Monday 27 April 2020


கோவிட் 19ன்  உலகத்தில் எதிர்காலத்தை நோக்கி


கோவிட் 19

உலகம் நாலையே அழிந்துவிடும் என்று யராவது பேசினால் புன்னகையோடு தவிர்த்துவிடுங்கள். மாறாக யாராவது எல்லாம் தற்காலிகமானது "லாக் டவுன்" ( Lockdown) முடிந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னாலும்  புன்னகையோடு நகர்ந்து விடுங்கள். எப்போதும் பயத்தை தவிர்த்துவிடுங்கள், புன்னகையை தவிர்க்க வேண்டாம். புன்னகையோடு இருங்கள்  நடப்பது அனைத்தும் நண்மைக்கே என்று.  சுணாமி தெரியும், பூகம்பம் புரியும். டிசம்பரில்  ஆரம்பித்த்து மார்ச்சில் தெரிந்தது. ஏப்ரலில் ஆடி போய்விட்டோம். அடைந்து கிடைக்கின்றோம். காரணம் கோவிட் 19. இதுவும் இயற்கையே. இயல்பாய் இருப்போம்

கோவிட் 19 ன் தாக்கங்கள்


1 உடல் நலம் சார்ந்த்து
2 பொருளாதார நெருக்கடிகள்
3 சமுதாய விளைவுகள்

கோவிட் 19 ன் உடல் நல தாக்கங்கள் பரவலாக உள்ளது, பரவுவதும் புரிகின்றது அதன் மற்ற விளைவுகளான பொருளாதார தாக்கங்கள் எவ்வளவு புரிந்தது. மேலும்  எவ்வளவு தாக்கத்தை நாம் சந்திக்க வேண்டி இருகத் போகின்றது என்று  இன்னும் பரவலாக புரியவில்லை . தெரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பிளாக்ஸ்வன் ஈவன்ட்  ( Black Swan Event)


இது ஒரு பிளாக்ஸ்வன் ஈவன்ட்  என்று என்று பரவலாக பேசப்படுகின்றது   பிளாக்ஸ்வன் ஈவன்ட் என்பதை தமிழில் கருப்பு வாத்து என்று மொழிபெயர்க்கலாம்.  அதன் சாரம்சம் விடை தெரியாத கேள்விகள், பொருளாதார பாதிப்புகள் புரியாத நிலை, வையத்தில் சரியாக்கூடிய கால அவகாசமும், அதற்கான கால இடைவெளியில் நடக்கவிருக்கும் பிரச்சணைகள புரிபடதாத சுழல்.         ஒன்று மட்டும் புலப்படுகிறது, கோவிட் 19 ன் தாக்கங்கள்  வெவ்வேறு வகைகளில் வெவ்வேறு இடங்களில் இருக்கப்போகின்றது. எவ்வாறு எங்கு எப்படி இருக்கும், இது போன்ற கேள்விகள் பலவற்றிக்கு  விடை பிடிபடாத சூழ்நிலையை பிளாக்ஸ்வன் ஈவன்ட்  எனலாம்

விடை தெரியாத கேள்விகள்

  1. எவ்வளவு நாள் வீட்டில் இருப்பது?
  2. வெளியில் வருவது எப்போது?
  3. எப்போது கோவிட் 19 க்கு  முன்னாலிருந்த  நிலைமைக்கு திரும்புவது?
  4. நம்மிடம் இருக்கும் பணங்கள் போதுமா?
  5. பணங்கள் இருந்தால் பசி போய் விடுமா?
  6. பசிக்கு தேவையான உணவுகள் கிடைத்து கொண்டே இருக்குமா?
  7. உணவுகள் கிடைத்தால் எவ்வளவு நாள் கிடைக்கும்?
  8. கோவிட் 19  ஐ முற்றிலும் அழித்துவிட முடியுமா?
  9. கோவிட் 19  ஐ  முற்றிலும் அழித்துவிட முடியாத சமயத்தில் /  சமுகத்தில நம்மை காத்து கொள்ள  சமூக இடைவெளி மட்டும் போதுமா ?
  10. கோவிட் 19  க்கு மருந்து உள்ளதா ?
  11.  கோவிட் 19   ன் தாக்கத்தை தவிர்ப்பதற்கு மருந்துஎப்போது கிடைக்கும் ?
  12.  அது எல்லோருக்கும் கிடைக்குமா ?  

