Click here to read this article in English
25 வருடங்களை தாண்டி
டிசம்பர் 1, 2018 நல்லதொரு நாளாக சில முதலீட்டாளர்களுக்கு அமைந்துள்ளது. பிராங்கிளின் இந்தியா நிறுவனத்தின் இரண்டு பண்ட்கள், ( Franklin Templeton) டிசம்பர் 1, 1993 தொடங்கியதில் இருந்து , 25 வருடங்களை கடந்து வெற்றி வாகை சூடி இன்றும் தொடரந்து கொண்டிருக்கின்றது. நான் எழுதிய வெற்றிவாகை என்பதை எனது வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம், அருகில் இருக்கும் அட்டவணையை நீங்களே பாரத்து தெரிந்துகொள்ளலாம்.
ஆண்டுக்கு 20% அல்லது அதற்கு மேலும் லாபவிகிதம் ( CAGR) கிடைப்பது என்பது மிகச் சிறந்த முதலீட்டு லாபம் ஆகும். இது போன்ற லாபம் தங்க, வங்கி வைப்பு நிதிகளில் மற்றும் நிறுவன வைப்பு நிதிகளில் நமக்கு கிடைப்பதில்லை. ரியல் எஸ்டேட் மற்றும் அசையா சொத்து முதலீட்டில் இதுபோன்று முதலீட்டு லாபம் சில சமயம் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதலீட்டாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி - எனது பண்ட் முதலீட்டில் இரண்டு வருட லாபம் குறைவாக இருக்கிறது, எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது குழந்தைகள் ஒரு மாதத்தில் பிறப்பதில்லை. பத்து மாத காலம் பொறுத்திருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆழ்வார். இது போலவே பங்கு பண்ட்கள் முதலீட்டில் ஒரு வருடத்திற்கு பதிலாக 10 வருடம் பொறுத்திருக்கும் போது லாபம் கிடைக்கின்றது. பொதுவாக 7 முதல் 10 வருடங்களுக்கு மேல் பங்கு பண்டுகளில் முதலீடு செய்திருக்கும் போது நஷ்டம் இல்லை. 10 வருடத்திற்கு மேல் பங்கு, பண்ட் முதலீட்டில் வங்கி வைப்பு நதிகளை விட அதிக லாபம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
நடிகர் ரஜினி தன் படத்தில், முன்னர் சொன்னது நான் 1 தடவை சொன்னால், 100 தடவை சொன்னது போல…. இது போலவே நாம் போட்ட 1 லட்சம், இன்று 100 லட்சமாக இந்த பண்ட்கள் நமக்கு திருப்பி வழங்கி உள்ளது.
பிராங்கிளின் டெம்பிளிடான் பண்ட்கள்
நல்ல நிறுவனங்களில் நல்ல பண்ட்’ல் நீண்ட கால முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதற்க்கு இந்த இரண்டு பிராங்களின் இந்தியா புளு சிப் பண்ட் ( Franklin India blue-chip) மற்றும் பிராங்களின் இந்தியா பிரைமா பண்ட் ( Franklin India Prima ) சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
25 வருட பண்ட் லாப விபரம் -31-10-2018
|
||||||
பண்ட்
|
முதலீட்டு தொகை
|
தற்போதைய மதிப்பு
|
மடங்கு
|
பண்ட் லாப விகிதம்
|
குறீயிட்டின் லாப விகிதம்
|
குறீயிடு
|
பிராங்களின்
இந்தியா புளு சிப் பண்ட்
|
100000
|
10300000
|
103
|
20.45%
|
11.43%
|
நிப்டி
|
பிராங்களின்
இந்தியா பிரைமா பண்ட்
|
100000
|
8804000
|
88
|
19.67%
|
11.90%
|
நிப்டி
மிட் கேப்
|
பங்கும் காலமும்
இன்னொரு ஆய்வு சொல்கிறது பங்கு பண்ட் சார்ந்த திட்டங்களில் முதலீட்டின் ஆயுட்காலம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள். அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு வருடங்கள். இந்த மிகக் குறுகிய காலத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே பங்கு முதலீட்டில் அதிக வருடங்கள் முதலீடு செய்யும்போது லாபம் அதிகரிக்கிறது. உதாரணமாக, குழந்தை பிறந்தவுடன் பங்கு பண்டில் முதலீடு தொடங்கி அவர்கள் பெரியவர்களாகி வரன் தேடும்போது அல்லது அவர்களது மேற் படிப்பிற்கு பண்டில் இருந்து கிடைக்கும் தொகை நல்லதொரு வரவாவது கண்கூடாக தெரிகின்றது.
கடந்து வந்த பாதை
நிதி நிறுவனங்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகள், நிறுவனங்களின் நஸ்டத்தால் அவஸ்தைப்படுவது, சிலசமயம் நிறுவனமே காணாமல் போவது. இதனால் நமது முதலீட்டு லாபம் குறைகிறது அல்லது முதலீடு அடியோடு காணாமல் போகின்றது. ஆனால் இந்த இரண்டு பண்ட்கள் ஆரம்பித்து 25 ஆண்டுகளை கடந்து நடந்து கொண்டிருக்கிறது. முதலில் கோத்தாரி பயணிராக் (Kothari Pioneer) தொடங்கிய நிறுவனம் பின்னர் கைமாறி பயணியர் ஐடிஐ ஆகியது ( Pioneer ITI). மேலும் ஒருமுறை கைமாறி தற்போது பிராங்கிளின் டெம்பிளிடானாக (Franklin Templeton) வலம் வருகின்றது. இருந்தபோதும் முதலீட்டாளர்களுக்கு கஷ்டமோ, நஷ்டோமோ இதில் இல்லை. இது மீயூச்சுவல் பண்ட்களின் சிறப்பு ஆகும்.
உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் . நன்றி
No comments:
Post a Comment