Wednesday, 1 May 2019

ஈக்விட்டி ஆதாய வரி மாறுதலும் கணக்கிடும் முறையும்

Grandfathering concept in capital gain Calculations


வரி தாக்கல் செய்ய ரெடியாவோம்...
புது நிதியாண்டு.  வரி தாக்கல் செய்யும் நேரம். டிவிடண்ட் வருமானம் (Dividend), ஆதாய வரி வருமானம் (Capital gains),  என்று பலவகை வரவுகளை, வரவு வைத்து நிகர வரிக்குட்பட்ட ஆதாய தொகையை கணக்கிட்டு, வரி தாக்கல் செய்ய வேண்டும் ( Income tax return filing).  முதலீட்டாளர்களுக்கு இது ஒரு முக்கியமான வேலை, அதே சமயம்  இது சற்று சிரமமான வேலை என்று எண்ணுபவர்களே அதிகம்.  முதலீட்டை கண்டுபிடித்து லாபகரமாய் முதலீடு செய்வது கூட எளிதாக இருக்கிறது பலருக்கு, ஆனால் ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கு உரிய வரியை செலுத்துவதற்கு மிகுந்த சிரமம் என்று தோன்றுகின்றது. ஆதாயம் வரும் போது வரியை குறைக்க வழி தேடலாம் , தவிர்க்க வழி இல்லை. இப்போது சமீபத்தில் வரி தாக்கல் செய்வதில் நடைமுறைக்கு வந்த இரண்டு மாற்றஙகளை முதலில் தெரிந்துகொள்வது அவசியம்.

வரி தாக்கல்  மாற்றங்கள்
வரி தாக்கல் செய்வதில் முன்னருக்கும் இப்போதைக்கும் வேறுபாடுகள் உள்ளது. 
  1. உரிய தேதியில் வரித் தாக்கல் செய்யாவிடில் அபராத தொகையுடன் வரித் தாக்கல் செய்ய வேண்டும். எனவே வரியை தாக்கல் செய்வதே உசிதமான காரியம். 
  2. முன்னர் செய்த ஈக்விட்டி ஆதாய வரி கணக்கிடும் முறைக்கும் இப்போது நடைமுறையில்  ஈக்விட்டி ஆதாய வரி கணக்கிடும் முறைக்கும் மாறுதல்கள் உள்ளது.  முன்னர் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டிற்கு நீண்ட நாள் ஆதாயத்திற்கு வரியில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் ஈக்விட்டி சார்ந்த முதலீட்டிற்கு நீண்ட நாள் ஆதாயத்திற்கு  தற்போது ஒரு லட்சத்திற்கு மேல் வரி செலுத்த வேண்டும். 


புதிய ஈக்விட்டி ஆதாய வரி  முறை - Grandfathering in equity capital gains

புதிய ஈக்விட்டி ஆதாய வரி  முறையில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் 31-01-18 இற்கு முன்னர் நமக்கு கிடைத்த ஆதாயத்திற்கு  வரி இல்லை. அதேசமயம் 31-01-18  அதற்குப் பிறகு கிடைத்த ஆதாயத்துக்கு ஒரு லட்சத்திற்கு மேல் வரி கட்ட வேண்டும். பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பல திட்டங்களும் பங்குகளும் வைத்திருப்பவர்களுக்கு, இதை எவ்வாறு  கண்கிடுவது என்பது புரியாத புதிர்.  இந்த முறையில் இரண்டு முறை லாபத்தை கணக்கிட்டு அதற்கேற்றவாறு முடிவாக நமக்கு கிடைத்த  நிகர ஆதாயத்துக்கு ஏற்ற வரியை கட்ட வேண்டும். இது உண்மையிலேயே சற்று விரிவான கணக்கிட்டு முறையாக உள்ளது. முதலில் எவ்வாறு ஆதாய வரி கணக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம் (Steps involved in arriving capital gains). பின்னர் அதை எக்ஸெல் மென்பொருள் கொண்டு எவ்வாறு கணக்கிடுவது என்பதை   உதாரணங்களோடு பார்ப்போம் (using excel to arrive capital gain) . 

