Tuesday, 16 October 2018

மியூச்சுவல் ஃபண்ட் - கடன் திட்டங்களிலிருந்து எஃப்.டி.க்கு மாறலாமா? PART 2

Click here to read the same article directly from Nanayam vikatan website. The same article is given below.

Click here to read PART 1 கடன் பத்திர முதலீடு ;

குறையும் முதலீட்டு லாபங்கள் ( Diminishing portfolio returns and value)

கடந்த சில தினங்களில் பங்குச் சந்தை குறைந்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் 38896-{28/08/2018} ல் இருந்து குறைந்து தற்போது புள்ளிகள் 34299 ல் உள்ளது (09-10-2018). அதிகபட்ச புள்ளிகளில் இருந்து இன்று வரை 12% சதவிகிதம் குறைந்துள்ளது
இந்த பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளரக்கள் கவலைக்கு உள்ளாவது சகஜம்தானே.  பங்கு முதலீடு மற்றும் பங்கு சார்ந்த பண்டு மட்டும் பாதிப்பு அடைந்துள்ளது என்று என்ன வேண்டாம். கடந்த 6 மாதங்கள் அல்லது 1 வருடத்தில் கடன் சார்ந்த பண்ட் திட்டங்களும் குறைந்து வந்துள்ளது. அதன் லாப விகிதமும் குறைந்துள்ளது.


கடன் பத்திர சந்தையில் கலக்கம்

கடன் பத்திர சந்தையும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. வேதியியலில் சொல்வார்கள் ஒரு வினையை தூண்டிவிட்டால் அதைத் தொடர்ந்து பல வினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். (Multiple chain reactions). துபாய் போன்ற பெருநகரங்களில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானல் அதைத்தொடர்ந்து சுமார் பத்து வாகனங்கள் தொடர் விபத்துக்கு  உள்ளாகும். இதில் ஒன்றோ இரண்டோ வாகன ஓட்டிகள் தவறு செய்வதற்கு தொடர்ந்து வந்த அடுத்த  எட்டு வாகனங்களும்  விபத்துக்கு உள்ளாகும். இதுவே இப்போது கடன் பத்திர சந்தையிலும், இது சார்ந்த நிறுவனங்களிலும் தற்போது நடக்கிறது.  

உதாரணமாக டி.எஸ்.பி பண்டு (DSP Mutual funds)  நிறுவனம் தங்களது டி.கச்.எப்.எல் கடன் பத்திரங்களை (DHFL)  மிக குறைந்த விலையில் இந்தச் கடன் பத்திர சந்தையில் விற்ற காரணத்தால் டி.கச்.எப்.எல் பங்கு விலையும் குறைந்து, சந்தையின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.  சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணியும் இந்த நிகழ்வே ஆகும். இதை தொடர்ந்து இன்று வரை பல தொடர் நிகழ்வுகள், தொடர்ந்து கொண்டே  இருக்கின்றது. இது ஒரு சரித்திரமாகும் என்பதில் எந்த சநதேகமும் இல்லை.

எல்லா நிதி சம்மந்தப்பட்ட நிறுவன பங்கு விலையும், பெரும்பாலும் அவர்களது கடன் பத்திர விலையும் குறைந்துள்ளது.  இதனால் கடன் பத்திர பண்டுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த ஒரு வருட  லாபம்  பல கடன் திட்ட பண்டுகளுக்கு குறைவாக உள்ளது. அட்டவணை  பார்கவும். இறங்குமுகத்தில் உள்ளது தெளிவு. 



