Click here to read this article directly from Nanayam Vikatan.
Click here to read this article in English in this blog.
தற்போது பாலைவனத்தில் சோலையாக மாறுவது கடன் ஃபண்டுகள்
Click here to read this article in English in this blog.
தற்போது பாலைவனத்தில் சோலையாக மாறுவது கடன் ஃபண்டுகள்
இந்திய பொருளாதாரம் குறைந்து வருகின்றது என்று உலகமே சொல்லுகின்றது. அதாவது 6.1 சத வீதமாக இருக்கும் என்று இன்டர்நேஷனல் மொனிட்டரி ஃபண்ட் சொல்கின்றது ( சர்வதேச நாணய நிதியம் / International Monetary fund). இது சமீபத்திய செய்தி. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்பது போல் 8+ சதவீதத்திற்கு மேல் இருந்த வளர்ச்சி வீதம் 6.1 ஆக மாறிவிட்டது. இதுபோன்ற தருணங்கள் பங்கு அல்லது பங்கு சார்ந்த ஃபண்டுகள் முதலீடுகளுக்கு பலன் தரப்போவதில்லை. சரி வங்கி வைப்பு பக்கம் போகலாம் என்று பார்த்தால், பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு ஆர்பிஐ (RBI) வட்டி விகிதங்களை குறைத்து வருவது வங்கி வைப்புக்கு உகந்தது ஆக இல்லை. அதேசமயம் மஹாராஷ்டிராவின் பி. எம் .சி (PMC) கதைகள் கனவில் வந்து போகின்றது. சரி சரி வங்கி இல்லாத நிதி நிறுவனங்களில் ஒரு சதவீதம் அதிக வட்டி கிடைக்கும் என்று அந்த பக்கம் திரும்பினால், வட்டி கிடைக்கிறதோ இல்லையோ அசலே கிடைக்குமா என்று உத்தரவாதம் ஏதும் இல்லாத நிலைமை. எந்த பக்கம் திரும்பினாலும் சிக்கல். இந்தச் சிக்கலில் இருந்து முதலீட்டாளர்கள் முதலீட்டில் முன்னேற என்ன வழி? இந்தப் பாலைவன தருணங்களில் சோலையாக காணப்படுவது என்னவோ மியூச்சுவல் ஃபண்டுகள் தான். அங்கும் கேட்டதெல்லாம் கிடைத்து விடுமா என்றால் சந்தேகமே. மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களிலும் என் எ வி (NAV) ஏறி இறங்கி பயம் காட்டுது. சில திட்டங்கள் முடிவு காலம் முடிந்த பின்னும் பணப்பற்றாக்குறையால் நீட்டிக்கப்படுகிறது. சில திட்டங்களில் ரைட் ஆப் (Write off) எனப்படும் முறையில் தொகை குறைக்கப்படுகின்றது. அங்கு இருக்கும் தடைகளை தாண்டி கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்து முதலீட்டார்கள் எப்படி முன்னேறுவது என்று விரிவாகப் பார்ப்போம். எப்போதும் போராடி ஜெயிப்பது தானே வாழ்க்கை. அதுதானே நிதர்சனம்.
தடை ஒன்றை தவிர்ப்போம்: செபி குறியீட்டில் கடன் பண்டுகளில் எவ்வாறு தேர்ந்தெடுப்பது?
