Sunday 20 September 2020

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

 


அது என்ன ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் என்று புருவம் உயர்த்துபவர்களுக்காக   ஒரு விளக்கம்.  இந்த கொராண காலத்தில் சந்தையில் மார்ச்  25 ஆயிரமாக இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் செப்டம்பர் மாதத்தில் 39 ஆயிரத்தை தொட்டுவிட்டது. இந்த ஏற்றத்திற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் குறிப்பாக சொல்லப்படும் புதுமையான ஒரு காரணம் உள்ளது, அதுவே ராபின் ஹுட் முதலீட்டாளர்கள்

 

ராபின் ஹுட் பெயர் காரணம்

அமெரிக்கா வில் ராபின் ஹுட்  என்ற நிறுவனம், அங்கு யாவரும் எளிதாக சந்தையில் நுழைந்து பங்குகளை வாங்கவும் விற்கவும் மொபைல் ஆப் ஒன்றை ராபின்ஹூட் என்ற பெயரில் வெளியிட்டது. அது மிகவும் பிரபலமாகி நிறைய புதிய முதலீட்டாளர்களை  சந்தைக்கு கொண்டு வந்தது. அதுபோல இந்த கொராண காலத்தில் உலகம் பூராவும் மிக மிக அதிகமாக புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளதாக, புள்ளி விவரங்கள் கூறுகின்றன. உலகமெங்கும் புதிதாக இந்த சமயத்தில் வந்த புத்தம் புதிய முதலீட்டாளர்களை ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் என்று குறியீடு செய்வது தற்பொழுது நடைமுறையில் உள்ளது. மேலும் இந்த சொல்லாக்கதிற்கு, என்று ஏதும் வரைமுறை இருப்பதாக தெரியவில்லை.

 

யாரெல்லாம் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

தற்போதைய சூழலில் கீழ்க்கண்ட வகைகளில் முதலீட்டுக்கு வருபவர்களை ராபின்ஹூட் முதலீட்டாளர்கள் என்று வகைப்படுத்தலாம்

 

·       சந்தையில் முன்னனுபவம் ஏதுமின்றி சந்தைக்கு வருபவர்கள்

·       பெரும்பாலும் இளம் வயதினர்

·       கணினி தெரிந்வர்களும், ஆன்லைனில் வாங்க விற்க தெரிந்தவர்கள்

·       மில்லினியல்ஸ் ( Millennials) எனப்படும் 2000 வாகில் பிறந்தவர்கள்

·       இந்த கொராண காலத்தில் லாக் டவுன் நேரத்தில் பொழுது போகாது, வீட்டில் இருந்த வேலை சூழலில்,  செலவு குறைவாகவம்,  மீதம் இருக்கும் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று தெரியாமல் விளையாட்டாக சந்தைக்கு வந்து பணம் பண்ணலாம் என்ற எண்ணத்தில் வருபவர்கள்

 

மேற்கூறியவற்றை பார்கும் போது நமது நினைவுக்குக் வருபவர்கள் ஐடி வேலை செய்யும் யுவன்களும், யுவதிகளுமே

 

நடப்பது என்ன

 

இதுபோன்று சாரி சாரியாக,  புதிது புதிதாக ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்   சந்தைக்கு வருகிறார்கள் என்று எவ்வாறு இனம் காண்பது. கடந்த மாதங்களில் இந்தியாவில் டீ மேட் கணக்குகள்  திறக்கப்படுவது  மிகவும் அதிகமாக உள்ளது. லாக்டவுனில் முதல் நான்கு மாதத்தில் மட்டும் 300 சதவிகிதம் வளர்ச்சியில் புதிய டீ மேட் கணக்குகள் திறக்கபட்டுள்ளது.  மேலும் இந்த முதலீட்டாளர்கள் வந்த பிறகு  ரூ 5 க்கு கீழுள்ள பங்குகள் , வருமானமில்லாத பங்குகள்,  நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஏறி இருக்கின்றது. பொதுவாக இதுபோன்று விலை குறைந்த  பங்குகளை புதிய முதலீட்டாளர்களே வாங்குவார்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து  பணத்தை எடுத்து சந்தையில் முதலீடு செய்வோம் என்ற எண்ணத்திலும் நேரடி சந்தைக்கு வருகிறார்கள் என்று இன்னொரு தகவல் கூறுகின்றது. 

 

கவனம் கொள்க

சந்தை என்பதில் எவரும் வாங்கலாம் எவரும் விற்க்கலாம் அதுவே சந்தை. நிறையப்பேர் சந்தையில் பங்கு பெறுவது சந்தைக்கு நல்லதே ஆனால் சந்தையின் ஏற்ற இறக்கங்கள், நெளிவுசுளிவு கள் அறிந்து சந்தையில் பங்கு பெறுவது சாலச் சிறந்தது. அதைத் தவிர்த்து விளையாட்டாக எண்ணி வீடியோ கேம் மாதிரி சந்தையில் பங்கு பெறுவது ஆபத்தானது. நஷ்டம் வரும்போது அது நிதர்சனமாகவும் நிலையானதாகவும் இருக்கும்

 

1.     ஆங்கிலத்தில் சொல்வார்கள் Market is zero sum game என்று.  ஒருவரின் நஷ்டம்,  அடுத்தவரின் லாபம். நமது லாபம் இன்னொருவரின் நஷ்டம்

 

2.     இந்தியாவில் சுமார் 5000 முதல் 6000 நிறுவனங்கள் சந்தையில் பதியபட்டுள்ளது. (Listed shares in stock exchanges) இதில் தினந்தோறும் சந்தையில் வர்தகமாகும் பங்குகள் (Trading stocks) மிகக் குறைவு. பெரிய நிறுவனங்கள் 100 ( large cap). மத்திய நிறுவனங்கள் 250 ( Midcap)   மற்றவை குறு சிறு நிறுவனங்கள்.( Small and micro caps) எந்த வகையில் வாங்கினோம் என்று புரிந்து வாங்கவும். ஒவ்வொன்றிலும் சாதக பாதகங்கள் உள்ளது. எனவே வாங்கு முன் நல்ல  சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

 

3.     அதிகம் குறைந்த விலை பங்குகள் ( Penny Stocks), ரூ 5 கீழ் உள்ள பங்கு  , 50  கீழ் உள்ள பங்கு  என்று பார்க்காமல்  நல்ல நிறுவன பங்குகளா என்று  ஆராய்வதே நல்லது

 

4.     சந்தை ஏறும் போது பங்குகள்  வாங்குவது எளிது, அதே பங்குகளை சந்தை இறங்கும் போது நாம் விற்க முயன்றால்,   நஷ்டத்திற்கு விற்க தயாராக இருந்தாலும் முடியாமல் போகலாம். வர்த்தகமாகும் பங்குகளின் தன்மை அறிந்து செயல் பட வேண்டும். உதராணமாக Thinly Traded shares என்பார்கள், அதாவது, சந்தையில் எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும், வர்த்தகமாகாம்ல், குறைந்த அளவில் வர்தகமாகும் பங்குகள்.இதை தவிர்பது நல்லது

 

5.     நண்பர் கூறினார், அடுத்த வீட்டுக்காரன் சொன்னார், டிவியில் பார்த்தோம்,  வாட்ஸ் அப்பில் வந்தது என்று, பங்குகள் வாங்குவது பெரும்பாலும் லாபங்கள் தருவதில்லை.

 

6.     கடந்த பத்து வருடங்களில் ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லாத நிறுவனங்களை இனங்கண்டு அவற்றை தவிர்ப்பது நல்லது

 

7.     ஒரு பங்கு இறங்கி கொண்டே இருக்கிறது என்றும், அவசரபட்டு வாங்கவேண்டாம். முடிந்த வரை ஏன் இறங்குகின்றது என்று காரணம் தெரிந்த பின் வாங்கவும். இதை ஆங்கிலத்தில் Donot catch the falling knife  என்று  சொல்வதுண்டு

 

சந்தை என்பது நமது அட்ரீலினை (adrenaline) அதிகரிக்கச் செய்யும் ஒரு வஸ்து. மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ( Reliance)    ரூபாய் 850 க்கு வாங்கி செப்டம்பரில் ரூபாய் 2000+ க்கு  விற்பது சந்தோஷம். வேறு எங்கும் இது போன்ற லாபம் கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. இதே காலத்தில், இன்னொரு பெரிய நிறுவனமான எல் & டி ( L&T) ஐ எடுத்து கொண்டால், இந்த அளவு ஏற்றம் இல்லை, அது தனது முந்தய விலைக்கும் வரவில்லை.  அதே சந்தையில் எஸ் வங்கியை ( Yes Bank)  ரூ 367 ல் வாங்கி ரூ 14 ல் விற்றவர்களும்  இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க.

 

தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு சந்தை ஏறுவதுமில்லை, இறங்குவதும் இல்லை. இதுவே சந்தை,  நன்கு படியுங்கள். தெளியுங்கள். பின்னர் சந்தையை தொடுங்கள்.

பிடித்திருந்தால், மேலும் பகிருங்கள்

முதலீட்டாளர்கள் கடந்த 3 தொடர்ச்சியான மாதங்களுக்கு மீயூச்சுவல் பண்டு  பங்கு திட்டங்களில் இருந்து தொடர்ந்து வெளியேறுகின்றனர். ஆனால் எதற்கு? பதில் எச்சரிக்கை. ஆமாம், இது  முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம். மீயூச்சுவல் பண்டு  பங்கு மட்டும் அல்ல,  மேலும் படியுங்கள், இதை நன்கு புரிந்து கொள்ள முயற்சிப்போம்

தமிழில் படிக்க 

எஸ் ஐ பி

இப்போதெல்லாம் நிறைய பேர் மியூச்சுவல் ஃபண்டில் எஸ் ஐ பி  செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது அவர்களில் பெரும்பாலோர் இந்த கடினமான சூழ்நிலைகளில் எஸ் ஐ பி   நிறுத்த அல்லது தொடர  வேண்டுமா என்று குழப்பதில் இருக்கலாம். இது தவிர வேறு வழி இருக்கிறதா? அறிய 

விகடன் தளத்தில் படிக்க 

ஆஙகிலத்தில் படிக்க  

தமிழில் படிக்க 


No comments:

Post a Comment