Sunday, 12 August 2018

சந்தையில் ஏற்றம்! இப்போது என் செய்வது?

My recent article on EQUITY SAVINGS FUND has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.

பங்கு சார்ந்த முதலீட்டு திட்டம் - ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் (Equity savings fund)

சந்தை ஏற்றத்தில் இருக்கிறது, இது எங்கு போய் முடியும் என்று யாமறியோம். பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்க இதில் பி இ (PE) ஏறி கொண்டே உள்ளது. பங்குகள் விலை அதிகம் என்பதைக் காண்பிக்கிறது. இந்த தருணம் புதிய முதலீட்டுக்கு உகந்த தருணமா? முற்றிலும் ஆம் என்று கூற முடியவில்லை. அதுவும் ஈக்விட்டி (Equity) அல்லது பங்கு சார்ந்த முதலீட்டில் ஒரே முறையில் முதலீடு செய்வது நல்லதல்ல என்பது பலரது கருத்து. பின் இந்த காலகட்டத்தில் எவ்வாறு முதலீடு செய்வது? நாம் முன்னர் கூறியபடி எல்லாத் தருணங்களிலும் முதலீடு செய்ய சந்தையில் திட்டங்கள் பல இருக்கு. சந்தையும் பல வகைகளில் வழிவகை செய்கிறது. அதுபோல் இந்த காலக்கட்டத்திலும், முதலீடு செய்ய ஒரு வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் உள்ளது. அது என்ன? அது தான் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் எனப்படும் பங்கும் கடனும் கலந்த கலப்பின திட்டம். 



கலப்பின திட்டம்

இந்த கலப்பின  வகைகளில் நான்கு வகை உள்ளது:
  1. கன்சர்வேடிவ் ( Conservative Hybrid )
  2. ஈக்விட்டி சேவிங்ஸ் ( Equity Savings Fund)
  3. டைனமிக் அசெட் அலகேஷன் ( Dynamic asset allocation)
  4. அக்கிரசிவ் ( Aggressive Hybrid)
இதில் முதல் வகையான கன்சர்வேடிவ் (Conservative Hybrid) ல், ரிஸ்க் குறைவாக இருந்தாலும் லாபமும் குறைவாக இருக்கும்.  இதில் வரும் லாபத்திற்கு வரி சற்று அதிகமாக இருக்கும். வரி என்ற நோக்கில் பார்க்கும்போது  அவ்வளவு பயன் அளிப்பதில்லை. அதே நேரத்தில் கடைசியாக உள்ள அக்கிரசிவ் ( Aggressive Hybrid) திட்டம் பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டமாக கருதப்படுவதால், வரி குறைவு. அதே சமயத்தில் இதில் பங்கு அதிகமாக உள்ளது. இதனால் ரிஸ்க் அதிகமாகிறது. எனவே எதை தேர்ந்தெடுப்பது? லாபம் அதிகமாக இருக்க வேண்டும், ரிஸ்க் மற்றும் வரி குறைவாக இருக்குமாறு பார்த்தால் அதற்கு நம் கண்முன் முதலில் வருவது ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டமே!

ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டம்



இதுவும் ஒரு கலப்பின  திட்டமே. இந்த திட்டங்களில் மூன்று வகையான முதலீட்டு முறையில்  முதலீடு  செய்யப்படுகின்றது.  முதல் வகையாக நேரடியாக பங்குகளில் (Equity)  சுமார் 35%, கடன் (debt) பத்திரங்களில் 33%, மீதம் டெரிவேட்டிவ் ( Derivative arbitrage)  என்ற வகையில் 32%, ஆக 100% முதலீடு  செய்யப்படுகின்றது. 


3 X 33 சதவிகித முறையில் இது முடிவு செய்யப்படுகிறது. இதில் மூன்றல் ஒரு பகுதி, பங்குகளில்  முதலீடு செய்வதால், சற்று லாபம் கூட வர வாய்புள்ளது.  அதே சமயம் டெரிவேட்டிவ்ஸ் முதலீடு பங்குகள் முதலீடு  என்ற வகையில் வருவதால்  இந்த திட்டங்கள் வரி பார்வையில் பங்கு திட்டமாக பார்க்கபடுவதால் வரி குறைவு. ஆக இதில் வரும் லாபத்திற்கு வரும் வரி குறைவாக உள்ளது. 

டெரிவேட்டிவ் ஆர்பிட்ரேஸ்

இரண்டு சந்தைகளில், வரத்தகமாகும் பங்குகளின் விலை சற்று கூடி, குறைந்து இருக்கும்.  இந்த இரு சந்தைகளில் விற்கப்படும் பங்குகளில் எதிர்மறையான முதலீடு செய்யப்படும் போது அதாவது ஒன்றில் வாங்குவது மற்றதில் விற்பது.  இதுபோன்ற சந்தை பரிவர்த்தனையில் லாப வாய்ப்புகள் நடைமுறையில் உள்ளது. அந்த நடைமுறையை பயன்படுத்துவது டெரிவேட்டிவ் ஆர்பிட்ரேஸ் என்பது ஆகும். எதிர்மறையான முதலீடு செய்வதால் ரிஸ்க் மிக குறைவு. முதலீடு பங்குகளை சாரந்தே இருப்பதால் இது பங்கு முதலீடாக கொள்ளபடும். பங்கில் முதலீடு, ஆனால் பங்கிற்கான ரிஸ்க் குறைவு என்பதே இதன் சிறபம்சம்.


லாப விகிதங்கள் 

சராசரியாக 10% அருகில் சற்று கூடுதலாகவும் குறைவாகவும் லாபம் கிடைக்க ஏதுவாக உள்ளது. அருகில் இருக்கும் அட்டணை பார்க்கவும். லாபம்  12% மேலும் கிடைக்க வாய்ப்பு இருப்பது தெரிகிறது. லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளது.  இது வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் லாபத்தை விட கூட  கிடைப்பதற்கு வாய்யுபுள்ளதால் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


ஆக இந்த திட்டங்களில் 
  • லாபம் கூடுதலாக இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது
  • வரி சுமை  குறைவாக இருக்கும்
  • இவற்றில் ரிஸ்க் குறைவு 




அதிக முதலீடுகள் செய்யப்படும் திட்டம்

2015 முதல் 2018 வரை, இந்த வகை திட்டங்களில் முதலீடு அதிகரித்து வருகின்றது. 2015-ல் சுமார் Rs 5000 கோடி தற்போது Rs 22126 கோடி ஆக உயர்ந்துள்ளது.  எனவே இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. 


இந்த மேற்கூறிய காரணங்களால் இந்த வகையான திட்டங்கள் வங்கி வைப்பு ( Bank fixed deposit) நிதிக்கு ஒரு மாற்றாக கருதலாம்.




நடப்பு திட்டங்கள்

நிறைய நிதி நிறுவனங்கள் இந்த ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது . 


சந்தைக்கு வந்துள்ள புதிய ஈக்விட்டி சேவிங்ஸ் திட்டங்கள்

தற்போது யு.டி.ஐ  நிறுவனமும் இதுபோன்று  திட்டங்களை ஆகஸ்ட் 10 முதல் வழங்குகிறது (Aug-10 to Aug-24). பிராங்களின் இதுபோன்று  திட்டங்களை  சந்தைக்கு கொண்டு வருகின்றது ( August 3 to Aug 17).



இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு எங்களுக்கு மின்னஞ்சல்  அனுப்பவும். Mailto: https://radhaconsultancy.blogspot.com/2016/10/email-me.html


No comments:

Post a Comment