Wednesday 6 June 2018

எஸ்.ஐ.பி யின் லாப விகிதம் எக்செல்லின் துணையோடு - EXCEL Part 1

Click here to read the same article in English
Click here to get the Excel template for calculating the SIP returns - எஸ்.ஐ.பி யின் லாபத்தை  எக்ஸெல் (Excel) மூலம் கணக்கிட இங்கே கிளிக் செய்யவும் 

நாம் எல்லோரும் பெரும்பாலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.ஐ.பி (SIP)   போட்டு வருகின்றோம், ஆனால் அதில் நமக்கு கிடைத்த லாப விகிதம் (Return %) பெரும்பாலும் தெரிவதில்லை. திட்டத்தின் லாப விகித விபரத்தை செய்தி தாள்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த நிறுவனங்களில் தகவல் பக்கங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று எளிதாக எண்ணி விடலாம். மிகவும் கவனித்தால் இங்கு தரப்பட்டிருக்கும் லாப விகித விபரத்திற்கும், நமக்கு உண்மையாக கிடைத்த லாப விகித்திற்க்கும்,   நிறைய வித்தியாசங்கள் உண்டு. 

பண்டுகளின் லாப விகிதம்

பொதுவாக நமக்கு பொது தளங்களில் கிடைக்கும் லாப விகித விபரம் பாயிண்ட் டு பாயிண்ட் என்ற வகையில் கணக்கிடபட்டிருக்கும் (Point to Point returns). அதாவது குறிப்பிட்ட தேதியிலிருந்து குறிப்பிட்ட தேதி வரை, உதாரணமாக ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31 ஆம் தேதி வரை, அல்லது ஏப்ரல் 1-ந் தேதியான நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிதியாண்டின் இறுதி மார்ச் 31 வரை, இவ்வளவு லாபம் என்றுதான் பெரும்பாலும் இந்த தளங்களும் பொதுவான தகவல்களை நமக்கு தரும். ஆனால் நமக்குக் கிடைக்கும் லாபம் இதைவிட மாறுபட்டு இருக்கும். பெரும்பாலும் குறைவாகவே இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.  இதற்கான காரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். 

  • ஒன்று, குறிப்பிட்ட தேதிகளுக்கு இடையே கிடைக்கும் லாபத்திற்கும் எஸ்.ஐ.பி முறையில் மாதாமாதம் பணம் கட்டி பெரும் லாபத்திற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது. 
  • இரண்டாவது, நாம் முதலீடு செய்த தேதியிலிருந்து கிடைக்கும் லாபத்துக்கும், குறிப்பிட்ட ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கணக்கிடபடும் லாப கணகிற்கும் வேறுபாடு உள்ளது. 


எஸ் ஐ பி 'ல் லாபவிகிதம்

குறிப்பிட்ட தொகையை பண்டுகளின், ஒரு திட்டத்தில், ஒரு தடவை முதலீடு செய்துவிட்டு பின்னர் நிறைவு பெறும் போது அந்தத் தொகையை எடுத்து அதற்கான லாபத்தை பார்ப்பது எளிது. எஸ்.ஐ.பி முறையில் மாதமாதம் சிறு தொகையை முதலீடு செய்து முடிவில் நிறைவு தொகை பெற்று லாபத்தை கணக்கிடுவது சற்று கடினம். விளக்கமாகக் கூறுகின்றேன் எஸ்.ஐ.பி யின் லாபத்தையும், லாப விகிதத்தையும், சரியாக புரிந்து கொள்வதற்கு பக்கத்தில் தரப்பட்டிருக்கும் அட்டவணையை நோக்குங்கள். 


