முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத தேதி ஏப்பரல் மாதம் 23. அன்று தான் ஆறு பண்டுகள் மூடு விழா நடந்த நாள். அதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் அதிகம்
அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் ( Ultra Short term) மற்றும் ஷார்ட் டேர்ம் பண்டுகளில் ( Short term) கிரடிட் ரிஸ்க் ( Credit risk) அதிகளவில் இருப்பது தெரியவந்தது. பண்டு பெயர்பார்த்து முதலீடு செய்வது அவ்வளவாக பலனளிக்கவில்லை. இந்த வகையான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு செபி அதிரடியாக புதிய கட்டளைகள் சிலவற்றை பிறப்பித்துள்ளது. இந்தக் மாற்றம் வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றது. அதை பற்றி இங்கு பார்ப்போம்
தற்போதைய ரிஸ்க்கோ மீட்டரில்
உள்ள
குறைகள்
ஒரு கட்டத்தில், நாம் கடன் திட்டத்தில் பணம் முதலீடு செய்யும்போது ரிஸ்க் குறைவாக உள்ளது. காலப்போக்கில் திட்ட மேலாளர் செய்யும் மாற்றங்களால் ரிஸ்க் மிகவும் அதிகரிக்கின்றது இந்த வகையான மாற்றங்கள் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை அவர்கள் பின்னர் பார்கும் பொழுது அந்தத் திட்டம் எதிர்பார்த்ததை விட அதிக ரிஸ்க் இருக்கும் திட்டமாக மாறி போயுள்ளது. இது காலந்தாழ்த்தி தெரிகின்றது. சில நேரங்களில் இது பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் விடுகின்றது. இதுபோன்ற விபரங்கள் தற்போதுள்ள ரிஸ்க்கோ மீட்டரில் தெரிவதில்லை
தற்போதைய ரிஸ்க்கோ மீட்டரில் உள்ள அடுத்த குறை, ரிஸ்க்கோ மீட்டரில் உட்பிரிவு பங்கு, கடன் மற்றும் கலப்பின திட்டங்ள் என்ற வாகில் பிரிக்கப்படுகின்றது எனவே முதலீட்டாளர்களுக்கு எல்லாக் கடன் திட்டங்களும் குறைந்த ரிஸ்க் உடையவை என்ற மேம்போக்கான எண்ணம் ஏற்படுத்துவதாக உள்ளது. பங்கில் குறைந்த ரிஸ்க் திட்டங்களும் உள்ளது கடனில் அதிகமான ரிஸ்க் திட்டங்களும் உள்ளது
செபியின் மாற்றங்கள்
மேற்கண்ட ரிஸ்க்கோ மீட்டரில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய செபி புதிய மாற்றங்களை கொண்டு வருகின்றது
ரிஸ்கோ மீட்டரில் ஆறு வகையான பிரிவு
தற்போது இருக்கும் ரிஸ்கோ மீட்டரில் ஐந்து வகையான பிரிவு உள்ளது அது வரும் காலங்களில் ஆறு வகையான பிரிவாக மாறுகிறது.புதிய பிரிவு மிக அதிக ரிஸ்க் என்பதாகும்
ரிஸ்க் அளவீடு குறியீட்டு எண்
ஒவ்வொரு திட்டத்திலும் ரிஸ்க் அறிய புதிய அளவுகோல் மிக விரிவாக அறிமுகபடுத்தபடுகின்றது. இனி ஒவ்வொரு திட்டத்திலும் அந்த திட்டத்தின் பத்திரங்கள் மற்றும் பங்குகளை பொருத்து அதன் ரிஸ்க் அளவீடு குறிக்கப்படும். அவ்வாறு குறிக்கப்பட்ட அளவீடு அனைத்தையும் அந்த திட்டத்தில் உள்ள பத்திரங்கள் மற்றும் பங்களின் மதிப்புக்கு ஏற்றவாறு ஈடு செய்து, முடிவாக திட்டத்தின் ரிஸ்க் அளவீடு குறியீட்டு எண் கணக்கிடப்படும். இந்த அளவு குறைவாக இருந்தால் அந்தத் திட்டத்தில் ரிஸ்க் குறைவு. இந்த அளவு அதிகமாக இருந்தால் அந்தத் திட்டத்தின் ரிஸ்க் அதிகம் என்பதாகும்
ரிஸ்க் அளவீடு முறை
கடன் பத்திரங்களில் ரிஸ்க் அளவீடு முறை
கடன் பத்திரங்களில் மூன்று வகைகளில் அளவீடு செய்யபடும்
கிரெடிட் ரிஸ்க் - அளவீடு 1-14 (Credit
risk)
அரசாங்க பத்திரம் 1
முதலீடு செய்ய தகுதி இல்லாத பத்திரம் 14
வட்டி விகித் ரிஸ்க் (Interest rate risk)
மெக்காலே டியுரேஷன்< 0.5 வருடங்கள் 1
மெக்காலே டியுரேஷன்> 4 வருடங்கள் 6
லிக்யுட்டி ரிஸ்க் அளவீடு (Liquidity risk) 1-14 மிக வரிவான கணக்கீடு
பங்கு பத்திரங்களில் ரிஸ்க் அளவீடு முறை
பங்குகளின் சந்தை மொத்த மதிப்பு ( Market
capitalisation)
மிக பெரிய நிறுவனங்கள் ( Large cap) - அளவீடு - 5
குறு சிறு நிறுவனங்கள் ( Small cap) - அளவீடு - 9
பங்குகளின் விலை ஏற்ற இறங்க்கள் ( Volatility)
தினசரி ஏற்ற இறங்க்கள் < 1% , அளவீடு - 5
தினசரி ஏற்ற இறங்க்கள் >1 % , அளவீடு - 6
இம்பாக்ட் விலை - லிக்யுட்டி ரிஸ்க் அளவீடு ( Impact Cost)
பங்குகள் வாங்கவோ அல்லது விற்பதோ செய்ய முயலும் போது, பங்கு எண்ணிக்கை ஏற்றவாறு, சந்தையில் அதற்கு இருக்கும் சுழலுக்கு ஏற்றவாறு அதற்கு ஆகும் செலவு
சராசரி இம்பாக்ட் விலை அந்த மாத்த்தில் < 1% , அளவீடு – 5
சராசரி இம்பாக்ட் விலை அந்த மாத்த்தில் > 2% , அளவீடு – 9
எனவே ஒவ்வொரு திட்டத்திலும் முடிவான ரிஸ்க் அளவீடு குறியீட்டு எண் மாதந்தோறும் முதலீட்டாளர்களுக்கு தெரியப்படுத்தபடும். வருட முடிவில் ரிஸ்க் அளவீடு குறியீட்டு எண் எவ்வாறு மாறி வந்தது என்ற விபரம் எல்லாருக்கும் தெரியும் வகையில் இருக்கும்
பயன்கள்
வேல்யூ
ரிசர்ச்ஆன்லைன் ( Value
research online), மார்னிங் ஸ்டார் ( Morning star) போன்ற பண்டு வலைத்தளங்கள் ரிஸ்க் வகைகளை, அதிகம், மத்யமம், குறைவு ( High, medium, Low) என்ற வகையில் பிரித்து வந்தது
இந்த வகையில் மத்யமம் என்ற பிரிவில் இரண்டு திட்டங்கள் இருந்தால் இதில் எதில் ரிஸ்க் அதிகம், எது குறைவு என்று அறிந்துகொள்வது கடினம். இந்தச் செபியின் மாற்றத்தால் ஒரே வகையான 2 திட்டங்களில் ரிஸ்க் அளவீட்டு எண்ணை வைத்து எதில் ரிஸ்க் அதிகம், எது குறைவு என்ற என்பதை மிக எளிதாக நாம் அறிந்து கொள்ள முடியும்
நாம் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யும்போது ரிஸ்க் அளவீடு 4 என்றிருந்து பின்னர் ஒரு வருடம் கழிந்து பார்க்கும்போது, பண்டு மேலாளர் செய்யத மாற்றத்தினால் ரிஸ்க் அளவீடு 8 என்று ஆகிவிட்டால் நாம் அதை அறிந்து, அந்த திட்டத்தில் தொடர்வதா வெளியேறுவதா என்று முடிவு செய்யலாம்
முடிவாக
இந்த மாற்றத்தால் பண்டுகளின் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கின்றது. இது முதலீட்டாளர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். செபிக்கு நன்றி
________________________________________________________________________________________________________
மேலும் படிக்க
முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்
கோவிட் 19 காலத்தில், அணைவரும் அதிகம் உணர்கின்றோம், வாழ்க்கையின் நிச்சியமற்ற தன்மை பற்றி. இந்த தருணத்தில், முதலீடுகளில், நாமினேஷன் அவசியம்தானே? மேலே படியுங்கள் நாமினேஷன் விபரம் அறிய
உங்களுக்கு பிடித்திருந்தால் சமூக வலை தலங்களில் பகிரவும்