Tuesday 19 December 2017

தனி தமிழ் இனி தமிழ்

My article in Tamil Literature got published in a book which was released recently on Dec 8th, 2017 at Karaikudi.

தனி தமிழ் இனி தமிழ்.. தலைப்பு நன்றாகத்தான் இருங்கின்றது. நமது தாய் தமிழ் மொழி, நமக்கு மட்டுமல்ல, மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குபவள். செம்மொழி, மிகவும் புரதான மொழி என்று  பெயர் பெற்றவள், முதல், இடை, கடை சங்கங்கள் கண்ட மொழி. இந்த மொழி வளர்கின்றதா ? இல்லை மெல்ல சாகின்றதா? சாகின்றது என்று தொல்காப்பிய தொன்மையான மொழியை சொல்ல முடியவில்லை, ஆனால், அதே சமயம், தமிழ் வளர்கின்றது என்று அறுதியிட்டு ஆனித்தராமாகவும் கூற முடியவில்லை.  இந்த சூழ்நிலையில் இனி தமிழ் பற்றி இங்கு பற்றி சிந்திப்போம்.


ஒரு சாராரின் கருத்து படி, இன்னும் 50 அல்லது 100 வருடங்களில், தமிழ் மற்றும் ஏனைய மொழிகள் குறையும். தமிழ் பிழைத்து இருந்தால், எப்படி இருக்கும் என்பது, தற்பொழுது பட்டிமன்றத்திற்கு ஏற்ற தலைப்பாக இருக்கிறது. . இணயத்தால், ஆங்கிலத்தின் ஆதிக்கம், அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தாய் தமிழ் மொழயாக கொண்டவர்கள் ஆங்கில பள்ளிகளில் ஆயிரமாயிரம் நண்கொடைகள் கொடுத்து பயிலுவது அநேகம் பேர் அறிந்த்துதான். சுதந்திர இந்தியாவில் மொழிகள் மூலம் பிரிக்க பட்ட, மாநிலங்களை, இன்னும் சில, பல வருடங்களில் அதேவகையில் அறியபட முடியுமா? மிக பெரிய கேள்விதான்

காரணம் சில கண்ணில் படுகின்றது. எளிய தமிழ் மக்களால் படிக்கபடுகின்ற தமிழ் செய்தி பத்தரிக்கை தினத்தந்தி, Dt Next ஆக ஆங்கில்தில் விரிகின்றது. இதற்கு மாறாக ஆங்கில்தில் அரசனாக இருந்த The Hindu,  தி இந்து வாக பரிமளிக்கிறது. இது தமிழின் வளர்ச்சியா? இல்லை சுருக்கமா? எப்படியிருந்தாலும். இது தற்போதய நிலவரம். இன்னும் பத்தாண்டுகளில், பத்திரிக்கைகளை இந்த வடிவத்தில் படிப்பவர்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம்!  பத்திரிக்கைகள் , புத்தகங்கள், கடிதங்கள், காவியங்கள் எல்லாம் அழிந்துவிடுமா? இல்லவே இல்லை, எல்லாம், சகலமும், கைபேசியில் அடங்கிவிடும்

Before you என்பது B4U ஆகிவிட்டது. இது குறுஞ்செய்திகளின் வடிவமா? இன்றைய இளசுகளின் எளிய நடையா?
எப்படியிருந்தாலும், ஒன்று தெளிவாக தெரிகின்றது. மாற்றம் என்பது, மாற்றமுடியாதது . மாற்றத்தை தமிழும் தழுவிகொள்ளவேண்டும். தமிழ், கைபேசியில் விரிவாக உலா வரவேண்டும். கடந்த பத்தாண்டுகளில் கணினியில் மொழிகளின் பரிணாமம் வளர்ச்சி கண்டுள்ளது. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் சீன மொழி , இந்தி மொழி போல் தமிழ் வளரந்துள்ளதா என்பது கேள்விகுறியே.. Unicode முறையில் எல்லா மொழிகளும் கைபேசி, மற்றும் கணினியில் பரவி வருகின்றது. இந்த முறையில், எழுத , படிக்க, பகிர முடியும், இருந்தும் நமக்கு வரும் குறுஞ்செய்திகளில் 100 இல் 2  கூட தமிழல் இல்லை.  தமிழின் பயன்பாடும் பரவலும் மிக மிக குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது.

உதாரணமாக தமிழ் மேல் நான் கொண்ட காதலால், நிதி பற்றி வழக்குதமிழில் வலைப்பூ ஒன்று வரைந்தேன்(radhaconsultancy.blogspot.in)  இதில் Google AdSense ஐ இணைத்திட முயன்றபோது, Google அதை மறுத்தது . காரணம். வலைபூ தமழில் இருந்ததுதான். தமிழ் வலைபூ பார்வையாளர்கள் மிகவும் குறைவாக இருப்பதுதான்! இந்த சூழலில் தமிழை வளர்ப்பது எப்படி? தமிழ் வலைபூ பார்வையாளர்கள் அதிகரிக்கவேண்டும். பார்வையாளர்களை கவர நல்ல தரமான, படைப்புகள் வலம் வரவேண்டும். அவை ஆங்கிலத்தில் இருப்பதைவிட சிறந்ததாக இருக்கவேண்டும். இந்த படைப்புகள் எல்லாம், தமிழ் குறுஞ்செய்தியாக, Whatsapp செய்தியாக, வலைப்பூ வாக பரந்து விரியவேண்டும், இதற்கு முதலில் பார்த்தது போல தாய் தமிழும் மாறவேண்டயிருக்கும். பல தமிழ் செயலிகள் வர வேண்டும் ( apps)

தற்போது, தமிழும், ஆங்கில புலமை பெற்றவரக்ள், பலர். இவர்கள், தனது எண்ணங்களை பகிர நிணைக்கும் போது, பயன்படுத்துவது, ஆங்கிலம். காரணம், எளிய செயலிகள் பல ஆங்கிலத்தில் உள்ளது. கைபேசி மற்றும் கணினி விசை பலகைகள், ஆங்கிலத்திற்கு ஏற்றவாறு உள்ளது. தமிழ் வளர எளிய பல செயலிகள் புழக்கத்தில் வரவேண்டும். Vandhan என்று ஊளிட்டு செய்தால் வந்தான், என்று தரும் Google transliterate செயலி இருக்கிறது, இது போல் நமது தமிழில் சிந்திக்கபடும் கருத்களை தமிழ் வடிவமாக்க எளிய செயிலகள் வேண்டும்.

நாம் ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தட்டச்சுசெய்து  தர, Google மற்றும் Microsoft Crotona  உள்ளது. இதை செய்தியாக , கட்டுரையாக்குவது எளிது. இதேபோல் நாம் தமிழில் பேசியதை அப்படியே தமிழில் தட்டச்சுசெய்து  தர மென்பொருள்கள் வேண்டும், நன்கு உபயோகத்தில் வர வேண்டும். இதன் மூலம், நாம் தமிழில் சிந்திப்பதை, பேசி, தமிழ்  மிண்ணனு வடிவத்தில் எளிதில் மாற்ற முடியுமானல், தமிழில் வலையில் பகிர தடைகள் இருக்காது

இன்னுமொரு உதாரணம், Interest என்பதற்கு வட்டி, என்ற தமிழ் சொல் புழக்கதில் உள்ளது, அதே போல் Dividend என்பதற்கு சரியான சொல்லை களஞ்சியத்தில் தேடலாம், ஆனால் களஞ்சியத்தில் கிடைத்த கலைசொல்லை (ஈவுத்தொகை)  பயன்படுத்தி எழத பெறும் செய்திகள் முதலீட்டாளரை சென்றடையுமா? சந்தேகந்தான்! டிவிடெண்ட் என்று எழதுவது புரிவது போல், தூய தமிழ் சொல் (ஈவுத்தொகை )புரியாத போது தமிழ் வளர, நாமும் மாறுவோமே. தமிழை எளிமையாக்குவோம். நிதர்சனங்களுக்கு ஏற்றவாறு உபயோகிப்போம். தமிழை அழிவிலிருந்து காப்போம்.

முடிவாக, மொழி என்பது, ஒருவர், மற்ற ஒருவருக்கோ, பலருக்கோ, தமது எண்ணத்தை புரிய வைக்க உதவுவது. அது ஒலியாக இருக்கலாம். சைகையாக இருக்கலாம், எண்ணம் புரிந்துவிட்டால், அது தவறில்லை என்று கருதி, மாற்றங்களை தழுவி, முன்னேறலாம்.

No comments:

Post a Comment