பொறுத்தார் பூமியாழ்வார்!
நாம் தினந்தோறும் கேட்கும் செய்திகள் பின்வருமாறு உள்ளது
- பொருளாதார மந்தநிலை தொடங்குகிறது
- உலகப் பொருளாதாரம் வளரவில்லை
- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. வளர்ச்சி சதவிகிதம் 5% க்கு குறைந்து விட்டது. (GDP)
- வாகனங்கள் விற்கவில்லை
- வேலை இழப்புகள் அதிகரிக்கின்றது
- வாங்குவதை குறைக்வும்
- பங்கு சந்தை அதல பாதாளத்திற்கு போய்விடும்
- முதலீடு தவிர்க்கவும்
என்று நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக, வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் , மற்ற சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் (Social) தினந்தோறும் சொல்லப்பட்டு கொண்டே இருக்கின்றது. இந்தக் கட்டுரையின் நோக்கம் இவை சரியா தவறா என்று ஆராய்வது இல்லை. சந்தையைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு இது ஒரு ஆச்சரியமான தகவல் இல்லை. சந்தையின் இயல்பே ஏறுவதும் இறங்குவதும் தான். எனவே சந்தையின் இறங்ககளை பார்த்து முதலீடு செய்ய பயப்பட வேண்டியது இல்லை. ஆறு மாத, ஒரு வருட நஷ்டங்கள் பார்த்து முதலீடு தவிர்ப்பதில் எந்த லாபமும் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு அசெட் அலகேஷன் (Asset allocation) மூலம் முதலீடு செய்யலாம். நினைவில் கொள்ளவேண்டயது, முதலீடு பெருக அவசியம் வருடங்கள் தேவை, இந்த நோக்கில் இந்தப் பிரச்சனையை அணுகலாம்.
முதலீட்டுக்கு ஏன் அதிக வருடங்கள் தேவை? அதன் சூட்சமம் காம்பெளண்டிங் (Compounding) எனப்படுகின்ற லாப கண்க்கிடும் முறை. அது என்ன காம்பெளண்டிங் என்று கேட்பவர்களுக்கு அது ஒரு லாபக் கணக்கீடு செய்யும் முறை. ஆங்கிலத்தில் சொல்லபடும் வாரத்தை. தமிழில் இது கூட்டு வட்டி முறையை ஒத்து உள்ளது.
கூட்டுவட்டி - (Compound Interest)
வட்டியை வருடாவருடம் பெறாமல் முதிர்வு தொகையோடு சேர்த்து பெற்றால் அது கூட்டு வட்டியாகும்.
இப்போது ஒரு உதாரண்த்தோடு பார்போம். பழநியப்பன் தனது மகள் நிகிதா கல்யாண்திற்கு, நிகிதா பிறந்த மாதம் முதல் ரூ 5000 மாத மாதம், 12% வட்டி விகிதத்தில சேர்க்க ஆரம்பதிது விட்டான். அவனது அண்ணன், அருணாவோ, தனது மகள் சித்திராவிற்கு பத்து வயதாகும் போது, தம்பியை பாரத்து அதே திட்டத்தில் சேரந்துவிட்டான். ஒற்றுவிட்ட சகோதரிகளின், 25 வயதில் அவர்கள் திருமணத்தின் போது, திருமண செலவிற்கு எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும், என்று பார்கலாம். நிகிதாவிற்கு அதிகமாகவும், சித்திராவிற்கு குறைவாகவும் இருக்க காரணம், காலமும் ஆங்கிலத்தில் காம்பெளண்டிங் எனப்படுகின்ற கூட்டுவட்யும்தான். அருணா, செய்த முதலீடு, 9 இலட்சம், பழநியப்பன் செய்த முதலீடு 15 இலட்சம். பழநியப்பன் அருணாவைவிட கூடுதலாக 6 இலட்சம் முதலீடு செய்து பார்க்கும் லாபம் 70 லட்சத்திற்கும் மேல். அட்டவணை 1 பார்கவும்.
விபரம்
|
நிகிதா
|
சித்ரா
|
கணகா
|
மாத மாதம் கட்டும் தொகை
|
5000
|
5000
|
5000
|
வருடங்கள்
|
25
|
15
|
14
|
வட்டி விகிதம்
|
12%
|
12%
|
12%
|
முடிவில் கிடைக்கும் தொகை
|
₹ 93,94,233
|
₹ 24,97,901
|
₹ 21,60,485
|
கட்டிய தொகை
|
₹ 15,00,000
|
₹ 9,00,000
|
₹ 8,40,000
|
லாப தொகை
|
₹ 78,94,233
|
₹ 15,97,901
|
₹ 13,20,485
|
இங்கு நன்கு புரிந்து கொள்ள வேண்டியது ஒரு வருடம் காலம் தாமதம் ஆனாலும் முடிவில் கிடைக்கும் தொகை குறைவாக உள்ளது.
