Sunday, 4 October 2020

 

நாமினேஷன் அவசியம் (Nomination - நியமனம்)

 

வாழ்க்கை நிச்சியமற்றது. இப்போது  கொரணொ காலத்தில், அணைவரும் அதிகம் உணர்கின்றோம். இந்த தருணத்தில், முதலீடுகளில், நாமினேஷன் அவசியம்தானே? அப்பொழுது தான் நமக்கு பின்னர்,  நமது உறவுகளுக்கு முதலீட்டு பணம், எளிதாக, சரியாக போய் சேரும்.

முதலீடு செய்யும் போது சரியாக செய்யவில்லை, அல்லது நாமினேஷனில் மாறுதல் செய்யவேண்டும் என்றால், இதுவே சரியான தருணம். இன்றே செய்ய தொடங்குங்கள். பங்குகள், பண்டுகள் , மற்றும், வங்கி என்று எந்த வகையான முதலீடாக இருந்தாலும். எங்கெல்லாம், நாமினேஷன் வசதி உள்ளதோ, அங்கெல்லாம். அதை செய்துவிடுவது நல்லது. பண்டுகளில் நாமினேஷன் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

 

பண்டுகளில் நாமினேஷன்

 

முதலீட்டாளர்கள், தங்களது பண்டு கணக்கில் நாமினேஷனை, எப்போழுது வேண்டுமானாலும் பதியலாம். முன்னால் பதிந்ததை மாற்றவும் முடியும். எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்றவும் முடியும். எனவே நாமினேஷன் செய்யபட்டவர் உயிருடன் இருக்கும் போதும், நாம் வேறு ஒருவருக்கு மாற்ற முடியும். உதராணமாக, முதலில் மகள் பெயரில் இருந்த நாமினேஷனை, அவரகள் திருமணமாகி சென்ற பிறகு தம்பி பெயரில் மாற்ற முடியும்.

 

நாமினேஷனை புதிதாக பதியவோ அல்லது மாற்றவோ, பண்டு நிறுவனங்களிடம் இருந்து அதற்க்கான படிவத்தை பெற்று பூர்த்திசெய்து  தரவேண்டும். இரண்டு, மூன்று வாரங்களில், பதிவு செய்த விபரம் உங்களுக்கு வரும். அல்லது பூர்த்தி செய்த படிவத்தை கேம்ஸ் (Cams)  அல்லது கே பின் டெக்கில் (K Fin Tech -பழைய கார்வி) பண்டு நிறுவனத்திற்கு ஏற்றவாறு தரவேண்டும்.

 

நாமினேஷன் பதியும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:

1.      எப்போழுது வேண்டுமானாலும் பதியலாம்

2.      எத்தனை தடவை வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

3.      ஒன்று முதல் மூன்று நபரகள் வரை பதியலாம்

4.      நூறு சதவிகிதத்தை எப்படி வேண்டுமானாலும் பிரித்து பதிய முடியும். ஒருவருக்கு அதிகமாகவும், மற்றவருக்கு குறைவாகவும் இருக்கலாம். உதராணமாக மனைவிக்கு 50%, மகளுக்கு 25%, மகனுக்கு 25%, என்று இருக்கலாம். மற்றும் சில வகைகள்

a.      34%, 33%, 33%

b.      50%, 50%

c.      75%, 25%

5.      சிறுவர், சிறுமியர்கள் பெயரிலும் பதியலாம். அவர்களது பிறந்த நாள் சான்றிதழ் கொடுக்க வேண்டும். பாதுகாப்பாளர் பெயரும் இருக்க வேண்டும். பாதுகாப்பாளர் முதலீட்டாளராக இல்லாமல் இருப்பது நல்லது. சிறுவர் சிறுமியர்கள்  பணம் பெறும் போது 18 வயதை தாண்டி இருந்தால், அவர்கள் பெயரில் பான் கார்டு (Pan card)  எடுத்து கே.ஒய்.சி ( kyc) செய்து, அவர்களது வங்கி கண்க்கில் பணம் பெறலாம்.

6.      நாமினேஷன் செய்யபட்டவர்களுக்கு, பதியும் போது  கே.ஒய்.சி தேவையில்லை. பணம் பெறும் போது கே.ஒய்.சி  தேவை

7.      நமது முதலீடுகள் அணைத்திலும் ஒரே மாதரியாக நாமினேஷன் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. உதராணமாக ICICI பண்டில் மனைவிக்கு, IDFC பண்டில்  மகளுக்கு என்று இருக்கலாம்.

 

நாமினேஷன் வேறு உயில் (வில் -Will)  வேறு

நாமினேஷன் என்பது, நமக்கு பிறகு, நாமினேஷனில் பதித்த உறவுகளுக்கு பணம் எளிதாக செல்வதே. வாரிசுதாரர்கள் பிரச்சனை என்று வரும் போது, இது எனது முழு உரிமை என்று அவர்கள் வாதிட முடியாது. அந்த முதலீட்டிற்கு வாரிசாக பலர் இருக்கும்போது, மற்ற வாரிசுதாரர்களும் நீதிமன்றம் மூலமாக உரிமை கோர முடியும்.

 

வில் எழுதி பதிவு செய்திருந்தால். அதில் குறிப்பிடபட்டிருக்கும் நபர்களுக்கு மட்டும் பணம் செல்லும். மற்ற யாரும் உரிமை கொண்டாடுதல் முடியாது.

 

முடிவாக,

 

நாம் இல்லாத போது, நமது முதலீட்டு பணம் நமது குடும்பத்தில் யார் யாருக்க எந்த விகிதத்தில் செல்ல வேண்டும் என்று முதலில் முடிவு செய்து, அதே மாதிரி, எல்லா திட்டத்திலும் ஒரே மாதிரியாக பதிவு செய்வது  சால சிறந்தது.

 

பின் குறிப்பு

 

மேலும் விபரமாக நாமினேஷன் மற்றும் டாகுமேன்டேஷன் பற்றி எனது முந்தய கட்டுரை படிக்க இங்கு தொடவும். (நிதி பராமாரிப்பில் நிதியில்லா விபர பராமாரிப்பு (Documentation))


நாமினேஷன் பற்றி கூடுதல் விபரம் இங்கே 

 

பண்டு, பங்கு வர்த்தகம், ஆர்.பி.ஐ யின் தங்க முதலீடு மற்றும்  அதன் அரசாங்க பத்திரம், சிறு சேமிப்பு, டீமாட் கணக்கு ஆக அணைத்திற்க்கும் நாமினேஷன் செய்து விடுங்கள். இது நிறைய பேர் செய்யாதது, ஆனால் அவசியமானது. உடன் நாமினேஷன் செய்து விடுங்கள். இதில் சிலருக்கு சிக்கல் இருக்கலாம். நமக்கு பிடித்து, அன்று நாம் நாமினேஷன் செய்தவர்கள், சில பல வருடங்களுக்கு பிறகு இன்று பிடிக்காதவர்கள் ஆகிவிடலாம், இது மனிதயியல்பு. இந்த மாதிரி தருணங்களில், நாம் நாமினேஷனை மாற்றி கொள்ளலாம். 

 

நாமினேஷன் போட்டாகிவிட்டது, இத்துடன் வேலை முடிந்ததா? அதுதான் இல்லை. ஏன்? சற்று ஆழ்ந்து யோசியுங்கள், விபரம் புரியும். நம்மூரில் சில சீமை சமர்த்தர்கள் இருப்பார்கள்.  நாமினேஷனை , பக்கவாக பதிந்து இருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் மறந்திருப்பார்கள் அல்லது வேண்டுமென்றே தவிர்த்திருப்பார்கள். இது எதிர்பார்த்த பலன் தராது. சொத்து சரியான நபருக்கு போகாது. ஏன்? யோசித்தீர்களா?  தெரிந்த சண்டைகள்தான், மனைவிக்கு நாமினேஷன் செய்தால், மருமகள் போர்கொடி காட்டுவாள்.. ஏன் மகனை போடவில்லை என்று. மகனுக்கு போட்டால் பிற்காலத்தில் மனைவிக்கு கிடைக்குமா என்பது கேள்வி குறிதான். இந்த சிக்கலில் முதலீட்டாளர் , நாமினேஷன் செய்த விபரத்தை மனைவிக்கும், மக்களுக்கும் சொல்வதில்லை. விளைவு, சொத்து விபரம் வாரிசுகளுக்கு தெரியாது இருப்பதால், அது அவர்களுக்கு பெரும்பாலும் போவதில்லை. இப்பொழுது புரிகின்றாதா, நாமினேஷன் செய்தால் மட்டும் போதாது, சொத்து விபரம், நாமினேஷன் விபரம் வாரிசுகளுக்கு தெரிவது நல்லது.  அல்லது அந்த நேரத்து  சண்டைகளை தவிர்க்க, சொத்து விபரம், நாமினேஷன் விபரம் வாரிசுகளுக்கு பின்னர் தெளிவாக தெரியும்படி செய்யலாம். இது எவ்வளவு சரியாக நடக்கும் என்பது அவரவர் அறிவுப்படி.

 

இன்னமும் தெளிவாக சொல்வதானால், உதாரணத்திற்கு  முதலீட்டாளர் மகனை நாமினேஷன் செய்யும் போது, மகனை அழைத்து அருகில் வைத்துகொண்டு, இந்த பண்டு நிறுவனத்தில் இந்த திட்டத்தில் இவ்வளவு பணம் இந்த கணக்கில் உள்ளது எனறு கூறினால், அவருக்கு பிறகு, அவன் அந்த பண்டு நிறுவனத்தில் படிவங்கள், பூர்த்திசெய்து பணம் பெறுவது சுலபாமாக இருக்கும்.

 

இப்போது புரிகிறாதா, மூதலீடு செய்து, லாபம் பெறுவது, ஒரு நிலை. அந்த மூதலீட்டில் அணைத்து டாகுமேன்டேஷன் (Documentation) சரிவர செய்து, அதை பராமரித்து, உரிய நபர்களுக்கு சேருமாறு செய்வது இன்னெரு நிலை. இந்த இரண்டு நிலையையும் சரிவர செய்யுங்கள்.

 

No comments:

Post a Comment