Sunday, 5 February 2023

வரி சேமிக்க ஐந்து யுக்திகள்.

05-02-2023

புது வருடம் ரெண்டாயிரத்தி இருபத்தி மூணு. வாழ்த்துகள். பிபுரவரி வந்துவிட்டால், வைரல் ஃபீவர் வருகிறதோ இல்லையோ டாக்ஸ்(Tax) பீவர் வந்துவிடும் பலருக்கு. வரியை குறைக்க வரி சேமிக்கும் வழிகளை தேட வேண்டும். அவசரம் அவசரமாய் போவது.. இன்சூரன்ஸ் பக்கமே. அதை விட அதிகம் லாபம் தரும் சிறந்த வழிகளும் இங்கே உள்ளன.


  1. ஈகுட்டி லிங்க்டு சேவிங்ஸ் ஸ்கீம்(ELSS). இந்த திட்டத்தில் கட்டாய சேமிக்கும் வருடம், மூன்று வருடம். இது இன்சூரன்ஸ் போன்று பத்துவருடம் இல்லை. இதில் கிடைக்கும் லாபமும் அதிகம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கு  உள்ள 40 க்கும் மேற்பட்ட பண்டு நிறுவனங்கள், இந்த மாதிரியான திட்டங்களை தந்து வருகின்றன. அதில் தேடிப்பிடித்து ஐந்து ஃபண்டுகளை, உங்களது முதலீட்டு பார்வைக்கு தந்துள்ளோம். மற்ற வரி சேமிக்கும் வழிகளோடு சரியாக புரிந்துகொள்வதற்கு,  3 வருட, 5 வருட மற்றும் 10 வருட லாப விபரங்களை அட்டவணையில் தந்துள்ளோம்.


Fund Name

Rating

3 Yr Ret (%)

5 Yr Ret (%)

10 Yr Ret (%)

Canara Robeco Equity Tax Saver 

5

19.58

14.39

14.80

DSP Tax Saver

4

17.55

11.55

16.11

IDFC Tax Advantage (ELSS)

4

22.60

11.27

16.47

Kotak Tax Saver

4

17.80

12.17

14.32

Mirae Asset Tax Saver

5

18.03

12.96




  1. எஸ் ஐ பி யைப் (SIP) பற்றி அறியாதவர்கள் இப்போது இருப்பதில்லை, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரேமுறையில்(Lump sum) முதலீடு செய்வதை விட, எஸ் ஐ பியாக முதலீடு செய்வது பல விஷயங்களில் நல்லது என்றே நாம் அறிவோம். கூடுதலாக இன்னொரு விஷயம்.. ம் மந்தநிலை வரும்(Recession), வட்டி விகிதங்கள் ஏறும் என்ற இந்த தருணத்திற்கு  எஸ் ஐ பியாக முதலீடு செய்வது, மிகவும் உசிதமாக தோன்றுகின்றது. எனவே தயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு இந்த ஜனவரியிலிருந்து மாதா மாதம் ரூ 10,000 - 12,500 இ எல் எஸ் எஸ் திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலன் அளிக்கலாம்.

  2. இந்த கோவிட் காலத்தில் நிறுவனங்களில், குரூப் இன்சூரன்ஸ் இருந்தபோதும் அதற்கு மேலாக தனிப்பட்ட முறையில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இதற்கு செக்ஷன் 80 டி யில் (80D)வரி விலக்கு கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் வேலையின் நிரந்திரம் பற்றி அடிக்கடி பேசப்படும் காலகட்டத்தில் நிறுவனம் மாறும் போதோ, அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேறும்போது அவசர மருத்துவ தேவை என்றால் இந்த மாதிரியான தனிப்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் கை கொடுக்கும்.

  3. கடைசிக்காலத்தில் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று இப்பொழுதே எண்ணுபவர்கள்.என். பி. எஸ். எனப்படும்.பென்ஷன் (NPS) (80CCD 1B) திட்டங்களில் முதலீடு செய்து மேலும் ₹50,000 வரி விலக்கு பெறலாம். 

  4. மார்ச் மாதத்தில் வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு பெருகும் என்பது கண்கூடு, ஆனால் பல ஐ டி நிறுவனங்களும் மற்றும் அதர நிறுவனங்களும், டிசம்பர், ஜனவரியில் பணியாளர்களிடம் இருந்து வரி சேமிப்பு விவரங்களை பெற்றுக்கொண்டு வரி தொகையை கணக்கிட்டு, டீடிஎஸ் என்று பிடித்தம் செய்துவிடுவார்கள். எனவே நீங்கள் இப்போதே வரி சேமிக்கும் திட்டத்தில் முதலீடு செய்து அதற்கான ஆதாரங்களை  காண்பித்தால் மட்டுமே.உங்களுக்கு டீடிஎஸ் குறையும் அல்லது டீடிஎஸ் அதிகமாக பிடித்தம் செய்யப்படும். எனவே தூங்குவதில் பலன் ஏதும் இல்லை. கடைசி நாள் வரை காத்திருப்பதிலும் நியாயமில்லை. விழித்துக்கொள்ளுங்கள், காலம் கடப்பதற்குள் வரி சேமிப்பு திட்டத்தில் எஸ் ஐ பி முதலீட்டை தொடங்குங்கள். 