- 15 வருட முடிவில் கிடைக்கும் சித்ராவிற்கு லாபம் 16 லட்சம்.
- 14 வருட முடிவில் கணகாவிற்கு கிடைக்கும் லாபம் 13 லட்சம்.
- 1 வருட தாமத்தினால் குறைந்த லாபம் 3 லட்சம்.
எனவே முதலீட்டில் காலதாமதம் செய்யாமல் அதிக வருடங்கள் முதலீடு செய்வதே பலனைத்தரும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
சராசரி ஆண்டு வருமானம் விகிதம் (CAGR – Compounded Annual Growth Rate)
நிலையான வட்டி வரும் முதலீட்டில் முதலீட்டுத் தொகை, வட்டி விகிதம், மற்றும் முதலீட்டு வருடங்கள் ஆகியவை நன்கு புலப்படும், தெரியும். முடிவு தொகை மட்டும் கூட்டுவட்டி சூத்திரங்களை கொண்டு கணக்கிடலாம். உதாரணம் வங்கி வைப்பு முதலிடு.
மீயூச்சுவல் பண்டு , பங்குவர்த்தகத்தில் முதலீட்டுத் தொகை தெரியும். முடிவு தொகையோ, வட்டி விகிதமோ புலப்படுவதில்லை. முதலீட்டு முடிவில் நமக்கு கிடைத்த முடிவு தொகை கொண்டு கிடைத்த லாப விகிதத்தை கணகிடுவதே சராசரி ஆண்டு வருமானம் விகிதம். பங்கு சார்ந்த முதலீடுகளில் ஒரே சீரான லாபம் இருப்பதில்லை. வருடங்கள் செல்லும் பொழுது லாபம் சராசரியாக மாறி நல்ல முடிவு தொகை கிடைக்கிறது என்பதை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கும் காம்பெளண்டிங் முறையே பயன்படுகின்றது என்பது முக்கியமான சாராம்சம்.
மாறி வரும் சராசரிஆண்டு வருமானம்
|
|||
வருடங்கள்
|
வருட ஆரம்ப தொகை
|
லாபவகிதம்
|
வருட முடிவு தொகை
|
1
|
₹ 1,00,000.00
|
6.6%
|
₹ 1,06,571.90
|
2
|
₹ 1,06,571.90
|
-5.0%
|
₹ 1,01,243.31
|
3
|
₹ 1,01,243.31
|
21.0%
|
₹ 1,22,504.40
|
CAGR
|
7%
|
முடிவாக
முதலீடு பெருக வருடங்கள் தேவை என்பது தற்போது தெளிவு. ரியல் எஸ்டேட் துறையில் இடம் வாங்கிவிட்டு 20 வருடங்கள் கழித்து விற்று லாபம் பார்க்கும் நாமே பங்கு சார்ந்த பண்டுகளை வாங்கிவிட்டு 2 வருடத்தில் நஸ்டம் என்று புலம்புவதில் அர்த்தமில்லை. முதலீடு பெருகுவதற்கு பொருமையும், வருடங்களும் அவசியம் தேவை என்பதை புரிந்து கொள்வோம்.
நினைவில் கொள்ளவேண்டியவை:
- இப்போதைய காலகட்டத்தில் எஸ்.ஐ.பி யை நிறுத்தி விடாதீர்கள்
- ஈக்விட்டி ஃபண்டுகளில் ஒரே தடவையில் முதலீடு செய்யாதீர்கள்
- கடன் பண்டுகளில் முதலீடு செய்து பின் தவணை முரையில் கடனில் இருந்து ஈக்விட்டி மாறலாம்
- கடன் ஃபண்டுகளில் வங்கி மற்றும் பொதுத்துறை திட்டங்களில் முதலீடு செய்யலாம்
மேலும் விபரம் அறிய ஆர்வமா??
இங்கு கிளிக் செய்து - வீடியோ படம் பாரக்கவும். இந்த படம் லாப விகிதம் எக்சல் மூலம் அறிவது பற்றியும். அதிக வருட கூட்டு வட்டி காம்பெளண்டிங் பற்றியும் தெளிவாக கூறுகிறது.
உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் . நன்றி