ஆங்கிலம் தெரியாதது குறையா? வாய்ப்பை இழப்பதுதான் குறை!
தமிழில் AI • Blog 1 • கண்ணன் மீ • காரைக்குடி

உங்கள் யோசனை தமிழில் இருக்கலாம். AI உதவியுடன் அதை அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லலாம்.
ஆங்கிலம் தெரியாதது குறையல்ல. ஆனால் ஆங்கிலம் தெரியாததால் நமக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளை இழப்பதுதான் குறை.
ஆங்கிலேயர்கள் நம் முன்னோர்களை ஆண்டுவிட்டுச் சென்றார்கள். அவர்கள் விட்டுச் சென்றவற்றில் ஒன்று, ஆங்கிலம் உயர்ந்த மொழி என்ற பிம்பம். ஆங்கிலம் இல்லாமல் வாழவே முடியாதா? அப்படியொரு எண்ணம் ஒரு மாயை என்றே தோன்றுகிறது.
ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியிலும், சீனர்கள் மாண்டரின் மொழியிலும் கல்வி கற்கிறார்கள். நாம் தமிழில் படிக்கக்கூடாதா? அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். நமது கல்வி முறைகள், அதில் உள்ள சிக்கல்கள் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. நாம் அதற்குள் செல்ல வேண்டாம். நம்மால் முடிந்ததைச் செய்வோமே!
ஆங்கிலம் இல்லாமல் வாழ்க்கை இல்லையா?
ஆங்கிலம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது தவறான கண்ணோட்டம். அதேசமயம், ஆங்கிலம் தெரியாமலேயே எல்லா இடங்களிலும் வாழ்ந்து முன்னேறிவிட முடியுமா என்றால், அதுவும் சாத்தியமில்லை.
நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நமது குழந்தைகள், உயர் அதிகாரிகள், நம்மைவிட ஆங்கிலத்தில் திறமையாக இருப்பவர்கள் எனப் பலருடன் பேசவும் பழகவும் வேண்டியிருக்கிறது. அவர்களுடன் தொடர்புகொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கும்.
நாம் நமது மொழியை மட்டும் பிடித்துக்கொண்டிருந்தால் போதுமா? அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம். நமக்குத் தெரிந்த வழிகளில் நாம் முன்னேறுவோம்.
வேலையில் வரும் சிக்கல்
உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் circular ஆங்கிலத்தில் இருந்தால் நமக்குப் புரிவதில்லை. சில கட்டளைகள் ஆங்கிலத்தில் இருந்தால், அவை புரியாததால் நாம் அவற்றைப் பின்பற்றுவதில்லை. அதனால் சில சமயங்களில் சிக்கல்கள் வருகின்றன. அந்தக் கட்டளை நமக்குப் புரியாத பட்சத்தில், அதனால் நாம் பாதிக்கப்படுகிறோம்.
ஒருவர் வேலைக்கு apply செய்ய வேண்டுமென்றாலும் ஆங்கிலம் அவசியமாகிறது.
திறமை இருந்தும் அங்கீகாரம் கிடைக்காதவர்கள்
சிலர் நன்றாக யோசிப்பார்கள். சிலருக்கு நிர்வாகத் திறமை மிக அதிகமாக இருக்கும். ஆனால், ஆங்கிலத்தில் தங்களை வெளிப்படுத்த முடியாததால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இப்படி வாய்ப்புகளையும் அங்கீகாரத்தையும் இழந்து காணாமல் போனவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
இந்தத் தடையை நாம் போக்க வேண்டும். ஆங்கிலம் முழுமையாகத் தெரியாவிட்டாலும், அரைகுறை ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், நாம் எப்படி முன்னேற முடியும் என்பதை யோசிக்க வேண்டும். அதற்கான வழிகள் இருக்கலாம். வழிகளை நாம் தேடுவோம்.
தொழில்நுட்பம் உதவுமா? என் அனுபவம்
இதற்குத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்று சொன்னால் சில சமயம் உங்களுக்குச் சிரிப்புகூட வரலாம். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்திற்குப் பதிலாகத் தமிழ் வந்தால் அது உபயோகமானதா என்ற கேள்வியும் எழலாம்.
இன்றும் தமிழில் type செய்தால் கட்டம் கட்டமாக வருகிறது. அது உங்களுக்கு மட்டுமல்ல; எனக்கும் அப்படித்தான் வந்தது.
நான் எனது தமிழ் AI புத்தகத்தை Canva-வின் Affinity layout-ல் திருத்திக்கொண்டிருந்தபோது, அது தமிழ் எழுத்துக்களைச் சரியாகக் காண்பிக்கவில்லை. கட்டம் கட்டமாகத்தான் காண்பித்தது. இது ஏதோ 2000-ல் நடந்த செய்தி அல்ல. 2026-ல் நடந்தது!
எனவே, கணினியால் தமிழைக் கையாள முடியாது, தமிழில் உபயோகம் இல்லை என்று நான் சொல்லிவிட முடியுமா? அப்படி இல்லை. சில சிக்கல்கள் அங்கேயே இருக்கின்றன. அவற்றைக் களைவதற்கு AI உதவலாம்.
தமிழில் யோசிப்போம்; தேவையான நேரத்தில் ஆங்கிலத்திற்கு மாற்றுவோம்
Anyway, நாம் AI-யை வைத்து எப்படித் தமிழில் படிப்பது, எல்லா விஷயங்களையும் எப்படித் தெரிந்துகொள்வது என்று பார்ப்போம். மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்குத் தேவையான ஆங்கில அறிவையும் இதன் மூலமே கற்றுக்கொள்வோம்.
முயற்சி திருவினையாக்கும் என்று சொல்வார்கள். நாம் முயலுவோம். தமிழில் யோசிப்போம். தமிழில் தேடிப் பெறுவோம். தமிழிலேயே நமது வேலைகளை விரைவாகச் செய்வோம். ஆனால், தேவையான நேரத்தில் தமிழை ஆங்கிலத்திற்கு மாற்றிக்கொள்வோம்.
முதலில் நாம் ஒரு யோசனை செய்கிறோம். அந்த யோசனை தமிழில் இருக்கிறது. அதைத் தமிழிலேயே AI-யிடம் கொடுத்து, இது நல்ல யோசனையா என்று கேட்போம். அது அதன் சாதக பாதகங்களை நமக்கு விளக்கும்.
அது நல்லது என்று நமக்குப் பட்டால், AI உதவியோடு அதை நமது மேலதிகாரிக்குத் தெரிவிக்கலாம். அவர் ஆங்கிலம் தெரிந்தவராக இருந்தால், நமது யோசனையை அவருக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் சொல்லித் தருமாறு AI-யிடம் கேட்கலாம். அதை அவரிடம் கொடுத்தால், நமது யோசனை அவரிடம் சென்று சேரும்.
நமது யோசனை நம்மிடமே நின்றுவிட வேண்டிய அவசியமில்லை அல்லவா?
ஆங்கில சர்க்குலர் புரியவில்லை என்றால்?
சர்க்குலரைப் பற்றி முன்னரே பார்த்தோம். அது ஆங்கிலத்தில் இருந்தால், உங்களது cell phone-இல் அதை ஒரு படமாக எடுங்கள். அந்தப் படத்தை AI-க்குக் கொடுங்கள். அது அந்தச் சர்க்குலரைத் தமிழில் விளக்கும். அதில் உள்ள கட்டளைகளையும் தமிழில் தரும்.
எனவே, இப்போது அந்தக் கட்டளைகளைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. தமிழில் அவற்றைப் புரிந்துகொண்டால், நீங்கள் எளிதாகப் பின்பற்ற முடியும்.
இன்று உங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஆங்கிலச் சர்க்குலரைப் படமாக எடுத்து AI-யிடம் கொடுத்துப் பாருங்கள். அதன் மூலம் இந்த வசதியை நீங்களே முயற்சி செய்து தெரிந்துகொள்ளலாம்.
தமிழில் கற்றுக்கொள்வோம்; ஆங்கிலத்தையும் வசப்படுத்துவோம்!
இதுபோன்று தமிழில் கற்றுக்கொள்வோம். தமிழில் பயன்படுத்துவோம். அதன் மூலம் தேவையான நேரத்தில் ஆங்கிலத்தையும் நமக்கு வசப்படுத்திக்கொள்வோம்.
AI-யைத் தமிழில் எப்படிப் பயன்படுத்துவது, அன்றாட வாழ்க்கையில் அது எப்படியெல்லாம் உதவ முடியும் என்பதை எளிமையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
எனது “ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்!” என்ற புத்தகத்தைப் படியுங்கள்.
AI-யைத் தமிழில் கற்றுக்கொள்ள வேண்டுமா? என்னிடம் வாருங்கள்.
இந்தத் தொடரில் அடுத்து
Blog 2: தவறு செய்தால் திட்டுவார்கள்; தெரியவில்லை என்றால் கேட்க முடியவில்லை!
🤝 கண்ணன் மீ உடன் இணையுங்கள்
Blog: radhaconsultancy.blogspot.com | LinkedIn | Instagram | Facebook | YouTube | X / Twitter | Amazon Author
சேவைகள்: AI பயிற்சி & விழிப்புணர்வு • தனி நபர் மியூச்சுவல் ஃபண்ட் வழிகாட்டுதல் • Soft Skills & Career Guidance • மாணவர்களுக்கு Project வழிகாட்டுதல்
💡 பாரபட்சமற்ற, தரமான ஆலோசனைக்கு நம்பிக்கையுடன் அணுகுங்கள்!
AI-யை தமிழில் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? என்னை அணுகுங்கள் - Blog Contact Us வழியாக செய்தி அனுப்புங்கள்.
📖 புத்தகம் பற்றி
ஃபோட்ரான் இன்ஜினியரும்... ஏஐ சாம்பாரும்! - எல்லோருக்கும் ஏஐ! தமிழில் எளிய AI புத்தகம். 3 பாகங்கள், எளிய தமிழ், அன்றாட உதாரணங்கள்.
வாங்க: Amazon | Google Play Books | Author Page
📺 இந்த புத்தகம் பற்றி 60 வினாடி வீடியோ:
#தமிழில்AI #AIinTamil #TamilAI #ஆங்கிலம் #வேலைவாய்ப்பு #தமிழ்க்கட்டுரை #கண்ணன்மீ #ஏஐசாம்பார் #LearnAIinTamil #TamilBlog
— கண்ணன் மீ • காரைக்குடி • தமிழில் AI தொடர் - Blog 1 —
