Monday, 25 September 2017

தெரிந்து கொள்வோம் மியூச்சுவல் பண்டின் மொழிகளை – Mutual funds Jargon buster


மியூட்சுவல் ஃபண்ட் மற்றும் எஸ் ஐ பி போன்ற வார்த்தைகள் நமக்கு பழக்கம்தான். நாமும் அவ்வப்போது சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறோம். என் றாலும் படிக்கும் போதோ, பேசும்போதோ நமக்குப் புரியாத தெரியாத பல சொற்கள் நம்மிடம் வந்து சேர்கின்றன. அதைப் பற்றி முற்றிலும் புரிந்து கொள்ளாமல் நாம் முதலீடு செய்யும் போது சில சமயம் நமக்கும் நஷ்டம் வர வாய்ப்புகள் உள்ளது எனவே மியூட்சுவல் ஃபண்டில் உள்ள மொழிகளையும், சொற்களையும் நன்கு புரிந்து முதலீடு செய்வோமா?
மேலும் படியுங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில்  பயன்படுத்தப்படும் சொற்கள் மொழிகள் பற்றி நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள்

மியூட்சுவல் ஃபண்டில் பயன்படுத்தப்படும் பொதுவான சொற்களும் அதன் உபயோகங்களுக்கு அர்த்தங்களும்

நிர்வகிக்கும் சொத்து மதிப்பு (AUM) : நிர்வாகத்தில்  திட்டத்தில் இருக்கும் சொத்து மதிப்பு அதாவது மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் அன்றைய தேதியில் இருக்கும் மொத்த சொத்து மதிப்பு ஆகும். திட்டத்தில் இருக்கும் சொத்து மதிப்பு   பத்தாயிரம் கோடி என்றால்,  அந்த திட்டத்தில் இருக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் வைத்திருக்கும் சொத்தின் மதிப்பு பத்தாயிரம் கோட.  இந்த திட்ட மதிப்பு அதிகமாக அதிகமாக அந்தத் திட்டம் மிகவும் பிரசித்தமானது என்று அர்த்தம்

என் எ வி ( NAV - Net Asset Value) ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் யூனிட்டுகளில் அன்றைய மதிப்பு என் எ வி எனப்படும் இது நாளுக்கு நாள் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்க்கு ஏற்பமாறுபடும் இது ஒரு யூனிட்டின் மதிப்பு ஆகும். திட்டத்தின் சந்தையின் மொத்த மதிப்பை ( செலவினங்கள் போக) அந்த திட்டத்தில் உள்ள யூனிட்டுகளில் வகுத்தால்  கிடைக்கும் தொகையே என் எ வி  ஆகும். இது நாள்தோறும் கணக்கிடப்பட்டு ஒவ்வொரு நாளும் சுமார் இரவு எட்டு மணி அளவில் ஏ எம் எப் ஐ (AMFI) தகவல் பக்கத்தில் பதிவு செய்யப்படும். சில மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் சந்தையில் விற்று வாங்கப்படுகிறது, சந்தை விலை, என் எ வி  யை விட குறைவாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். திட்டதின் சந்தை விலையும், எண் ஏவி இரண்டும் ஒன்றல்ல வெவ்வேறு, இதைப் புரிந்து கொள்ளவும். எண் ஏவி  அதிகம் இருந்தால் ரிஸ்கான திட்டம், எண் ஏவி   குறைவாக இருந்தால் நல்லது  என்று நினைக்க வேண்டாம் அது தரும் லாபத்துக்கும், எண் ஏவி  க்கும் ஏதும் சம்பந்தமில்லை

