Tuesday, 10 July 2018

பண்டுகள் பலவிதம், அதில் ஒரு விதம் பாஸிவ் (Passive) பண்டுகள்.

நமக்கு தெரிந்ததுதான், ஃபண்டுகளில் ஒபன் எண்ட் (open ended) பண்டுகள் என்ற எப்போதும் வேண்டுமானாலும் வாங்கி விற்கும் பண்டுகள் ஒருவிதம். மற்றொரு விதம் பணம் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்ப கிடைக்கும் - குளோஸ் எண்ட் பண்டுகள்(Closed ended).  பண்டுகளை பல வகைகளில் பிரிக்கிறார்கள்.  லாரஸ் கேப், மிட் கேப், ஸ்மால்  கேப், என்றும் பிரிக்கிறார்கள்(Large, Mid and small cap funds). குறிப்பாக இதுவும் நாம் அறிந்ததுதான்.  இந்த வகையில் இல்லாமல் இன்னொரு வகையான பண்டுகள் உள்ளன, இது மேலை நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் நமது நாட்டில் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை. நாம் இந்த இதழில் அதைப் பற்றி அறிந்து கொள்வோம். தற்சமயம் இது போன்ற பண்டுகள் நமது நாட்டிலும் முதலீட்டிற்கு  வருகின்றது. இது பற்றிய விவரங்கள் மிகவும் குறைவாகவே முதலீட்டாளர்களை சென்றடைந்துள்ளது. அது என்ன அப்படியான பண்டு என்று என்னலாம், இது பாஸிவ் பண்டுகள் (Passive Funds) என்று அழைக்கப்படுகின்றது. சாதாரண பண்டுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பார்போமா..


ஆக்டிவ் பண்டுகள் 
மிக முக்கியமாக, சாதாரண பண்டுகள்  நிதி  மேலாளரின் உதவியோடு ( பண்டு மேனஜர்) அல்லது நிர்வாகத்தில் நடத்தபடுகின்றது.  அந்தப் பண்டில் என்னென்ன பங்குகளை வாங்க வேண்டும், எவ்வளவு எண்ணிக்கையில் வாங்க வேண்டும், எந்த நேரத்தில் விற்க வேண்டும்   என்று எல்லா முடிவுகளையும் எடுப்பவர் நிதி  மேலாளரே. அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதரே. அவர்கள் படித்த மற்றும் கிடைத்த விவரங்களின்படி பண்டு நிர்வாகம் செய்கிறார்.  மனித தவறுகளுக்கு வாய்ப்புகள் உள்ளது.  எதிர்பாராத திருப்பங்களும் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எல்லா பொருளாதார மாற்றத்தையும், எல்லா பண்டு மேனஜர்களும் , எல்லா நேரத்திலும் சரியாக கணிக்கு முடிவதில்லை. ஆகவேதான் சந்தை ஏறும் போதும் அனைத்து பண்டுகளும் ஒரே மாதிரி ஏறுவதில்லை. சந்தை ஏறும் போதும் சில பண்டுகள் இறங்குகின்ற சரித்திரம் உள்ளது. இதற்கு பண்டு மேனஜர் ரிஸ்க் என்று பெயர்.

பாஸிவ் பண்டுகள் 
இந்த வகையான பண்டுகளை நிர்வாக ம் செய்ய முழு நேர பண்டு மேனஜர் தேவை இருக்காது.  இந்த பண்டுகள்  ஒரு சந்தை குறியீட்டை ஒட்டியே இருக்கும்.  உதாரணமாக, நிப்டி 50  பண்டில் சந்தை குறியீடான நிப்டியில் என்னென்ன பங்கு நிறுவனங்கள்  உள்ளனவோ, அதே பங்கு நிறுவனங்களின் பங்குகள் இந்த பண்டுகளிலும் இருக்கும். குறியீட்டில் உள்ள அதே விகிதாச்சாரத்திலேயே பங்குகள் இந்த பண்டுகளிலும் இருக்கும். சந்தை குறியீடான நிப்டியில்  உள்ள நிறுவனங்களின் பங்குகள்  இங்கும் இருப்பதால்  சந்தை இறங்கும்போதும்,  ஏறும் போதும் அலையில் படகு செல்லுவது போல பாஸிவ் பண்டுகள் ஏறி, இறங்கி செல்லும். எனவே சந்தையைவிட குறைவத்றகு  வாய்ப்புகள் இல்லாமல் போகின்றது. இதில் ஃபண்ட் மேனேஜரின் விருப்பு வெறுப்பு எதுவும் கிடையாது. எனவே இன்னும் கூர்ந்து கவனித்தால் இதில் ஆல்பா, மற்றும் பீட்டா என்று ஏதும் கிடையாது. இதை நிர்வகிப்பதற்கான  செலவு ம் குறைவு. பண்டு மேனஜர்கள், மற்றும் பங்கு தேர்வு செய்பவர்கள் சம்பள செலவு இல்லை.  இந்த ஃபண்டுகளில் பண்டு மேனஜர் ரிஸ்க் கிடையாது. ஆணால் சிஸ்டமாடிக் (Systematic)  ரிஸ்க் மட்டுமே உள்ளது. அது என்ன சிஸ்டமாடிக் ரிஸ்க்? உலகப் பொருளாதாரம்,  நமது உள்நாட்டு பொருளாதாரத்தை வைத்து அதற்கேற்றவாறு பங்கு விலை மாறுமே தவிர நிதி மேலாளரின் கவன குறைவினாலோ நமக்கு நஷ்டம் வர வாய்ப்புகள் இல்லை.

இ.டி.எப் – பண்டுகள் (ETF)
பாஸிவ் பண்டுகளில் ஒருவகை  இ.டி.எப் எனப்படுகிறது (Exchange traded funds). அதாவது சந்தையில் பங்குகள் போன்றே வரத்தகம் செய்யபடும் மீயுச்சுவல் பண்ட்.  இதிலும் ஒரு சிறப்பம்சம் உள்ளது. சாதாரணமாக ஆக்டிவ் பண்டுகளை ஒரு நாளில் ஒரு விலையில் தான் நாம் வாங்க அல்லது விற்க  முடியும், அதாவது அந்த பண்டின் முழு நாள் வர்த்தகத்திற்கும் ஒரே விலையை எடுத்துக் கொள்ளப்படும் (என்.எ.வி). ஆனால் சந்தையில் பங்குகளின் விலை காலையிலிருந்து மாலை வரை ஏறியும் இறங்கியும் வருவது நாம் அறிந்ததே.  சில நாட்களில் மும்பை  சந்தையில் புள்ளிகள் 1000 வரை மாறவும், நிப்டியில்  300 - 400 புள்ளிகள் ஏறி இறங்க வாய்ப்புள்ளது.  சந்தையில் சிலர்  ஒரே நாளில் ஒரு பங்கை வாங்கி அதே நாளில்  அதிக லாபத்திற்கு பின்னர் விற்று விடுவார்கள். இது சாத்தியமான ஒன்று. அதேசமயம் ஆக்டிவ் பண்டுகள்  திட்டங்களை வாங்கும் போதும் விற்கும் போதும் இது போன்று நாம் செய்ய முடிவதில்லை. அதற்கு மாறாக இந்த இ.டி.எப்  பண்டுகளின் விலையும் நிஃப்டி 50 சந்தையை ஒட்டி இருக்கிறது. 50 நிஃப்டி 500 புள்ளி இறங்கி பின்னர் 400 ஏறினால்  அதே நாளில் இந்த இ.டி.எப்  வாங்கி, பின்னர் சந்தை ஏறும்போது அதை விற்க முடியும். இந்த விஷயத்தில் இது பங்கு வாங்கி விற்பது போலவே செய்ய முடியும்.


பாஸிவ் பண்டுகளின் செலவு விபரம் (TER – Total expense ratio)
இ.டி.எஃப் பண்டுகளில் செலவு வகை 0.25% ஆக உள்ளது. பாஸிவ் பண்டுகள் செலவு வகை 0.75% ஆக உள்ளது. ஆக்டிவ் பண்டுகள் செலவு வகை 2.5% ஆக உள்ளது.  இந்த நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. இரண்டு பண்டுகள் ( ஆக்டிவ் பண்டுகள்  மற்றும் பாஸிவ் பண்டுகள் ) ஒரே வகையான லாபத்தை தரும் நேரத்தில் நாம் இந்த  பாஸிவ் பண்டுகள் முதலீடு செய்வதால் செலவு குறைவு என்பதால் அதிக லாபம் கிடைக்கிறது.  உதாரணமாக பத்தாயிரம் ரூபாயை 20 வருடங்கள் முதலீடு செய்தால் இரண்டு பண்டுகள்  ஒரே மாதிரி வருமானம் தரும் அதாவது 12% சதவிகிதம் அப்போது  பாஸிவ் பண்டுகளில் கிடைக்கும் லாபம் 15,000 அதிகமாக இருகும். இந்த இரண்டு திட்டங்களில் மாதாமாதம் 10,000 முதலிடு செய்தால் 20 வருட முடிவில் 10,00,000 அதிகமாக இருக்கும். இங்கு  முக்கியமாக இரண்டு திட்டங்களும் ஒரே மாதிரி லாபம் தரும் என்று கொள்கின்றோம். ஆனால் அப்படி நடப்பதில்லை. மோசமாக உள்ள ஆக்டிவ் பண்டுகளைவிட பாஸிவ் பண்டுகள் நல்லது. நன்றாக. சந்தையை விட லாபம் தரும் ஆக்டிவ் பண்டுகளுடன் , பாஸிவ் பண்டுகளை சேர்த்து பார்பதில் அதிக அர்த்தமில்லை