Tuesday, 24 January 2023

பணம் பண்ண பத்து கட்டளைகள்

 நிதி பராமரிக்க பத்து கட்டளைகள்


கோவிட்  வருகையால் பல கெடுதல்கள் நிகழ்ந்தாலும், ஒரு சில நன்மைகளையும் தந்திருக்கிறது. பண்டுகளில் முதலீடு சுமார் 47 லட்சம் கோடியாக பெருகி உள்ளது. டிமேட் கணக்குகள், கணக்கில்லாமல் உயர்ந்துள்ளது. சந்தையும் சமீபத்தில் உச்சியை தொட்டது. இது எல்லாம் பல புது முதலீட்டாளர்களின் வருகையால் நடந்த சாதனையே. இந்த புது முதலீட்டார்கள், தெரிந்து கொள்ள வேண்டியதும், பழைய முதலீட்டாளர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடியதுமான 10 கட்டளைகளை இங்கு பார்ப்போம்

கட்டளை ஒன்று மந்திர கோல் எதுவும் இல்லை

பணம் பண்ணுவதற்கு, பலர் நினைப்பது போல் யாரிடமும் எந்த மந்திரக்கோலும் இல்லை. பெரும் பணம் பண்ணுவதற்கு சரியான திட்டமிடுதலும், புரிதலும், பொறுமையும் தேவை. பணம் பண்ணுவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள் அது சில சமயம் சிலருக்கு கை கொடுத்துள்ளது. எப்பொழுதும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. இதை நினைவில் கொள்ளுங்கள்.

கட்டளை இரண்டு ரிஸ்க் அதிகம், லாபமும் அதிகம்.

என்னிடம் வரும் பலர், ரிஸ்க் எடுக்க தயங்குவதுண்டு. ஆனால் லாபம் மட்டும் நிரந்தரமாக அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள். இது ஆசையல்ல, இது ஒரு பேராசை. உதாரணமாக ஈக்குவிட்டி வகையான திட்டங்களில் ரிஸ்க் அதிகம், அதில் லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. கடன் முதலான பண்டுகளில் ரிஸ்க் குறைவு, லாபமும் குறைவு. பண்டுகளுக்கு மட்டுமன்றி, இது எல்லா வகையான முதலீட்டு வகைகளுக்கும், பங்கு, வங்கி வைப்பு நிதிகள், நிறுவன வைப்பு நிதிகள், என்று அனைத்திற்கும் பொருந்தும். கட்டாயம், நினைவு கொள்ள வேண்டிய கட்டளை. ரிஸ்க் அதிகமாகும் பொழுது லாபம் அதிகமாகிறது ரிஸ்க் குறையும் போது லாபமும் குறைகின்றது. இதை எப்பொழுதும் மனதில் வைத்திருங்கள்.

கட்டளை மூன்று ரிஸ்க் அதிகம் வேண்டாம்.

மேலே உள்ள இரண்டாவது கட்டளையை படித்துவிட்டு, நான் அதிக ரிஸ்க் எடுத்து அதிக லாபம் பார்ப்பேன் என்று கோதாவில் இறங்க வேண்டாம். உங்களது நிதி நிலைமைக்கு ஏற்றவாறு, மனநிலைமைக்கு ஏற்றவாறு, எந்த அளவில் ரிஸ்க் சாத்தியமோ, அந்த அளவில் மட்டுமே ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா, ரிஸ்க் ப்ரொபைல்ர் (Risk profiler) என்று கூகுள் கடவுளிடம் கேளுங்கள், நிச்சயம்  வரம் கிடைக்கும். ரிஸ்க் பற்றி அறிந்து, தெரிந்து, பின்னர் ரிஸ்க் எடுக்கவும்.

கட்டளை நான்கு பொது அறிவை அதிகம் பயன்படுத்துங்கள்.

பணம் பண்ணுவதற்கு நிதி பாடத்தில் தங்கமெடல்  வேண்டும் என்று அவசியம் இல்லை. நிறைய நேரங்களில் பொது அறிவு மட்டுமே போதுமானது. கண்ணையும், காதையும் நன்கு திறந்து வைத்திருங்கள். படிப்பதில், பார்ப்பதில், கேட்பதில், நிதி பற்றி சரியான விவரங்களை சேகரியுங்கள். அதைப்பற்றி புரிந்து கொள்ளுங்கள். முதலீடு அதற்கு ஏற்றவாறு செய்யுங்கள். உதாரணமாக வங்கி அரை வட்டி தரும்போது ஒருவர் அல்லது புது நிறுவனமோ இரண்டு வட்டி தருகிறது என்றால்  அவசியம் அந்த நிறுவனம் இருக்கும் வீதிக்கு போகாதீர்கள். இது படிப்பறிவு  தந்த நன்மை மற்றும் உண்மை.