முதல் உதாரணத்தில் நாம் முதலீடு செய்யும் தொகை ஒரே தவணையில் முதலீடு செய்யபட்டது. மூன்று வருடங்கள் கழித்து முதிர்வு தொகை பெறபட்டது. கிடைத்த லாப  விகிதம் 14%. இரண்டாவது உதாரணத்தில் நாம் எஸ்.ஐ.பி முறையில்  முதலீடு செய்த தொகை ரூ36,000  நமக்கு கிடைத்த லாபமும் 14% சதவீதமே. ஆனால் முதலில் நமக்குக் கிடைத்த லாபம் தொகை ரூ17336. இரண்டாவது தடவையில் எஸ்.ஐ.பி முறையில்   லாபம் குறைவு. நமக்குக் கிடைத்த லாபம் தொகை ரூ8941. காரணம் முதல் உதாரணத்தில் முழுத்தொகையையும் முதலீடு செய்வதால் அது நீண்ட காலங்களுக்கு பணத்தை பெருக்கி முடிவில் பெரிய தொகையை நமக்குத் தருகிறது. இரண்டாவது உதாரணத்தில் பணம் தவணையில் செலுத்துவதால் முதலில் செலுத்திய ஆயிரம் ரூபாய்  அதிக காலம் (36 மாதம்) லாபம் பெற்றுத் தருகிறது கடைசி தவணையில் செலுத்திய ஆயிரம் ரூபாய் ஒரே ஒரு மாதத்திற்கு மட்டுமே நமக்கு லாபத்தை பெற்றுத் தருகிறது. இதை நன்கு புரிந்து கொள்ளவும். இந்த இரண்டு உதாரணங்களிலிருந்து நன்கு புரிந்துகொள்ள வேண்டிய விஷயம், லாபத் தொகை குறைவாக உள்ள எஸ்.ஐ.பி முதலீட்லும் லாபவிகிதம் 14%, இது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய குறிப்பாகும்.

எஸ்.ஐ.பி யின் லாபத்தை  எக்ஸெல் (Excel) மூலம் கணக்கிடுதல் 

எஸ்.ஐ.பி யின் லாபத்தை பற்றி தெளிந்து விட்டோம். சரி.  புரிந்துகொண்டு ஆகிவிட்டது.  இனி எப்படி இந்த எஸ்.ஐ.பி யின்  லாபத்தை கணக்கிடுவது என்று  சந்தேகம் தானே உங்களுக்கு? அதையும் தெரிந்து கொள்வோம். கடினமான செயலையும் எளிதாக்க நமக்கு கருவிகள் உள்ளது. கணினியில் எக்ஸெல் (Excel) துணையோடு எப்படி இந்த எஸ்.ஐ.பி யின் லாபத்தை கணக்கிடுவது என்று இப்போது பார்க்கலாம். 

கணினியில் எக்ஸெல் மூலம் லாபத்தை கணக்கிடுவதற்கு புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 


  • எக்ஸெல் “ரேட்” (Rate) என்ற பங்ஷனில் துணையோடு வட்டி வீதத்தை கண்கிடபோகின்றோம். 
  • இதில் “என்பர் “(Nper)  என்பது   எத்தனை மாதம் தொகையை எஸ்.ஐ.பி யில் செலுத்துகின்றோம் என்பதை குறிக்கின்றது. 
  • “பேமண்ட்” (Pmt)  என்பது நாம் மாதாமாதம் எவ்வளவு  தொகையை கட்டினோம் என்பது. 
  • “பிவி “ (Pv) முதலில் கட்டிய தொகை எவ்வளவு என்பதை குறிக்கின்றது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது இது பூஜ்ஜியமாக  (Zero) கொள்ளப்படுகின்றது.
  • “எப்வி “ (Fv) என்பது முடிவில்  கிடைக்கும் தொகை.  
  • “டைப் “ (Type)  என்பது பெரும்பாலும் ஒன்று என சொல்லப்படுகிறது.
  • “கெஸ்” (Guess) என்பது நாம் எதுவும் உள்ளீடு செய்ய வேண்டியதிருக்காது. எக்ஸெல் பிழை என்று  கூறினால் மட்டும் நாம் உள்ளீடு செய்ய வேண்டும் அது அந்த முதலீட்டின் லாப விகித்தை ஒட்டி  இருந்தால் நல்லது ( உ-ம் 0.2)  இது சற்று மேம்பட்ட கணக்கிடும் முறை. இதை இங்கு விளக்க எத்தனிக்கவில்லை. மேலோட்டமாக இது “முயற்சி மற்றும் பிழை அனுகுமுறை” ஆங்கிலத்தில் Trial and Error  என்று  சொல்வார்களே  அதுபோன்று பல  வட்டி விகிதங்களை எக்ஸெல் போட்டு எது சரியான வட்டி விகிதம் என்று கண்டுபிடிக்கும் முறை. 


