வருமான வரியை சேமித்து சம்பாதிக்க ELSS வழி!
டிசம்பர் வந்துவிட்டால், வைரல் ஃபீவர் வருகிறதோ இல்லையோ டாக்ஸ்(Tax) பீவர் வந்துவிடும் பலருக்கு. வரியை குறைக்க வரி சேமிக்கும் வழிகளை தேட வேண்டும். அவசரம் அவசரமாய் போவது.. இன்சூரன்ஸ் பக்கமே. அதை விட அதிகம் லாபம் தரும் சிறந்த வழிகளும் இங்கே உள்ளன.
ELSS என்றால் என்ன? அதன் நன்மைகள்
ELSS என்பது Equity Linked Savings Scheme என்று அழைக்கப்படுகிறது. இது மியூச்சுவல் ஃபண்டு மூலம் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியில் ₹1.5 லட்சம் வரை சேமிக்க உதவுகிறது. ஈகுட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்(ELSS). இந்த திட்டத்தில் கட்டாய சேமிக்கும் வருடம், மூன்று வருடம். இது இன்சூரன்ஸ் போன்று பத்துவருடம் இல்லை. இதில் கிடைக்கும் லாபமும் அதிகம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
ELSS ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன:
வருமான வரிச் சலுகை - ₹1.5 லட்சம் வரை வரியில் இருந்து விலக்கு
வேலை நிமித்தமான முதலீடு கட்டாயமில்லை - வேலை இழப்பு ஏற்பட்டாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்
பொது ஃபண்டுகளை விட அதிக வருமானம் - கடந்த 3 ஆண்டுகளின் சராசரி வருமானம் 21%
முதலீட்டை மீட்க 3 ஆண்டுக்குப் பின்னர் தான் அனுமதி
எனவே, வருமான வரி சேமிப்பு நோக்கத்திற்காகவும், நல்ல வருமானத்திற்காகவும் ELSS மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பயனுள்ளதாகும்.
ELSS ஃபண்டுகளின் சமீபத்திய வருமானம்
இங்கு உள்ள 40 க்கும் மேற்பட்ட பண்டு நிறுவனங்கள், இந்த மாதிரியான திட்டங்களை தந்து வருகின்றன. அதில் தேடிப்பிடித்து பத்து ஃபண்டுகளை, உங்களது முதலீட்டு பார்வைக்கு தந்துள்ளோம். மற்ற வரி சேமிக்கும் வழிகளோடு சரியாக புரிந்துகொள்வதற்கு, கடந்த 3 வருட லாப விபரங்களை அட்டவணையில் தந்துள்ளோம்.
புதிய மற்றும் பழைய வரி விதிப்பு முறைகள்
புதிய வருமான வரி விதிமுறைகளில், 80C பிரிவு அனுமதிக்கப்படாது; இது எதிர்காலத்தில் அனைத்துக்கும் ஏற்படலாம். ஆனால் கூட, வருமான வரி சேமிப்பு சாதனங்கள் நல்லவையாகவே உள்ளன. வரிச்சலுகை இருக்கும் காலங்களில் சேமிக்கலாம், பிறகு அதிக வருமானத்திற்காக தொடரலாம்.
SIP முறையில் ELSSல் முதலீடு
எஸ் ஐ பி யைப் (SIP) பற்றி அறியாதவர்கள் இப்போது இருப்பதில்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரேமுறையில்(Lump sum) முதலீடு செய்வதை விட, எஸ் ஐ பியாக முதலீடு செய்வது பல விஷயங்களில் நல்லது என்றே நாம் அறிவோம். எஸ் ஐ பியாக முதலீடு செய்வது, மிகவும் உசிதமாக தோன்றுகின்றது. எனவே தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த மாதம் முதல் மாதா மாதம் ரூ 10,000 - 12,500 இ எல் எஸ் எஸ் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலன் அளிக்கலாம்.
ELSS ஃபண்டுகளில் SIP முறையில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில் சந்தையின் மாறுபாடுகளை ஈடு செய்ய வாய்ப்புள்ளது.
SIP சிறுக சிறுக சேமிக்கலாம் என்ற 50 பக்க விளக்க கையேட்டை இங்கு படிக்கலாம். கூடுதல் செய்தி இந்த புத்தகம் பொங்கல் சிறப்பு இதழாக நமது செட்டிநாடு பத்திரிகையில் குவாண்டம் பண்டு ஆதரவோடு வெளிவருகிறது
வரி மற்றும் பண்டு முதலீடுகள் பற்றியும் படித்து அறிந்துகொள்ளலாம்.
வருமான வரி சேமிப்பு காலம் ஆரம்பமாகி விட்டதால் ELSS SIP அல்லது லம்ப்சம் முதலீடுகளை செய்ய தயக்கமின்றி தொடர்புகொள்ளவும்.
Contact us to save tax
Radha Consultancy : Contact us
#ELSS #வருமானவரிச்சேமிப்பு #மியூச்சுவல்ஃபண்டு
No comments:
Post a Comment