சிலர் நினைக்கலாம் ஆடிட்டர் அல்லது ஆன்லைன் தளங்கள் (Online portals) மூலம் இந்த ஆதாய வரியை பெற்றுக்கொள்ள வழி வகை இருக்கும்  போது நமக்கு கடினமான கணக்கீட்டு முறை எதற்கு என்று இருந்தபோதிலும் வரித் தாக்கல் செய்யும்போது இவ்வளவு வரி என்று முடிவாக கையெழுத்திடுவது நாம்தானே.  எனவே கையெழுத்திடும் முன்பு வரி சரியாக கண்கிடபட்டுள்ளதா என்று தெரிந்து, புரிந்து செய்வதே நலம். எனவே நீங்கள் ஆதாய வரியை கணக்கிட்டாலும் சரி, உங்களுக்காக யாராவது ஆதாய வரியை கணக்கிட்டாலும் அதை சரி பார்ப்பதற்கும் புரிதல் அவசியம்.  இந்த நோக்கத்தோடு மேலும் படிக்கலாமே...

ஈக்விட்டி ஆதாய வரி  எங்கெங்கே பொருந்தும் - தேவையான காரணிகள்  - Applicability of Grandfathering in equity capital gain

இந்த புதிய முறை ஆதாய வரி கணக்கீடு எந்தெந்த நேரங்களில் செல்லுபடியாகும் என்று இப்போது பார்ப்போம்.
  1. நீண்ட நாள் ஈக்விட்டி ஆதாய வரிக்கு மட்டுமே  பொருந்தும் குறைந்த கால ஆதாய வரிக்கு எந்த சலுகைகளும் இதில் இல்லை. (Long term capital gains and not for short term capital gain)
  2. பங்கும், பங்கு சம்பந்தப்பட்ட முதலீடுகளில் வரும் ஆதாயத்திற்கு மட்டுமே பொருந்தும். கடன் சார்ந்து உள்ள திட்டங்களுக் பொருந்தாது. (Equity based investments and not for debt based investments)
  3. நேரடியாக பங்கு வாங்கி விற்கும் போதும், மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி  திட்டங்களில் முதலீடு செய்வதன் போதும், மற்றும் கலப்பின திட்டங்களிலும் ஈக்விட்டி வரிக்கு உட்பட்ட திட்டங்களுக்கு இந்த வகை கணக்கீடு பொருந்தும்.
  4. முன்னர் கூறியபடி நாம் பங்கையோ, மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி  திட்டங்களையோ 31-01-18 இதற்கு முன்னர் வாங்கியிருக்க வேண்டும். 
  5. நாம் பங்கையோ, மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி  திட்டங்களையோ 31 -01-18 ற்குப் பின் விற்று அதில் ஆதாயம் பெற்றிருக்க வேண்டும். 


படிப்படியாக ஆதாய வரி கணக்கிடும் புதிய முறை - Calculation of Grandfathering in equity capital gain 

முன்னர் ஆதாய வரி கணக்கிடும் போது இரண்டு வகையான தகவல் தேவை ( வாங்கிய விலை மற்றும் விற்ற விலை). தற்போது ஆதாய வரி கணக்கிடுவதற்கு மூன்று வகையான  தகவல்கள் தேவை ( வாங்கிய விலை , விற்ற விலை மற்றும் 31 ஜனவரி 18  சந்தை விலை)  நன்றாக நினைவில் கொள்ளுங்கள் வாங்கிய மற்றும் விற்ற விலையில் புதியமுறையில் ஆதாய வரி கணக்கிட முடியாது  31 ஜனவரி 18  சந்தை விலை அவசியம்  வேண்டும்.

  1. ஒன்னு ஒன்னு இரண்டாயிரத்து (31-01-18) பதினெட்டு அன்று நமது பங்கின் விலை அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் என்.எ.வி தெரிந்து கொள்ள வேண்டும் -(MP310118)
  2. நாம்  விற்ற எல்லா முதலீட்டிலும் எந்தெந்த முதலீடு இந்த புதிய முறை ஆதாய வரிக்கு உட்பட்டது என்று பார்க்க வேண்டும். அதைப் பார்ப்பதற்கு 

  • முதலில் விற்ற தேதியை பார்க்க வேண்டும் Sdate (Sold Date) > 31-01-2018
  • பின்னர் வாங்கிய தேதியை பார்க்க வேண்டும் BDate (Bought Date) < 31-01-2018
  • மூன்றாவது அது பங்கு அல்லது கடன் என்று பார்க்க வேண்டும் (eq or db)