கட்டளை ஐந்து கவனச் சிதறல் கூடவே கூடாது.

முதலீடுகளில் அதிக கவனம் தேவை. கவனச் சிதறல் கஷ்டமே. நமது பணம் தொலைந்து போக வழி வகுக்கும். ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும் பொழுது, அல்லது பண பரிவர்த்தனைகள் செய்யும்பொழுது, சிறிய அளவில் கூட கவனச் சிதறல் இருக்கவே கூடாது. நிதி பற்றிய ஆன்லைன் பரிமாற்றங்களில், எதையும் எளிதில் நம்பி விடாதீர்கள். மிக மிக கவனமாக செயல்படுங்கள். கவனம் கவனம் கவனம். இதை மனதில் கொள்ளவும்.

கட்டளை ஆறு விற்பவர்கள் சமர்த்தர்கள்  வாங்குபவர்கள் ஏமாளிகள்.  

இதற்கு ஒரு போதும் இடம் விடாதீர்கள். ஏமாளிகளாக நிதி பரிமாற்றங்களில் இருக்கவே இருக்காதீர்கள். விற்பவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும், நாம் வாங்கும் முன் அது சரியானதா, அல்லது மிகைப்படுத்தப்பட்டதா, என்று பார்க்க வேண்டும். தெரியவில்லை என்றால் வாங்க வேண்டாம். பொறுத்திருந்து வாங்கலாம். இங்கு

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்பது அறிவு

 

என்ற குறளை மனதில் கொண்டு அவசியம் புரிந்து செயல்பட வேண்டும். இது முதலீட்டிற்கு மட்டுமல்ல வாழ்க்கையிலும் நல்ல பயன் அளிக்கும்.

கட்டளை ஏழு பேராசை பெருநஷ்டம்

கட்டளை நான்கில் கூறியபடி  வங்கி அரை வட்டி தரும் பொழுது யாராவது அல்லது நிறுவனமோ அதிக வட்டி தருவதாக கூறினால் முதலீடு செய்து ஏமாறாதீர்கள். அதிக வட்டி கூட கூட கட்டளை மூன்றில் சொன்னபடி ரிஸ்க்கும் கூடுகின்றது எனவே அதிக வட்டி என்ற வலையில் விழுந்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

கட்டளை எட்டு திட்டமிடுதல் இன்றியமையாதது.

குறைந்த பணமோ, வண்டி வண்டியாக பணமோ தங்களது நிதி நிலைமைக்கு ஏற்றவாறு திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். எந்த அளவு எவ்வாறு எங்கு முதலீடு செய்ய வேண்டும், எப்பொழுது அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் சரியான திட்டமிடுதல் அவசியம். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருப்பது பயன் தராது.

கட்டளை ஒன்பது பணத்தை பராமரிப்பது அவசியம்.

திட்டமிட்டு, புரிந்து, நல்ல முதலீட்டை செய்தால் வேலை முடிந்தது என்று ஓய்வெடுக்க அமராதீர்கள். செடி வைத்தால் தண்ணீர் ஊற்ற வேண்டும் அது வளர. அதுபோல் முதலீட்டை நன்கு பராமரிக்க வேண்டும். வருடம் ஒரு முறை எவ்வளவு லாபம் வந்தது, அந்த நிறுவனம் நன்றாக நடைபெறுகிறதா? என்று கவனிக்க வேண்டும் தேவைப்பட்டால் நமது திட்டத்தை அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

கட்டளை பத்து பரந்து விரிந்த முதலீடு

எல்லாம் சரி, நன்கு அலசி ஆராய்ந்து ஒரு மிகச்சிறந்த திட்டத்தில் எல்லா சொத்தையும் முதலீடு செய்து விடலாமா? என்றால் நிச்சயமாக பதில் இல்லை என்று தான் கூற வேண்டும். உலகெங்கும் ஒவ்வொரு வகையான முதலீடும் ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்து நல்ல லாபம் தருகின்றது. அதே சமயம் அடுத்து வரும் காலகட்டங்களில் அது தொலைந்து போகின்றது. இதை அசட் சைக்கிள் (Asset cycle ) என்பார்கள். எனவே நாம் ஒரு வகையான முதலீட்டில் முதலீடு செய்வது தவிர்த்து, தங்கம், ஈக்குவிட்டி, கடன், மற்றும்  இடம் என்று பல்வேறு வகையான முதலீடுகளில், முதலீட்டை செய்ய வேண்டும். இது ஒரு முதலீடு குறைந்தாலும் அடுத்த முதலீடுகள் ஏறி நமக்கு லாபம் பெற ஏதுவாக இருக்கும்.


