Sunday, 3 October 2021

கே ஒய் சி (KYC) என்பது வரமா சாபமா

 

03-10-2021

இந்த கட்டுரை நாணயம் விகடன் தளத்தில் படிக்க தொடவும் 

சேவை நிறுவனங்களும் அரசாங்கமும், வரம் என்ற பார்வையில் பார்க்கின்றது. வாடிக்கையாளர்கள், சாபம் என்ற வகையில் நிந்திக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில், அதிகம் பேசப்படுவது வரி தாக்கல் செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள். இது தற்போதைய ஒன்று. ஆனால் காலங்காலமாக கே ஒய் சி செய்வதில் உள்ள சிக்கல்களை மறந்துவிட முடியுமா. அப்படி என்ன கே ஓய் சி செய்வதில் சிக்கல் என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்

கே ஒய் சி - KYC

கே ஒய் சி என்பது know your customer என்பதின் சுருக்கம். அப்படி என்றால் என்ன? அதாவது சேவை நிறுவனங்கள், தமது வாடிக்கையாளர்கள் எந்த இடத்தில் வசிக்கிறார்கள், அவர்களிடம் போதிய, சரியான விபரங்கள் இருக்கின்றதா, நாம் அவர்களுக்கு சேவை வழங்கலாமா, அவர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, அது  சட்டப்படி ஈட்டப்பட்ட பணமா என்பது போன்ற விவரங்களை சேகரிப்பது தான்

அடிப்படை கே ஒய் சி  விவரங்கள், பெயர், முகவரி, புகைபடம் மற்றும் பான் நம்பர் (PAN Number)  அடங்கியதாகும்  அடிஷனல் கே ஓய் சி  ( Additional KYC) என்பது அவர்களது மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பணம் வருவதற்கான வழிகள்,  அவர்களது அன்றைய பணமதிப்பு போன்றவையாகும்

கே ஒய் சி - காரணங்கள்

கே ஒய் சி  ஐ அரசாங்கம் கட்டாயப்படுத்துவத்தின் நோக்கம், அரசாங்கத்திற்கு புறம்பான பண பரிவர்த்தனைகளை (PMLA - Prevention of Money Laundering Act). தடை செய்வதும், லஞ்ச லாவண்யங்களை  குறைக்கவும், வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை நன்கு அறிந்து கொள்ளவும்,  கே ஒய் சி தேவை என்று அரசாங்கம் நம்புகின்றது.

 கே ஒய் சி எங்கெல்லாம் தேவை

 எல்லா வகையான நிதி நிறுவன சேவைகளுக்கும்  இந்த கே ஒய் சி அவசியம் உதாரணமாக

  1. பங்கு வர்த்தகம்   (Stock trading)
  2. பண்டு முதலீடு ( Mutual fund investments)
  3. காப்பீடு ( Insurance )
  4. வங்கி சேவைகள் ( Banking) 
  5. வங்கி அல்லாத நிதி நிறுவன சேவைகள் (Non Banking financial institutions)
  6. தற்போது சமூகத்தில், புழக்கத்திலுள்ள மொபைல் பண பரிமாற்ற சேவைகள். (உ -ம் ) பேடிஎம்  (pay ™ , google.pay) போன்ற பணம் பரிவர்த்தனை சேவைகள்.

 

கே ஒய் சி யும் வாடிக்கையாளர்கள் சிரமங்களும்

ஏன் இந்தக் கே ஒய் சி சாபமாக, கெட்ட கனவாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

கடந்த பத்து வருடங்களில் பலமுறை மாற்றப்பட்டு, புதுப்புது வடிவங்களில் அவதாரம் எடுப்பதாக இந்த கே ஒய் சி  உள்ளது

கே ஓய் சி என்பது பெரும்பாலும் மாறாத நிலையான தகவலாகவே உள்ளது. இருந்தபோதிலும் மேற்கண்ட ஆறு சேவை நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெறுவதற்கு, நாம் ஒவ்வொரு முறையும் கே ஒய் சி செய்ய வேண்டியுள்ளது. ஒரே நிறுவனத்தில் பல சேவைகளை பெற்றாலும் பலமுறை கே ஒய் சி செய்யவேண்டியுள்ளது. இதுவே வாடிக்கையாளர்களின் சாபமாக, கெட்ட  கனவாகவும் இருப்பதற்கு முதலும், முக்கிய காரணமும் ஆகும்.

எல்லா வகையான நிதி சேவைகளையும் பெறுவதற்கு ஒரு முறை கே ஓய் சி செய்தால் போதுமானது என்று அரசாங்கம் அவ்வப்போது சொல்லி  வந்தாலும், ஒவ்வொரு நிறுவனங்களும் தனித்தனியாக கே ஒய் சி பெற்றுக் கொண்டுதான் உள்ளது. கே ஒய் சி பெறுவது, இதுவரை சரிவர எளிதாக நடைமுறைப்படுத்த பட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை.

கே ஆர் ஏ ( KYC Registration Agency)

கே ஒய் சி தகவல்களை சேகரித்து பராமரிக்கும் நிறுவனங்கள் கே ஆர் ஏ எனப்படுகின்றன.  இவற்றில் முக்கியமானவை

  1. கேம்ஸ் (Cams)
  2. கே பின் டெக் (K fintech)
  3. டாட் எக்ஸ்  (Dotex) 
  4. சி வி எல்  (CVL, a division of Central Depository Services (India) Ltd)
  5. என் டி  எம் எல் (NDML, a subsidiary of National Securities Depository Ltd)

சி கே ஓய் சி (Centra KYC - CERSAI.org)

இந்த கே ஆர் ஏ நிறுவனங்கள் சேகரிக்கும் எல்லா தகவல்களையும் திரட்டி அதை ஒன்றாக்கி, அதிலுள்ள தகவல்களை சரிபார்த்து, ஒருவருக்கு,  ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் இருந்தால், அவற்றை நீக்கி நன்கு பராமரித்த பின்,  சுத்தமான தகவல்களை, தேவைப்படும் நிறுவனங்களுக்கு அளிக்க சி கே ஓய் சி என்ற பொது முறை சார்ந்த  அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுவான சி கே ஓய் சி மையங்களுக்கு கே ஒய் சி தகவல்  சென்ற பின் அங்கு பதியப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பின் கே ஐ என் (KIN - kyc identification number) என்ற நம்பர் தரப்படுகின்றது. இந்த நம்பரை நாம் தேவைப்படும் நிதி நிறுவனங்களுக்குக் கொடுத்து திரும்பவும் கே ஒய் சி செய்வதை தவிர்க்கலாம் என்பது சி கே ஓய் சி இன் சாராம்சம். இதுபோன்று புதிய சி கே ஓய் சி அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தாலும் தனித்தனியாக கே ஒய் சி கேட்பது  நின்ற பாடில்லை. காரணம், சி கே ஓய் சி எனப்படும் புதிய நடைமுறை, மற்றும் கே ஐ என் (KIN) எனப்படும்  நம்பர் முழுவதுமாக புரிபடவும் இல்லை, எங்கும் அறியப்படவும் இல்லை.

ரி  கே ஓய் சி  (Re KYC)

சி கே ஓய் சி, மற்றும் கே ஐ என் (KIN) இருந்தாலும் ரி  கே ஓய்  சி. தேவை என்று சொல்லப்படுகின்றது. நாம் முன்னரே கூறினோம்  கே ஒய் சி பெரும்பாலும் மாறுவதில்லை  என்று, காரணம்,  முகவரி மற்றும் வாடிக்கையாளர் நிதி நிலைமை போன்றவை மாறிக் கொண்டுதான் உள்ளது. எனவே இந்த மாறுகின்ற விவரங்களை சரியாக படம்பிடிக்க ரி  கே ஓய் சி  செய்யப்படுகின்றது. அதாவது திரும்பவும்   கே ஒய் சிசெய்வதே ரி  கே ஓய் சி எனப்படுகின்றது.

இந்த ரி  கே ஓய் சி இடைவெளி  காலம், நிறுவனத்துக்கு நிறுவனம்  மாறுகின்றது. காரணம் வங்கிகளை  நிர்வகிப்பது ஆர்பிஐ (RBI)  பண்டுகளை நிர்வகிப்பது செபி ( SEBI). புது புது விதிகள். எனவே ரி  கே ஓய் சி காலம் ஒரேமாதிரியாக இருப்பதில்லை, வெவ்வேறாக  உள்ளது.

வங்கிகளில் அதிக ரிஸ்க் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 2 வருடத்திற்கு ஒரு முறையும் குறைந்த ரிஸ்க் உள்ள வாடிக்கையாளருக்கு பத்து வருடத்திற்கு ஒரு முறையும் ரி  கே ஓய் சி செய்ய ஆர்பிஐ வலியுறுத்துகின்றது

ஐபிவி ( in person verification IPV)

முன்னர் கே ஒய் சி செய்யும்பொழுது வாடிக்கையாளர்களை நேரடியாக பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. புகைப்படம்  மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. தற்போது கே ஓய் சி செய்யப்படும் பொழுது வாடிக்கையாளர், நேரிலோ, ஆன்லைன் மூலமாகவோ அவசியம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதற்கு ஐபிவி ( in person verification - IPV)  என்று பெயர். எனவே முன்னர் சாதாரண முறையில் கே ஒய் சி  செய்து இருந்தால் இந்த  ஐபிவி முறையில் திரும்பவும் கே ஒய் சி செய்யவேண்டும் என்ற செபி கட்டாயப்படுத்துகிறது.

ஈ கே ஓய் சி  - eKYC - Electronic KYC

இந்த கொரோனா காலத்தில், வாடிக்கையாளரை நேரில் பார்ப்பது என்பது சற்று சிரமமாக இருக்கும் என்பதால் இந்த ஐபிவி முன்னர் மாதிரி செய்ய முடிவதில்லை. எனவே தற்போது ஈ கே ஓய் சி என்ற வகை அறிமுகமாகியுள்ளது.  இதன் மூலம் ஒருவர் தனது ஆதார் நம்பரையும், போன் நம்பரை வைத்து மொபைல் போனில் வரும் ஓடிபி (OTP) மூலம் ஈ கே ஓய் சி செய்ய முடியும்

இந்த வீடியோ மூலம் ஈ கே ஓய் சி  செய்வது, தளத்திற்கு தளம் மாறுபடுகின்றது. இதிலும் பல மாதங்களாக, பல மாறுதல்கள் செய்யப்பட்டு கொண்டே வருகின்றது, இன்னும் முற்றிலுமாக எளிதாக்கப்படவில்லை என்பதே பலரது கருத்து

அறியாமையா? நடைமுறை சிக்கலா?

நாம் இப்போது ஒரு நடைமுறை உதாரணத்தை பார்ப்போம்

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, கணவர் பெயர் முதலிடம், மனைவி பெயர் இரண்டாவதாக ஒரு வங்கியில் புதிதாக டீமேட் ( Demat) கணக்கு தொடங்குகிறார்கள். தேவையான கே ஒய் சி தகவலை கொடுத்து விடுகிறார்கள். எல்லாம் சரி. இன்னும் இரண்டு மாதம் கழித்து அதே தம்பதியினர் மனைவி பெயர் முதலாவதாகவும், கணவர் பெயர் இரண்டாவதாக, டிமேட் அக்கவுண்ட் திறக்க விரும்புகிறார்கள். தற்போது அதே வங்கி, திரும்பவும் அவர்களிடம் கே ஒய் சி  கேட்கின்றது இதற்கு காரணம் வங்கி ஊழியர்களின் அறியாமையா? அல்லது வங்கியில் உள்ள நடைமுறைச் சிக்கல்களா?  என்று தெரியவில்லை.  இது சற்றும் மாறவில்லை என்பது நிதர்சனம்.

கே ஒய் சி என்பது தவிர்க்க முடியாத எமன். அது இல்லாமல் எந்த பண பரிமாற்றங்கள் செய்ய இயலாது எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் அரசாங்கமும் இதை மேலும் எளிமையாக்கி சிறந்த ஒருமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்கள் அதை முழுவதுமாக கடைபிடிக்குமாறு பார்த்துக்கொண்டால் அனைவருக்கும் நலமே.


இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும்

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3

நாமினேஷன் அவசியம்

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

முதலீடுகளில் எச்சரிக்கை

எஸ் ஐ பி

 

Sunday, 19 September 2021

KYC - Is it a Boon? or a Pain?

 

The financial service companies and the government look at it as a boon, whereas customers consider this a curse and as an unavoidable pain.

 Over the past few weeks, the talk of the town on social media has been the practical difficulties about filing taxes in the so-called new generation tax portal. This is a recent problem, and we shouldn’t easily forget the problems of doing KYC for ages. Let us look at the difficulty of doing KYC in detail. 

