வரி என்னும் பூதம்.
ஜனவரி முதல் மார்ச் வரை பொதுவாகவே நிறைய வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு. வருவது சரித்திரம். இதுவரை வரியைப் பற்றி நினைக்கவில்லை. இப்பொழுது பூதாகாரமாய் பயமுறுத்துகிறது.என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. பலநூறு ஆயிரத்தில் ஒருவர்தான். வரி தவிர்க்க முடியாதது என்று எண்ணுபவர்கள் ஏராளம். கூடியவரை தவிர்க்கலாம்.சற்று மெனக்கெட வேண்டும். வாருங்கள் சுருக்கமாக, பார்ப்போம். இந்த.காலத்தில் எப்படி வரியை சேமிக்கலாம் என்று.
மியூச்சுவல் ஃபண்டுகளில் வரி சேமிப்பு.
எல்லா வகையான வரி சேமிப்பு வகைகளிலும், திட்டங்களிலும் குறைந்த காலத்திற்கு லாக்கின்(Lock in) உள்ள திட்டம், மியூச்சுவல் ஃபண்டுகளின் ELSS (Equity Linked Savings Scheme) எனப் படும் வரி சேமிப்பு திட்டங்கள் மட்டுமே. இது ஒரு சாதகமான விஷயம் தான. சாதகமில்லாத விஷயங்களும் இங்கு உண்டு.மற்ற எல்லா திட்டக்களிலும் வரும் லாபம் அல்லது வட்டி விகிதம் எவ்வளவு என்று நிச்சயமாக தெரியும். இந்த மியூச்சுவல் ஃபண்டின் ELSS திட்டங்களில் அதை எவ்வளவு என்று அறுதியிட்டு கூற இயலாது. காரணம் இந்த ELSS திட்டங்கள் முழுக்க முழுக்க ஈகுட்டி வகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். அதுனால என்ன சரித்திரம் சாதகமான கதைகள் பல சொல்லும்.
வடி கட்டி தேர்ந்தெடுத்த ஃபண்டுகள்.
சரித்திரத்தில், பல திட்டங்கள் பல்வேறு காலக்கட்டத்தில்.பல மாதிரி லாபம் கொடுத்து வருகின்றது. இந்த திட்டங்களில்.எந்த திட்டம் நமக்கு ஏற்றது என்று எப்படி கண்டுபிடிப்பது? பொதுவாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் குறைவாக, நல்ல வருவாய், நீடித்த வகையில்.தந்து வந்தால்.அந்த திட்டம் உசிதமாக இருக்கும். இதனடிப்படையில்.கடந்த 1, 3, 5, வருடங்களில்.லாபம் தந்த திட்டங்களை பார்த்து, அதை வடிகட்டி, மிஞ்சும் மூன்று திட்டங்களை எடுத்துக் கொள்வோம்.இந்த மூன்று திட்டங்கள், கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில். முதலீடு செய்வது சற்று உசிதமாக இருக்கும் என்பது, பொதுவான அறிவு. இன்னும் என்ன விசனம்? சீக்கிரமாக. முடிவு செய்யுங்கள், முதலீடு செய்யுங்கள், வரியை சேமியுங்கள். லாபம் கிடைக்கும் என்று நம்புங்கள்.
வரி சேமிப்பு திட்டங்களில் லாபவிகிதம் ஆண்டு சதவிகிதத்தில் தரப்பட்டுள்ளது.
80C க்கு அப்பால்.
மேற்கூறிய. ELSS திட்டங்கள்.80C வகையைச் சார்ந்தது. நாங்கள் முன்னமே. ₹ 1.5 லட்சத்தை முதலீடு செய்து விட்டோம். இன்னும் எப்படி வரியை சேமிப்பது என்பவர்களுக்காக, இந்த கொரோனா காலத்தில்.80D என்ற வகையில். மருத்துவ.காப்பீடு (Medical / health Insurance) எடுத்து வரியை சேமிக்கலாம். மேலும்.கடைசிக்காலத்தில் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று இப்பொழுதே எண்ணுபவர்கள்.என். பி. எஸ். எனப்படும்.பென்ஷன் (NPS) (80CCD 1B) திட்டங்களில்.முதலீடு செய்து மேலும் ₹50,000 வரி விலக்கு பெறலாம்.
இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும்.
உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்
முந்திய கட்டுரைகளை படிக்க
எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?
சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்
நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்