முடிவாக நிதி பராமரிப்பில் அதிக ஆசைப்பட வேண்டாம். அளவான ஆசையே போதுமானது. திட்டமிட்டு செலவுகள் செய்து ரிஸ்கை தெரிந்து, வருமானத்திற்கு ஏற்றவாறு முதலீடுகளை பரந்து விரிந்த  முறையில் முதலீடு செய்து, செய்த முதலீட்டை நன்கு பராமரித்து,  நல்ல பலன் பெற வாழ்த்துக்கள்


Monday, 9 January 2023

Personal Finance - Points to ponder

 TEN COMMANDMENTS of Personal Finance


Covid has brought much harm, but it has brought some benefits as well. Mutual Fund investments have increased to about 40+ lakh crores. Demat accounts have risen in unimaginable proportions. The market also recently hit a peak. This is all due to the arrival of many new investors. Here are 10 commandments that new investors need to know and veteran investors need to recollect:

Commandment One: No magic wand to make money.

To make money, there is no magic wand as many people think. Making big money requires proper planning, understanding and patience. Many people think that luck is necessary to make money, which has sometimes helped some people, but not at all times.

Commandment Two: Risk is more, Return is more.

Many of my clients are reluctant to take risks, but they need more profits. It's not desire, it's greed. For example, equity type schemes have higher risk and higher return potential. Debt funds are less risky and less profitable. Not just mutual funds, but this applies to all types of investments like shares, bank deposits, bonds, corporate deposits, etc. When the risk is high, the profit is high. When the risk is low, the profit is low. Always keep this in mind. Never forget. This is the most important commandment out of all the ten listed here.

Commandment Three: Don't take undue risk.

Because of the second commandment, don't fall into the trap that I will take more risk and make more money. Based on your financial position, your risk-taking ability should be to the extent that risk is manageable. To know more about your risk profile, take a risk profiling survey. Find out the risk level suitable for you, and then take the risk accordingly.

Commandment Four: Use more common sense.

You don’t have to be a gold medalist in finance to make money. A lot of times common sense is enough. Keep your eyes and ears open. Collect details about finance by reading, watching, and listening. Understand it. Invest accordingly. For example, if a bank gives half interest per month and a person or a new company gives double interest, your antenna should go up and ignore the high interest bite. This is the benefit of common sense.

Commandment Five Be Alert.

Investments require more attention. Distraction leads to losses. While investing online, or making money transactions, there should be no distractions even in the slightest. Don't trust anything in online financial transactions. Be very, very careful. Keep this in mind. Always be alert.

Commandment Six: Buyers Beware.  

Sellers are clever and buyers are crooks. Don't be a loser in financial transactions. Let the sellers say whatever they want, we need to see if it is correct or exaggerated before we buy it. Don't buy it if you are in doubt. It is necessary to understand and we have to be sure before considering a buy. It will be beneficial not only for investment but also in life.

Commandment Seven: Do not believe in extraordinary returns

As indicated in commandment three, high interest rates of 12% or more lead to high risk. As given in the fourth commandment, do not invest and be deceived if someone or a company claims to give high interest when the bank gives six percent interest per annum. So do not fall into the trap of high interest rates.

Commandment Eight: Little planning will help.

You should plan and invest according to your financial situation whether it is less money or a ton of money. Proper planning is essential as to how much, where to invest and when to reap the benefits. Anxious or hasty investing will not help.

Commandment Nine: Tracking your investments and expenditures will help.

Making a good investment after thorough research is not the end. Don't sit back and rest. Investment has to nurture well. Annual review about how much return we got and if the company or scheme is doing well is necessary. In poorly performing cases, we need to switch tracks or fine tune the investment strategy.

Commandment Ten: Asset Allocation

Will it be alright if I invest all my wealth into one well-researched sure shot winner? The answer is definitely no. All over the world every kind of investment undergoes an asset cycle. The asset will perform good for some time and fall for some time. So instead of investing in one type of investment, we should invest in different types of investments like gold, equity, debt, and real estate. This means that even if one investment goes down, the next investment will go up and we will make a decent profit and the volatility in our portfolio will be less and our return is positive.


Finally, don't be too ambitious about financial returns. Moderate desire is enough. Plan your expenses. Know the risk. Invest in a wide range of investments according to your income. Maintain your investment well to get good results. All the best!


Friday, 30 December 2022

5 Tips for Tax Saving in 2023

Five strategies to save tax.

Happy New Year 2023

New Year 2023 has arrived. We are in January. I do not know if this is the time for viral fever or not, but many people will get tax fever. Everyone in the tax bracket will Look for ways to invest in tax saving schemes, to reduce tax. Usually, they end up in insurance. There are better ways to get more returns than that.

