Tuesday, 1 May 2018

TitBit - 31

TITBIT: 31 - CHETTINAD: 1

Date: 01-05-2018

பின்னுவது

செட்டிநாட்டு சிந்தனை ஒன்று
சித்திரா பௌர்ணமி 
ஞானம் கிடைத்த நல்ல நாள் 
இன்றிலிருந்து தொடங்கலாம் என்று நினைத்தேன் 
புதிய பதிவுகளை - சற்று மாறுதலாக 
அவை பசுமையான பழமையான நினைவுகள் 
எனக்கு அவை பழமையான நினைவுகள் 
சிலருக்கு புதிய தகவல்கள்

பள்ளி நாட்களில் பார்த்ததுண்டு 
பள்ளத்தூருக்கு பக்கத்தில்
கண்ணுதுணியிலும், காடா 'கிளாத்திலும்'
ஆச்சிகள் கைவண்ணத்தில்
வண்ண வண்ண நூல்களில்  
சின்ன சின்ன தலையணை உறைகளில்
ஒரு கைவந்த கலை - பின்னுவது
இது அன்று 
இன்று ஊசி எடுத்த கைகள் 
கைபேசிகளை சதா தொட்டுகொண்டிருக்கும்
காலத்தில் இந்தக் கலைகள்  
அழிவதில் ஆச்சரியமேதுமில்லை 
படத்திலாவது பார்த்துக் கொள்வோம் 
அதுவும் அழிந்து போவதற்குள்


No comments:

Post a Comment