எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?
சூழலும் எஸ் ஐ பி யும்
1. “தற்போதைய சந்தை நிலவரத்திற்கும்,
தற்போதைய இந்திய பொருளாதரத்திற்க்கும் சரியான சம்பந்தம் இல்லை.”
இந்நாள் மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர்.
2. “கோவிட்க்கு தடுப்பூசி
கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் பின்னர் பொருளாதாரம் பழைய நிலைக்கு திரும்ப காலதாமதம் ஏற்படலாம்” முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி
கவர்னர். ரகுராம் ராஜன்
மேற்கூறியவை
சில உதாரணங்களே. பல நிதி மேலாண்மை வல்லுநர்கள் கூறுவது என்னவெனில் இந்திய பொருளாதாரம் மீண்டு வர
மாதங்கள் அல்ல வருடங்கள் ஆகலாம் என்பதே. இந்த சூழலில்
தற்போது ஃபண்டுகளில் எஸ் ஐ பி மூலம் முதலீடு
செய்பவர்களுக்கு உள்ள நிதி நிலைமை மற்றும் அவர்களது கேள்விகள் பற்றி பார்போம்
1.
அத்தியாவசிய
தேவைகளுக்கு பணம் இல்லாதது
2.
தற்போது வருகின்ற வருமானம் குறைந்து வருவது
3.
வேலையில் சம்பளக்
குறைவு, பதவி உயர்வு இல்லாத்து
4.
வருங்காலத்தில் வருகின்ற வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லாத
நிலைமை
5.
வேலையில் நிரந்தரமிண்மை
இந்தச் சூழலில் எவ்வாறு எஸ் ஐ பி கட்டுவது
சந்தை இறங்கியிருக்கும் பொழுது எஸ் ஐ பி நிறுத்தாதீர்கள், எஸ் ஐ பி யை நிறுத்துவது அவ்வளவு உசிதமல்ல. எஸ் ஐ பி தொடர்ந்து செலுத்தி வாருங்கள் என்று முதலீட்டு ஆலோசகர்கள் இடைவிடாது சொல்லிகொண்டே
இருக்கிறார்கள். மறுபுறம் முதலீட்டாளர்கள்
கையில் எஸ் ஐ பி கட்ட
பணம் பற்றவில்லை. இதனால் முடிவில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகங்களும் குழப்பங்களுமே அதிகம்
இந்தச் சூழலில் எஸ் ஐ பி யை என்ன செய்வது? பார்க்கலாம்
எஸ் ஐ பி யில் பணம் செலுத்தாமல் தவறவிடுவது
இந்த வகையில் நமது வங்கிக் கணக்கில் பணம் இல்லாத காரணத்தால்
எஸ் ஐ பி
மூலம் யூனிட்டுகள் வாங்குவது
தவிர்க்கப்படுகின்றது. இது போன்று பல முதலீட்டாளர்களுக்கு தற்போது
நடந்துவருவது நிதர்சனம் இவ்வாறு விடுவது நல்லதல்ல. காரணம் மாதா மாதம் எஸ்ஐபி
விண்ணப்பம் வங்கிக்கு பணம் கேட்டு வரும் போது, நமது கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி செல்லும் பொழுது, கட்டாயமாக சிறிய தொகையை நமது
வங்கிக் கணக்கில் இருந்து அபராத தொகையாக எடுத்துக் கொள்ள படுகின்றது. இதை தவிரக்க, இதற்கு மாறாக நமக்கு பணவரத்து குறையும் பொழுது ஒரு
மாதம் முன்னரே, எஸ்ஐபி யை
நிறுத்தலாம்.
தற்காலிக எஸ்ஐபி நிறுத்து முறை
ஒரு தடவை எஸ்ஐபி நிறுத்திவிட்டால் திரும்பவும்
பெரும்பாலோனர் அதை பின்னர் தொடர்வதில்லை, விட்டுப்போனது விட்டுப்போனது ஆகவே ஆகிவிடுகின்றது. நிறைய பண்டு நிறுவனங்கள் மற்றும்
நிதிச் சேவை நிறுவனங்கள் தற்காலிக எஸ்ஐபி
நிறுத்து முறை யை அறிமுகபடித்தியுள்ளது. (Pause / பாஸ்) இந்த தற்காலிக எஸ்ஐபி நிறுத்து
முறை என்ற புதிய முறை மூலம் மூன்று அல்லது ஆறு மாதங்கள் எஸ்ஐபி கட்டாமல் பின்னர்
எல்லாம் சரியாகும் பொழுது எஸ்ஐபி யை தொடரலாம். இதை வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் செய்ய முடியும். இது முழுதும் நிறுத்துவதைவிட
சிறந்த்தாக கருதபடுகின்றது.
எஸ் ஐ பி ஐ நிறுத்துவதின் தாக்கங்கள்
எஸ் ஐ பி ஐ இவ்வாறு
நிறுத்திவிட்டால் அதன் விளைவுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முதலில் ஒரு குறிக்கோளை மனதில் வைத்து எஸ் ஐ பி கட்டி வரும் போது
குறிக்கோளை அடையும் காலம் அதிகரிக்கும், அல்லது குறிக்கோளுக்கான
காலத்தில் கிடைக்கும் தொகை குறைவாக இருக்கும். இதை மனதில் கொள்ளவேண்டும்.
முடிவாக
தற்போதைய சூழலில் அதாவது சந்தை ஏற்ற இறங்கள் அதிகமாக
இருக்கும் பட்சத்தில், சந்தை சரியலாம், என்ற யூகங்களிடையில் பணப்புழக்கம்
மிகவும் பாதிக்கபட்டுள்ள சூழ்நிலையில் பண வரவு சற்று குறைவாக இருக்கும் காலங்களில்
எஸ் ஐ பி ஐ முழுவதுமாகவோ
அல்லது தற்காலிகமாகவோ நிறுத்துவது சரியான
முடிவாகவே இருக்கும் எந்த முதலீட்டாளர்களுக்கு பண வரவு செலவுகளில் கஷ்டங்கள் ஏதும்
இல்லாத நிலையில் எஸ் ஐ பி ஐ தொடரலாம்
பின்குறிப்பு
ஈக்விட்டி ஃபண்டுகளில் மட்டும்தான்
எஸ்ஐபி செய்ய வேண்டும் என்பதில்லை கடன் பண்டுகளிலும் எஸ்ஐபி செய்யலாம்
No comments:
Post a Comment