  1. ELSS: Equity Linked Savings Scheme. In this plan, compulsory locking years are only three years, not like ten years in insurance. More than 40 fund companies here are offering these types of schemes. We have selected five funds for your investment consideration. We have tabulated three-year and 10-year returns in % for proper understanding and comparing other similar tax savings instruments having different lock in periods. In the next 5 years, the probability of ELSS giving more return than current 5-year tax saving bank deposit bearing interest rate of 7.5%

Fund Name

Rating

3 Yr Ret (%)

5 Yr Ret (%)

10 Yr Ret (%)

Canara Robeco Equity Tax Saver

5

19.58

14.39

14.8

DSP Tax Saver

4

17.55

11.55

16.11

IDFC Tax Advantage (ELSS)

4

22.6

11.27

16.47

Kotak Tax Saver

4

17.8

12.17

14.32

Mirae Asset Tax Saver

5

18.03

12.96

  1. SIP: SIP is the most popular word now. We know that investing in SP is better in many ways than investing in a lump sum. Recession is round the corner and rising interest rates are visible. In this volatile season, SIP in ELSS seems very appropriate. So put off the hesitation, start an ELSS-SIP of around rupees 10,000 - 12,500 per month in any one of the above-listed schemes and harvest the potential benefits of tax saving and better returns.
  2. Health insurance: In this covid period even if you have employer group insurance, over and above it is good to consider availing health insurance for individuals. This is tax deductible under section 80D. In this uncertain period of employments, having personal health policy will cater to medical need, during switching the jobs or when leaving company
  3. NPS: Those who now think that they should be comfortable in retirement, please consider investing in NPS. An additional tax deduction of ₹50,000 can be made by investing in pension (NPS) (80CCD 1B) schemes.
  4. Earlier is better: In the month of March, it is obvious that the investment in tax-saving schemes will increase. But many IT companies and other companies will get the tax saving details from the employees in December and January. They calculate the applicable TDS based on these inputs. So, there is no point in sleeping till the 11th hour. Wake up. Start investing in ELSS through SIP mode Now, reduce your tax burden and TDS outgo.

Contact us to save tax

Radha Consultancy : Contact us

I would really appreciate if you could please take a few seconds to post a Google review in the link below

you can give your feedback by clicking this link which will help me for improving my services better

You can read the previous articles about tax saving article published last year here

Tax saving quarter

Thursday, 8 December 2022

தலைகீழ் அடமானம். Reverse Mortgage

08-12-2022 

To read this article in English click here

நம்மில் பெரும்பாலோனோர் வருங்காலத்தைப் பற்றி இளமையில் சம்பாதிக்கும்போது நினைத்து சேமிப்பதில்லை. நம் தாய் தந்தைகளும் அவ்வாறு இருந்ததுமில்லை. அந்த காலங்களில் வயதானவர்கள், குழந்தைகள் கூட இருந்து விடுவார்கள். ஓய்வு காலத்தில் அவர்களுக்கு வருமானம் தேவையில்லை. காலம் மாறிவிட்டது. உறவுகள் சொந்தம் பார்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவரவர்கள், அவரவர்கள் பாட்டை பார்த்து கொண்டிருக்கிறார்கள். வருமானம் இல்லாத ஓய்வு கால வாழ்க்கை மிகவும் கடினம்தான். 

இந்த மாதிரி நேரங்களில் வீடு இருந்தால் போதும். மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம். என்ன வீட்டை விற்று  விட்டு, நாங்கள் எங்கே போவது தெருவுக்கா?  இந்த கடி சொல்  என் காதில் விழுகின்றது.   அப்படில்லாம் சொல்வேனா  நான். ஓய்வு காலத்தில் சொந்த வீட்டில், தெரிந்த சுற்றுப்புறத்திலேயே ஆயுள் முழுதும் இருந்து கொண்டு மாதாமாதம் செலவுக்கும் பணம் பெறலாம். இந்த வகையான வங்கிக் கடனுக்கு தலை கீழ்  அடமானம் என்று நாமம்(Reverse Mortgage). அதை பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம். 

தலைகீழ் அடமான வங்கிக் கடனின் சிறப்பம்சங்கள். 

  1. தம்பதிகள் இருவரும் அவர்களது வீட்டிலேயே இருவரது வாழ்க்கை காலம், வரை வசிக்கலாம்.
  2. தம்பதிகள் வங்கிகளுக்கு எந்த வகையான பணமும் கட்ட வேண்டாம். அதற்கு பதிலாக வங்கிகள் தொடர்ந்து ஓய்வூதிய செலவுக்கு பணம் தந்து கொண்டே இருக்கும்.
  3. தம்பதிகள் ஆயுள் காலத்திற்கு பிறகு வாரிசுகளும் வங்கிகளுக்கு இது சம்பந்தமாக எந்த வகையான பணமும் கட்டத் தேவையில்லை.
  4. வரிவிதிப்பு முறையில் வங்கிகளிடம் இருந்து பெறும் பணம் வருமானமாக கருதப்படாது.
  5. வங்கியிடமிருந்து பணம் பெறும் காலத்திலும் வீடு உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். 

