My article on SEBI's new action plan has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.
செபியின் புது நடவடிக்கை
செபியின் புது நடவடிக்கை
கடந்த வாரத்தில் செபி புதிதாக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.
- அது என்ன நடவடிக்கை?
- முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?
- யார் யாருக்கு பாதிப்பு?
அதாவது டோட்டல் எக்ஸ்பெனஸ் ரேஷியோ எனப்படும் பண்டு திட்டங்களின் செலவு விகிதத்தை தற்போதைக்கு உள்ள நிலையில் இருந்து குறைக்க வேண்டும் என்று செபி கூறியுள்ளது. முன்னர் இது 2.5% என்ற வாக்கில் இருந்தது, தற்போது 1.5% என்ற வகையில் குறைக்கப்பட்டு உள்ளது. சில திட்டங்களுக்கு முந்தைய சதவீதத்தைவிட பாதியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஆக மொத்த செலவு விகிதம் பங்கு திட்டங்களுக்கு அதிக பட்சமாக 2.25% , குறிப்பிட்ட கால பங்கு திட்டங்களுக்கு 1.25% ஆகவும், மற்ற திட்டங்களுக்கு 1% ஆகவும் மாற்றபட்டுள்ளது - அட்டவணை பார்கவும்.
திட்டத்தில் நிர்வகிக்கப்படும் தொகை
|
மொத்த செலவு விகிதம் ( TER)
|
|
கோடிகள்
|
பங்கு திட்டங்கள்
|
மற்ற திட்டங்கள்
|
0-500
|
2.25
|
2
|
500-750
|
2
|
1.75
|
750-2000
|
1.75
|
1.5
|
2000-5000
|
1.6
|
1.35
|
5000-10000
|
1.5
|
1.25
|
10000-50000
|
ஒவ்வொரு 5000 கோடிக்கும் புள்ளி 0.05 சதவிகிதம் குறைவு
|
|
>50000
|
1.05
|
0.8
|
மொத்த செலவு விகிதம் ( Total expense ratio TER)
அது என்ன மொத்த செலவு விகிதம் என்கிறீர்களா… அதாவது ஒவ்வொரு பண்ட் திட்டத்திற்கும் அதை நிர்வகிப்பதற்காக நிறுவனம் குறிப்பிட்ட தொகையை எடுத்து கொள்ளும். அந்த திட்டத்தை சந்தைப்படுத்துவதற்கான செலவுகளையும் செய்யும். அந்தத் திட்டத்தை சந்தைப்படுத்த உள்ள தரகு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் தொகை கொடுக்கப்படுகின்றது. ஆக இது மாதிரியான திட்ட நிறுவனம் மேற் கொள்ளும் செலவுகள் அனைத்தையும் மொத்தமாக திட்டத்திற்கான செலவு என்று கூறுகின்றோம். இந்த திட்டத்திற்கான செலவு வளர்ந்து வரும் நாடுகளும், மற்ற நாடுகளையும் ஒப்பீடு செய்து பார்க்கும் போது இந்தியாவில் அதிகம் என்று செபி சொல்லிக்கொண்டே இருந்தது. தற்போது ஃபண்டுகளில் முதலீடு 25 லட்சம் கோடியைத் தாண்டி செல்லும்போது, செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிக அதிகமாக பணத்தை நிர்வகிக்கும் திட்டங்களுக்கு இந்த செலவீனத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று செபி கூறியுள்ளது. சரி, இதனால் யாருக்கு லாபம்? பார்க்கலாம்…
யாருக்கு லாபம்
உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு திட்டத்தில் சுமார் 10,000 கோடிகள் அளவு நிர்வகித்து வருகின்றது என்று கொள்வோம். அதன் தற்போது மொத்த செலவு விகிதம் 1.75% என்று இருந்தால், ரூபாய் 10,000 முதலீடு செய்யும்போது செலவாக ரூபாய் 175 கழித்து கொள்ளப்படுகிறது. தற்போது அது 1.5% ஆக மாறும் போது 25 புள்ளிகள் குறைகின்றது. முதலீட்டாளரக்களுக்கு ரூபாய் 25 அதிகமா முதலீடு செய்ய படுகின்றது. எனவே ஒவ்வொரு தடவை முதலீடு செய்யும் போதும் 25 ரூபாய் அதிகமாகின்றது. இதுபோல் 20 வருட எஸ்.ஐ.பி -ல் 15% லாபம் கிடைத்தால் நமக்கு அதிகமாக கிடைக்கும் தொகை சுமார் 40,000 ரூபாய் ஆக இருக்கும்.
யாருக்கு பாதிப்பு
- குறிப்பிட்ட கால திட்டங்களின் ( close ended funds) மொத்த செலவு விகிதம் குறைவதால், அவை சந்தைக்கு வரும் வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம்.
- மேலும் இந்த மொத்த செலவு விகிதம் குறைவதால், சிறிய நிறுவனங்களின் சிறிய திட்டங்கள் பாதிக்கப்படுவதில்லை.
- செபியின் புது நடவடிக்கையால் பெரிய திட்டங்களை நிர்வகித்து வரும் நிறுவனங்களின் லாப விகிதம் பாதிக்கபடும் என்று கருதப்படுகின்றது.
- மேலும் பண்டு நிறுவனங்கள், திட்டங்களை சந்தைப்படுத்துவதற்கான செலவுகளை குறைத்துக் கொள்ளும். எனவே இடைத்தரகர்களுக்கு கிடைக்கும் தொகை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தற்போது ஒரு சாராரின் கருத்து யாதெனில், இதனால் நிறுவனம் சந்தைப்படுத்துவது குறைப்பதால் புதிய முதலீடுகள் அளவு குறையலாம் என்று கூறப்படுகின்றது. காலமே பதில் சொல்லும். இந்த நடவடிக்கைகளால் புதிய முதலீட்டாளர்களுக்கு லாபம் என்ற நோக்கில் முதலீடுகள் வரவேண்டும் என்பதே செபியின் எதிர்பார்ப்பு.
கொசுறு செய்தி
செபி மேலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு வசதி செய்துள்ளது. புதிய பங்குகள் வெளியீட்டில், IPO முதலீட்டாளர்கள் பணம் செலுத்தி பங்கு வாங்க பதிவு செய்த தேதியில் இருந்து, அது சந்தையில் வர்த்தகம் நடக்கும் காலம் மேலும் குறைக்கப்பட்டு தற்போது மூன்று நாட்களாக மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் புதிய பங்குகளை வாங்க விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தினத்திலிருந்து மூன்று நாட்களுக்குள் சந்தையில் பெற்று வியாபாரத்தை தொடங்கலாம்.