை இப்போது தாண்டபட்டுவிட்டது. அணைத்து கணினிகளும், புரிந்துகொள்ளுமாறு, ஒருங்குறி அமைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது. இந்த யூனிகோடு (Unicode) எனப்படும் ஒருங்குறி அமைப்பு மற்றும் அதற்க்கு தேவையான பாண்டுகள், கணினி உபயோகிக்கும் எல்லோரிடமும் உள்ளது. எனவே தமிழை நாம் இந்த ஒருங்குறி அமைப்பு முலம் தகவல்களை எளிதாக பரிமாறிக் கொள்ளலாம். (#4)
தமிழ் விசைப்பலகை
பாண்டு பிரச்சனை தீர்ந்துவிட்டது சரி, இன்னும் விசைப்பலகை பிரச்சினை இருந்து கொண்டுதானே இருக்கிறது. எவ்வாறு எளிதாக தமிழ் எழுத்துக்களை யூனிகோடு முறையில் உள்ளீடு செய்யலாம் என்பது அடுத்த பெரிய வேலையாக இருக்கின்றது. இங்கே குறிப்பிட்டுள்ள எல்லா வகையான தட்டச்சுப் பலகைகளும், கணினியில் ஆங்கிலத்திற்கென உருவாக்கப்பட்ட சிறிய பலகையைக் கொண்டு நமக்குத் தேவையான 248 தமிழ் எழுத்துக்களை உருவாக்க வேண்டியுள்ளது. எனவே ஒரு தமிழ் எழுத்தை உருவாக்க இரண்டு அல்லது மூன்று முறை தட்டச்சு செய்ய வேண்டி உள்ளது. இதனால் இந்த செயல் செய்வது சிரமமாகும். அதேசமயம் மிகுந்த எழுத்து பிழைகளும் வருவதால் கணினியில் தமிழை உபயோகிப்பது இப்போதும் சிரமமாக இருந்து வருகின்றது. இந்த உள்ளீட்டு செயல் செய்வதற்க்கு பல வகையான தட்டச்சுப் பலகையில் மென் பொருள்கள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவற்றில் சில கிழே தரபட்டுள்ளது. நிறைய இணையதில் உள்ளது.
• அராசங்க தமிழ் தட்டச்சுப் பலகை
• தமிழ் 99 தட்டச்சுபலகை
• தட்டச்சுக்கருவி போன்ற தட்டச்சுப் பலகை (Keyboard layout based on Tamil Typewrite)
• கம்பன் தட்டச்சு பலகை ( Kamban Keyboard - #5)
போணடிக் முறையில் எழுத்து (Phonetic)
தட்டச்சுப் பலகைகள் மூலம் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதில் உள்ள சிரமத்தை போக்க மற்றுமொரு முறை தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது. அதாவது அம்மா என்ற சொல்லை தமிழ் எழுத்துகள் மூலம் உள்ளீடு செய்யாமல் ஆங்கில எழுத்துக்களை கொண்டு "AMMA" என்று உள்ளீடு செய்தால் திரையில் அம்மா என்ற தமிழ் வார்தை தோன்றும். இந்தமுறையில் கணினியில் தமிழை உபயோகப்படுத்தும் முறை "போணடிக் முறை" (Phonetic) எனப்படுகிறது. இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. உதாரனமாக கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் போன்ற பழந் தமிழ் சொற்களை இந்த வகையில் கையாளுவதும் சிரமமே. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தின் மூலம் தட்டச்சு செய்வது சிரமமாகவே இருந்தாலும், குறுஞ்செய்திகளை அனுப்ப இந்த முறை பெரும்பாலும் நமது இளைஞர், இளைஞிகளாள் தற்போது வெகுவாக பயன்படுத்தப்படுகின்றது . கூகுளின் "transliteration" என்ற கருவியும் (#6) (#15) இதன் அடிப்படையிலேயே இயங்குகிறது. இந்த கட்டுரையிலும் சில வார்த்தைகளை இந்த முறையிலேயே தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. இதை நீங்களும் பெற கூகுள் குரோமின் மொழி கருவிகளை தரவிறக்க்ம் செய்து பயன் பெறலாம் (#2- Google chrome language tool add on).