முடிவாக, இ.டி.எப் பண்டுகளின் முக்கியமான அம்சங்கள்: 

  1. இ.டி.எஃப் என்பது பாஸிவ் பண்டுகள் வகையைச் சார்ந்தது.
  2. செலவுகள் மிகவும்  குறைவு.
  3. ரிஸ்க் குறைவு
  4. சந்தையை விட  அதிக லாப நஷ்டம் வர வாய்ப்பு இல்லை. 
  5. இது முதன்முதலாக  முதலீடு செய்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
  6. இ.டி.எப் ன் எல்லா பண்டுகளும் ஒரு குறியீட்டை சார்ந்தே இருக்கும், அடிப்படை தன்மை எனலாமா இதற்கு  அண்டர் லயிங் அசட் ( under lying asset ) என்று பெயர்.
  7. இ.டி.எஃப்  பெரும்பாலும் பங்கை அடிப்படையாக கொண்டு இருக்கிறது . ஆனால் அவசியமில்லை,  அடிப்படை தங்கமாகவும் இருக்கலாம்.  தங்கத்தை அடிப்படையாக கொண்டு  இருந்தால் அதற்கு கோல்டு இடிஎஃப் என்று பெயர். இது நம் நாட்டில் புழக்கத்தில் உள்ளது
  8. இந்த பாஸிவ் பண்டுகள் மிகவும் எளிமையாணவை. நமக்கு புரியாத முதலீட்டு தத்துவங்கள் இருக்க வாய்புகள் குறைவு. நாம் அடிக்கடி, இந்த பண்டுகளை கவனித்து மதிப்புகளை, ஆராய்ந்து மாற்றம் செய்ய வேண்டிய தேவைகள் குறைவு.
  9. பெரும்பாலும் இந்த இ.டி.எப் பண்டுகள்  வாங்கி விற்க டி-மேட் கணக்கு தேவைப்படுகின்றது. சில விதிவிலக்குளும் உள்ளன. சில பாஸிவ் பண்டுகளுகு டிமேட் தேவையில்லை
  10. நமது மொத்த முதலீட்டில் சுமார் 10-15% இந்த பாஸிவ் பண்டுகளில் முதலீடு செய்யலாம்

சில பிரபலமான இ.டி.எஃப்:
  • கோல்டு இடிஎஃப், (Gold etf) 
  • சி பி எஸ் இ (CPSE etf)   
  • பாரத் 22 (bharat 22 etf ) 
சமீபத்தில் பாரத் 22  (bharat 22 etf) திரும்பவும் இரண்டாவது முறையாக சந்தைக்கு வந்தது.  யூடி ஐ  நிப்டி நெக்ஸ்ட் 50 ( UTI Nifty Next 50)  என்ற பாஸிவ் பண்டு என்.எப.ஒ (NFO) வெளியிட்டது. இதற்கு டீ மேட் தேவயில்லை. எனவே சந்தையில் பரிவரத்தனம் செய்யாமல், நிதி நிறுவனத்திடமே செய்ய வேண்டும். லாப நஸ்டம், நிப்டி நெக்ஸ்ட் 50  பொறுத்தே அமையும்.

இந்தியாவில் இருக்கும் இ.டி.எப் பண்டுகளின் பட்டியல் அருகில் உள்ளது, ஆராய்ந்து உங்களுக்கு ஏற்றவாறு ஒரு இ.டி.எப் திட்டத்தை  தேர்ந்தெடுத்து முதலீடு செய்து பாருங்களேன்.