Sunday, 13 September 2020

முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம்

 

முதலீட்டாளர்களின் மாறிவரும் போக்கு

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகள் மதிப்புள்ளது. கீழே காட்டப்பட்டுள்ள விளக்கப்படம், மீயூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் கதைகள் பற்றி பேசுகிறது. முதலீட்டாளர்கள் கடந்த 3 தொடர்ச்சியான மாதங்களுக்கு மீயூச்சுவல் பண்டு  பங்கு திட்டங்களில் இருந்து தொடர்ந்து வெளியேறுகின்றனர். ஆனால் எதற்கு? பதில் எச்சரிக்கை. ஆமாம், இது  முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். மீயூச்சுவல் பண்டு  பங்கு மட்டும் அல்லபொதுவாகவே எல்லா வகையான முதலீடுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். மேலும் படியுங்கள், இதை நன்கு புரிந்து கொள்ள முயற்சிப்போம்

ஆதாரம்: நிதி எக்ஸ்பிரஸ் தேதி - 10 செப்டம்பர் 2020

கருப்பு அன்னம் (Black Swan)

கருப்பு அன்னம் நிகழ்வு பற்றி  அதிகம் எழுதப்பட்டுவிட்டது. கருப்பு அன்னம்  என்பது முடிவு பிடிபடதா பிரச்சனைகள்.  இன்று வரை கருப்பு அன்னமான கோவிட் பிரச்சனை  வெள்ளையாகவும் மாறவில்லை, சற்று சாம்பலாகவும் மாறவில்லை, அது இன்னும் கருப்பு அன்னம்தான். நாளுக்கு நாள் கருப்பு நிறம் மேலும் கருமையாக மாறிவருவது போலவே தோன்றுகிறது. உண்மையான வண்ணங்களை அறிந்து கொள்வது மிகவும் கடினமாகவே உள்ளது.

 

அன்றும் இன்றும்

மார்ச் 2020இல்   நிதி மேலாளர்களும், டிவி சேனல்களில்  உள்ள நிபுணர்களும் ஒன்று  அல்லது இரண்டு காலாண்டுகளில் தீர்வு காணமுடியும்  என்று கருதினார்கள். தற்போது நாம் செப்டம்பர் மத்திக்கு வந்து விட்டோம், கிட்டத்தட்ட 6 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனால் தெளிவு இல்லை இப்போது அதே நிபுணர்கள்,  பொருளாதார  வீழ்ச்சி மற்றும் தற்போதய யதார்த்தங்கள் அடிப்படையில், பொருளாதாரம் மீண்டு வர சில பல வருடங்கள் ஆகலாம் என்று சொல்லி வருகின்றனர்.

மார்ச் 2020 ல் தொடக்கத்தில், பொருளாதார  மதிப்பீட்டு நிபுணர்களில்  பெரும்பாலானவர்கள்  இந்திய ( GDP) மொத்த உள்நாட்டு உற்பத்தி  20-21 வருடங்களில்   -1 அல்லது -2 ஆக இருக்கும் என கணிதித்திருந்தனர், இப்போது அது செப்டம்பர் 2020 இல் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி   மேலும்  சுருங்கி  -11 முதல்  -17 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த பொருளாதார வீழ்ச்சி , நிதி மேலாளர்கள்முதலீட்டாளர்கள்,    அரசாங்கங்கள்அதிகாரிகள் என்று அனைத்து தரப்பு மக்களையும் கலங்க வைக்கின்றது.. இந்தப் பின்னணியில் சந்தைகள் மார்ச் மாதத்தில் சென்செக்ஸ் 25000 இலிருந்து  இப்போது 39000 க்கு ஏறி வந்துள்ளது. இது ஒரு எதிர்பாராத சந்தோஷமான வளர்ச்சி. முதலீட்டாளர்களை  மகிழ்ச்சி கடலில்  தள்ளியது. எளிதான  பணம் மற்றும்  உலக  வங்கிகளின் அதிக  பணப்புழக்கம் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றது. இந்த நிலை நீடிக்குமா? எனக்கு தெரியாது.

