Wednesday, 1 May 2019

ஈக்விட்டி மூலதன ஆதாய வரி கணக்கீடு

Click here to  to read the article directly from Nanayam Vikatan website.

Click here to read the full version of the same article in the blog.

Grandfathering concept in capital gain Calculations


வரி தாக்கல் செய்ய ரெடியாவோம்...

புது நிதியாண்டு பிறந்துவிட்டது. வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நேரம். நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் மூலதன ஆதாயம் (Capital gains) வரிக் கட்டுவதோடு, வரிக் கணக்கும் தாக்கல் செய்ய வேண்டும். முதலீட்டாளர்களுக்கு இது ஒரு முக்கியமான வேலை. 

நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு 2018 ஏப்ரல் 1  முதல், நிதி ஆண்டில் ரூ. 1 லட்சத்துக்கு மேற்பட்ட  நீண்ட கால மூலதன  ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. 

ஈக்விட்டி ஆதாய வரி  முறை (Grandfathering in equity capital gains)

2018, ஜனவரி 31 - க்கு முன் கிடைத்த மூலதன ஆதாயத்துக்கு வரிக் கட்ட வேண்டியதில்லை. அதேசமயம் 2018, ஜனவரி 31  அதற்குப் பிறகு கிடைத்த ஆதாயத்துக்கு ரூ. 1 லட்சம் வரை வரி கட்டத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட தொகைக்கு 10% கட்ட வேண்டும். இது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால், பல ஈக்விட்டி ஃபண்ட்களிலும் நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்து நீண்ட கால மூலதன ஆதாயம் சம்பாதித்தவர்களுக்கு, மூலதன ஆதாய வரியை எப்படி கணக்கிடுவது என்பதில் குழப்பம். 

பொதுவாக, மூலதன  ஆதாய வரி கணக்கிடும் போது வாங்கிய விலை மற்றும் விற்ற விலை  தேவைப்படும்.  தற்போது  மூலதன ஆதாய வரி கணக்கிட வாங்கிய விலை, விற்ற விலை மற்றும் 2018, 31 ஜனவரி 31-ல்  சந்தை விலை ஆகிய விவரங்கள் தேவை. 
2018-19-ம் நிதி ஆண்டில் நீங்கள் பங்கு அல்லது ஈக்விட்டி ஃபண்ட் அல்லது போர்ட்ஃபோலியோவில் 65%-க்கு மேல் பங்குகளை கொண்ட ஹைபிரீட் ஃபண்ட் ஆகியவற்றை விற்றிருந்தால் 31-01-18 அன்று பங்கின் விலை அல்லது என்.ஏ .வி மதிப்பு தேவை.            

இந்த முறையில், 31. 1.2018  முன் உள்ள மூலதன ஆதாயத்துக்கு  வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் உள்ள  மூலதன ஆதாயம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். 

வாங்கிய விலை, விற்ற விலை, 31. 1.2018 விலை, மூலதன ஆதாயம் ஆகியவற்றின் அடிப்படையில் மூலதன ஆதாயம் கணக்கிடப்படுகிறது. 

விற்ற விலை, வாங்கிய விலையை விட அதிகமாகவும்,   31. 1.2018 அன்றுள்ள விலையை விடவும் அதிகமாக இருந்தால் 31. 1.2018 அன்றுள்ள விலையை புதிய வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும்
  

விற்ற விலை, வாங்கிய விலை மற்றும் 31. 1.2018 அன்றுள்ள விலையை விட குறைவாக இருந்தால் வாங்கிய விலை, புதிய வாங்கிய விலையாக எடுத்துக்கொள்ளப்படும்.  


சூழ்நிலை 1:
பங்கு வாங்கிய விலை                         : ரூ.100 
ஓராண்டுக்கு பிறகு விற்ற விலை : ரூ.135 
 31 -1 -18  அன்று விலை                            :  ரூ. 120
 புதிய வாங்கிய விலை                        : ரூ. 120 
மூலதன  ஆதாயம்                                  : ரூ. 15 

சூழ்நிலை 2:
பங்கு வாங்கிய விலை                         : ரூ.100 
ஓராண்டுக்கு பிறகு விற்ற விலை : ரூ.95 
 31 -1 -18  அன்று விலை                            : ரூ. 90
 புதிய வாங்கிய விலை                        : ரூ. 100 
மூலதன  ஆதாயம்                                  :  ரூ. -5

சூழ்நிலை 3:
பங்கு வாங்கிய விலை                         : ரூ.100 
ஓராண்டுக்கு பிறகு விற்ற விலை : ரூ.85 
 31 -1 -18  அன்று விலை                            :  ரூ. 120
 புதிய வாங்கிய விலை                        : ரூ. 100
மூலதன  ஆதாயம்                                  : ரூ. -15

சூழ்நிலை 4:
பங்கு வாங்கிய விலை                         : ரூ.100 
ஓராண்டுக்கு பிறகு விற்ற விலை : ரூ.110 
 31 -1 -18  அன்று விலை                            :  ரூ. 120
 புதிய வாங்கிய விலை                        : ரூ. 110 
மூலதன  ஆதாயம்                                  : ரூ. 0

இந்த calculations விரிவாக புரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 

பெட்டி செய்தி 
செபியின் திட்ட மாற்றங்களும் வரியும் - ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமீபத்தில் செபி உத்தரவின்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிறைய திட்டங்களை சேர்த்தது.  ஒன்றிலிருந்து ஒன்றுருக்கு நமது யூனிட்டுகளை மாற்றியது. இதனால் நாம் வைத்திருக்கும் திட்டங்களின் பெயர்கள் மாறி இருக்கலாம், யூனிட்டுகள் மாறி இருக்கலாம். வரி என்று பார்க்கும்போது இதுபோல் திட்டங்களை சேர்த்ததால் வரும் மாற்றங்களுக்கு  நாம் எந்த வரியும் கட்ட வேண்டியது இல்லை. நாம் திட்ட மாறுதல் இல்லாமல் ஒரு திட்டத்தில் இருந்து மறு திட்டத்திற்கு விருப்பப்பட்டு மாறி இருந்தால் அல்லது நாம் விருப்பப்பட்டு விற்று இருந்தால் அது சாதாரண பரிமாற்றம் என்று சொல்லப்பட்டு, வரி விதிக்கப்படும். செபி உத்தரவுபடி சேரும்போது வரிவிலக்கு உள்ளது என்பதை நினைவில் கொண்டு வரி கணக்கீடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment