My recent article on PHARMA FUNDS has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.
பார்மா ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?
சந்தை மீண்டும் உச்சத்தில்! மும்பை சென்செக்ஸ் குறியீடு முப்பத்தி ஏழாயிரத்தற்கும் மேல் (Sensex @ 37000+). முன்னர் முதலீடு செய்தவர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில், சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் சற்று வருத்தத்தில். எல்லாம் முடிந்து விட்டது, போய்விட்டது என்று எவரும் எண்ண வேண்டாம். சந்தை உச்சம் என்பது நிரந்தரம் இல்லை. எந்த நேரத்திலும் சந்தையில் லாபம் பெற வழிவகை இருந்துகொண்டே இருக்கின்றது. ஏதாவது ஒரு ரூபத்தில் சந்தர்ப்பம் நமக்கு வரும். அதுபோன்று இப்போதும் ஒரு சந்தர்ப்பம் இருப்பதாகவே பொதுவாக தோன்றுகின்றது. அதுதான் உடல்நலம் பேணும் பங்குகளும் அது சார்ந்து முதலீடு செய்யும் ஃபண்டுகளும். இதை பார்மா அண்ட் ஹெல்த் கேர் பண்ட் என்று கூறுவார்கள். இப்போது இது பற்றி விரிவாக பார்ப்போமா.
முன்னர் இந்த பார்மா மற்றும் ஹெல்த்கேர் பண்டுகள் நல்ல வருமானம் தந்து வந்தது. சமீப காலங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகளால் மாத்திரை தயாரிக்கும் பார்மா பங்குகளின் வருமான தன்மை குறைந்து, இந்த பண்டுகள் செயல்பாடு சிறப்பாக இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த நிலைமை மாறி வருகின்றது. பி.இ. (PE) 34 என்று இருந்து வந்த பார்மா பங்குகள் தற்போது பி.இ. (PE) 25 என்றவாறு உள்ளது. எனவே பங்குகளின் விலை குறையும்போது அந்தப் பங்குகளை, அது சார்ந்த பண்டுகளை வாங்குவது சரியான செயலாகும். தற்போது இந்த பார்மா மற்றும் ஹெல்த்கேர் வகை ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதற்கு என்னென்ன காரணங்கள் ஏதுவாக உள்ளது என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.
பார்மா மற்றும் ஹெல்த்கேர் ஃபண்டுகளில் முதலீடு காரணிகள்
காரணி 1 - இந்திய மாத்திரைகள் தயாரிப்பில் முன்னேற்றம்
தற்போது நமது இந்திய பார்மா நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஏற்றவாறு தங்களது உற்பத்தி முறையை மாற்றிக் கொண்டு வந்து அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியை (US FDA) பெற்று திரும்பவும் தமது ஏற்றுமதியை அதிகரிக்கும் நிலைமை உண்டாகி வருகின்றது. இது ஒரு மிகப் பெரிய மாற்றம் ஆகும். எனவே இந்தப் பங்குகள் மிகவும் சிறப்பாக செயல்பட சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது. அமெரிக்கச் சந்தையில் விற்கும் இந்திய மருந்துகளின் சதவிகிதம் 2010 ல் 20% ஆக இருந்தது. 2017 இது 35% ஆக ஏறி வருகின்றது. எனவே வரும் காலங்களிலும் இந்திய மருத்துவப் பொருட்கள் அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி அதிகரிக்க வாய்புகள் அதிகம்.
காரணி 2 - சந்தையின் ஏற்ற இறக்க சுழற்சி
நாம் முன்னர் கூறியபடி இந்த ஃபார்மா பங்குகளின் சந்தை குறியீடு எண் உச்சத்திலிருந்து குறைந்து கொண்டே வந்தது. தற்சமயம் குறைந்த நிலையில் உள்ளது. இது மேல் முகமாக ஏறுவதற்க்கு ஏதுவாக உள்ளது. இந்த சந்தையின் போக்கு மாறுவதை கண்டறிந்து ஏறுமுகமாக மாறும் தொடக்கத்தில் முதலீடு செய்வதே முதலீட்டிற்க்கு ஏற்ற காலம். இந்த வகையில் மருத்துவம் மற்றும் பார்மா உடல்நலம் பேணும் பங்குகளும், அது சார்ந்த பண்டுகளும் வருங்காலங்களில் நல்ல லாபம் பெற வாய்புகள் உள்ளது. கடந்த மூன்று வருட நிப்டி பார்மா குறியீட்டு எண்ணின் வரைபடத்தை கீழே படத்தில் காணலாம்.
காரணி 3 - உடல் நிலை மாற்றங்கள்
இதய நோய், சர்க்கரை நோய், கேன்சர் போன்ற ஆட் கொல்லி நோய்கள நமது இந்தியர்களை அதிகமாக தாக்கி வருகின்றது. இந்த நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் கூடிக் கொண்டே போகிறது. 2008 இல் இருந்ததை விட இப்பொழுது நான்கு மடங்கு அதிகமாக இருக்கின்றது. முன்னர் வயதான காலத்தில் வந்த நோய்கள் இப்போது சில வருடங்கள் முன்னதாகவே தாக்குகின்றது. இளைஞர்களும், யுவதிகளும் பாதிக்கபடுகிறாற்கள். எனவே உடல்நலம் பேணுவதற்கும் அதற்குத் தேவையான மாத்திரைகளும் மற்றும் இது சம்பந்தமான மருத்துவர் சேவைகளுக்கும் தேவை அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
காரணி 4 - மருத்துவ சேவைகள் அதிகரிப்பு
- தற்சமயம் தனிநபர் வருமானம் அதிகரிப்பதாலும் சிறுசிறு வியாதிகளுக்கும் மருத்துவச் சேவையை நாடுபவர்கள் அதிகம்.
- தற்சமயம் இந்தியாவில் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 6%, 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28%. இதனால் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி வயதானவர்களாக இருக்கிறார்கள். வயதானவர்களுக்கு மருத்துவச் சேவை அதிகம்தானே.
- அயல் நாடுகளிலிருந்து மருத்துவ தேவைகளுக்காக இந்தியா வருபவர்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
- மருத்துவ செலவின் பணவீக்கம், சாதாரண பணவீக்கத்தை விட அதிகமாக இருக்கின்றது எனவே மருத்துவ சேவைக்கு நாம் செலவழிக்கும் பணம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
காரணி 5 - இன்சூரன்ஸ்'ம் மருத்துவம் (மருத்துவ காப்பீடுகள் - Medical Insurance)
நாம் ஆயுட்கால காப்பீடு அல்லது லைஃப் இன்சூரன்ஸ் எடுத்து பழக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் வாழும் ஒவ்வொருவரும் இன்சூரன்ஸ் வைத்திருக்கிறோம். அதே சமயம் நாம் ஒவ்வொருவரும் உடல்நலம் பேணும் காப்பீடுகள் எடுத்தது இல்லை. உடல் நலம் பேண ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியம் என்ற கருத்து மக்களுக்கு புரிந்து வருகின்றது. மேலும் தமிழ்நாட்டில் அரசாங்கமே மருத்துவ காப்பீடுகள் வழங்கி வருகின்றது. இதுபோன்று இந்திய அளவிலான மருத்துவ காப்பீடு பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்தத் இன்சூரன்ஸ் துறை வளர்வதால் மருத்துவச் சேவைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
முடிவாக….
இது போன்ற மருத்துவம் சார்ந்த பண்டுகள் தற்சமயம் எஸ்.பி.ஐ ( SBI), ரிலையன்ஸ் ( Reliance), டாட்டா ( Tata) மற்றும் யூ.டி.ஐ (UTI) நிறுவனங்கள் வழங்கி வருகின்றது. வருங்காலத்தில் நல்ல லாபம் வரும் என்ற நோக்கால் தற்சமயம் ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) மற்றும் மிரே ( Mirae) நிறுவனங்கள் புதிதாக வழங்கி வருகின்றது. தற்போது இருக்கும் பண்டுகளின் ஒன்று அல்லது மூன்று வருட லாபம் பெரிதாக தரவில்லை. முன்னர் கூறியபடி இதில் லாபம் பெறுவதற்கு வாய்புகள் மேற்கூறிய காரணங்களால் இருக்கிறது என்று நம்புவதால் இந்த பண்டிகளில் எஸ்.ஐ.பி (SIP) முறையில் முதலீடு செய்யலாம். ஒன்று மட்டும் முதலீட்டாளர்கள் நன்கு நினைவில் கொள்ள வேண்டும், லாபம் மற்றும் ரிஸ்க் வரைபடத்தில் (Risk vs Return chart) ‘லிக்வுட் பண்டுகள்’ குறைந்த லாபம், குறைந்த ரிஸ்க். அதேசமயம் ‘மருத்துவ பண்டுகள்’ அதிக லாபம் அதிக ரிஸ்க். எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்ய கூடாது. ரிஸ்க் பற்றி புரிந்தவர்கள், பண்டுகளில் அனுபவம் உள்ளவர்கள், இது போண்ற மருத்துவ பண்டுகளில் முதலீடு செய்து லாபம் பெறலாம். மொத்த முதலீட்டில் 10% இந்த செக்டார் பண்டுகளில் ( Sector funds) முதலீடு செய்யலாம்.
Details of Pharma and Health care funds - Returns
in %
|
|||||
Mutual Fund
Scheme
|
AUM
|
1yr
|
2yr
|
3yr
|
5yr
|
Reliance
Pharma Fund (G)
|
1,695.82
|
9
|
1.1
|
1.6
|
14.8
|
Tata India
Pharma & HealthCare - RP (G)
|
113.52
|
-2.2
|
-5.8
|
||
UTI
Healthcare Fund (G)
|
362.92
|
-2.3
|
-4.4
|
-3.5
|
9.9
|
SBI
Healthcare Opportunities (G)
|
828.41
|
-10.6
|
-10.6
|
-6.6
|
11.3
|
ICICI
PH&D (P.H.D) Fund - RP (G)
|
New
|
||||
Mirae Asset
HF - Regular (G)
|
New
|
||||
CATEGORY
AVERAGE
|
-1.9
|
-3.5
|
-1.7
|
5.9
|
No comments:
Post a Comment