தற்போது கடன் ஃபண்டுகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வகையில் உள்ளது. இந்தப் பத்து வகையில் எந்த வகையில் முதலீடு செய்வது, தற்சமய சூழலுக்கு மிகவும் சிறந்தது, ஏற்புடையது என்று பார்க்க வேண்டும். முதலில் எதை தவிர்ப்போம் என்று பார்ப்போம். அதாவது கிரெடிட் ரிஸ்க் ஃபண்ட் ( credit risk) எனப்படும் வகையில் (Sebi Category /கேட்டகிரியில்) முதலீடுகளை செய்யாமல் இருப்பது சாலச் சிறந்ததாகும். இந்த வகை ஃபண்டுகளில் ரிஸ்க் அதிகமாக இருக்கும், எனவே தான் அதன் நாமகரணம். எந்த வகையில் முதலீடு செய்யலாம் என்பது அடுத்த கேள்வி எழலாம். தற்போது உள்ள நிலைமையில் பேங்கிங் அண்ட் பிஎஸ் யூ ( Banking and PSU Debt )எனப்படும் வகையில் (கேட்டகிரியில்) உள்ள ஃபண்டுகளில் முதலீடு செய்வது நலம் பயக்கலாம். இந்த வகையில் வங்கி மற்றும் அரசாங்க நிறுவனங்களில் மட்டுமே முதலீடு இருக்கும். ஆகவேதான் கடந்த 6 மாதங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் பண்டுகளின் முதலீட்டு தொகை கிரெடிட் ரிஸ்க் வகையில் குறைந்து வருகின்றது. அதே சமயம் பேங்கிங் அண்ட் பிஎஸ் யூ ஃபண்டுகளில் முதலீடு செய்யும் தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.
தடை இரண்டை தாண்டுவோம்: ரிஸ்க்கும் முதலீடும்
கடன் பண்டுகளில் கிரெடிட் ரிஸ்க் ( Credit risk) ஒன்று மற்றொன்று இன்ட்ரஸ்ட் ரேட் ரிஸ்க் ( Interest rate risk) . கடன் திட்டங்களை தேர்வு செய்யும் போது நாம் மிக கவனமாக கையாள வேண்டும். உதாரணமாக கிரெடிட் குவாலிட்டி அதிகமாக இருக்கும் திட்டங்களிலும், இன்டெரெஸ்ட் ரேட் ரிஸ்க் குறைவாக உள்ள திட்டங்களிலும் முதலீடு வேண்டும். இதுபோன்ற தகவல்கள் இல்லாத போது உங்கள் முதலிட்டு ஆலோசகரிடம் கேட்டு பெறலாம் அல்லது மார்னிங் ஸ்டார் டாட்.காம் ( Morningstar.in) மற்றும் வேல்யூ ரிசெர்ச் ஆன் லைன் ( Valueresarchonline.com) போன்ற தளங்களில் இருந்து எளிதாக பெற முடியும். எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கு அருகில் உள்ள படத்தை பார்க்கவும். இது ஐடிஎப்சி லோ டுரேஷன் ஃபண்டின் தகவல். ( IDFC Low Duration fund)
தடை மூன்றை தவிர்ப்போம் : தரமும் முதலீடும்
இரண்டு கடன் திட்டங்களுக்கு மேற்கண்ட படம் ஒரே மாதிரி இருக்கலாம் ஆனால் அதன் தரம் ஒரே மாதிரி இல்லாமல் சற்று மாறுபடலாம். உதாரணமாக இரண்டு திட்டங்களிலுமே AAA நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம். அந்த நிறுவனங்களின் தரத்தை பொறுத்து நமது திட்டத்தின் தரமும் மாறுபடுகிறது. உங்களது தகவலின்படி வட்டியும் அசலும் திருப்பித்தரும் தண்மையுள்ள நிறுவனங்கள் மற்றும் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று நினைக்கிறீர்களோ , அந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கடன் திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். நம்பகத்தன்மை குறைவாக அல்லது தற்போது சிக்கலில் உள்ள அல்லது வருங்காலங்களில் சிக்கலில் மாட்ட கூடிய நிறுவனங்களின் முதலீடுகள் இருந்தால் அந்தத் திட்டங்களை தவிர்த்துவிட வேண்டும். எனவே நம்பகத்தன்மை குறைவாக உள்ள கடன் திட்டங்களை தவிர்த்து நம்பகத்தன்மையை அதிகமாக உள்ள திட்டங்களில் சேரவேண்டும்.