பெஞ்சு  மார்க் ( Bench Mark) : சந்தையில் பல்வேறு நிறுவனங்கள், என்ணிலடங்கா  திட்டங்கள் உள்ளது. இதில் எது நல்ல திட்டம், லாபம் தரும் திட்டம் எது பழுது பட்ட திட்டம், என்று நாம் அறிவது சற்று கடினமே. அதே சமயம் ஒன்று சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும்  இன்னொன்று பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டமாகும் இரண்டையும் ஒரே தராசுத் தட்டில் வைத்து எடைபோட முடியாது. பின் எப்படித்தான் முதலீடு செய்வது. ஒரு வழி உள்ளது, நமது திட்டத்தின் குறிக்கோள் படியே முதலிலீடு செய்யும், கம்பெனிகளை போன்றே மும்பை பங்குச்சந்தையில் மற்றும் தேசிய பங்குச் சந்தையில் குறியீடு இருக்க வாய்புகள் உள்ளது. நமது திட்டம் கடந்த ஒரு வருடத்தில் எவ்வளவு லாப நஷ்டம் தந்துள்ளது என்பதை, குறிப்பிட்ட குறியீட்டு எண் எவ்வளவு லாப நஷ்டம் தந்துள்ளது என்பதை பார்த்து அதிகமா குறைவா என்று புரிந்து கொள்ளலாம். எந்த குறியீட்டு எண்னை உபயோக படுத்திகிறோமோ அந்த குறியீட்டிற்கு, திட்டத்தின் பெஞ்ச்மார்க் என்று பெயர். உதாரணமாக ஆக்சிஸ் ஈக்விட்டி ஃபண்ட், நிப்டி 50 ( Nifty 50)
 பெஞ்ச்மார்க்  ஆக கொண்டு உள்ளது. ஆக்சிஸ் மிட் கேப் பண்ட் மும்பை பங்கு சந்தையின்  மிட் கேப்  குறியீட்டு எண்னை ( S&P BSE Midcap), பெஞ்ச்மார்க்  ஆக கொண்டு உள்ளது

திட்டத்தின் வகை பெயர் ( Nature of Schemes): திட்டம் எங்கு முதலீடு செய்கின்றது என்பதைப் பொறுத்து இந்த வகை  செய்ய படுகின்றது. ஒரு திட்டம் இக்விட்டியில் முதலீடு செய்யிகிறதா? இல்லை
கடன் பத்திரத்தில் முதலீடு செய்கிறதா? இல்லை இரண்டும் கலந்து கலவையான முறையில் முதலீடு செய்கிறதா என்று பார்க்க வேண்டும். இக்விட்டியில் மட்டுமே அது பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கிறதா இல்லை சிறு நிறுவனங்களில் முதலீடு செய்கிறதா என்றும் பார்க்க வேண்டும் இதை பொறுத்தே அந்த திட்டத்தின் வகை அமையும். திட்டத்தின் முதலீடு செய்யும் தன்மைகளைப் பொறுத்து அந்த திட்டத்தின்  வகை பிரிக்கப்படுகிறது

எஸ் ஐ பி – (SIP – Systematic Investment Plan)   என்பது,குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதே ஆகும்.

எஸ் டபுள்யு பி – (SWP – Systematic Withdrawal Plan)   என்பது,குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட திட்டத்தில் இருந்து நாம் திருப்ப பெறுவது ஆகும்.

எஸ் டி பி (STP – Systematic Transfer Plan)   என்பது குறிப்பிட்ட இடைவெளியில், குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட தொகையை ஒரு திட்டத்தில் இருந்து இன்னொரு திட்டத்தில்  மா ற்றுவது

பண்டு மேனஜர் அல்லது திட்ட மேலாளர் ( Fund Manager)  நமது திட்டங்களை நிர்வாகம் செய்பவர்  திட்ட மேலாளர் எனப்படுவர் இவர் நமது முதலீடுகளை பங்குகளிலும் பத்திரங்களையும் முதலீடு செய்து
நமது முதலீட்டை சரிவர நடத்த   காரணமாக இருப்பவர் திட்ட மேலாளர்

ஹோல்டிங்ஸ் – ( Holdings) : திட்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் பங்குகள் மற்றம் கடன் பத்திர விபரம் இந்த ஹோல்டிங்ஸ் ஆகும்
நமது திட்டம் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளது என்பதை பற்றி இதன் மூலம்நன்கு அறிய முடியும்

வெளியேற கட்டணம் – Exit load : மியூச்சுவல் பண்ட் திட்டங்களில்  இருந்து வெளியேறுபவர்கள் சிறு தொகை கட்டணமாக
செலுத்த வேண்டும். இதற்கு எக்ஸிட் லோடு என்று பெயர் உதாரணமாக திட்டத்தின் என் எ வி  ரூபாய் 12  இருக்கும் போது, முதலீட்டாளருக்கு கிடைக்கும் விலை ரூபாய் 11.88 ஆக இருக்கும் - இதில் எக்ஸிட் லோடு 1%  சதவீதமாகும். இக்விட்டிதிட்டத்தில்  இருந்து ஒரு வருடத்திற்குள் வெளியேறினால் கட்டணம் இருக்கும். இதே நேரத்தில் கடன் பத்திரங்கள் இருந்து ஆறு மாதத்துக்குள் வெளியேறினால் கட்டணம் இருக்கும், பெரும்பாலும் லிக்வுட் பண்டில் இருந்தும் வெளியேறும் போது எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் கட்டணம் இருக்காது.

திட்டத்தின் செலவினம் (Expense ratio): திட்டத்தின் செலவினம் என்பது திட்டத்தை நிர்வகிக்க ஆகும் செலவாகும் நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் செலவினம் குறைவாக இருக்குமாறு தேர்வு செய்யலாம். ஏனெனில் நமக்கு கிடைக்கும் லாப விகிதம் திட்டத்தின் லாபத்தில் செலவினம் போக மீதம் தான் நமக்கு கிடைக்கும்

ஆல்பா, விகிதங்கள் (Alpha): ஆல்பா என்பது நமது திட்டம் சந்தையின் லாபத்தை விட எவ்வளவு அதிகமா தந்துள்ளது என்பதாகும். உதரணமாக, ஒரு வருடத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடு எண் 17% ஏற்றமாக இருக்கும்போது நமது திட்டம் 22% ஏறி இருந்தால் ஆல்பா என்பது 5%. எனவே நாம் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஆல்பா தரும் திட்டமாக இருக்க வேண்டும்

பீட்டா விகிதங்கள் (Beta) : அடுத்ததாக எல்லார்க்கும் தெரிந்த விஷயம் தான்... சந்தை ஏறும்போது நமது திட்டத்தின் மதிப்பு கூடுகிறது. அதேபோல் இறங்கும் போது இறங்குகிறது. இதைத்தான் பீட்டா என்று கூறுவார்கள். நமது திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையோடு ஒத்து இருந்தால் பீட்டா 1 என்று பெயர்.

சார்பே  விகிதம் Sharpe Ratio  : நமது திட்டத்தின் பீட்டா எண் குறைய குறைய திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையின் ஏற்ற இரக்கத்தை விட குறைவாக இருக்கும். எனவே, ஆல்பா அதிகமாகவும் பீட்டா குறைவாகவும் இருக்கும் திட்டங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். இது இரண்டையும், மேலும் திட்டத்தின் ரிஸ்கையும் சேர்த்து பார்ப்பதற்கு உள்ள விகிதத்தின் பெயர் Sharpe Ratio. இது positive எண்ணாக இருக்க வேண்டும்.

டிராக்கிங் எரேர்( Tracking Error) : இ டி எப் திட்டங்களுக்கு மட்டும் பொருந்தும். நமது இ டி எப்  திட்டத்தில் எவ்வளவு லாப நஷ்டம் வந்துள்ளது,  இ டி எப் ( ETF – Exchange Traded Funds)  அடிப்படையாகக் கொண்ட குறியீட்டில் எவ்வாறு லாப நஷ்டம்  உள்ளது என்று பார்ப்பது.  இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் உத்தமம் ஆனால் சிறிது வேறுபாடு இருக்கும் இந்த வேறுபாட்டை பிழை என்று கொள்ளலாம். - உதாரணமாக, சென்செக்ஸ் மற்றும் சென்செக்ஸ் இ டி எப் திட்டங்களுக்கு இருக்கும் லாப நஷ்ட வேறுபாட்டை டிராக்கிங் எரேர்  எனலாம்