KYC

 KYC is an acronym for Know Your Customer. i.e., service companies should mandatorily collect information from their customers like where they live, their PAN number, latest photo, their residential status etc. These are usually called basic KYC info. The additional KYC info includes their contact details like mail id, mobile number, source of income, net worth etc.

Compelling Reasons for KYC

The most compelling reason for KYC to be mandatory is PMLA – Prevention of Money Laundering Act. KYC is insisted by government to avoid illegal transaction of any kind. They want to understand if individuals and corporates have paid taxes and if all their earned income has been accounted. Service industries wish to know more about their customers before they serve them.

KYC Requirements

KYC is essential for all types of financial services, for example:

  1. Stock Trading 
  2. Mutual Fund Investment 
  3. Insurance
  4. Banking Services
  5. Non-Banking Financial Services (NBFC)
  6. Money transfer services. Payment’s bank (Pay™, Google Pay).

KYC Perennial issues

Let's see why KYC is seen by customers as a curse and as a bad dream.

KYC process has been changed several times in the last decade and has often been reincarnated into “new avatars”.

KYC is often static information. However, to get the service from the above six service providers, we must do KYC every time with every service provider. Despite receiving many services from a service provider, KYC documents need to be provided again to the same service provider for a new service. This is the first and foremost reason as to why it is a curse and a bad dream for customers.

The Government has periodically said that it is enough to do KYC one time to get all kinds of financial services from different service providers, but it is only in paper and not in reality.

KRA - KYC Registering Agency

The companies that collect and maintain KYC information are called KRA. The popular KRA ‘s is listed here:

  1. Cams – Mutual fund RTA doing KRA
  2. KfinTech – Mutual fund RTA doing KRA
  3. Dotex (Demat related service)
  4. CVL (Division of Central Depository Services (India) Ltd)
  5. NDML (Subsidiary of National Securities Depository Ltd)

CKYC (CERSAI.org)

These KRA companies collect all the necessary KYC information. Once they collect the relevant information, it is passed on to the CKYC. Here this information is scrubbed and maintained, so that each service provider can pull this data whenever required. 

Once KYC information collected by KRA and verified by CKYC, a unique KIN is given by CKYC (KIN - KYC identification number). The essence of the CKYC’s KIN is that we can give this number to any financial institution requiring KYC data from customer. By this method we can avoid repeating KYC every time. Even though this is approved and recommended KYC process currently, so many institutions ignore KIN and insist the customers to provide new set of KYC documents. This new CKYC process is not percolated into the industry very well.

Re KYC

Sometimes even though KYC was done and CKYC’s KIN is available, institution still insists to do KYC again. This is called Re KYC. Earlier we had mentioned that KYC data is static. There are some cases where it changes. For example, change in address, customers financial position, etc. Therefore, to capture these changing details correctly, there is need for re-doing KYC and it is called Re KYC.

Period between KYC and Re KYC is different for different companies. That's because service providers are controlled by different agencies. RBI controls the banks and SEBI controls the trading and mutual funds. The rules laid down by these controlling agencies are not uniform.

RBI urges banks to do Re KYC once in two years for high-risk customers and once in ten years for low-risk customers.

IPV - In Person Verification

Earlier it was not necessary to physically see customers while doing KYC. It was enough to only have a photo. Now during KYC, the customer should be in person or on live video. This is called IPV. SEBI insists on repeating KYC in this IPV mode if it has been done in a normal KYC manner before.

eKYC – Electronic KYC

During this corona period, since meeting customer in person is not safe and difficult to execute, so this IPV can’t be done like before. So now, this new process called eKYC has been introduced. This enables customers to get eKYC with their aadhaar number and mobile OTP.

Even though it looks simple, getting eKYC is not that easy. Every portal has their own set of procedure. It is continually changing and there is no standardization in place.

Ignorance? Practical problem?

Let us now look at a practical example. Together, the husband and wife start a new    account for trading in shares with a popular bank. The so called 3 in 1 account (Savings/Demat /Trading). Account order of names is husband’s name first and wife’s name second. They have provided all necessary KYC information. Two months later, the same couple wish to open similar account, but this time, order of names is wife’s name first and the husband’s name second. Now the same bank is asking them again to submit all KYC documents. This is in contrary to the CKYC process. Is this because of the ignorance of the bank staff?  Or are there any practical process difficulties in the bank? We don’t know. Fact is that nothing has changed with respect to KYC documents collection.

