இந்த கட்டுரை விகடனில் படிக்க தொடவும்
சக்ஸ்ஸிவ் நாமினேஷன் - தொடரும் நாமினேஷன்
முதலீடு மற்றும் காப்பீடு களில் நாமினேஷன் எவ்வளவு அவசியம் என்று பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. நாமினேஷன் செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றால் சில சமயங்களில் அது தான் இல்லை பொதுவாகவே கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் நாமினேஷன் செய்வது என்பது வழக்கத்தில் உள்ளது. இந்த கோவிட் காலத்தில் இருவரும் இறந்துவிட நேரும் போது அவர்கள் செய்த முதலீடு அல்லது காப்பீடு எவ்வாறு மற்றவர்களுக்கு மாறுகின்றது என்பது சற்று சிக்கலான செயலாகிறது. இதை தவிர்க்க வழி உள்ளது அதை இங்கு பார்க்கலாம்
நாமினேசன் என்பது ஒரு முதலீடு அல்லது காப்பீடு செய்யும் பொழுது முதலீட்டாளர் அல்லது காப்பீட்டாளர் இறந்தபோது, அதில் கிடைக்கும் பணம் அந்த நாமினிக்கு செல்ல வேண்டும். இது பொதுவான ஒன்று. இந்த நாமினேஷன் இல் மூன்று வகைகள் உண்டு
தனி நபர் (சிங்கிள்) நாமினேஷன்
முதல் வகை, தனி நபர் ( சிங்கிள்) நாமினேஷன் என்பதாகும் இதில் ஒருவர் இறந்து விட்டால் முழுப் பணமும் அந்த நாமினி இடம் அளிக்கப்படும்
ஒருவருக்கு மேற்பட்ட கூட்டு நாமினேஷன் ( Joint or Multiple Nomination)
இரண்டாவது வகை, இது ஜாயிண்ட் அல்லது மல்டிபிள் நாமினேஷன் எனப்படும் அதிகபட்சம் மூன்று பேர் நாமினியாக பதிவு செய்ய முடியும் உதாரணமாக அந்த மூவரையும் ஏ, பி, சி என்று வைத்துக்கொள்வோம் முதலீடு அல்லது காப்பீடு செய்யும் பொழுது ஏ விற்கு 30 சதவீதமும் பிவிற்கு 40% மற்றும் சி விற்கு 30% என்று முதலில் பதிவு செய்தால், பின்னர் அதே சதவிகிதத்தில் அவர்களிடம் பணம் கொடுக்கப்படும்
சக்ஸ்ஸிவ் நாமினேஷன் - தொடரும் நாமினேஷன் ( successive Nomination)
மூன்றாவது வகை இது புது மாதிரியானது. இதற்கு சக்சஸ் நாமினேஷன் அல்லது அல்டர்நெட் நாமினேஷன்( Alternative Nomination) என்று பெயர் இதில் நாம் முதலீட்டாளர் அல்லது காப்பீட்டாளர் இறந்து விட்டால் முதலில் ஏ விற்கு 100 சதவீதமும் செல்ல வேண்டும் என்று கூறலாம். ஏதாவது ஒரு காரணத்தால் எ இறந்துவிட்டாலோ இப்பபொழுது பணம் பி இடம் 100 சதவீதமும் செல்ல வேண்டும். எ , பி இருவரும் இல்லாத பட்சத்தில் சி இடம் அந்த 100% செல்லும். இது மாதிரியான நாமினேஷன்க்கு சக்சஸ் நாமினேஷன் என்று பெயர்
இரண்டாவது வகைக்கும், மூன்றாவது வரைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, இரண்டாவது வகையில் மூன்று பேர் நாமினேஷன் என்றால் மூவருக்கும் மொத்த பணமும் அவரவர் விகிதாசாரத்தில் போய் சேருகிறது ஆனால் அதே சமயம் மூன்றாவது வகையில், யாராவது ஒருவருக்கு மொத்த பணம் போய் சேரும். அந்த ஒருவர் யார் என்பது யார் முதலில் உயிருடன் இருக்கிறார், மற்றும் வரிசையில் எந்த இடத்தில இருக்கிறார் என்ற வகையில் அமைகிறது
இந்த கோவிட் / பெருந்தொற்று (பனெடெமிக் ) காலங்களில் சக்சஸ் நாமினேஷன் செய்வது மிகவும் உசிதம். இது தற்சமயம் இன்சூரன்ஸ் அல்லது காப்பீடு செய்யப்படும்போது மட்டுமே உதவுகின்றது. காப்பீடு எல்ஐசி மூலம் செய்யும் போது இந்த மாதிரியான சக்சஸ் நாமினேஷன் பெற படிவம் 5194 rev. உபயோகித்து சக்ஸ்ஸிவ் நாமினேஷன் பதிவு செய்யலாம்
சக்ஸ்ஸிவ் நாமினேஷன் பதிவு செய்வது காப்பீடு எடுக்கும் போது செய்யலாம். அதை தவறவிட்டவர்கள், காப்பீடு நடைமுறையில் இருக்கும்போதும் செய்யலாம்.
இளம் வயதில் காப்பீடு செய்யும் போது அவர்களது தந்தையையோ தாயையோ நாமினேஷன் செய்யும்பொழுது காப்பீடு செய்தவர் இறப்பதற்கு முன்னே நாமினேஷன் செய்யப்பட்டவர் இறந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த சக்சஸ் நாமினேஷன் என்பது மிகவும் உபயோகமாக இருக்கும்
வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நாமினேஷன்
தற்சமயம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அல்லது வங்கிகளில் இது போன்று மூன்றாவது வகையான சக்சஸ் நாமினேஷன் கிடையாது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது வங்கிகளில் முதலீடு செய்யும் போது தனி நபர் நாமினேஷன் தவிர்த்து ,இரண்டாவது வகையான ஒன்றுக்கு மேற்பட்ட நபர் நாமினேஷன் செய்வதன் மூலம் நாம் ஓரளவு பணம் சரியான இடத்திற்கு போய்ச் சேருமாறு பார்த்துக் கொள்ள முடியும்
சோலோ அக்கௌன்ட் ஆக இல்லாமல் இ ஆர் எஸ் அக்கௌன்ட் ( E or S ) ஆக இருந்தாலும், நாமினேஷன் செய்வது நல்லதே
நாமினேஷன் செய்யப்பட்டவர் இறந்து போகும்போது கையோடு நாமினேஷனை மாற்றி விடுவதும் நல்லதே
இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும்
உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும் feedback here
முந்திய கட்டுரைகளை படிக்க