குரலில் இருந்து எழுத்து
இந்த தட்டச்சு உள்ளீட்டு பிரச்னைகளை தவிர்த்து எளிமையாக கணினி திரையில் தமிழை எழுத ஒரு வழி தென்படுகிறது. ஆம் தூரத்தில் உதயம் தெரிகின்றது. இதன் மூலம் நாம் மிக எளிமையாக நமது தமிழ்ச் சொற்களை கணினி திரையில் காண முடிகிறது. இதன் தாத்பரியம், நாம் பேசும் பேச்சை நேரடியாக தமிழ் எழுத்துக்களாக திரையில் காணலாம். இந்த வகையான செயல்பாட்டுக்கு பெயர் “குரலில் இருந்து எழுத்து” – (Voice to text). இப்போது இருக்கும் உள்ளீட்டு கருவிகளை விட இந்த முறையில் கணினியில் தமிழை உள்ளீடு செய்வது நிச்சியம் எளிமையாக இருக்கும். எந்த வகையான தட்டச்சு கருவிகளும் இதற்கு வேண்டியதில்லை. ஆனாலும் நாம் கூறும் வார்த்தைகள் சுமார் 60 - 70 % சரியானதாக தோன்றுகின்றது. மற்ற வார்த்தைகளை நாம் மேற்கூறிய தற்போதைய முறையிலே உள்ள உள்ளீடு வகையில் ஏதோ ஒன்றை உபயோகித்து சரி செய்ய வேண்டும்.
சிலருக்கு இந்த முறையில் எழுதுவதில் சில சந்தேகங்களும் கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றது. இதுபோன்று கேள்விகளும் என் முன்னே சில இடங்களில் வைக்கப்பட்டது. அவர்கள் கூறியது, எழுது தமிழ் வேறு, பேச்சு தமிழ் வேறு என்று. இந்த கருத்தை நானும் ஒப்புக்கொள்வேன். இதற்கு தீர்வு ஒன்று உள்ளது. முதலில் கட்டுரையை எழுத்து தமிழில், நமது கையெழுத்துப் பிரதியாக எழுதியபிறகு, இந்த மென்பொருள்கள் (#7, #8) மூலம் கட்டுரையை நிறைவு செய்வதால், கட்டுரை எழுது தமிழ் வடிவத்திலேயே இருக்கும், பேச்சு தமிழ் வடிவத்தில் இருக்காது.
குரலில் இருந்து எழுத்தின் சிறப்பு
குரலில் இருந்து எழுத்து முறையில் என்ன சௌகரியங்கள் உள்ளது என்பதைப் பார்ப்போம்.
1. தட்டச்சு பலகை தேவையில்லை.
2. தமிழில் எழுத்துக்களை உள்ளீடு செய்வது மிகவும் எளிமையாக இருக்கும்.
3. இந்த மென் பொருள்கள் மிகவும் நல்ல முறையில் செயல்படும் போது நமது தமிழ், செண்ணை தமிழாகவோ, செந்தமிழாகாவோ இல்லை நெல்லை தமிழாகாவோ எந்த வட்டார வழக்கில், எந்த முறையில் பேசப்பட்டாலும் தமிழ் எழுத்துகள் திரையில் தோன்றும்.
4. இந்த முறையில் எழுத்து உள்ளீடு செய்யும் போது வார்தைகளில் எழுத்து பிழை குறையும்.
5. நமக்கு வார்த்தையின் எழுத்துக்கள் சரியாகத் தெரியாத போது கூட, பக்கத்தில் பலகையில் வரும் சரியான வாரத்தைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். மென்பொருள் அமைப்பின் படி வார்த்தைகள் வந்து விடுவதால் இலக்கணப் பிழைகள் குறைவாக இருக்கலாம்.
6. போணடிக் முறையில் தமிழில் எழுத முயலும் போது எழுதுபவர்களுக்கு தமிழும் தெரிய வேண்டும், ஆங்கிலத்திலும் புலமை வேண்டும். தமிழ் மட்டுமே பேச தெரிந்தவர்களுக்கு இந்த முறையில் தமிழில் எழுதுவது என்பது சரிப்படாது ஆனால் குரலில் இருந்து எழுத்து என்ற முறையில் ஆங்கிலப் புலமை இல்லாமலேயே தமது சொந்த வழக்கில் பேசி எழுத முடிகின்றது. இது சிறப்பு.
7. குரலில் இருந்து எழுத்து என்ற முறையில் உள்ளீடு செய்யும் போது, மென்பொருள் சரியாக செயல்படும் போது, எழுதும் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த முறையில் குரலில் இருந்து எழுத்து பெறும்போது எழுத்து பிழையின்றி வருவதற்கு பல காரணிகள் உள்ளது. அவற்றில் முக்கியமானவை.