யாரு யாரெல்லாம் தலைகீழ் அடமான கடனை வங்கிகளிடமிருந்து பெற முடியும்? 

  1. வீடு, தம்பதிகள் இருவர்  பெயரிலோ அல்லது ஒருவர் பெயரிலோ கட்டாயம் இருக்க வேண்டும்.
  2. பொதுவாக தம்பதிகளில் ஒருவர் வயது 60 க்கு மேலும் அடுத்தவர் வயது 55 க்கு மேலும் இருக்க வேண்டும்.
  3. வீட்டின் தாய்ப்பத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும். வேறு கடனிலோ அல்லது எதாவது ஒருவகையான நிலுவையிலோ இருக்கக் கூடாது. (Clear title without any encumbrance)
  4. தம்பதிகள் அந்த வீட்டிலேயே நீண்ட காலத்திற்கு வசிக்கலாம். இருவரில் ஒருவர் இல்லாத போதும், மற்றொருவர் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கலாம்.
  5. வாடகை வரும் வீட்டிற்கோ அல்லது வியாபாரமயமாக செயல்படும் வீட்டிற்கோ(commercial property) இந்த கடன் பெற முடியாது.
  6. கடன் பெறுவதற்கு, கடன்பெறும் தம்பதிகள் வருமானம் எவ்வளவு உள்ளது அல்லது அவர்களது கடன் பெற தகுதி (credit score) உள்ளதா?என்ற விவரங்களை வங்கிகள் பார்க்காது . அந்த வீட்டின் மதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை மட்டுமே பார்க்கும் .
  7. பெரும்பாலான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், ஸ்டேட் பேங்க் உட்பட இந்த வகையான கடன்களை, முதிய தம்பதிகளுக்கு கொடுத்து வருகின்றது. 

தலைகீழ் அடமானகடனின் நடைமுறை. 

  1. வங்கிகளின் மதிப்பீட்டாளர்களின்படி, வீடு கட்டி வருடம் எத்தனை  ஆகியுள்ளது. இன்னும் எத்தனை வருடங்கள் நன்றாக இருக்கும் என்று ஆய்வுசெய்து, அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்.
  2. வீட்டின் மதிப்பீட்டுத் தொகையில் இருந்து சுமார்.60% - 80% வரை கடன் கிடைக்கும்.
  3. வீட்டின் மதிப்பை வங்கி ஆய்வாளர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றவாறு கடன் தொகையை மாற்றிக் கொள்வார்கள்.
  4. கடன்  தொகை என்பது, நமக்கு, கிடைக்கும் தொகை மற்றும் அதற்கான வட்டி, இந்த கடனுக்காக செய்த மற்ற செலவினங்கள். எல்லாம் சேர்ந்து மொத்த தொகை ஆகும்
  5. கடனுக்கான வட்டி விகிதங்கள் 8% - 12% இருக்கலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.
  6. பொதுவாக வீடு கட்டுவதற்கு வாங்கும் கட னுக் கான வட்டி விகித்தை விட இந்த வகையான கடனுக்கு வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கின்றது.
  7. வங்கியிடம் இருந்து  நமது தேவைக்கு ஏற்ப மாதாமாதம்மோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில்  நாம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது தவிர மருத்துவச் செலவுகளுக்காக, அதிகமாக, ஒரே தடைவையாக பணத்தை பெற்றுக் கொள்ளும் முறையும் சில வங்கிகளில் உள்ளது.
  8. தம்பதிகள் இருவரின் ஆயுட்காலத்திற்கு பிறகு வங்கிகள் அந்த வீட்டை அன்றைய தேதியில் விற்று விட்டு, வரும் தொகையில் அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை அவர்கள்  வாரிசுக்கு (legal heirs)  கொடுத்து விடுவார்கள்.
  9. ஏதோ ஒரு காரணத்தினால் வீட்டை விற்று வரும் தொகை வங்கிகளின் கடன் தொகையை விட குறைவாக இருந்தாலும், வாரிசுகள் வங்கிகளுக்கு பணம்  கொடுக்க தேவையில்லை. வங்கிகள் அதற்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடம்  இருந்து பெற்றுக்கொள்ளும். இது மிக முக்கியமான அம்சமாகும்.
  10. வாரிசுகள் அந்த வீட்டை அவர்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அன்றைய தேதியில் வங்கிகளுக்கு தர வேண்டிய தொகை அனைத்தையும் கட்டிவிட்டு வீட்டை அவர்களே வைத்துக்கொள்ளலாம்.
  11. தம்பதிகள் வேறு வீட்டிற்கு செல்ல நினைத்தாலும் அல்லது கடன் போதும் என்று நினைத்தாலும் அல்லது வீட்டை விற்று விட நினைத்தாலும், வங்கிகளுக்கு தர வேண்டிய தொகை அனைத்தையும் கட்டிவிட்டு அவர்கள் நினைத்தவாறு செய்யலாம்.