கடன் பத்திர பண்டுகளில் பாதிப்பு

பண்டுகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது போல் இவ்வளவு இறக்கம் கடன் பத்திர பண்டுகளிலும்  ஏற்படும் என்பது பலர் அறியாதது. முதலீட்டாளர்களும் இத்துறை சார்ந்தவர்களும் கொண்ட நம்பிக்கை  கடன் பண்டுகளில் நஸ்ட வாய்ப்புகள் இல்லை  என்பது. கொண்ட நம்பிக்கை  மீண்டும் ஒருமுறை தகர்க்கபடுகின்றது. மியூச்சுவல் ஃபண்ட் பிரிவுகளில் மிகவும் குறைந்த ரிஸ்க் உள்ளது என்பது லிக்யூட் பண்டு ( Liquid fund) , அதிக ரிஸ்க் உள்ளது  துறைசார்ந்த பங்கு திட்டங்களாகும் ( equity sectoral funds).  மிகக் குறைந்த ரிஸ்க் உள்ள  லிக்யூட் பண்டிலும்   நஷ்டம் வரும் என்பதை மீண்டும் ஒருமுறை சந்தை நமக்கு ஞாபக படுத்திகின்றது. லிக்யூட் பண்ட்    திட்டங்களும் சில நாட்கள் நஷ்டமடைந்தது தற்போது நிகழ்வாகும். மீண்டும் ஒருமுறை என்று கூறுவதற்கு காரணம் இதுபோன்ற ஒரு முறை 2013இல் நடந்த்து இனிமேலாவது தெரிந்து கொள்ளுவோம். கடன் பத்திர ஏன்.ஏ.வி (NAV) ஏறும் அல்லது இறங்கும், அதற்கான வாய்ப்புகள் உள்ளது. உதாரணமாக ஓரிரு வருடங்களில் தொடர் இடைவெளியில் கடன் பத்திர பண்டு  முதலீட்டாளர்களுக்கு  சில நிறுவனங்கள் அதிர்ச்சி  வைத்தியம் தந்து கொண்டே இருக்கின்றது. ஓம் டெக் ஆட்டோ (Omtek auto) தொடங்கி, பின்னர் ஐிண்டால் ஸ்டில் ( Jindal Steel) தற்போதய ஐ.எல்.எப்.எஸ் வரை(IL&FS). இது தொடர்கின்றது.

கடன் பத்திர லாப விகிதமும், வங்கி வட்டி விகிதமும் 

வங்கி வட்டி விகிதம் தற்போது ஏறி வருகின்றது . தற்போது பல முன்னணி வங்கிகள் ஏழிலிருந்து, ஏழே முக்கால் சதவிகிதம் வரை வட்டி தந்து வருகின்றது ( 7% to 7.75%)  மேலும் 10 ஆண்டு அரசாங்க கடன் பத்திர யீல்ட் தற்சமயம் ஏறி வருகிறது. முன்னர் இருந்ததை (6.8) விட தற்போது (8.05) ஏறி வருகின்றது. வங்கி வட்டி விகிதம் ஏறும்போது கடன் பத்திர விலை குறைந்ததால் என்.ஏ.வி பாதிக்கப்படுகின்றது.  கடந்த வருடத்தில் கடன் பத்திர முதலீடு 4 முதல் 5 சதவீதம் வரை லாபம் வந்துள்ளது. இது அட்டவணையில் தெளிவு. கடந்த மூன்று வருடங்கள் எனப் பார்க்கும்போது சுமார் 7 சதவீதம் வரை லாபம் தந்துள்ளது. இதனால் கடன் பத்திர லாப விகிதம், வங்கி வட்டி விகிதத்தைவிட குறைவாக உள்ளது. எனவே முதலீட்டாளரக்ளுக்கு கடன் பண்டு முதலீடுகளை தவிர்த்து வழக்கம்போல் வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று தோன்றுவது இயற்க்கையே.

வரி - வங்கி வட்டி - கடன் பண்டுகளின் லாபம்

சற்று நிதானியுங்கள். வங்கி வட்டிக்கு வரி கட்டும் முறையும், கடன் பண்டுகளின் லாபத்திற்கான வரி கணக்கும் மாறுபட்டவை. வரிக்குபின் கிடைக்கும் தொகையை பார்கும் போது. கடன் பத்திர முதலீடு ஒரு கை ஒங்கியே இருக்கும். வரி கட்ட தேவையில்லாதவர்கு இது சற்று மாறும்.



முடிவாக

எனவேதான் கடன் பத்திர ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக இருக்கவேண்டும். செபியின் பண்டு பிரிவின் படி கிரெட் பண்டு / கார்பரேட் பண்டு  வகைகளில் முதலீடு செய்வதற்கு முன் யோசித்து செயல் படவேண்டும். தற்சமயம் இருக்கும் சூழ்நிலையில் மிகக் குறைந்த கால பண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. மாற்றாக, புதிய கடன் சாரந்த் முதலீடுகளை தற்சமம் பாதுகாப்பிறக்காக   6  மாத காலத்திற்கு வங்கியில் வைத்திருந்துவிட்டு, கடன் பண்டுகள் ஸ்திர நிலை வந்த பிறகு மாறுவது பற்றி யோசிக்கலாம்.


No comments:

Post a Comment