• நாம் தொடர் பேச்சாக பேசுகிறோமா? இல்லை தனித்தனி வார்த்தைகளாக உச்சரிக்கிறோமா
• நாம் உபயோகபடுத்தும் வார்த்தைகள் எவ்வாறு உள்ளது
• நமது குரல் கணீர் என்று சத்தமாக ஒலிக்கின்றதா இல்லை சற்றே பிசிறாக உள்ளதா என்பதும் முக்கியம்
• நாம் பேசுகின்ற போது சுற்றுப்புறம் அமைதியாக உள்ளதா இல்லை சத்தமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்
• நாம் எநத் வகையான கருவியை உபயோக படுத்திப் பேசுகிறோம்
இந்த தன்மைகளை பொறுத்து குரல் எழுத்தாக மாற்றபடுவதின் சிறப்புகள் அமைகிறது. குரலில் இருந்து எழுத்து இப்போது கைபேசி செயலிகளும் உள்ளது. இதை ஆன்டிராய்டில் பெற கூகுளின் ஸீ போர்ட் வேண்டும் ( #9 - Google G Board).
தகவல் தொழில் நுட்பத்தால் தமிழின் வளர்ச்சி
தற்காலத்தில் தமிழக அரசு கணினி மூலம் தமிழில் தகவல் பரிமாற்றங்களை நன்கு உபயோகித்து வருகின்றது. நெடுங்காலமாக காகித வடிவத்தில் இருந்த குடும்ப அட்டையை (Ration Card) மின் வடிவத்திற்கு மாற்றி, அதில் வாங்கப்படும் உணவு பொருட்களின் விபரங்கள் அனைத்தையும் தமிழ் குறுஞ்செய்திகளாக (SMS) அட்டையை உபயோகிப்பவர்களுக்கு தந்து வருகின்றது. இதனால் எல்லா தரப்பினரும் தமிழில் தகவல்களைப் பெற முடிகின்றது (#10).
மேலும் விக்கிபீடியா (#11 - Wikipedia), போன்ற தளங்கள் தமிழிக்கு தொழில் நுட்பத்தின் வாயிலாக மிகுந்த பங்களிப்பை ஆற்றி வருகின்றது. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே வருகின்ற நிதி சம்பந்தமான பல தகவல்களை, நாணயம் விகடன் போன்ற தமிழ் பத்திரிக்கைகள், (#9) தற்போது தொழில் நுட்ப உதவியால், தமிழில் எல்லோருக்கும் கிடைக்கும் வழியில் தருகிறது. இதுபோலவே அடியேனும் பரஸ்பர நிதி (Mutual Funds) பற்றிய நிறைய தகவல்களை வலைபூ (Blog) வழியாக தமிழில் தருகின்றேன்( #3).
வாய்மொழியாக வந்த ராமாயணம், தமிழில் ஒலையில் கம்பராமாயணம் ஆகி, பின் அச்சில் புத்தகமாக மாறி, ஒரு காலத்தில எனது அம்மான் சா.கணேசன் அவர்களால் ஊர்தோறும் பட்டிமன்றமாக பரவி, சமீப காலங்களில் இன்னொரு தொழில் நுட்பமான தொலைகாட்சி பெட்டியால் தமிழ் பேசும் வீடுகள் தோறும் உலா வந்து, இப்போது தற்காலத்தில் இணையத்தில் இணைந்து வலைப்பூக்களாக உலகெங்கும் பிரயாணிக்கிறது. இவ்வாறு ராமாயணம் உலகம் எங்கும் தமிழில் போய் சேர இந்த தொழில்நுட்பம் பெரும் பங்கு ஆற்றியுள்ளது (#13). யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல எந்த ஊரில் இருந்தும் எந்த ஒரு தமிழ் காவியத்தையும் எப்போது வேண்டுமாலும் கைபேசியில் படிக்க ஏதுவாக மின் நூலகங்கள் இருப்பது தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழுக்கு கிடைத்த பயன் ஆகும் (#16).
நாம் ஒன்றை எழுதும் போது சரியான வார்த்தைகள் நமக்கு தோன்றாத பட்சத்தில், அதில் அதே அர்த்தத்தில் அது போன்ற வார்த்தைகளை நாம் தமிழ் அகராதிகள் மூலம் தேடி அதை உபயோகபடுத்தலாம் (#14).
தமிழை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் என்னற்ற வலை பூக்களும் செயலிகளும் இணையத்தில் இறைந்து கிடக்கின்றது. (#17)
தினந்தோறும் சுட சுட செய்திகளை அச்சில் தந்து வருவது தினதந்தி. இப்போதும் அதே தினதந்தி செய்திகளை தமிழில் உடனுக்குடன் நொடிப்பொழுதில் நமது கைபேசியில் நோட்டிபிகேஷன் திரையில் தருவது (Mobile notifications) தொழில்நுட்ப வளர்ச்சிதானே. தமிழில் செய்திகளை இப்போது எங்கிருந்தும் உடனுக்குடன் பெறலாமே (#18)
வருங்காலம்
குரலில் இருந்து எழுத்து, இந்த வகையான தொழில்நுட்பம் தொடக்கத்தில் உள்ளது. இதில் பிழைகள் சாத்தியமே. சோர்வடைய வேண்டாம். குரலில் இருந்து எழுத்து மாற்றத்தில் தற்போது உள்ள 20 - 30% எழுத்துப் பிழைகள் முற்றிலும் சரி செய்யபட வாய்புகள் அதிகம். இயந்திர கற்றல் (Machine learning) எனப்படும், கற்க்கும் கருவிகள், முன்னேறும்போது எந்தச் சூழ்நிலையிலும், எந்த வட்டார வழக்கிலும், எவர் பேசினாலும், எவ்வளவு விரைவாக பேசினாலும், பிழைகள் இல்லாது எழுத்தை உருவாக்குகிற வாய்ப்புகள் அதிகம். மேலும் தற்போது உலக அளவில் தகவல் தொழிலநுட்பத்தில் ஆராய்ச்சி செய்யப்பட்டு வரும் செயற்கை அறிவின் ( Artificial intelligence) தாக்கம் தமிழ் மொழியை கணனியில் உபயோகபடுத்துவதில் இருக்கும்.
தமிழும் நாளொரு மேனி பொழுதொறு வண்ணமாக வளர்ந்து வருகின்றது. நாம் முன்னர் பார்த்த கற்காலம் தொடங்கி, உலோக காலம் தாண்டி தற்கால தகவல் தொழில்நுட்பங்களையும் சந்தித்து, அந்தந்த காலங்களில் உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்துக் கொண்டே வளர்ந்து வந்திருகின்றது. மாற்றங்கள் இல்லாத வருங்காலம் இல்லை. எனவே தமிழும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றுவாறு தன்னை மாற்றிக்கொண்டே வரும், வரவேண்டும் என்பதே நமது விருப்பமும்.
நிறைவு
குரலில் இருந்து எழுத்து வருவது போல, நினைவிலிருந்து எழுத்து என்ற முறை வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நினைப்பதை அறியும் கருவிகள் கண்டுபிடிக்க பட்டதாக செய்திகள் உள்ளது. இந்த வகை தொழிலநுட்பத்தில் ஆராய்ச்சிகள் அதிகம். எனவே தூரம் அதிகம் இல்லை.
மேலும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட இணையதள முகவரிக்கு சென்று படித்து பார்க்கவும். கணினியில் தமிழை மேன்மேலும் உபயோகபடுத்த இந்தத் தளங்களில் தரப்பட்டுள்ள சில கருவிகள் பயனீட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில் உள்ளது.
_________________________________________________________________________________________
ஓய்வூதிய திட்டமிடுகிறீர்களா? நாணயம் விகடன் கேள்வி-பதில் பகுதியில் ஓய்வூதிய நிதியை புத்திசாலித்தனமாக முதலிடுவதற்கான வழிகாட்டுதல்களை எனது பதில் அளிக்கிறது.
குறைந்த அபாய முதலீடுகளிலிருந்து கலப்பு மியூச்சுவல் பண்டுகள் வரை, ஓய்வுக்குப் பின் நிரந்தர வருமானம் பெறும் முதலீட்டு தந்திரோபாயங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
நமது முதலீட்டுத் திறனை மேம்படுத்த, பெஞ்சாமின் கிராஹாம் அவர்களின் சிந்தனைகளைப் பின்பற்றுவது அவசியம். அவரது நூல்களிலிருந்து எங்களுடைய முக்கிய பகிர்வுகளைப் பார்க்க,
முகநூல் இணைப்பைக் கிளிக் செய்யவும்.
ஓய்வூதிய திட்டமிடலில் வழிகாட்டுதல் தேவைப்படும் உங்கள் தொடர்புகளுடன் இதைப் பகிருங்கள்.
_________________________________________________________________________________________________
மேலும் படிக்க
Reference
|
URL
|
Remarks
|
#1
|
|
Tamil E books
|
#2
|
|
Language tools
|
#3
|
|
Tamil blog
|
#4
|
|
Language tools
|
#5
|
|
Unicode and Tamil language editors
|
#6
|
|
Language tools
|
#7
|
|
Voice to text
|
#8
|
|
Voice to text
|
#9
|
|
Google G Board
|
#10
|
|
Tamil web
|
#11
|
|
Tamil web
|
#12
|
|
Tamil web
|
#13
|
|
Kambaramayanam
|
#14
|
|
Dictionary
|
#15
|
|
Unicode and Tamil language editors
|
#16
|
|
Tamil E Library
|
#17
|
|
Learning Tamil in internet
|
#18
|
|
Tamil E newspapers
|