05-02-2023
புது வருடம் ரெண்டாயிரத்தி இருபத்தி மூணு. வாழ்த்துகள். பிபுரவரி வந்துவிட்டால், வைரல் ஃபீவர் வருகிறதோ இல்லையோ டாக்ஸ்(Tax) பீவர் வந்துவிடும் பலருக்கு. வரியை குறைக்க வரி சேமிக்கும் வழிகளை தேட வேண்டும். அவசரம் அவசரமாய் போவது.. இன்சூரன்ஸ் பக்கமே. அதை விட அதிகம் லாபம் தரும் சிறந்த வழிகளும் இங்கே உள்ளன.
ஈகுட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்(ELSS). இந்த திட்டத்தில் கட்டாய சேமிக்கும் வருடம், மூன்று வருடம். இது இன்சூரன்ஸ் போன்று பத்துவருடம் இல்லை. இதில் கிடைக்கும் லாபமும் அதிகம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கு உள்ள 40 க்கும் மேற்பட்ட பண்டு நிறுவனங்கள், இந்த மாதிரியான திட்டங்களை தந்து வருகின்றன. அதில் தேடிப்பிடித்து ஐந்து ஃபண்டுகளை, உங்களது முதலீட்டு பார்வைக்கு தந்துள்ளோம். மற்ற வரி சேமிக்கும் வழிகளோடு சரியாக புரிந்துகொள்வதற்கு, 3 வருட, 5 வருட மற்றும் 10 வருட லாப விபரங்களை அட்டவணையில் தந்துள்ளோம்.
எஸ் ஐ பி யைப் (SIP) பற்றி அறியாதவர்கள் இப்போது இருப்பதில்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரேமுறையில்(Lump sum) முதலீடு செய்வதை விட, எஸ் ஐ பியாக முதலீடு செய்வது பல விஷயங்களில் நல்லது என்றே நாம் அறிவோம். கூடுதலாக இன்னொரு விஷயம்.. ம் மந்தநிலை வரும்(Recession), வட்டி விகிதங்கள் ஏறும் என்ற இந்த தருணத்திற்கு எஸ் ஐ பியாக முதலீடு செய்வது, மிகவும் உசிதமாக தோன்றுகின்றது. எனவே தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த ஜனவரியிலிருந்து மாதா மாதம் ரூ 10,000 - 12,500 இ எல் எஸ் எஸ் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலன் அளிக்கலாம்.
இந்த கோவிட் காலத்தில் நிறுவனங்களில், குரூப் இன்சூரன்ஸ் இருந்தபோதும் அதற்கு மேலாக தனிப்பட்ட முறையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இதற்கு செக்ஷன் 80 டி யில் (80D)வரி விலக்கு கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் வேலையின் நிரந்திரம் பற்றி அடிக்கடி பேசப்படும் காலகட்டத்தில் நிறுவனம் மாறும் போதோ, அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அவசர மருத்துவ தேவை என்றால் இந்த மாதிரியான தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் கை கொடுக்கும்.
கடைசிக்காலத்தில் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று இப்பொழுதே எண்ணுபவர்கள்.என். பி. எஸ். எனப்படும்.பென்ஷன் (NPS) (80CCD 1B) திட்டங்களில் முதலீடு செய்து மேலும் ₹50,000 வரி விலக்கு பெறலாம்.
மார்ச் மாதத்தில் வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு பெருகும் என்பது கண்கூடு, ஆனால் பல ஐ டி நிறுவனங்களும் மற்றும் அதர நிறுவனங்களும், டிசம்பர், ஜனவரியில் பணியாளர்களிடம் இருந்து வரி சேமிப்பு விவரங்களை பெற்றுக்கொண்டு வரி தொகையை கணக்கிட்டு, டீடிஎஸ் என்று பிடித்தம் செய்துவிடுவார்கள். எனவே நீங்கள் இப்போதே வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்து அதற்கான ஆதாரங்களை காண்பித்தால் மட்டுமே.உங்களுக்கு டீடிஎஸ் குறையும் அல்லது டீடிஎஸ் அதிகமாக பிடித்தம் செய்யப்படும். எனவே தூங்குவதில் பலன் ஏதும் இல்லை. கடைசி நாள் வரை காத்திருப்பதிலும் நியாயமில்லை. விழித்துக்கொள்ளுங்கள், காலம் கடப்பதற்குள் வரி சேமிப்பு திட்டத்தில் எஸ் ஐ பி முதலீட்டை தொடங்குங்கள்.
No comments:
Post a Comment