ஆயிரம்மாயிரம் கேள்விகள்.பதில் தான வையத்தில் இருப்பதாக தெரியவில்லை

மருத்துவ தீர்வு


பதில்கள் தெரியாத போது இதுவரை தெரிந்த விபரக்களை கொண்டு என்னதான் செய்யலாம்.  தெரிந்தவரை, தெளித்தவரை பார்ப்போம்  முக்கிய பிரச்சனையான கோவிட் 19   உடல் நல தாக்கதிற்கு சரியான, நிச்சியமான, வேலை செய்யக்கூடிய, உறுதி செய்ய பட்ட  மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை கோவிட் 19  ன் தாக்கங்கள் தொடர்ந்து, அல்லது  இடைவெளி விட்டோ  இருக்கும் என்பது போல் தெரிகின்றது

மருத்துவ தீர்வு விரைவில் கிடைக்கும் என்று நம்புவோம்.  எவ்வளவு காலத்தில் மருத்துவ தீர்வு  கிடைக்கின்றது.  அதற்கு உலகம் கொடுக்கப்போகும் விலை எவ்வளவு?  மருத்துவ தீர்வு எவ்வளவு விரைவில் வையத்தில் மக்களைச் சென்று அடைகின்றது,  என்பதைக் கொண்டு  பொருளாதார நெருக்கடிகள் அமையப்போகின்றது

எப்போது சரியாகும்

இரண்டு மாதத்தில் இருந்து இரண்டு வருடங்கள் என்று பல்  வேறு  தகவல்கள்.  எது சரி எது தவறு தெரியவில்லை.  எப்போது சரியாகும் என்பதை உங்கள் யூகத்திற்க்கே விட்டு விடுகின்றோம்

தற்போது கோவிட் 19  ன் இரண்டாவது மறைமுக தாக்கங்கள், பொருளாதார நெருக்கடிகள், பற்றி சற்று கூர்ந்து கவனிப்போம். இந்த பொருளாதார பிரச்சனை கோவிட் 19  ன் மூலம் பரவுகின்ற உடல்நிலை பிரச்சனையை விடவா அதிகமாக இருக்கும் என்றே எண்ண தோன்றுகிறது. முதல் பிரசன்னையில் கோவிட் 19  ல் தாக்க பட்டவர்கள் மட்டுமே   உடல் நலம் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.  இரண்டாவது பொருளாதாரப் பிரச்சினையை கோவிட் 19   ஆல் தாக்க படாதவர்களையும்   பொருளாதார நெருக்கடி தாக்க ஆரம்பித்துளது. இதை  நன்கு புரிந்து கொள்ள இந்தியா மற்றும் உலக  பொருளாதாரம் பற்றி கவனிப்போம்

பொருளாதர சரிவு


வேர்ல்ட் எக்னாமிக்  பாரம் (world economic forum)  முதல் எல்லா பொருளாதாரம் சம்பந்தப்பட்ட வல்லுநர்களும் கோவிட் 19   தாக்கத்தால் உலக பொருளாதாரம் 3 சதவிகிதத்திற்கு மேல் குறையும். கோவிட் 19   முன் உலக பொருளாதாரம் வளர்ச்சி வீதம் 2 சதவீதமாக இருந்தது கோவிட் 19    ன் பொருளாதார வீழ்ச்சி காரணமாக -1 சதவீதமாக குறையும். சில நாடுகளில் இது மைனஸ் 5 சதவீதத்திற்கு மேலும் ஏற்படலாம்.

இந்தியாவில் கோவிட் 19   முன்  பொருளாதாரம் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாக இருந்தது. இன்று  1 – 1.5  சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

சரி பொருளாதார வீழ்ச்சி பணக்காரர்களையும் பங்கு சந்தை முதலீட்டாளர்கரையும்  பெருமளவில் பாதிக்கலாம் என்று சிலர் எண்ணலாம். சாதாரண மக்களை  பொருளாதார வளர்ச்சி குறைவு எவ்வாறு பாதிக்கும் என்று  சற்று புரிந்து கொள்ள வேண்டும்.  

பொருளாதர பாதிப்புகள்

1.     வேலை வாய்ப்புகள் குறையலாம்
2.     வேலை இழப்புகள் வரலாம் 
3.     சம்பளங்கள் குறைக்கப்படலாம்
4.     ஊதிய உயர்வுகள் நிறுத்தப்படலாம்
5.     பதவி உயர்வுகள் தவிர்கபடலாம் 

என்ற வகையில் உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றது

தீமையிலும்  நன்மை உண்டு . சில துறைகள்  வளர்ச்சி காணப் போகின்றது பலதுறைகளில் வளர்ச்சி வீழப் போகிறது அவற்றை இங்கு காண்போம்

வளரும் துறைகள்

ஆன்லைன் துறைகளான

1.     பணபரிமாற்றம்: ஆன்லைன் முலம் பணபரிமாற்றம் வளரும்
2.     கல்வி:   ஆன்லைன் முலம் பள்ளிகள், கல்லூரிகள் விரைவில் சாதியமாகலாம்
3.     பொழுதுபோக்கு:  சினிமா மற்றும் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் உதாரணமாக  ஒ டி டி பிளாட்பார்ம் எனப்படும் சினிமா படங்கள் ஆன்லைன் மூலம் பார்பது. ( OTT Platforms)
4.     செய்திதாள் படிப்பது: ஆன்லைன் முலம் செய்திதாள் படிப்பது வளரும்

மருத்துவத்துறை,  மருந்து நிறுவனங்கள் இவை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தொழில் தொடர்பு துறை ( Tele communication)  வீட்டில் இருந்து வேலை காரணத்தால் வளர்ந்து வருகின்றது
மேலும் சமூக இடை வெளியை கருத்தில் கொண்டு பொது ஊர்திகளில் செல்வது குறைந்து, தனி வாகனங்களில் செல்வது அதிகரிக்கலாம் என்ற யூகமும் உள்ளது

வளர்சியில் தேங்கும் துறைகள்

இந்தப் பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கக்கூடிய துறைகள்  என்று முக்கியமான சிலவற்றை பட்டியலிடுகிறார்கள்

பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது பணப்புழக்கம் குறையலாம். பணப்புழக்கம் குறைவதால் அத்வாசிய  பொருட்கள் மட்டுமே வாங்கபடும். ஆடம்பர பொருட்கள் தேவை இருக்காது.  இதனால் ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு தொழில்கள் குறையலாம்  அதில் வேலை இழப்புகள், அதனால் பணப்புழக்கம் குறைவது  என்று இது ஒரு சங்கிலி தொடர்போல் ஒன்றையொன்று பாதிக்கும்.உற்பத்தி  குறைவதால், இந்த உற்பத்தி துறை ( Manufacturing)பாதிக்கபடுகின்றது

உலகெங்கும் வளர்சி குறைவதால், சேவைத்துறை ( Service), குறிப்பாக தகவல் தொழில் நுட்ப துறை ( Information Technology)  ஏற்றுமதி  வளர்ச்சி சற்று குறையலாம்

வங்கி மற்றும் நிதி சார்ந்த தொழில்கள் : வாங்கிய கடன்கள் கட்டப்படாத காரணத்தால் நிதி நிறுவனங்களின் லாப ஈட்டும் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதிற்கில்லை ( Banks and NBFC)

வீடு மற்றும் வீட்டுமனை சார்ந்தவை பாதிக்கபடலாம். புதிய விற்பணைகள் தாமதபடலாம் ( Real Estate)

உணவு தயாரிக்கும் துறை, உணவகங்கள் உட்பட

சுற்றுலா மற்றும் அது சார்ந்த தொழில்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தோன்றுகிறது

முடிவாக

1.     சுழலை மாற்ற முடியாத போது. நாம் சுழலுக்கு மாறுவோம்
2.     இதுவும் கடந்து போகும்  (This too shall pass)
3.     சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிப்போம்
4.     இரண்டாவதாக கையில் இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்திருப்போம். தேவை ஏற்படும்போது உபயோகிக்க ஏதுவாக இருக்கும் ( Cash is king)
5.     புதிய முதலீடுகளை சற்று தள்ளிப் போடுவோம். தேவைக்கு அதிகமாக நிச்சயமாக பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் சந்தை சரிந்த சூழ்நிலையில் பங்கு அல்லது பங்கு சாரந்த பண்டுகளில் முதலீடு செய்யலாம்
6.     பண்டுகளில் எஸ் ஐ பி கட்டி (SIP)வருபவர்கள்  தொடர்ந்து செய்து வரவும். எஸ் ஐ பி (SIP) கட்ட பணத்தட்டுப்பாடு இருப்பின் எஸ் ஐ பி யை நிறுத்தி விடலாம்
7.     நல்லதையே நினைப்போம்

அனைத்தும் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கை பயணத்தை தொடருவோம்

No comments:

Post a Comment