Monday 22 April 2019

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பராமரிப்பு (ரிவியூ) செய்யும் போது கவனிக்க வேண்டிய 10 கட்டளைகள்


நாணயம் விகடன் மூலம் படிக்க 

பழைய நிதியாண்டு கழிந்து  புது நிதியாண்டில் காலடி வைகின்றோம் கடந்த வருடங்களில் ஃபண்ட் முதலீடுகள் அதிகம் செய்தோம் எஸ்.ஐ.பி க்கள் (SIP)பல தொடங்கினோம்.  இது யாவரும் அறிந்த செய்தி. அறியாத செய்திகள் பல ..

இந்த முதலீடு நன்கு வளர்ந்து வருகின்றதா?
முதலீட்டு பற்றி சிந்தித்து பராமரிப்பு செய்கிறவர்கள் நம்மில் எத்துணை  பேர்?
முதலீடு செய்து விட்டோம், இனி அப்படியே விட்டு விடலாமா? இல்லை  என்பதே பதில்.
நாம் முதலீடு செய்தோம் இப்போது நிலைமை எப்படி? எவ்வளவு வருமானம்? லாபமா? நஷ்டமா? என்று  ஆராய்வது முக்கியம்

இதை எப்படி தொடங்குவது? எங்கிருந்து தொடங்குவது? என்று இப்போது பார்க்கலாம். முக்கியமான 10 அம்சங்களை இங்கே பட்டியலிட்டு தருகின்றோம்.

1.     முதலீட்டு (சொத்து) மறுசீரமைப்பு

வருடம் ஒரு முறை  நமது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பற்றிய  விவரங்கள் சேகரித்து, லாப நஷ்டங்களை ஆராய்ந்து, மாற்றங்கள் எதில் தேவை என்று ஆராய்ந்து அதன்படி செய்வது உசிதமானது. இது ஆங்கிலத்தில் அசெட் ரீ பாலன்ஸ் (Asset rebalance) எனப்படும். நாம் முதலீட்டு (சொத்து) மறுசீரமைப்பு என்று கொள்ளலாம். இவ்வாறு நமது திட்டங்கள் அனைத்திலும் எத்துணை  யூனிட்டுக்குள் உள்ளது எவ்வளவு தொகை உள்ளது என்று அறிய நான் கேம்ஸ் / கார்வீ  ( Camsonline / Karvy mfs) தளங்களுக்குச் சென்று எல்லாத் திட்டங்களின் மதிப்புகளை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளலாம். (https://goo.gl/t6G7BS)  இந்தத்  திட்டங்களில் இவ்வளவு மதிப்பு உள்ளது ,  எவ்வளவு ஈக்விட்டி திட்டத்தில் உள்ளது, எவ்வளவு கடன் திட்டத்தில் உள்ளது, எவ்வளவு கலப்பினத்தில் உள்ளது என்று பார்த்து நமது ரிஸ்க்  எடுக்கும் தன்மைக்கேற்றவாறு ஈக்விட்டி திட்டத்தில்  கூட்டியோ  அல்லது கடன் திட்டங்களில் கூட்டிக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதுவே மறுபரிசீலனை செய்வதாகும். இதை வருடந்தோறும் செய்வது மிகவும் உசிதமானது இதற்க்கு நல்ல காலம் ஏப்ரல் மாதம்தான்.

2.     எத்தனை திட்டங்கள் வைத்து கொள்ளலாம்?

நமக்கு திட்ட விபரங்கள் கிடைத்த பிறகு , மொத்தம் எத்தனை திட்டங்களை வைத்துள்ளோம்  என்று பார்கவேண்டும். பத்து இருபது என்று இல்லாமல்  ஒற்றை இலக்கங்களுக்குள் கொண்டு வருவது நல்லது.  இதற்கு நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலை நமது திட்டங்கள் எந்த வகையானவை? ஒரே வகையான  திட்டங்களில் பல திட்டங்கள் வைத்திருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக ஸ்மால் கேப் (small cap) என்றால்  அதே வகையில் பல நிறுவன திட்டங்கள் வைத்து இருக்கிறோமா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்தால் எது நன்கு செயல்பட்டு வரும் என்று நினைக்கின்றோமோ  அதை வைத்துகொண்டு மற்றதை தவிர்த்து விட வேண்டும்.

3.     திட்டங்களும் மறுபரிசீலனை காலமும்

(a)  ஈக்விட்டி ஃபண்ட்:
ஈக்விட்டி திட்டங்களை பெரும்பாலும் நீண்ட காலம் வைத்திருப்பதே உசிதமானது. ஒரு வருட, இரண்டு வருட வருமானத்தைப் பார்த்து  மாறுதல் செய்வது அவ்வளவு உசிதமானது ஆக இருக்காது எனவே நான்கு / ஐந்து வருடங்கள், அதற்குமேல்,  வருமானம் எப்படி தந்தது என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு நாம் மாறுதல் செய்யலாம். இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஒரு வருடத்திற்கு மேல் மாறுதல் செய்யும்போது லாபம் முதல் ஒரு லட்சத்திற்கு வரிகள் ஏதும் இல்லை.
(b) கடன் ஃபண்ட் :
கடன் திட்டங்களில் மாறுதல் செய்ய நினைக்கும் போது மூன்று வருடங்களுக்குள் நாம் மாறுதல் செய்தால் இதற்க்கு ஷார்ட் டேர்ம் வரி கட்ட வேண்டிய நிலைமை ஏற்படும். இதை மாறுதல் செய்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டும்.
(c)  கலவை ஃபண்ட்:  
கலப்பின திட்டங்கள் பெரும்பாலும் ஈக்விட்டி திட்டங்களாக உள்ளது. சில கடன் சார்ந்த திட்டமாகவும் உள்ளது. மேற்கூறிய இரண்டு வகையில் எந்த வகை திட்டம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறுதல் செய்யும் போது வகைக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்.
(d) இ எல் எஸ் எஸ் : (ELSS)
இவை குறைந்த பட்சம் மூன்று வருடங்கள் வைத்திருக்க வேண்டும். வரி சலுகை காரணத்தால் அதற்கு முன்  நாம் இத் திட்டத்தில் இருந்து வெளியில் வர முடியாது. இதில் மூன்று வருடங்களுக்குள் மாறுதல் எதுவும் செய்ய முடியாது.
(e)  குறிக்கோள் சார்ந்த திட்டங்கள் ( Goal based investing)
முதியோர் ஒய்வூதிய  திட்டம்  மற்றும் குழந்தைகள் திட்டம் ஆகியவற்றை பெரும்பாலும் மாறுதல் செய்வதற்கு காரணம் ஏதும் இல்லை. அந்தக் குழந்தை வளர்ச்சித் திட்டம் (child care plans) முடிவடையும் போது நமது அன்றைய பணத் தேவைகளை பொருத்தது. குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் போது அவர்கள் பெயரில் ஈக்விட்டி திட்டங்களாக மாற்றி தொடரலாம் அல்லது பணத்தை எடுத்து குழந்தையின் கல்விச் செலவுக்கு செலவு செய்து கொள்ளலாம். அதுபோல் ஓய்வூதியத் திட்டத்தில் (Pension schemes) வரும் பணம் பெரும்பாலும் கடன்  திட்டங்களுக்கு மாற்றப்படும். சீரான வருமானம் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே இது மாற்றப்படுகின்றது. இது அவசியமான ஒன்று இல்லை. அவர் அவர்கள் ஓய்வு ஊதியம் எவ்வளவு கிடைக்கின்றது மற்றவகையில் எவ்வளவு பணம் வருகின்றது என்பதைப் பொருத்து, கணிசமான அளவு வேறு வகையில் வரும் போது ஓய்வூதியத் திட்டத்தில் வரும் பணத்தை  ஈக்விட்டி திட்டங்களில் மாற்றி லாபம் பெறலாம். அல்லது கட்டாயம் மாதாந்திர தேவைக்கு பணம் தேவை என்றால் கடன் திட்டங்களுக்கு மாறலாம்.

4.     திட்டங்களின் செயல்பாடு

முதலில், முக்கியமாக நாம் வைத்திருக்கும் திட்டங்கள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றது என்பதை அதன் லாப விகிதங்கள், மற்றும் திட்டங்கள் கொண்டுள்ள பங்குகள் , கடன் பத்திரங்கள் விவரம் தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக  கடன் பத்திரங்கள். எந்தந்த கடன் பத்திரங்களை நமது திட்டம் வைத்திருப்பது என்று பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் மிக மிக அவசியமான ஒன்றாகும். முன்னர் கூறியபடி நாம் அறிந்த, படித்த முக்கியமான செய்தி கடந்த செப்டம்பர் 18ஆம்  தேதியில் இருந்து இன்று வரை பல கடன் பத்திரங்கள் கஷ்ட நிலையில் இருப்பது நாம் அறிந்ததே. எனவே நமது திட்டங்கள் சந்தேகத்திற்கு உரிய கடன்பத்திரங்கள்,  வாரா  கடன்பத்திரங்கள் வைத்திருக்கிறதா என்று பார்கவேண்டியது காலத்தின் கட்டாயம். வைத்திருக்கிறது என்றால் எந்த சதவிகிதத்தில் வைத்திருக்கின்றது நமக்கு எவ்வளவு லாபம் குறையும் அல்லது நஷ்டம் வரும் என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும். நிச்சயமாக லாபம் குறையும் என்ற தருணங்களில் அதே திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.

5.     திட்டங்கள் மாறுவதற்கான காரணிகள்

முதலாவதாக, நாம் எந்த சூழலில் திட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் முதலில். நாம் திட்டம் தொடங்கும்போது இருந்த திட்ட மேலாளர் மாறி  இப்போது வேறு மேலாளர் என்றால் தற்போது திட்டங்களை நிர்வகிக்கும் மேலாளர் கீழ் திட்டம் நன்கு செயல்படுகிறதா என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு மாற வேண்டும்.
இரண்டாவதாக, சமீபத்தில் திட்டங்கள் சேர்க்கப்பட்டது, திட்டங்கள் மாற்றப்பட்டது, இந்த நிலைப்பாட்டினால் நமது திட்டத்தின் கடந்த வருட செயல்பாடு எவ்வாறு இருக்கின்றது என்று பார்க்க வேண்டும். செயல்பாடு வெற்றிகரமாக இல்லாத நிலையில் திட்ட மாறுதல் பற்றி யோசிக்கலாம்.
மூன்றாவதாக, சந்தை ஏற்ற இறக்கத்தினால் லாபம் மாறும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் மற்ற நிறுவனத்தில் அதே வகையான திட்டங்கள் ஏறும்போது, நமது அதே வகையான  திட்டம் இறங்கினால் காரணத்தை நாம் ஆராய வேண்டும்.  உதாரணமாக சந்தையில் நான்கு, ஐந்து ஐடி(information technology –IT)   திட்டங்கள் உள்ளன. அவை ஏறுமுகமாக இருக்கும் போது  நம்மிடம் உள்ள ஐடி திட்டம் இறக்கத்தில் இருந்தாள் ஆராய்ந்து பின் மாறுவதை யோசிக்க வேண்டும்.

6.     திட்டங்களும் சூழ்நிலையும்

நாம் முதல் தடவை திட்டங்களை முடிவு செய்யும் போது இருந்த சூழ்நிலை வேறு. இன்று  இருக்கும் சூழ்நிலை வேறு. அந்தச் சூழலுக்கு ஏற்ப அன்று எடுத்த  திட்ட முடிவு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றதாக இல்லாமல் அமையலாம். இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், முதலில் எடுத்த முடிவு, சில பல காரணங்களால் இன்று தவறாக தோன்றலாம். எந்த வகையில் பார்த்தாலும் நாம் எடுத்த முடிவும் தவறு என்று இன்று தோன்றினால் நாம் அவற்றை  திருத்திக்கொள்ள முனையவும்.   திட்டத்தை தொடருவது எந்த  வகையிலும் அர்த்தம் இல்லை.

7.     திட்டங்களும் வரி தாக்கலும்

ஆண்டு முடிவில் வரி தாக்கல் செய்ய நமது திட்டத்தின் டிவிடண்ட் வருமான கணக்கு மற்றும் ஆதாய வருமான கணக்குகள் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு திட்டத்திற்கும்  ஒவ்வொரு நிறுவணத்தில் இருந்து எடுப்பது சற்று கடினமான காரியமாக இருக்கும். எனவே நாம் கேம்ஸ் /கார்வி / பிராங்களின்/சுந்தரம் நிறுவன தளங்களுக்கு சென்று  அனைத்து நிறுவன திட்டங்களின்  ஆகாய வருமான கணக்குகள்  அந்த வருட டிவிடண்ட் வருமான கணக்களை பெறலாம்.

8.     திட்டங்களும் நமது  தகவல்களும்

நாம் அடிக்கடி நமது சிம் (sim) கார்டுகளை மாற்றிக் கொள்கிறோம்.  நமது ஈமெயில் ஐடியும் (email id) மாறுகின்றது. வெளியூர்களுக்கு மாறுதல் ஆகும்போது வங்கிக் கணக்குகள் மாறுகின்றது. எனவே வருடம் ஒரு முறை திட்டங்களில் நமது தகவல்கள்  சரியான படி உள்ளதா  என்று அவசியம் பார்க்க வேண்டும், இல்லையெனில் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து நமது தகவல்களை மிகச் சரியானதாக  மாற்றி கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானதாகும்.

9.     திட்டங்களும் எக்ஸிட் லோடும்

நாம் திட்டங்கள் மாறும் முன் எக்ஸிட் லோடு மூலம்  லாபம் எவ்வளவு குறையும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதை அனுசரித்து எக்ஸிட் லோடு இருக்கிறதா இல்லையா, இருந்தாலும் பரவாயில்லையா என்று புரிந்து அதன்பின் திட்ட மாற்றங்களை செய்ய வேண்டும். ஈக்விடி திட்டங்களில் ஒரு வருடத்திற்க்குள் மாறனால் எக்ஸிட் லோடு உண்டு.  கடன் திட்டங்களில் அதன தன்மையைப் பொறுத்து மாறும். எனவே நாம் திட்டம் மாறுமுன் இதைப் பற்றி அறிந்து புரிந்து செயல்படுவது நல்லது.

10.  லிக்விட் திட்டங்கள

நாம் அவசரத்தேவைக்காக முதலீடு செய்ய எண்ணும் போது லிக்விட் திட்டங்களில் முதலீடு செய்தால் எக்ஸிட் லோடு இல்லாமல் அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முடிவாக

மிக குறுகிய காலத்தில் உணர்ச்சிவசப்பட்டு திட்டங்களை மாறுவது நல்லதல்ல அதேசமயம் வாங்கிவிட்டு அதை ஆராயமல் வெகுகாலத்திற்கு மறப்பதும் நன்றன்று. முன்னர் கூறியபடி ஒரு வருட இடைவெளியில் வருடா வருடம் ஏப்ரல் மாதங்களில் நமது முதலீடுகளை, மதிப்புகளையும் அதன் தண்மைகளை, லாபம் விதங்களையும், எதிர்பாரப்புகளை,  புரிந்து முதலீடுகளை சரிவர பராமரிக்க வேண்டும். பயிர்கள் செழித்து வளர களை எடுப்பது அவசியம் தானே

If you like this article, please share this on your WhatsApp / Facebook / Twitter. This would be a special gift which you would be giving to our blog.

1 comment:

  1. The happy child makes a happy mom. Whether you are brand new parents or your child has just entered the teenage, counseling of parents about rearing their child is of utmost importance. With family programmes, you can face the challenges related to wellness and overall growth and development of your child. Take a step forward towards right parenting with Dr. Promilla Butani at the best Childcare Consultancy in South Delhi.
    Childcare Consultancy in South Delhi

    ReplyDelete