உதாரணமாக, மாதா மாதம்.ரூபாய் 15,000, 15 வருட காலம் பெறுவதற்கு, 8%-9% வட்டி வீதத்தில், கடன் பெறும் தொகை வட்டி சேர்த்து சுமார் 50 லட்சமாக இருக்கும். இதற்கு வீட்டின் இன்றய மதிப்பு  சுமார் 70 லட்சமாக இருப்பது அவசியம்.  

போதிய வருமானம் இல்லாத முதிய தம்பதிகள் ஓய்வு காலத்தில் தங்களுக்கு மிகவும் பழக்கமான நெருக்கமான சொந்த வீட்டிலேயே ஆயுட் காலம் வரை இருப்பதற்கு இது மிகச் சரியான வழியாகவே தோன்றுகின்றது. 

Sunday, 13 November 2022

Reverse Mortgage

Most of us don't think about the future and save when we are young. Neither were our parents. In those times, parents lived with their wards till their end. They don't need income during retirement. Times have changed. Relationships don't belong. Most of the children are abroad. Everyone is concerned about their career and future, and does not have quality time for their parents. Retirement life without income is very difficult.

At times like these, having a home is enough to live a happy life. Do not murmur, I am not recommending anyone to sell their house. Instead, I am asking you to live in your own home, in a familiar neighborhood and at the same time, receive money for your monthly expenses. This is definitely possible. The way out is a special type of bank loan. This type of bank loan is called reverse mortgage. Let's see more about it.

Highlights of a reverse mortgage bank loan.

  1. Both spouses may reside in their home for the duration of their lives.
  2. Couples should not pay any kind of money to banks. Instead, the banks continue to pay for their living costs based on their property value
  3. After the lifetime of the couple, the heirs also need not pay any kind of money to the bank in this regard.
  4. Money received from banks is not treated as income for tax purposes.
  5. The house remains in the owner's name even during the period of receipt of payment from the bank but it will under linen to the bank 

Who can get a reverse mortgage loan from banks? 

  1. The house must be in both names of the couple or in one name.
  2. Generally, one of the couples should be above 60 years and the other should be above 55 years.
  3. The house is in clear title without any encumbrance
  4. Couples can live in that house for a long time. In the absence of one of the two, the other may continue to live in the house.
  5. This loan cannot be used for rental houses or commercial property.
  6. Banks do not look at the details of the borrower's income or their credit score to get a loan. Bank is more concerned about property title and its value
  7. Most of the nationalized banks, including the State Bank, offer these types of loans to senior citizens. 

The practice of reverse mortgages. 

  1. Bank appraisers will access the house details and arrive at the age of the house and how long it will be in good condition.
  2. Loans are available at around 60% - 80% of the home's appraisal amount.
  3. Bank appraisers evaluate the value of the house every five years and adjust the loan amount accordingly.
  4. Loan amount means the amount available to us and the interest thereon and other expenses incurred for this loan. All together is considered as the total loan amount
  5. interest rates on the loan can be 8% - 12%. It varies from bank to bank.
  6. Generally, the interest rate for this type of loan is slightly higher than the interest rate for a home loan.
  7. We can get money from the bank either monthly or at regular intervals as per our requirement. Apart from this, some banks also have a system of withdrawing money for medical expenses, in case of any emergency.
  8. After the lifetime of both the couple, banks will sell the house on that point of time, adjust the amount due to them and the remaining amount will be disbursed to their legal heirs.
  9. Even if for some reason the sale price of the house is less than the loan amount of the banks, the heirs do not need to pay the money to the banks. Banks collect the amount from insurance companies. This is a salient feature of this Reverse Mortgage loan
  10. If the heirs want to keep the house themselves, they can pay all the amount due to the banks on that settlement date and keep the house with themselves.
  11. When the couple wish to move to another house, or if they think that the loan is enough, or if they wish to sell the house, they can settle all the loan amount owed to the banks. Once the loan is prepaid in full, they are free to use their property as per their wish.

For example, if you borrow Rs 15,000 per month for a period of 15 years, at an interest rate of 8%-9%, the loan amount including interest will be around 50 lakhs. For this, the current value of the house should be around 70 lakhs.

This seems to be the perfect way for an elderly couple on a limited income to stay in their most familiar home for the rest of their lives in retirement. 

Monday, 17 January 2022

வரி சேமிக்கும் காலம்.