பொருளாதார வளர்ச்சி  மீளும் மாதிரி வடிவம் K

கடந்த 6 மாதங்களில் சந்தை மற்றும் பொருளாதார  மீட்பு மாதிரி பல கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன.  இது  V வடிவம் என்று ஒரு சாரார் சொல்ல,  மறு சாரார் சொல்கின்றனர்  அது L  அல்லது  W  வடிவ மீட்சி என்று. மீட்சி வடிவத்திற்கு பெருவாரியான ஆங்கில எழுத்து வடிவங்கள் பயன்டுத்த பட்டு விட்டது. தற்போதய நிலைமையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது மீட்சி வடிவம் புதிய கோணத்தில் K ஆக இருக்கலாம் என்று பேசபடுகின்றது.  இந்த K வடிவ மீட்சியின் விளக்கம்  ஒரு பகுதி நிறுவனங்கள் மேல் நோக்கி செல்கின்றது, மற்ற  நிறுவனங்கள் கீழ்நோக்கிய சரிவில் செல்லுவதாக பார்க்கபடுகின்றதுஎனவே, K எழுத்து, மீட்சி மாதிரிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

ரிலையன்ஸ் (Relaince) நிறுவனத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்,  பங்கு விலை மார்ச் மாதம் சுமார் ரூ 800, தற்போது செப்டம்பர் மாதம் ரூ  2000 பிளஸ். சந்தேகத்திற்கு இடமின்றி ரிலையன்ஸ் மேல்நோக்கி செல்லுவதாக  உள்ளது. மற்ற  அனைத்து  நிறுவனங்களும் கீழ்நோக்கி சரிந்து கொண்டவாறே உள்ளன. எப்போது நிற்கும்? கூறுவது கடினம்...  தற்போதைய கடினமான காலத்தின் யதார்த்தம் இது.    

 

மேலும் ஒரு அவதானிப்பு. சந்தை கோவிட் தொற்று நோய்க்கு

முன் 39,000 மீண்டும் இப்போது 39,000 தொடுகிறது, இந்த வகையில்  மீயுச்சுவல் பண்டு திட்ட  NAV இன் மாற்றம் பூஜ்யம் அல்லது பூஜ்யம் அருகில் இருக்க வேண்டும். எதார்த்தம், சில விதிவிலக்குகளைத் தவிர  பெரும்பாலான திட்டங்கள் ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் உள்ளன . சந்தை முந்தைய மதிப்புகளை அடைந்தபோதிலும்,  பெரும்பாலான பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் மீயுச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் பணத்தை இழந்து வருகின்றனர்

K மாதிரி மீட்பு கோட்பாடு இங்கே நன்றாக பொருந்துகின்றது.  திட்ட போர்ட்ஃபோலியோவில் ஓரு சில நிறுவனங்கள் ஏறுகின்றது. அதே நேரத்தில் அந்த போர்ட்ஃபோலியோவில் உள்ள நிறைய நிறுவனங்கள் கீழ் நோக்கி இறங்கி  NAV  கீழே இழுத்துவருகின்றன, இதன்  விளைவாக, முதலீட்டாளர்களுக்கு சந்தை மீண்டும் 39,000 வந்த போதிலும் லாபம் சம்பாதிக்கவில்லை

ஆக,   சந்தையில் பணக்கார நிறுவனங்கள் , இன்னும் பெரிதாகின்றதுஉதாரணம் ரிலையன்ஸ், மற்ற பல நிறுவனங்கள் நிலை தண்மைக்கு போராடி வருகின்றது. உதாரணமாக வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் ( NBFC).  மேல்நோக்கி செல்வதும் மற்றும் கீழ் நோக்கிய   சாய்வும் சமமாக இருக்க போவதில்லை. நிதர்சனத்தில் சரியான எழுத்து  K ஆக மீட்சி  இருக்க போவதில்லை மேல்நோக்கிய  நிறுவனங்கள்  மிகக் குறைவாகவும்கீழே இருக்கும் நிறுவனங்கள்  மிகக் அதிகமாகவும் இருக்கலாம் என்று கணிப்புகள் சொல்லுகின்றன.