செய்முறை:

இப்போது எக்செலில்  எஸ்.ஐ.பி லாப விகிதத்தை மேற்கூறியபடி நாம் ரேட் ஃபங்ஷன் ( Rate) உபயோகபடுத்தி கண்டுபிடிக்க போகின்றோம். முதலில் எக்சலில்ஃபங்ஷன் “ (fx) என்ற பட்டனை கிளிக் செய்தால் ஃபங்ஷன் திரை தோன்றும். அது இங்கு படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்காக கீழ்கண்ட இன்புட்டை உள்ளீடு செய்யுங்கள்.

Click here to get the Excel template for calculating the SIP returns


அட்டவணை -2 (மாதாமாதம் சிறு தொகை முதலீடு )இல் லாப விகிதம் பெற உள்ளீடு  செய்யவேண்டிய விபரம்



படிவத்தை நிரப்பி எக்ஸெலில் சமர்ப்பித்தால் நமது லாபவிகிதம்( 0.01166 *100 =1.17%)  1.17%  என்பதை நாம் பெறலாம். எக்செல் தரும் லாப விகிதம் மாதாமாதம் கிடைக்கும் வட்டி விகிதத்தை நமக்குத் தரும். அதை ஆண்டு விகிதமாக மாற்ற அதை 12 ஆல் பெருக்கி ஆண்டு லாப விகிதம் பெறுகின்றோம் 12*1.17% = 14%. இதை ஒரே செல்லில் உள்ளீடு செய்யலாம். ஒவ்வொரு காரணியை ஒவ்வொரு செல்லில் உள்ளீடு செய்யலாம், பின் அந்த செல்களை பங்ஷனில் உள்ளீடு செய்யலாம்.

நடப்பு எஸ்.ஐ.பி லாப விகிதம் 

இந்த முறையில் நாம் நடப்பு எஸ்ஐ.பி லாப விகித்தை கணக்கிடலாம். உதாரணமாக நீங்கள் ஒன்று 2017 ஜனவரி முதல், மாதம் 5,000 ரூபாய் எஸ்.ஐ.பி போட்டு வந்தால் உங்களுக்கு கிடைத்து வரும் லாப வீகிதத்தை அறிய கீழ்க்கண்டவாறு எக்சலில் ரேட் ஃபங்ஷன் மூலம் உள்ளீடு செய்யவும்.

எப்வி (FV) = முதிர்வு தொகையாக தங்கள் முதலீட்டின் இன்றைய மதிப்பை உள்ளீடு செய்யவும். இதற்காக இன்று தங்களிடம் உள்ள யூனிட்டுகளையும் அதன் எண்.ஏ.வி யையும் (NAV) பெருக்கிக் கிடைக்கும் இன்றைய மதிப்பை முதிர்வுதொகையாக உள்ளீடு செய்யவும்.

டைப் ( Type) = 1 என்றும் படிவத்தை நிரப்பி அது எக்ஸெலில் சமர்ப்பித்தால் மாதாமாதம் கிடைக்கும் வட்டி விகிதத்தை நமக்குத் தரும். அதை ஆண்டு விகிதமாக மாற்ற அதை 12 ஆல் பெருக்கி ஆண்டு லாப விகிதம் கிடைக்கும். எஸ்ஐ.பி தற்போதைய  லாப விகிதத்தை  இப்படியும் அறியலாம்.


இந்த முறையில் லாபவிகிதம் கணக்கிட நாம் மாதாமாதம் கட்டும் தொகை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நாம் மாதா மாதம் கட்டும் தொகை மாறினாலும் கட்டும் தேதி மாறினாலும் எக்ஸெல் இன் மற்ற பங்ஷன் துணையோடு வட்டி வீதத்தை அல்லது லாப விகிதத்தை கணக்கிடலாம். இதை பின்னாளில் பார்போம்.

No comments:

Post a Comment