Sunday 15 November 2020

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

சந்தை ஒரு அடங்காத மிருகம். காளையா, கரடியா என்று கணிப்பதிலேயே காலம் கடந்துவிடுகின்றது. சந்தையை கணிப்பது  கடினம் தான். ஜனவரியில் உச்சம் தொட்ட இடத்திற்க்கு திரும்பவும் வந்து விட்டது. இடையில் மார்ச் 23 ல் 25ஆயிரம், இப்பொழுது  மீண்டும் 43 ஆயிரம்.  இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு விரைவாக சந்தை மீளும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்க்காததுதான். எதிர்பார்க்காத போது ஏறுவதும், இறங்குவதும் தானே சந்தை.

சந்தையை சற்றுநேரம் மறப்போம். சுற்றுபுறம் பார்ப்போம்

கோவிட் நம்மை விட்டு அகலவில்லை, மாறாக கோவிட்டோடு  வாழ பழகிவிட்டோம்.  தடுப்பூசி வரும், வரும் என்பதோடு இருக்கின்றதே தவிர வந்தபாடில்லை. இப்பொழுது  பழைய மாதிரி வாழ்கின்றோமா என்பது கேள்விக்குறி, எப்போது பழைய மாதிரி வரும், இல்லை பழைய மாதிரி வருமா? என்பது கூட தெரியவில்லை.  அதே நேரத்தில் மின்சார உபயோகம் பழைய மாதிரி  வந்துவிட்டது,  கார்கள் விற்கிறது, இனி எல்லாம் சுபம் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. இந்திய பொருளாதாரம் விரைவில் மீள்கிறது என்று சொல்வாரும் உண்டு. பொருளாதாரம் நல்ல நிலைமைக்கு வர இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகும் என்று சொல்வாரும் உண்டு. அதில் முன்னால் ஆர் பி ஐ தலைவர் ரகுராம் ராஜன் போன்றவர்களும் உண்டு. பொருளாதாரம் மீண்டு வர காலங்கள் அதிகம் என்று தோன்றுகிறது.

இந்த  வாழ்க்கை, மற்றும்  பொருளாதார சுழற்சியில், சில நிறுவனங்கள், சில சேவைகள் மிக விரைவாக முன்னேற போகின்றது. முன்னர் பிரபலமாயிருந்த நிறுவனங்கள், சேவைகள் பின்தங்க போகின்றது எனவேதான் சந்தை பழைய மாதிரி வந்தாலும் நமது பங்குகள் மற்றும் பண்டுகள் பழைய மாதிரி வராததற்கு இதுவே காரணம்.

சந்தையின் இந்த  உச்சியில்,  பொருளாதார மந்த்த்தில் நாம் என்ன செய்யலாம். இந்த புதிய சூழலுக்கு ஏற்ப பங்குகள் மற்றும் பங்கு சாரந்த பண்டுகளை வைத்துக்கொள்ளலாம். இனி லாபம் அதிகம் வரப்போவதில்லை என்று தோன்றும்  பங்குகள் மற்றும் பங்கு சாரந்த பண்டுகளை இதுவரை வந்த லாபத்தை நிரந்தரமாக்கி கொள்ள அந்த பங்குகள் மற்றும் பங்கு சாரந்த பண்டுகளை  விற்று விடுவது நல்லது என்று தோன்றுகிறது. பங்குகள் மற்றும் பங்கு சாரந்த பண்டுகளை வாங்குவது போலவே விற்பதும் ஒரு முக்கியமான வேலை. இது விற்பதற்கான நேரம் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த புதிய பங்கு முதலீட்டாளர்கள் அதிகம். இவர்கள் தங்களது பங்குகளில் லாபம் இருக்கும் தருணத்தில் அந்த லாபத்தை பங்குகளை விற்று நிரந்தரமாக்கி கொள்வது நல்லது என்றே தோன்றுகின்றது. அதுபோல் பங்கு சாரந்த பண்டு முதலீட்டாளர்கள் தங்களுக்கு தற்சமயம் பணம் தேவையில்லை என்று தோன்றும் பட்சத்தில் பண்டுகளை தொடர்ந்து வரலாம். கிடைத்த லாபம் போதும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஓரளவு லாபத்தில் உள்ள பண்டுகளை விற்பதன்  மூலம் லாபத்தை நிரந்தரமாக்கி கொள்வது நல்லது என்று தோன்றுகிறது

குறுகிய காலத்தில் வாங்கிய பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த பண்டுகளை விற்கும்போது கிடைக்கும் ஆதாயத்திற்கு, ஆதாய வரி கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முடிவாக, முதலில் கூறியது போல் சந்தையை கணிப்பது கடினமே. இது ஒரு பார்வை. தெளிவாக சிந்தித்து முடிவு செய்யுங்கள்

முந்திய பதிவுகள் 

எஸ் ஐ பி 

முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் 


பண்டுகளில்  ரிஸ்க் அளவீடு செய்வது எப்படி

விகடனில் படிக்க - என்து வலைபூவில் படிக்க

கோவிட்  19 காலத்தில், அணைவரும் அதிகம் உணர்கின்றோம், வாழ்க்கையின் நிச்சியமற்ற தன்மை பற்றி. இந்த தருணத்தில், முதலீடுகளில், நாமினேஷன் அவசியம்தானே? மேலே படியுங்கள்  நாமினேஷன் விபரம் அறிய 

விகடனில் படிக்க - என்து வலைபூவில் படிக்க

ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

நிதி பராமாரிப்பில் நிதியில்லா விபர பராமாரிப்பு


No comments:

Post a Comment