மியூச்சுவல் பண்டில் என்ன வருமானம் எதிர்பார்க்கலாம் ?
பொருளாதார முதலீடுகளின் உண்மை நிலை
நான் தினந்தோறும் படிக்கிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம். 5 கோடி வேண்டுமா? ரூபாய் 10,000 முதலீடு செய்யுங்கள், உடனே கிடைத்துவிடும் என்ற வாகில் இருக்கும். இதன் உண்மை நிலை என்ன? எத்தனை வருடம் சேமிக்க வேண்டும்? எவ்வளவு லாபம் கிடைக்க வேண்டும்? என்ற விவரங்கள் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. அல்லது கண்ணுக்கு தெரியாத, பூதக் கண்ணாடியில் பார்க்க வேண்டிய எழுத்துக்களாக சிலவற்றில் இருக்கலாம்.
மேற்கண்ட உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம், மாதா மாதம் ரூபாய் 10,000 வீதம் 20 வருடங்களுக்கு ஈகுவீட்டி பண்டில் 23% லாபத்தில் சேமித்து வந்தால் நமக்கு ஐந்து கோடி கிடைக்கும். இதை நம்பி உடனே அந்த திட்டத்தில் சேர்ந்து விடலாமா? சற்று யோசிக்க வேண்டும். எவ்வாறு இந்த லாபவீதங்களை அணுக வேண்டும். எவ்வாறு ஃபண்டுகளை தேர்வு செய்ய வேண்டும் என்று. இந்த விபரங்களை கீழ கண்ட அட்டவணையில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
ஈக்விட்டி ஃபண்டுகளில் லாபவிகிதம்
ஈக்விட்டி ஃபண்டுகளில் வருடாந்திர லாப சதவிகிதம் 1 - 20 வருடங்களுக்கு அட்டவணையில் தரப்பட்டுள்ளது
மேலே உள்ள அட்டவணைப்படி 20 வருட முடிவில்.ஃபண்டுகள் சுமார் 20 சதவிகித லாபத்தை தந்துள்ளது. இந்த வகையில் பார்க்கும் போது மாதா மாதம் ₹10,000, 20 வருடங்களுக்கு 20 சதவிகித லாபத்தில் நமக்கு கிடைத்தால், முடிவில் நமக்கு கிடைக்கும் தொகை சுமார் 3 கோடி மட்டுமே இருக்கும், அது 5 கோடி அல்ல.
மேலும் இந்த அட்டவணையில் இருக்கும் ஃபண்டுகள் எல்லாம் மிகப்பெரிய நிறுவனங்களின் ஈக்விட்டியில் முதலீடு செய்யப்பட்ட ஃபண்டுகள். இதில் ஸ்மால், கேப் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் எடுத்துக்கொள்ளப்படவில்லை. காரணம், அதில் லாப விகிதங்கள் ஏற்றத்தாழ்வுகள் மிக அதிகமாக இருக்கலாம், எனவே அது தவிர்க்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சந்தை உச்சத்தில் இருப்பதாலும், ஐந்து வருடங்களுக்கு கீழ் உள்ள லாபவிகிதம் அதிகமாக இருப்பதாலும், அது ஒரு நிரந்தரமான லாபம் ஆக இருக்க வாய்ப்பு இல்லை என்பதாலும் ஒன்று மற்றும் மூன்று வருட லாப விகிதங்களையும் தவிர்க்கின்றோம்
முடிவாக 5, 10, 15 வருடங்களில் இங்கு காட்டப்பட்டுள்ள ஐந்து வகையான பண்டுகளின் லாப விகிதத்தின் சராசரி விகிதம் சுமார் 13% ஆகும். இது வெவ்வேறு வகையான ஆய்வுகளின்படி, ஈகுட்டி ஃபண்ட் களின் லாபவிகிதம் 12 - 14% இருக்கலாம் என்பதற்கு மிகவும் ஏற்புடையதாக உள்ளது.
ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ் ஐ. பி. முதலீடுலாபவிகிதம்
மேலும், 2004 நாளில் இருந்து 2023 வரை ஈகுட்டி ஃபண்டுகளில் எஸ் ஐ. பி.மூலம் முதலீடு செய்வதற்கு.கிடைக்கும் லாபவிகிதம்.12.55 % என்ற அளவில் உள்ளது. இந்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தெளிவாக தெரிகின்றது.
மேற்கண்ட வகையில் ஈக்விட்டி பண்டுகளின் எதிர்பார்க்கப்படுகின்ற 14 சதவிகித வட்டி விகிதத்தை கொண்டு, 20 வருடங்களுக்கு மாதா மாதம் ₹10,000 முதலீடு செய்து வந்தால் நமக்கு கிடைக்கும் தொகை1.3 கோடியாக இருக்கும். இதுவே யதார்த்தமான பண்டு வரவாக கருதப்படுகின்றது.
கால வரையில் முதலீட்டின் எதிர்பார்க்கும் மதிப்பு
ஒரு முதலீட்டாளர் மாதா மாதம் ₹10,000. சுமார் 14 சதவீத லாபத்தில் பல வருடங்கள் முடிவுசெய்தால் 5, 10, 15, 20 வருட முடிவில் அவருக்கு எதார்த்தமாக எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற விவரம் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
இந்த வகையான முடிவு தொகையை.பார்க்கும்போது நாம் மனதில் கொள்ள வேண்டியது, லாப விகிதம் சந்தையின் மாற்றங்களுக்கு உட்பட்டது என்றும் சந்தை உச்சத்தில் இருக்கும்போது நமக்கு கிடைக்கும் தொகை மிக அதிகமாக இருக்கலாம், சந்தை கரடியின் பிடியில் இருந்தால் நமக்கு கிடைக்கும் தொகை குறைவானதாக இருக்கலாம். பல வருட ஆராய்ச்சிகளின் முடிவில் பலவகையான.கணிப்பில்.ஈக்விட்டி ஃபண்டுகள் லாபம் 14% இருக்கும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதா இருப்பதால் நமக்கு கிடைக்கும் தொகையை இந்த அட்டவணைப்படி கிடைக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
முதலீட்டில் யதார்த்தமான எதிர்பார்ப்புகளுடன் முன்னேறுவோம்
ஆக நாம் முதலில் பார்த்தபடி மாதா மாதம் ₹10,000, 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 5 கோடி கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளது. நமக்கு சுமார் 1.5 கோடி அருகில் பணம் கிடைப்பதற்காண எதார்த்தமான சூழலை புரிந்து அதற்கேற்றவாறு முதலீடு செய்ய வேண்டும். விளம்பர வாக்கியங்களை நன்கு புரிந்து யதார்த்தத்தை கணக்கில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment