To read the same article in English click here -
பிரிக்கபட்ட பண்டுகள் (segregated folios)
கடன் பண்டுகளில் இருந்து நிறுவன கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி தராத நிலையில், அந்த கடன் பத்திரங்கள் தணியாக நிலுவையில் வைத்து பராமரிக்கபடும், அந்த பண்டை பிரிக்கபட்ட பண்டு என்று வைத்து கொள்வோம்.
பின்னர் அந்த கடன் திரும்ப பெற படுகின்றபோது, எந்த அளவிற்கு பணம் திரும்ப வந்ததோ, அந்த அளவில் முதலில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளரகளுக்கு திருப்பி தர படுகின்றது.
பிரிக்கபட்ட பின் மீதமுள்ள, நடைமுறையில் உள்ள பண்டை தற்போதய பண்டு (Current Scheme/Fund under operation) என்று கொள்வோம். பிரிப்பதற்கு முன் நாம் வாங்கும் போது இரணடும் சேரந்து இருந்த போது வாங்கியதால், அதை வாங்கிய பண்டு என்போம் ( original Scheme / fund).
சில பண்டு நிறுவனகள் மேற்கூறிய நடைமுறையை பின்பற்றி, வராக்கடன் பத்திரங்களை தனியாக பிரிக்கபட்ட பண்டு ஆக பராமரித்து வருகின்றது. அந்த வகையில் ப்ராங்களின், (Franklin) ஆதித்ய பிர்லா (Adithya Birla) யூடி ஐ (UTI) போன்ற நிறுவனங்கள் வோடபோன் ஐடியா (Vodafone idea) மற்றும் ஜீ கல்வி ( Zee Education) நிறுவனத்திற்கு கொடுத்த பணம் குறிபிட்ட காலத்தில் திரும்ப வராத போது பிரிக்கப்பட்ட பண்டுகளை ஏற்படுத்தியது. பின்னர் பன்டிற்கு பணம் திரும்ப வரும்பொழுது, பண்டு பிரிக்கபட்ட போது இருந்த முதலீட்டாளரகளுக்கு பணம் திரும்பி தரபட்டது. இது சந்தோஷமான செயலே. இப்போது இதன் மூலம் கிடைத்த பணத்திற்கு வரி உண்டா? அந்த வரியை எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும்? என்பதே புதிய வேலை. வாருங்கள் அதை பற்றி தெரிந்து கொள்வோம். உதாரணத்துடன் புரிந்து கொள்வோம்.
ஆதாய வரி கணக்கு
ஆதாய வரி கணக்கிட, வைத்திருந்த காலம், வாங்கிய மற்றும் விற்ற விலை தெரிய வேண்டும்.
பண்டு வைத்திருந்த காலம்
இந்த பிரிக்கப்பட்ட பண்டுகளில் வைத்திருந்த காலம் கணக்கிட நாம் பண்டு வாங்கிய தேதியிலிருந்து பணம் திரும்பி வந்த காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பண்டு பிரிக்கப்பட்ட தேதி தேவை இல்லை. இரண்டாவது இன்னும் சற்று கடினமானது அதவாது வாங்கிய விலை கணக்கு.
வாங்கிய விலை கணக்கு
பண்டு பிரிக்கப்பட்ட போது, பிரிக்கப்பட்ட தேதியில், பிரிக்கப்பட்ட தொகைக்கும். தற்போதய பண்டு தொகைக்கும் உள்ள விகிதாச்சாரத்தில் நாம் பண்டு வாங்கிய விலையை மாற்ற வேண்டும். உதாரணமாக பண்டு பிரிக்கப்பட்ட போது, பிரிக்கும் முன் என்.ஏ.வி 20 பின்னர் பிரிக்கபட்ட பண்டுகள் என்.ஏ.வி 4, தற்போதய பண்டு என்.ஏ.வி 16 இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (இன்னொரு விதமாக பிரிக்கப்பட்ட பண்டு தொகை 400 கோடி, தற்போதய பண்டு தொகை 1600 கோடி) வாங்கிய பண்டு விலை ரூ 10 (நாம் முதலில் பண்டு வாங்கிய விலை) என்றால் பிரிக்கபட்ட பண்டுகள் வாங்கிய விலை ரூ 2. தற்போதய பண்டு வாங்கிய விலை ரூ 8 என்றும் கொள்ள வேண்டும்.
வரி கணக்கிட்டு உதாரணம்
இந்த அடிப்படை அம்சங்களை புரிந்துகொண்டு, கொடுத்துள்ள அட்டவணையை கவனித்து நோக்கினால் பிரிக்கப்பட்ட பண்டில் இருந்து வரும் தொகைக்கு ஆதாய வரி எவ்வாறு கணக்கிட படுகின்றது என்பது புலனாகும்.
பிரிக்கப்பட்ட பண்டில் வரி கண்கிடுவதை புரிந்து கொள்ளுதல் சற்று கடினமான செயலாகவே இருக்கும். கவலை வேண்டாம், இணையத்தளங்களில் இருந்து கிடைக்கும் ஆதாயவரி தகவல்கள் இதையொட்டியே இருக்கும்.