3. அடுத்த முக்கியமான படி நாம் வாங்கிய விலையை புதிய விலைக்கு மாற்றுவது (MPRevised) அல்லது வாங்கிய விலையை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மாற்றிக் கொள்வது. இந்த வகையாக வாங்கிய விலையை புதிய விலைக்கு மாற்றுவதால் 31-1-18  முன் உள்ள ஆதாயம் கணக்கில் வராது, ( வரி விலக்காகிறது)  பின் உள்ள ஆதாயம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். இங்கே புதிய முறையில் வாங்கிய விலையை மாற்றுவது சில தருணங்களில் மட்டும் செல்லும் மற்ற தருணங்களில் செல்லாது. அதைக் கீழ்க்கண்ட வகைகளில் பார்க்கலாம்.

a. விற்ற விலை மற்ற விலைகளை விட அதிகமாக இருப்பது 
{SP > MP310118 > BP then MPRevised = MP310118} (Refer sno 2)

b. MP310118 சந்தை விலை மற்ற விலைகளை விட குறைவாக இருப்பது 
{MP310118 < BP and MP310118 < SP then MPRevised = BP} (Refer sno 3)

c. விற்ற விலை மற்ற விலைகளை விட குறைவாக இருப்பது 
{SP < MP310118 < BP then MPRevised = SP} (Refer sno 5)

4. முடிவாக புதிய முறையில் வாங்கிய விலையை மாற்றிய பிறகு இனி புதிய வாங்கிய தொகையைக் கணக்கிட வேண்டும் -(BAmountR)
5. புதிய வாங்கிய தொகை மற்றும்  நாம் விற்ற தொகைக்கும் நிகர லாபத்தை, ஆதாயத்தைப் பார்க்க வேண்டும். இது நமது சாதாரண லாபத்திற்கு சரிசமமாக இருக்கும், அல்லது குறைவாக இருக்க வேண்டும். கூடுதலாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை  - Revised profit and loss amount(PnLR)
6. இவ்வாறு நாம் புதிய முறையில் ஆதாயம் கணக்கிட்ட பிறகு  வழக்கம் போல் இணடக்ஸேசன் செய்து வரி கட்டலாம் indexation.

கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்.


முடிவாக 

ஆதாய வரியை நீங்களே கணக்கிட்டாலும் சரி, அடுத்தவர்கள் கணக்கிட்டாலும் சரி,  புதிய ஆதாயக் கணக்கீடு வரியின்  கட்டளைகளுக்கு ஏற்றவாறு கணக்கீடு செய்யப்பட்டுள்ளதா, மேற்க்சகூரிய எல்லா தருணங்களுக்கும்  சரியாக பொருந்துகிறதா என்று  பார்த்து பின்னர் வரி தாக்கல் செலுத்தவும்.

பெட்டி செய்தி 

செபியின் திட்ட மாற்றங்களும் வரியும் - ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சமீபத்தில் செபி உத்தரவின்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிறைய திட்டங்களை சேர்த்தது.  ஒன்றிலிருந்து ஒன்றுருக்கு நமது யூனிட்டுகளை மாற்றியது. இதனால் நாம் வைத்திருக்கும் திட்டங்களின் பெயர்கள் மாறி இருக்கலாம், யூனிட்டுகள் மாறி இருக்கலாம். வரி என்று பார்க்கும்போது இதுபோல் திட்டங்களை சேர்த்ததால் வரும் மாற்றங்களுக்கு  நாம் எந்த வரியும் கட்ட வேண்டியது இல்லை. நாம் திட்ட மாறுதல் இல்லாமல் ஒரு திட்டத்தில் இருந்து மறு திட்டத்திற்கு விருப்பப்பட்டு மாறி இருந்தால் அல்லது நாம் விருப்பப்பட்டு விற்று இருந்தால் அது சாதாரண பரிமாற்றம் என்று சொல்லப்பட்டு, வரி விதிக்கப்படும். செபி உத்தரவுபடி சேரும்போது வரிவிலக்கு உள்ளது என்பதை நினைவில் கொண்டு வரி கணக்கீடு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment