Tuesday, 13 January 2026

தமிழில் செயற்கை நுண்ணறிவு (AI): தட்டச்சு தேவையில்லை, இனி பேசினால் போதும்!

 🌾 தைப்பொங்கலும்... தமிழ் பேசும் செயற்கை நுண்ணறிவும்!

பட்டறிவு தேவையில்லை, ஆர்வம் இருந்தாலே போதும். 

தட்டச்சு வேண்டாம், கேளுங்கள் பதில் கிடைக்கும்


இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

🌟 காலத்தின் நாயகன் AI 2025-ஆம் ஆண்டின் "வருட நாயகன்" (Person of the Year) நம்ம செயற்கை நுண்ணறிவுதான்! நான் சொல்லவில்லை, உலகப் பிரசித்தி பெற்ற ‘டைம்’ (Time) இதழ் சொல்கின்றது. இந்த உன்னதமான ஏஐ-யை நாமும் அறிந்து, தெரிந்து, பயன்படுத்துவோமே நம்ம தமிழிலேயே! இந்தத் தைத்திங்கள் முதல் நாளிலிருந்தே இதைத் தொடங்குவோம்.

உருண்டோடும் காலத்தில் உலகத்தில் பல மாற்றங்கள்... பகை, பகல் கொள்ளை, பணம் பறிப்பு, நாடுகளின் படையெடுப்புகள் பற்றிப் பேச வேண்டாமே! இந்த நன்னாளில், பகலவன் திருநாளில், புதிய பாதையாக ஒளிரும் செயற்கை நுண்ணறிவைப் பற்றிப் படிப்போமா? பகர்வோமா?

பழகப் பழகப் பாலும் இனிக்கும்! ஏஐ பற்றித் தெரிந்தவர் சிலர், அறியாதவர் பலர். "இந்த புதுக்கருவி இன்னும் எனக்குப் பழகவில்லையே" என்ற எண்ணமா? இந்தத் தைத்திருநாளில் இருந்தே தொடங்குவோமே! உங்களுக்கு உதவ நான் இருக்கிறேன், நமக்கு உதவ நமது செயற்கை நுண்ணறிவும் இருக்கின்றது. இசை போன்று சேர்ந்து படிப்போம்; இருவருமே இதயத்தில் நிலைக்குமாறு செயற்கை நுண்ணறிவைப் பயில்வோமே!

தட்டச்சு வேண்டாம்... பேசுங்கள் போதும்! "கணினி தெரியவில்லையே" என்ற தயக்கம் வேண்டாம். பட்டறிவு தேவையில்லை, தெரிந்த மொழியிலேயே படிப்போமே! முன்னொரு காலத்தில் தமிழில் தட்டச்சு (Typing) செய்யக் கஷ்டப்பட்டு, கணினியைத் (Computer) தவித்தவர்கள் பலர். இப்போ தட்டச்சு இல்லாமலே, "தட்டுங்கள் திறக்கப்படும்" என்பது போல, பேசுங்கள்... நுண்ணறிவின் பதில் உடனே கிடைக்கும்!

பாரதிக்குக் கிடைத்த கண்ணனைப் போல, சொன்னதெல்லாம் செய்யும் ஒரு நல்ல நண்பனைப் போல இது உங்களோடு பேசும். நீங்க தமிழ்ல பேசுங்க, அது நல்ல வார்த்தைகளிலேயே உங்களுக்குப் பதில் தரும். சூட்சுமம் இவ்வளவு எளிதானதா என்று நீங்க ஆச்சரியப்படுவீங்க! முயன்றுதான் பாருங்களேன்.

ஏன் இந்த ஏஐ? இது ஒரு வரப்பிரசாதம்! இதைத் தவறவிடுவது சரியா? "ஏன் படிக்க வேண்டும்? இது இல்லாமல் வாழ முடியாதா?" என்று தோன்றலாம். இன்று வாழ முடியும், ஆனால் இனிமேலும் (AI இல்லாமல்) வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே!

அப்படி என்னதான் செய்யும் இந்த புதுக்கருவி? "மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்" (Master of all subjects) என்று தமிழ்வாணன் அவர்கள் அப்பொழுது எழுதுவார், அது ஞாபகம் வருகிறதா? அது அச்சு அசலாக இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கு மட்டுமே இது  பொருந்தும்.

  • மடல் (Email) எழுதும்.

  • படம் (Image) வரையும்.

  • குறுஞ்செய்தி தரும். 

  • இது ஒரு அட்சய பாத்திரம்! 

சமையல் குறிப்பு, சாமி, பூதம், சாஸ்திரம் என்று எதைச் சொல்ல, எதை விட? எல்லாம் தெரிந்த எங்கள் செயற்கை நுண்ணறிவைப் புகழ வார்த்தைகளே இல்லை.

நம்பிக்கையான துணை

தனிமை பெருகும் உலகில், மனிதன் ஏங்கும் நெருக்கம், மொழி எல்லை தாண்டி, AI தான் நம்பிக்கையான துணை!

"என்ன இது தெரியாமல் இத்தனை காலம் இருந்துவிட்டேனே" என்று அங்கலாய்க்க வேண்டாம். காலம் கடத்தாமல் கற்போமே செயற்கை நுண்ணறிவைத் தமிழிலே! ஆசிரியர் என்பவர் ஏணி என்று அறிவோம்; இன்னொரு ஏணி இந்தச் செயற்கை நுண்ணறிவு! இனி அதுவாக உங்களை ஏற்றி விடாது, நீங்கள் அந்த ஏணியைப் பயன்படுத்தி நல்ல உயரம் செல்லலாம். ஏன் இந்தத் தூரம்? இன்றே வாருங்கள் ஏணிக்கே!

தமிழ்த் தாய்க்கு ஒரு தொண்டு இன்றைய காலத்தில் மனிதர்களின் மொழித் திறனைப் போலவே, செயற்கை நுண்ணறிவும் மொழியைக் கற்றுக்கொண்டு, உருவாக்கி, பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. ChatGPT போன்ற கருவிகள் மனிதர்களுடன் இயல்பான தமிழில் உரையாடி; கவிதை, கட்டுரை, கதைகள் என அனைத்தையும் உருவாக்கும் திறன் பெற்றுள்ளன. கல்வெட்டு முதல் கணினி வரை வெவ்வேறு வழிகளில் தமிழ் வளர்த்தோம், இப்பொழுது செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி மேலும் தமிழ்த் தாய்க்குத் தொண்டு செய்வோமே!

அடியேன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் "AI for the rest of us". "அடடா! இது ஆங்கிலத்தில் உள்ளது, தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே" என்று தோன்றுகிறதா? வாருங்கள் எங்களது வலைப்பூவிற்கு (Radhaconsultancy.blogspot.com). சில கட்டுரைகளைத் தமிழிலும் படிக்கலாம்.

செயற்கை நுண்ணறிவு: வெறும் கருவியல்ல, ஒரு தத்துவார்த்தத் துணை

எதிர்காலத்தின் மூளை: AI-யை தமிழில் அறிவோம்

தமிழும் செயற்கை நுண்ணறிவும்: புதிய பரிணாம வளர்ச்சி

உங்கள் விருப்பத்தைச் இங்கு சொல்லுங்கள், முழு செயற்கை நுண்ணறிவுப் புத்தகத்தையும் நாங்கள் தமிழில் தரத் தயாராக இருக்கின்றோம்.


Connect with Kannan M

LinkedIn, Twitter, Instagram, and Facebook for more insights on AI, business, and the fascinating intersection of technology and human wisdom. Follow my blog for regular updates on practical AI applications and the occasional three-legged rabbit story.

For "Unbiased Quality Advice" call | Message me via blog

▶️ YouTube: Subscribe to our channel 

Blog - https://radhaconsultancy.blogspot.com/


#செயற்கைநுண்ணறிவு #தமிழ்AI #தொழில்நுட்பம் #ஏஐ_தமிழில் #புதியதலைமுறை


No comments:

Post a Comment