கஷ்டங்களை கடப்போம்

பிளாக் ஸ்வான் நிகழ்வுகளுக்கு மத்தியில் சந்தை மற்றும் பொருளாதர போக்குகளை கணிப்பது எவருக்கும் கடினமே

இந்த K மீட்பு மாதிரிகள் அறிவு கொண்டு கஷ்டங்களை கடக்கு முயற்சி செய்வோம். இது அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாத, இருக்கும் பணத்தை பத்திரப்படுத்தி கொள்வதர்கான முயற்சியேயாகும்

 

1.       அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மேல்நோக்கி செல்லும், நிறுவனத்தை அடையாளம் காணும் திறன் இருந்தால் மட்டுமே  ஈக்விட்டியில் இப்பொழுது முதலீடு  செய்யலாம் (நினைவில் கொள்ளுங்கள் இது  ஒரு  மிக பெரிய சவாலாக பலகாலம் சந்தையில் இருப்பவர்களுக்கே உள்ளது)

2.       ஒரு சராசரி முதலீட்டாளராக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, பங்கு சந்தைகள் மற்றும் பண்டு பங்குகளில்  இருந்து விலகி இருப்பது நல்லது

3.       சந்தையின் நிச்சியமற்ற நிலையை நமக்கு சாதகமாக பயன் படுத்துவது  வேறு. நமது பொருளதார நிலைமையை தாண்டி ரிஸ்க் எடுப்பது வேறு.   இதை நாம் தெளிவாக புரிந்து கொள்வோம்.  ரிஸ்க் எடுக்கும் தண்மை உங்கள் இரத்தத்தில் இருந்தால் தவிர, இந்த சந்தையில் தேவையற்ற  ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

4.       நீங்கள்    எடுத்த முதலீட்டு முடிவு   தவறான வழியில்  சென்றால், நீங்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள். நஸ்டம் தாங்க முடியாத வகையில் இருக்கலாம். கவனம் தேவை

5.       எதிர்காலத்தில், ஒரிரு வருடங்களில்  பங்கு மற்றும் பங்கு பண்டுகள் லாபம்  அதிகம் இருக்க போவதில்லை என்று எதிர்பார்கபடுகின்றது. இது எச்சரிக்கைக்கான நேரம், அபாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், பின்னர் முதலீடு செய்யுங்கள்அது ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி பண்டுகள் மட்டும் அல்லபொதுவாக, ஆரம்பத்தில் கூறியது போல் பிளாக் ஸ்வான் நிகழ்வில் , தெளிவு வெளிப்படும் வரை, பங்கு / கடன் / ரியல் எஸ்டேட் போன்ற உங்கள் முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

எஸ் ஐ பி

இப்போதெல்லாம் நிறைய பேர் மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி  செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களில் பெரும்பாலோர் இந்த கடினமான சூழ்நிலைகளில் எஸ் ஐ பி   நிறுத்த அல்லது தொடர  வேண்டுமா என்று குழப்பதில் இருக்கலாம். இது தவிர வேறு வழி இருக்கிறதா? அறிய 

விகடன்தளத்தில் படிக்க 

ஆஙகிலத்தில் படிக்க

தமிழில் படிக்க

கையில் காசே சிறந்தது

மூலதனத்தை பாதுகாத்தலே முதல் வேலை, லாபம் பின்னரே

பணமாகவே நல்ல வங்கியில் அல்லது தபால் அலுவலக கணக்கில்,  இன்னும் சிறிது காலம்  வைத்திருப்பதே இப்போதைக்கு  நல்லதாக தெரிகின்றது

இறுதியாக  முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்கும் நேரம் இது


No comments:

Post a Comment