தடை நான்கு : கவனம் தேவை - கடன் பண்டு நிறுவன பாங்கு
- ஒய் .டி.எம் : செப்டம்பர் 2018 க்கு முன் ஒய் .டி.எம் ( Yield to Maturity – YTM) அதிகமிருந்தால் அதில் முதலீடு செய்து வந்தோம். தற்போதும் அதே வகையில் முதலீடு செய்வது ஆபத்தானது. ஒய் .டி.எம் அதிகமாக இருக்கும் திட்டங்களில் மேற் கூறப்பட்டுள்ள முதலீட்டின் தரத்தையும் , நம்பகத்தன்மையையும் அவசியம் பார்க்க வேண்டும்.
- திட்டத்தின் முதலீடு தொகை : நாம் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும் போது திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகையை ( Scheme AUM) கடந்த ஒரு வருடத்தில் சீராக இருந்தால் நல்லது. ஏறி வருகிறதா அதுவும் நல்லதே. குறைந்து வந்தால் கவனம் தேவை. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதை சற்று தவிர்க்க வேண்டும். காரணம் அந்தத் திட்டங்களில் சிக்கலான கடன் பத்திரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் .
- பரவலான முதலீடு : நாம் முதலீடு செய்யும் திட்டம் பல நிறுவனங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் அதிக பணம் இல்லாமல் இருக்க வேண்டும், ஏனெனில் ஏதாவது ஒரு காரணத்தால் அந்த கடன் சிக்கலாகும் போது , சில தவறுகள் நடக்கும் போது நஷ்டம் குறைவாக இருக்கும். கான்சன்ட்ரேட் போலியோவாக ( concentrated folio) இல்லாமல் டைவர்சிபைட் போலியோவாக ( Diversified folio) உள்ள திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்.
- நிர்வாக திறமை : கடன் பண்டுகளை நிர்வகிக்கும் திறமையும் முறையும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுகின்றது. கடந்த சில மாதங்களில் அதாவது ஒரு வருடத்தில் சில மியூச்சுவல் பண்டுகள் அடிக்கடி சிக்கலை சந்தித்து வருகின்றது. சில நிறுவனத் திட்டங்கள் எந்த வகையான சிக்கலுக்கும் உள்ளாகவில்லை. இந்த பாங்கு அந்த நிறுவன கடன் திட்ட மேலாளரை சார்ந்தே இருக்கின்றது. இனிவரும் காலங்களில் கடன் திட்டங்களில் முதலீடு செய்யும்போது நல்ல முதலீட்டு மேலாளர்கள் பார்த்து அவர்களது திட்டங்களில் நாம் முதலீடு செய்ய வேண்டும். இந்த விவரங்கள் உங்களுக்கு எளிதாக தெரிய வாய்ப்பு இல்லாத காரணத்தால், முதலீட்டாளர்கள் இது விஷயத்தில் முதலீடு ஆலோசகர்களை நன்கு விசாரித்து அதன்பின் முதலீடு செய்ய வேண்டும்.
முடிவாக, தற்போதைய சூழ்நிலையில் பங்கும் பங்கு சார்ந்த முதலீடுகள் தவிர்த்தும் கடன் சார்ந்த முதலீடுகளையும் செய்யும்போது மிக கவனமாக முதலீட்டு தண்மைகள் அந்த முதலீடு மேலாளரின் தன்மைகள் அந்தத் திட்ட நிறுவனத்தின் பாங்கு போன்ற பல காரணிகளை அலசி ஆராய்ந்து அதன் பின்னரே முதலீடு செய்ய வேண்டும்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யலாம்.
உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருந்தால், இதை உங்கள் பேஸ்புக் அல்லது டுவிட்டரில் பகிர்துந்து கொண்டு, மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள் . நன்றி .
No comments:
Post a Comment