KYC is an indispensable evil. Without it, no money transfers or financial transactions can be made. Hence the service providers and the government must simplify this KYC further and ensure it is followed by all concerned. Customers are waiting for dawn in this KYC process.

Saturday, 28 August 2021

தொடரும் நாமினேஷன்

இந்த கட்டுரை விகடனில் படிக்க தொடவும் 

சக்ஸ்ஸிவ் நாமினேஷன் - தொடரும் நாமினேஷன்


முதலீடு மற்றும் காப்பீடு களில் நாமினேஷன் எவ்வளவு அவசியம் என்று பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.  நாமினேஷன் செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றால் சில சமயங்களில் அது தான் இல்லை பொதுவாகவே கணவன் மனைவியையும்,  மனைவி கணவனையும் நாமினேஷன் செய்வது  என்பது வழக்கத்தில் உள்ளது.  இந்த கோவிட் காலத்தில் இருவரும் இறந்துவிட நேரும் போது அவர்கள் செய்த முதலீடு அல்லது காப்பீடு எவ்வாறு மற்றவர்களுக்கு மாறுகின்றது என்பது சற்று சிக்கலான செயலாகிறது. இதை தவிர்க்க வழி உள்ளது அதை இங்கு பார்க்கலாம்


நாமினேசன் என்பது ஒரு முதலீடு  அல்லது காப்பீடு செய்யும் பொழுது முதலீட்டாளர் அல்லது காப்பீட்டாளர் இறந்தபோது, அதில் கிடைக்கும் பணம் அந்த நாமினிக்கு செல்ல வேண்டும். இது பொதுவான ஒன்று. இந்த நாமினேஷன் இல் மூன்று வகைகள் உண்டு


  1. தனி நபர் (சிங்கிள்) நாமினேஷன்


முதல் வகை, தனி நபர் ( சிங்கிள்) நாமினேஷன் என்பதாகும் இதில் ஒருவர் இறந்து விட்டால் முழுப் பணமும் அந்த நாமினி இடம் அளிக்கப்படும்


  1. ஒருவருக்கு மேற்பட்ட கூட்டு  நாமினேஷன் ( Joint or Multiple Nomination)


இரண்டாவது வகை,  இது ஜாயிண்ட் அல்லது மல்டிபிள் நாமினேஷன் எனப்படும் அதிகபட்சம் மூன்று பேர் நாமினியாக பதிவு செய்ய முடியும் உதாரணமாக அந்த மூவரையும் ஏ, பி, சி என்று வைத்துக்கொள்வோம் முதலீடு அல்லது காப்பீடு செய்யும் பொழுது ஏ விற்கு  30 சதவீதமும் பிவிற்கு  40% மற்றும் சி விற்கு 30% என்று முதலில் பதிவு  செய்தால், பின்னர் அதே சதவிகிதத்தில் அவர்களிடம் பணம் கொடுக்கப்படும்


  1. சக்ஸ்ஸிவ் நாமினேஷன் - தொடரும் நாமினேஷன் ( successive Nomination)


மூன்றாவது வகை இது புது மாதிரியானது. இதற்கு சக்சஸ் நாமினேஷன் அல்லது அல்டர்நெட் நாமினேஷன்( Alternative Nomination)  என்று பெயர் இதில் நாம் முதலீட்டாளர் அல்லது காப்பீட்டாளர் இறந்து விட்டால் முதலில் ஏ விற்கு  100 சதவீதமும் செல்ல வேண்டும் என்று கூறலாம். ஏதாவது ஒரு காரணத்தால்  எ  இறந்துவிட்டாலோ  இப்பபொழுது பணம் பி இடம் 100 சதவீதமும் செல்ல வேண்டும்.  எ , பி  இருவரும் இல்லாத பட்சத்தில் சி இடம் அந்த 100% செல்லும்.  இது மாதிரியான நாமினேஷன்க்கு சக்சஸ் நாமினேஷன் என்று பெயர்





இரண்டாவது வகைக்கும், மூன்றாவது வரைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, இரண்டாவது வகையில் மூன்று பேர் நாமினேஷன் என்றால் மூவருக்கும் மொத்த பணமும் அவரவர் விகிதாசாரத்தில்  போய் சேருகிறது ஆனால் அதே சமயம் மூன்றாவது வகையில், யாராவது  ஒருவருக்கு மொத்த பணம் போய் சேரும். அந்த ஒருவர் யார் என்பது யார் முதலில் உயிருடன் இருக்கிறார், மற்றும் வரிசையில் எந்த இடத்தில இருக்கிறார்  என்ற வகையில் அமைகிறது




இந்த கோவிட் / பெருந்தொற்று (பனெடெமிக் ) காலங்களில் சக்சஸ் நாமினேஷன் செய்வது  மிகவும் உசிதம். இது தற்சமயம் இன்சூரன்ஸ் அல்லது காப்பீடு செய்யப்படும்போது மட்டுமே உதவுகின்றது. காப்பீடு  எல்ஐசி மூலம் செய்யும் போது  இந்த மாதிரியான சக்சஸ் நாமினேஷன் பெற படிவம் 5194 rev.  உபயோகித்து சக்ஸ்ஸிவ் நாமினேஷன் பதிவு செய்யலாம்


சக்ஸ்ஸிவ் நாமினேஷன் பதிவு செய்வது காப்பீடு எடுக்கும் போது செய்யலாம். அதை தவறவிட்டவர்கள், காப்பீடு நடைமுறையில் இருக்கும்போதும் செய்யலாம். 


இளம் வயதில் காப்பீடு செய்யும் போது  அவர்களது தந்தையையோ தாயையோ நாமினேஷன் செய்யும்பொழுது காப்பீடு செய்தவர் இறப்பதற்கு முன்னே நாமினேஷன் செய்யப்பட்டவர் இறந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.  இது போன்ற தருணங்களில் இந்த சக்சஸ் நாமினேஷன் என்பது மிகவும் உபயோகமாக இருக்கும்


வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நாமினேஷன் 


தற்சமயம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அல்லது வங்கிகளில் இது போன்று மூன்றாவது வகையான சக்சஸ் நாமினேஷன் கிடையாது.


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது வங்கிகளில் முதலீடு செய்யும் போது தனி நபர் நாமினேஷன் தவிர்த்து ,இரண்டாவது வகையான ஒன்றுக்கு மேற்பட்ட நபர் நாமினேஷன்  செய்வதன் மூலம் நாம் ஓரளவு பணம் சரியான இடத்திற்கு போய்ச் சேருமாறு பார்த்துக் கொள்ள முடியும்


சோலோ அக்கௌன்ட் ஆக  இல்லாமல் இ ஆர் எஸ் அக்கௌன்ட் ( E or S ) ஆக இருந்தாலும், நாமினேஷன் செய்வது நல்லதே 


நாமினேஷன் செய்யப்பட்டவர் இறந்து போகும்போது கையோடு நாமினேஷனை மாற்றி விடுவதும் நல்லதே


இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

  எஸ் ஐ பி 


Monday, 23 August 2021

Successive Nomination


Successive Nomination - Alternate Nomination

 It is often well known how necessary nominations are in investment and insurance. Does nominating always guarantee a smooth future disbursal? The answer may be is a no. Even if the documentation is done, sometimes it is very difficult to get the disbursal after an unfortunate event. It is very common that the husband nominates wife, and in turn wife nominates the husband. In current covid period, if both passed away in quick succession, getting the disbursal by their kins is a mammoth task. There is a way to avoid these complications. Let us understand that better.

 When an investor or insurer dies after making an investment or after purchasing an insurance, the disbursal money available must go to their nominee. This is something basic about nomination and very common knowledge. There are three types of nominations.

 

1.   Individual (Single) Nomination

 

The first type is individual (single) nomination in which if one dies, the entire money is given to the single/sole nominee.

 

  1. More than one or joint nomination (Multiple Nominations)

 

The second type, which is joint or multiple nomination, can be registered with more than one nominee. The maximum allowed nominees are three different people. For example, let us assume the three nominees are A, B and C. 30% for A, another 30% for B and 40% for C. This nomination has been registered by the investor/insurer. In the case of disbursal, total outstanding is disbursed to all the three nominees in the given proportion.

 

  1. Successive Nomination   

 

This third type is a new variation. This is called successive nomination or alternate nomination. In this case, if an insurer dies, disbursal first goes to A. All 100% to A. If A dies for some reason, then the 100% money must now go to B. If neither A nor B are alive, then C will get the 100% of money. Such nominations are called successive nomination.

 

The main difference between the second type and the third type is that, in the second case, three nominations mean that the entire amount of money goes to all the three in their assigned proportions, but in the case of third type, successive nomination, the total amount of money goes to one of the three, the entire 100%. That person is determined by the order and if they are alive or not.

 


Successive nomination during these covid/pandemic periods are very advisable. It helps in a smooth disbursal of amount to nominee when invested or insured person is not alive. In the case of LIC, to avail successive nomination, insurer can fill and apply by using Form 5194 rev. This can be done at the proposal stage or also at the running stage of the policy.

 

In the case of young insurers, their father or mother is the one who is usually nominated. The chances of both the insured dying before the insurer is high. In such instances, this successive nomination is very useful.

 

Nomination in Bank and Mutual Fund Investments

 At present, there is no third kind of successive nomination in mutual fund investments or bank deposits.

 It is advisable to go for multiple nominations when investing in mutual fund investments or banks.

 It is better to nominate even if it is an E or S account.

 It is also advisable to change the nomination manually when the nominated person passes away.

Sunday, 9 May 2021

முதலீட்டாளர்கள் நலனில் செபி

 

ஃபண்ட் மேனேஜர்களுக்கு செபியின் புதிய கட்டளைகள்! முதலீட்டாளர்களுக்கு சாதகமா..?

பங்குச்சந்தைகளில் நிறுவனம் சார்ந்தவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட தகவல்களை கொண்டு பங்கு சந்தையில் லாபம் பார்ப்பது, பங்குச்சந்தைகளில் விளையாடுவது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகும். இது இனசைடர் டிரேடிங் (Insider Trading) எனப்படும்.

 

சமீபத்தில் நடந்தேறிய பிராங்கிளின் ஆறு கடன் பண்டுகள் மூடு விழாவிற்கு பிறகு, பங்குச்சந்தைகளில் நடைபெறும் இன்சைடர் டிரேடிங் போன்று பண்டுகளிலும் நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் சில பங்கு மேலாளர்கள்/ பங்கு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாபம் நஷ்டம் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை, எங்களுக்கு  நல்ல பெரிய சம்பளம் கிடைத்தால் போதும் என்ற ரீதியில் பண்டுகள்  நடத்தபடுவதாக ஆங்காங்கே பார்க்கின்றோம். இது முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் செயல்கள் அல்ல.

 

பண்டு மேலாளர்கள் தாங்கள் நிர்வகிக்கும் ஃபண்டுகளில் நம்பிக்கை வைக்கிறார்களா? ஆம் எனில், தங்களது சொந்த பணத்தை அதில் முதலீடு செய்கிறார்களா? என்ற விபரங்கள் அவ்வப்போது மீடியாவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில பண்டு நிறுவனங்கள், இதை கட்டயாமாக்கி பின்பற்றி வருகின்றது. மற்ற பல நிறுவனங்கள் இதை கண்டு கொள்வதில்லை. இது மிக சிறந்த திட்டம் என்பதெல்லாம் ஊருக்குதான் உபதேசம்.  இன்று வரை இதற்கான சட்டம் ஏதும் இல்லை.  இதை மாற்றி இனி வரும் காலங்களில் வரும் ஜூலை 1 ம் தேதி முதல்   பின்பற்ற வேண்டிய விதிகள், மற்றும் புதிய நடைமுறைகள் செபி அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றின் சாரத்தை  பார்க்கலாம் வாருங்கள்

 

செபி தரும் புதிய நடைமுறைகள் - ஸ்கின் இன் த கேம் ( Skin in the game)

 

1.      பண்டு மேலாளர்கள், பண்டு நிறுவன மேலாளர்கள் மற்றும் பண்டை நிர்வகிப்பதில் சம்பந்தப்பட்டவர்கள், அனைவரும் தங்கள் சம்பளத்தில் இருந்து 20% கட்டாயமாக தாங்கள் நிர்வகிக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

2.      பண்டு மேலாளர் ஒரு திட்டத்திற்கு மேலாக இரண்டு மூன்று திட்டங்களை நிர்வகிக்கும் சமயங்களில் அவர் நிர்வகிக்கும் மொத்த பண்டு தொகையின் விகிதாச்சாரத்தில் இந்த 20% முதலீடும் அவர் நிர்வகிக்கும் எல்லா பண்டுகளிலும் அவரது சொந்த முதலீடு  இருக்க வேண்டும்.

3.      இந்த 20% ஒதுக்கீட்டு முதலீடு மூன்று ஆண்டுகள் கட்டாயம் அந்த பண்டுகளில் இருக்க வேண்டும். அதற்கு முன் அவர்களால் அந்த பணத்தை எடுக்க இயலாது. அவர்கள் நிறுவனங்கள் மாறினாலும். இந்த மூன்று ஆண்டுகள் லாக் (Lock in Period) அவசியம்.

4.      பண்டு மேலாளர்கள் சம்பளத்தில் அவர்கள் வரி கட்டிய பின் வரும் நிகர சம்பளதில் இருந்து 20% இந்த முறையில் முதலீடு செய்யப்படும்.

5.      இன்டெக்ஸ் பண்ட் (Index funds) இடிஎஃப் (ETF), ஒவர் நைட் பண்டுகள்(overnight funds) மற்றும் குளோஸ் எண்டெட் பண்டுகளுக்கு ( closed ended funds)   இந்த நடைமுறை பொருந்தாது.

6.      பண்டு மேலாளர் மீது குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்பட்டால் இந்த 20% முதலீடு அவரிடம் கொடுக்கப்பட மாட்டாது.

 

வேலையில் லாபத்திற்கு தக்கவாறு அல்லது வேலையில் சிறந்த வேலைக்கு என்று சம்பளம் கொடுப்பது புதிய முறையல்ல (performance-based pay). இந்த முறையை பண்டு மேலாளர்களுக்கு கட்டாயமாக்கி இருப்பது நல்ல தொடக்கம். இந்த முறைக்கு ஆங்கிலத்தில் ஸ்கின் இன் த கேம் என்று கூறுவார்கள்.

 

சாதகங்கள்

 

இந்த முறையில் ஸ்கின் இன் த கேம் என்ற வகையில் நடைமுறைப்படுத்தும் போது, இது முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகின்றது. அதே நேரத்தில் நிச்சயமாக லாபம் அதிகரிக்கும் என்று கூறுவதற்கில்லை. பண்டு மேலாளர் மிகுந்த கவனத்துடனும் ஆர்வத்துடனும் செயல்படுவதால் நல்லமுறையில் பண்டு நடைபெறும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

 

பாதகங்கள்

 

இந்த முறையில் முதலீட்டாளர்களுக்கு எந்த பாதகமும் இல்லை. அதே சமயத்தில் இந்த புதிய முறையை பண்டு மேலாளர்களும் பண்டு நிறுவன அதிபர்களும் வரவேற்கவில்லை. காரணம் அவர்கள் சில கஷ்ட நஷ்டங்களை எழுப்புகிறார்கள்.

1.      ஒரு கடன் திட்ட மேலாளர் பணம் முழுவதும் அவரது கடன் திட்டஙகளில் முதலீடு செய்யபடுகின்றது. அவரது தனிபட்ட விருப்பம் ஈக்விட்டி திட்டமாக இருக்கலாம்.

2.      பண்டு நிறுவன மேலாளரின் (CEO/CIO) முதலீடு எல்லாம் 20 / 30 திட்டங்களுக்கு மேலாக பிரிந்து போகின்றது. இதனால் அவரது முதலீட்டில் அளவுக்கு அதிகமாக திட்டங்கள் இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் குறைகின்றது.

3.      அவர்களுக்கு வீட்டிற்கு எடுத்து செல்லும் சம்பளம் குறைகின்றது. இதனால் அவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கு சில சமயங்களில் பணம் பற்றாமல் இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வீட்டு கடன் போன்ற பெரிய தொகையை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

4.      அவர்கள் நடத்தும் பண்டின் தன்மைக்கும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளின் தன்மைக்கும் வேறுபாடு ஏற்படும்போது இந்த நடைமுறையை பின்பற்றுவது அவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம் - உதராணம். ஹபிரிட் பண்டு மேலாளருக்கு லார்ஜ கேப் பண்டுகளில் விருப்பம் இருக்கலாம்.

 

முடிவாக

 

இந்த புதிய நடைமுறை முதலீட்டாளர்களுக்கு நன்மையே பயக்கும். பண்டு மேலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பண்டிற்கு வரும் நஷ்டங்களை தவிர்பார்கள் என்று நம்பப்படுகின்றது. இது வரவேற்கத்தக்க அம்சமே. செபிக்கு நன்றி சொல்வோம்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3

நாமினேஷன் அவசியம்

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

முதலீடுகளில் எச்சரிக்கை

எஸ் ஐ பி