Thursday 24 January 2019

என்.சி.டி (NCD) - நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் - 10 அம்சங்கள்

To read the same article in English - Click here

யாம் வங்கிகளில் அதிகம் வைப்பு நிதி ( Bank Fixed deposits) வைத்துள்ளோம். அதேசமயம் வட்டி அதிகமாக, வங்கிகளின் வைப்பு நிதி   வட்டியை விட அதிகம் கிடைக்கும் முதலீட்டை  விரும்புகின்றோம். வங்கிகளின் வைப்பு நிதிக்கு மாற்றாக மீயூச்சுவல் பண்டுகளின் கடன் முதலீடுகள் ( Debt based mutual funds) சிறந்தது என்று அவ்வப்போது பேச படுகின்றது. இருந்தாலும் அதிகம் பேர் அதன் பக்கம் போவதே இல்லை.  காரணம் மீயூச்சுவல் பண்டுகளின் கடன்  முதலீட்டில்  வட்டி அல்லது லாப விகிதம் ஒரே சீராக இருப்பதில்லை. சில சமயங்களில்  வங்கியில் கிடைக்கும் வட்டியை விட மீயூச்சுவல் பண்டுகளின் கடன் பத்திர லாபம் குறைவாக   இருக்கிறது.  தற்சமயம் இதுவே நிதர்சனமாக உள்ளது. இதுபோன்ற தருணங்களில் வங்கி வைப்பு நிதியை விட வட்டி அதிகம் வர வேண்டும், ஒரே சீராக வர வேண்டும், குறிப்பிட்ட வட்டி விகிதம் கிடைக்கவேண்டும்  என்று பார்த்தால் இந்த எல்லா அம்சங்களும் பொருந்தி வரக்கூடிய ஒரே முதலீடு நிறுவனங்களின் கடன் பத்திரங்கள். நிறுவனக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய பார்க்க வேண்டிய பத்து அம்சங்களை இங்கு பார்ப்போம்

1. குறிப்பிட்ட இடைவெளியில் குறிப்பிட்ட வட்டி விகிதம் 
குறிப்பிட்ட வட்டி விகிதம் குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. இது மீயூச்சுவல் பண்டுகளின்  கடன் பத்திரங்களில் கிடைக்கும் லாப விகிதம் ஏறி இறங்குவது போல், இருப்பதில்லை.  எனவே வங்கி வைப்பு நிதி போன்றே இதில் குறிப்பிட்ட தேதிகளில் முதலீட்டாளர்களுக்கு வட்டி கிடைத்துவிடும்.

2. வட்டி பெறும் முறை 
மாதத்திற்கு ஒரு முறை, அல்லது வருடத்துக்கு ஒரு முறையும், முதலீடு முடிவடையும்போது  வட்டி பெற்றுக் கொள்ளும் முறையும் உள்ளது. முதலீட்டாளர்கள் விரும்பிய முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

3. முதலீட்டு காலம்
முதலீட்டு காலமும் மூன்று, ஐந்து, பத்து வருடங்கள் என்ற வகையில் உள்ளது. முதலீட்டாளர்கள் விரும்பிய காலத்திற்கு முதலீடு  செய்து கொள்ளலாம். 

4. சந்தை பரிமாற்றம்
வங்கி வைப்பு நிதியில் ஒருவர் பெயரில்  இருந்து இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியாது. இந்த நிறுவன நிதி கடன் பத்திரங்களை சந்தையில் விற்கவும், வாங்கவும் முடியும். ஒருவர் பெயரில்  இருந்து இன்னொருவர் பெயருக்கு மாற்ற முடியும் ( Transferable instruments)

5. முதிர்வுக்கு முன் பணம் பெறுதல்
வங்கி வைப்பு நிதியில் முதலீடு முடிவடையும் முன்னர் பத்திரத்தை திருப்பி செலுத்தி குறைந்த வட்டியில் பணம் பெறலாம். இந்த கடன் பத்திரங்களை, நிறுவனங்கள் முடிவடையும் முன்னர் திருப்பி  பெறுவதில்லை.  முன்னர் கூறியபடி சந்தையில் விற்று பணம் பெறலாம்

6. ஈடு செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்கள் 
பெரும்பாலான நிறுவன கடன் பத்திரங்கள் செக்கூர்ட் ( Secured NCD) வகையை சார்ந்தது. அதாவது ஈடு செய்யப்பட்டுள்ள கடன் பத்திரங்கள்.  ஏதாவது ஒரு காரணத்தால் நிறுவனம் பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப தர முடியாத நிலை ஏற்படும் போது அதற்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை விற்று அதில் வரும் பணத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்க சட்டத்தில் வழி வகைகள் உள்ளது. இது போன்ற அமைப்பு வங்கி வைப்பு நிதியில் இல்லை இது கடன் பத்திரங்களின் மிகச்சிறந்த அம்சமாகும்

7. வட்டி விகிதமும் கிரெடிட் ரேட்டிங்
 நிறுவன கடன்  பத்திர முதலீட்டில் கவனிக்க வேண்டிய  முக்கிய அம்சம் கிரெடிட் ரேட்டிங் . ரேட்டிங் அதிகமாக (AAA) இருக்கும்போது சற்றே குறைவாக வட்டி கிடைக்கும் ரேட்டிங் குறைவாக ( A) இருக்கும்போது வட்டி அதிகமாக கிடைக்கும் இதை அட்டவணையில் பார்த்து புரிந்து கொள்ளலாம்

8. டிமேட்டும் கடன் பத்திமும்
இந்தக் கடன் பத்திரங்கள் டிமேட் முறையில் பெறப்படுகின்றது

9. வட்டி விகித அனுமானங்கள்
பொதுவாக வட்டி விகிதம் ஏறி வந்த நிலை மாறி குறையும் வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகின்றது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவால் பணவீக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்வே சந்தை வட்டி வகிதம் மேலும் ஏறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது இந்த தருணத்தில் அதிக வட்டி வரும் முதலீட்டு  சந்தர்ப்பங்கள் குறைவே. எனவே இதை பயன்படுத்தி இந்தக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய சிந்திக்கலாம்

10. முதலீட்டிற்கு தக்க தருணம் இதுவே
 ஐ எல்  எப் எஸ் நிகழ்வுக்கு (ILFS Episode) பிறகு நிதி நிறுவனங்களுக்கு அன்றாட பண பரிமாற்றத்திற்கு பணம் கிடைப்பது மிகவும் சிரமமாக  உள்ளது .எனவே முதலீட்டாளர்களை கவரும் வண்ணமாக தாங்கள் அளிக்கும் வட்டி விகிதத்தை தற்சமையம் சற்று அதிகரித்துள்ளார்கள். எனவே முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுபோன்ற நிதி நிறுவன கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணமாக  கருதப்படுகிறது

உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டுமற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் நன்றி 

No comments:

Post a Comment