ஃபண்ட் மேனேஜர்களுக்கு செபியின் புதிய கட்டளைகள்! முதலீட்டாளர்களுக்கு சாதகமா..?
பங்குச்சந்தைகளில் நிறுவனம்
சார்ந்தவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட தகவல்களை கொண்டு பங்கு சந்தையில் லாபம்
பார்ப்பது, பங்குச்சந்தைகளில் விளையாடுவது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகும். இது இனசைடர் டிரேடிங் (Insider Trading) எனப்படும்.
சமீபத்தில்
நடந்தேறிய பிராங்கிளின் ஆறு கடன் பண்டுகள் மூடு விழாவிற்கு பிறகு, பங்குச்சந்தைகளில் நடைபெறும் இன்சைடர்
டிரேடிங் போன்று பண்டுகளிலும் நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் சில பங்கு
மேலாளர்கள்/ பங்கு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு
கிடைக்கும் லாபம் நஷ்டம்
எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை, எங்களுக்கு
நல்ல பெரிய சம்பளம் கிடைத்தால் போதும் என்ற ரீதியில் பண்டுகள் நடத்தபடுவதாக ஆங்காங்கே பார்க்கின்றோம்.
இது
முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் செயல்கள் அல்ல.
பண்டு மேலாளர்கள் தாங்கள்
நிர்வகிக்கும் ஃபண்டுகளில் நம்பிக்கை வைக்கிறார்களா? ஆம் எனில்,
தங்களது சொந்த பணத்தை அதில் முதலீடு செய்கிறார்களா? என்ற விபரங்கள் அவ்வப்போது மீடியாவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு சில பண்டு நிறுவனங்கள், இதை கட்டயாமாக்கி பின்பற்றி வருகின்றது. மற்ற பல
நிறுவனங்கள் இதை கண்டு கொள்வதில்லை. இது மிக சிறந்த திட்டம் என்பதெல்லாம் ஊருக்குதான் உபதேசம். இன்று வரை இதற்கான சட்டம் ஏதும்
இல்லை. இதை மாற்றி இனி வரும் காலங்களில் வரும் ஜூலை 1 ம் தேதி
முதல் பின்பற்ற வேண்டிய விதிகள், மற்றும் புதிய நடைமுறைகள் செபி அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றின் சாரத்தை பார்க்கலாம் வாருங்கள்
செபி தரும் புதிய நடைமுறைகள் - ஸ்கின் இன் த கேம் ( Skin in the game)
1. பண்டு
மேலாளர்கள், பண்டு நிறுவன மேலாளர்கள் மற்றும் பண்டை நிர்வகிப்பதில்
சம்பந்தப்பட்டவர்கள், அனைவரும் தங்கள்
சம்பளத்தில் இருந்து 20% கட்டாயமாக தாங்கள் நிர்வகிக்கும் ஃபண்டுகளில் முதலீடு
செய்ய வேண்டும்.
2. பண்டு
மேலாளர் ஒரு திட்டத்திற்கு மேலாக இரண்டு மூன்று திட்டங்களை நிர்வகிக்கும் சமயங்களில்
அவர் நிர்வகிக்கும் மொத்த பண்டு தொகையின் விகிதாச்சாரத்தில்
இந்த 20% முதலீடும் அவர் நிர்வகிக்கும் எல்லா பண்டுகளிலும் அவரது சொந்த முதலீடு இருக்க வேண்டும்.
3. இந்த 20% ஒதுக்கீட்டு முதலீடு மூன்று ஆண்டுகள் கட்டாயம் அந்த
பண்டுகளில் இருக்க வேண்டும். அதற்கு முன் அவர்களால் அந்த பணத்தை எடுக்க இயலாது. அவர்கள்
நிறுவனங்கள் மாறினாலும். இந்த மூன்று ஆண்டுகள் லாக் (Lock in Period) அவசியம்.
4. பண்டு மேலாளர்கள் சம்பளத்தில் அவர்கள் வரி கட்டிய பின் வரும்
நிகர சம்பளதில் இருந்து 20% இந்த முறையில் முதலீடு செய்யப்படும்.
5. இன்டெக்ஸ் பண்ட் (Index funds) இடிஎஃப் (ETF), ஒவர் நைட் பண்டுகள்(overnight funds) மற்றும் குளோஸ் எண்டெட் பண்டுகளுக்கு ( closed ended funds) இந்த நடைமுறை பொருந்தாது.
6. பண்டு மேலாளர் மீது குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்பட்டால் இந்த
20% முதலீடு அவரிடம் கொடுக்கப்பட மாட்டாது.
வேலையில் லாபத்திற்கு
தக்கவாறு அல்லது வேலையில் சிறந்த வேலைக்கு என்று சம்பளம் கொடுப்பது
புதிய முறையல்ல (performance-based pay). இந்த முறையை பண்டு மேலாளர்களுக்கு கட்டாயமாக்கி இருப்பது நல்ல தொடக்கம். இந்த முறைக்கு ஆங்கிலத்தில் ஸ்கின் இன் த கேம் என்று கூறுவார்கள்.
சாதகங்கள்
இந்த முறையில் ஸ்கின்
இன் த கேம் என்ற வகையில் நடைமுறைப்படுத்தும் போது, இது முதலீட்டாளர்களுக்கு நன்மை
பயக்கும் என்று நம்பப்படுகின்றது. அதே நேரத்தில் நிச்சயமாக லாபம் அதிகரிக்கும் என்று
கூறுவதற்கில்லை. பண்டு மேலாளர் மிகுந்த கவனத்துடனும் ஆர்வத்துடனும் செயல்படுவதால்
நல்லமுறையில் பண்டு நடைபெறும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
பாதகங்கள்
இந்த முறையில் முதலீட்டாளர்களுக்கு
எந்த பாதகமும் இல்லை. அதே சமயத்தில் இந்த புதிய முறையை பண்டு மேலாளர்களும்
பண்டு நிறுவன அதிபர்களும் வரவேற்கவில்லை. காரணம் அவர்கள் சில கஷ்ட
நஷ்டங்களை எழுப்புகிறார்கள்.
1.
ஒரு கடன் திட்ட மேலாளர்
பணம் முழுவதும் அவரது கடன் திட்டஙகளில் முதலீடு செய்யபடுகின்றது. அவரது தனிபட்ட விருப்பம் ஈக்விட்டி திட்டமாக இருக்கலாம்.
2.
பண்டு நிறுவன மேலாளரின்
(CEO/CIO) முதலீடு எல்லாம் 20 / 30 திட்டங்களுக்கு மேலாக பிரிந்து போகின்றது. இதனால் அவரது
முதலீட்டில் அளவுக்கு அதிகமாக திட்டங்கள் இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் லாபம்
குறைகின்றது.
3.
அவர்களுக்கு வீட்டிற்கு
எடுத்து செல்லும் சம்பளம் குறைகின்றது. இதனால் அவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கு சில
சமயங்களில் பணம் பற்றாமல் இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வீட்டு கடன் போன்ற பெரிய தொகையை
செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
4.
அவர்கள் நடத்தும் பண்டின்
தன்மைக்கும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளின் தன்மைக்கும் வேறுபாடு ஏற்படும்போது
இந்த நடைமுறையை பின்பற்றுவது அவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம் - உதராணம். ஹபிரிட் பண்டு மேலாளருக்கு
லார்ஜ கேப் பண்டுகளில் விருப்பம் இருக்கலாம்.
முடிவாக
இந்த புதிய நடைமுறை முதலீட்டாளர்களுக்கு
நன்மையே பயக்கும். பண்டு மேலாளர்கள் மிகுந்த கவனத்துடன்
செயல்பட்டு பண்டிற்கு வரும் நஷ்டங்களை தவிர்பார்கள் என்று நம்பப்படுகின்றது.
இது வரவேற்கத்தக்க அம்சமே. செபிக்கு நன்றி சொல்வோம்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும்
உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும் feedback here
முந்திய கட்டுரைகளை படிக்க