வரி என்னும் பூதம்.


ஜனவரி முதல் மார்ச் வரை பொதுவாகவே நிறைய வரி சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு. வருவது சரித்திரம். இதுவரை வரியைப் பற்றி நினைக்கவில்லை. இப்பொழுது பூதாகாரமாய் பயமுறுத்துகிறது.என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல. பலநூறு ஆயிரத்தில் ஒருவர்தான். வரி தவிர்க்க முடியாதது என்று எண்ணுபவர்கள் ஏராளம். கூடியவரை தவிர்க்கலாம்.சற்று மெனக்கெட வேண்டும். வாருங்கள் சுருக்கமாக, பார்ப்போம். இந்த.காலத்தில் எப்படி வரியை சேமிக்கலாம் என்று.


மியூச்சுவல் ஃபண்டுகளில் வரி சேமிப்பு.


எல்லா வகையான வரி சேமிப்பு வகைகளிலும், திட்டங்களிலும் குறைந்த காலத்திற்கு லாக்கின்(Lock in)  உள்ள திட்டம், மியூச்சுவல் ஃபண்டுகளின் ELSS (Equity Linked Savings Scheme)  எனப் படும் வரி சேமிப்பு திட்டங்கள் மட்டுமே. இது ஒரு சாதகமான விஷயம் தான. சாதகமில்லாத விஷயங்களும் இங்கு உண்டு.மற்ற எல்லா திட்டக்களிலும்   வரும் லாபம் அல்லது வட்டி விகிதம் எவ்வளவு என்று நிச்சயமாக தெரியும். இந்த மியூச்சுவல் ஃபண்டின் ELSS திட்டங்களில் அதை எவ்வளவு என்று அறுதியிட்டு கூற இயலாது. காரணம் இந்த ELSS திட்டங்கள் முழுக்க முழுக்க ஈகுட்டி வகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். அதுனால என்ன சரித்திரம் சாதகமான கதைகள் பல சொல்லும்.


வடி கட்டி தேர்ந்தெடுத்த ஃபண்டுகள்.


சரித்திரத்தில், பல திட்டங்கள் பல்வேறு காலக்கட்டத்தில்.பல மாதிரி லாபம் கொடுத்து வருகின்றது. இந்த திட்டங்களில்.எந்த திட்டம்  நமக்கு ஏற்றது என்று எப்படி கண்டுபிடிப்பது? பொதுவாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் குறைவாக, நல்ல வருவாய், நீடித்த வகையில்.தந்து வந்தால்.அந்த திட்டம் உசிதமாக இருக்கும். இதனடிப்படையில்.கடந்த 1, 3, 5, வருடங்களில்.லாபம் தந்த திட்டங்களை பார்த்து, அதை வடிகட்டி, மிஞ்சும் மூன்று திட்டங்களை எடுத்துக் கொள்வோம்.இந்த மூன்று திட்டங்கள், கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில். முதலீடு செய்வது சற்று உசிதமாக இருக்கும் என்பது, பொதுவான அறிவு. இன்னும் என்ன விசனம்? சீக்கிரமாக. முடிவு செய்யுங்கள், முதலீடு செய்யுங்கள், வரியை சேமியுங்கள். லாபம் கிடைக்கும் என்று நம்புங்கள்.

வரி சேமிப்பு திட்டங்களில் லாபவிகிதம் ஆண்டு சதவிகிதத்தில் தரப்பட்டுள்ளது. 


Scheme

1 Year

3 Year

5 Year

Mirae Asset Tax Saver Fund Direct-Growth

36%

27%

24%

IDFC Tax Advantage (ELSS) Direct Plan-Growth

49%

26%

22%

Canara Robeco Equity Tax Saver Direct- Growth

35%

27%

22%



80C க்கு அப்பால்.


மேற்கூறிய. ELSS திட்டங்கள்.80C வகையைச் சார்ந்தது. நாங்கள் முன்னமே. ₹ 1.5 லட்சத்தை முதலீடு செய்து விட்டோம். இன்னும் எப்படி வரியை சேமிப்பது என்பவர்களுக்காக, இந்த கொரோனா காலத்தில்.80D  என்ற வகையில். மருத்துவ.காப்பீடு (Medical / health Insurance) எடுத்து வரியை சேமிக்கலாம். மேலும்.கடைசிக்காலத்தில் சௌகரியமாக இருக்க வேண்டும் என்று இப்பொழுதே எண்ணுபவர்கள்.என். பி. எஸ். எனப்படும்.பென்ஷன் (NPS) (80CCD 1B)  திட்டங்களில்.முதலீடு செய்து மேலும் ₹50,000 வரி விலக்கு பெறலாம். 


இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும். 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும் 

முந்திய கட்டுரைகளை  படிக்க


எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

எஸ் ஐ பி

நாமினேஷன் அவசியம்

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3