கடன் பத்திரம்  சார்ந்த மொழிகள்  

யில்டு டு மெச்சிரியூட்டி (YTM – Yield to Maturity) : கடன் பத்திரத்தின்  முதலீடுகளை அதன் முதிர்வு காலம்வரை வைத்திருந்தால் எந்த விதத்தில் அதற்கு லாபம் கிடைக்கும் என்பது இந்த யில்டு டு மெச்சிரியூட்டி ஆகும்.
கடன் பத்திரத்தின்   வட்டி விகிதம், பத்திரத்தின் முடிவு காலம் தற்போது  அதன் விலை, ஆகியவற்றைக் பொறுத்து யில்டு டு மெச்சிரியூட்டி  மாறும். இது கடன் பத்திரத்தின் வட்டி விகிதத்தை விட கூடவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம் கடன்
பத்திரத்தின் தற்போதைய விலை இதன் முக்கிய காரணி ஆகும்

மாடிபைடு டியூரேஷன் – ( Modified duration) : மியூச்சுவல் பண்ட்களில் மிகவும் கடினமான புரியாத புதிரான வாரத்தை இது.  மாடிபைடு டியூரேஷன்  என்பதைப் பற்றி முடிந்தவரை எளிமையாகச் சொல்கிறேன். ஒரு கடன் பத்திரத்தில்,  குறிப்பிட்ட அளவில் யில்டு மாறும்போது அதன் விலை எவ்வாறு மாறும் என்பதைக் குறிப்பது மாடிபைடு டியூரேஷன்  ஆகும்

ரேட்டிங் புரோபைல் – ( Rating Profile) கடன் வாங்குபவர்களின், வட்டியும் அசலும்  திரும்பி கொடுக்கும் தன்மையை, - கிரெடிட் ரிஸ்க் என்று கூறுவோம்இதை அளவிடும் முறையுள்ளது. இதற்கான குறியீடு, AAA, AA+, AA-, A என்றெல்லாம் உள்ளது. மூன்று AAA இருந்தால் ரிஸ்க் குறைவு. ஒரு இருந்தால் ரிஸ்க் அதிகம். இந்த குறியீடு, கம்பெனி கடன் பத்திரங்கள் , வைப்பு நிதிகளுக்கு கொடுக்கப்படுகின்றது. கடன் பத்திர திட்டங்களில் முதலீடு செய்துள்ள பத்திரங்களின் கிரெடிட் ரிஸ்க் தனமையை குறிப்பிடுவது இந்த ரேட்டிங் புரோபைல் ஆகும்
  
மற்ற பொது தகவல்கள்

ஏஎம்சி ( AMC – Assent management company)  எனப்படுவது நமது மியூச்சுவல் பண்ட் திட்டங்களை நிர்வகிக்கும் நிறுவனம்

செபி ( SEBI – Securities and exchange board of India)  எனப்படுவது மத்திய அரசாங்கத்தால் மியூச்சுவல் பண்ட் மற்றும்  பங்கு வர்த்தகத்தை கவனிக்கும் நிறுவனம் ஆகும்

 கஸ்டாடியன் ( Custodian)  என்பவர்கள் நமது திட்டத்தில், நமது திட்டத்திற்கு வாங்கப்பட்ட பங்குகளையும்
பத்திரங்களையும் பத்திரமாக பாதுகாக்கும் நிறுவனம் ஆகும்

 டிரஸ்டி ( Trustee) என்பவர்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை
மேற்பார்வை பார்க்கும் நிறுவனம் ஆகும்

ஆர் . டி.   (RTA -Registrar and Transfer Agents) : இவர்களை ஆங்கிலத்தில் Intermediary  என்பார்கள், நாம் தமிழில், இடைதரகர்கள் /இடைப்பட்ட  சேவை நிறுவனங்கள் என்று கொள்ளலாம். நாம் எந்த திட்டதில், எந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தாலும். நமது பெயர் விபரம், வாங்கிய தேதி, போன்ற, தனிநபர் முதலீட்டு விபரங்களை நிர்வகிப்பவர்கள், இந்த இடைப்பட்ட நிறுவனங்களே. உதாரணம் கேம்ஸ் (CAMS)  மற்றும் கார்வி (Karvy )ஆகும்


No comments:

Post a Comment