Saturday 16 July 2016

பொறியியலும் பெற்றோரும் ( Engineering Vs Parents)

நாம் ஜூன் மாதத்தில் நல்ல கோடையில் உள்ளோம். பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கும் நேரம். அதிலும், பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வயதில் அரசுகளும், பெண்களும் இருக்கும் வீடுகளில், வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும் என்பது திண்ணம். இது காலத்தின் கட்டாயம். வெம்மையிலும் கொடுமைதான். இதை எப்படி தணிக்கலாம் என்பதை எனது அனுபவத்தில் கேட்ட, பார்த்த, படித்த சிலவற்றை இங்கு பகிரலாம் என்று என்னுகின்றேன்.

ஆதியில், எந்த கல்லூரியில் அல்லது எந்த படிப்பில் இருந்து தொடங்குவது?? அங்குதானே சிக்கல்!! வெம்மை கொடுமை எல்லாம் “All roads are leading to Rome” என்பார்கள். அது போல எல்லோரும் படையெடுப்பது, Anna university நோக்கியே.. இது அறிந்த்துதான்! எனவே இந்த கட்டுரையில் பொறியியலை மட்டும் ( Engineering courses) எடுத்துக் கொண்டு மறு பரீசிலனை செய்வோம் வாருங்கள்.

கலை அறிவியல் கல்லூரிகளில் படிப்பது, இயற்பியலும் வேதியியலும். இங்கு , அறிவியலின் அடிப்படை கூற்றுகளை அறிந்து கொள்வது. அதே அறிவியலின் அடிப்படை கூற்றுகளை எப்படி, மனிதனின் அன்றாட தேவைகளுக்கு ஏற்றவாறு, மனிதனின் செளகரியங்களுக்கும் வளர்ச்சிக்கும், எப்படி பயன்படுத்துவது என்று படிப்பதே பொறியியல் ஆகும். இன்னும் எளிதாக சொல்லப்போனால், Arts and Science College’ல் படிப்பது Basic Science.. Engineering’ல் படிப்பது Applied Science.

பொறியியலில் மாணவ மணிகளுக்கு ஆசை இருக்கிறதோ இல்லையோ, ஆத்தாளுக்கும் அப்பச்சிக்கும் அவ்வளவு ஆசை, ஆதங்கம், கவலைகள், பெருமூச்சு என எல்லா Stress காரணீகளும் சேர்ந்து கொள்கிறது. எனது காலத்தில், 1978’ல் என் ஆத்தாளுக்கும் அப்பச்சிக்கும் அத்தனை கவலைகள் இருந்த்தாக நினைவில்லை. கண்ணன் படிப்து படிக்கட்டும் என்று இருந்துவிட்டிருப்பார்கள். என்ன படிப்பு படித்தேன், அதற்கு என்ன வேலை கிடைக்கும், என்று என் ஆத்தாவிற்கு தெரிந்திருக்க வாய்பில்லை. அப்போது எனக்கு இருந்த சுதந்திரம், இன்று உள்ள மாணவ மணிகளுக்கு இல்லை என்பது கவலைக்குரிய விஷயமாகவே நான் பார்கின்றேன். காரணம் சில பெற்றோர், தான் படிக்கவேண்டும் என்று நினைத்து, தனது பெற்றோரின் வசதி குறைவால் படிக்க முடியாமல் போனதையெல்லாம், தமது வசதியால் தனது குழந்தைகள் அதை படிக்க வேண்டும் என்று குழந்தைகளை நிர்பந்திப்பது, சரியா? இல்லை என்று காலம் அவ்வப்போது நமக்கு சில நிகழ்வுகள் மூலம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

நமது மாணிக்கத்தின் கதைக்கு வருவோம்... அவனுக்கு எந்திரவியல் ( Mechanical) படிக்கவேண்டும் என்ற ஆசை எப்போதோ வந்து விட்டது. அவன் +2’வில் எடுத்த மதிப்பெண்களுக்கு, எந்த கல்லூரியில் எந்த துறையில் சேர்வது என்று Counselling போகும் முன் ஓரே குழப்பம்தான். முதல் தர கல்லூரியில் Printing Technology கிடைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம், மூன்றாம் தர கல்லூரியில் எந்திரவியல் துறை கிடைக்க வாய்ப்புள்ளது. எதை தேர்ந்தெடுப்பது?? Million dollar question!! மாணிக்கத்தின் பாடு திண்டாட்டம்தான். ஆத்தா, அப்பச்சி, வாக்குவாத்தில் யார் கை ஓங்குகிறதோ அங்குதான் மாணிக்கம் படிக்க வேண்டியதாகிவிடும். இதற்கு பதிலாக இவ்வாறு யோசியுங்கள்… மாணிக்கம் படித்து முடித்து, ஏதொ ஒரு IT நிறுவனத்தில் சேர்ந்து, சுமார் 3 முதல் 4 லட்சம் சம்பாதித்து, நல்ல தோதில் பெண்பார்து செட்டிலாக ஆசையா? இதில் அவனுக்கும் விருப்பம்தான் என்றால், முதல் தர கல்லூரியில் Printing technology படிக்க விட்டுவிடுங்கள்… இல்லை, “வேலையில்லா பட்டதாரி” படத்தில் வரும் தனுஷை போல, மாணிக்கம் குறிக்கோளடு எந்திரவியல் துறையில் படித்து, அதே துறையில் பட்ட மேற்படிப்பும் படித்து Dr மாணிக்கம் ஆகி , அத்துறையை சார்ந்த நிறுவனித்தில் வேலை பார்க்க வேண்டும் என்று கூறினால் அவன் மூன்றாம் தர கல்லூரியில் எந்திரவியல் துறையில் படிக்கட்டும். இதில் பணம் சம்பாதிப்பதற்கான சாத்தியகூறுகள் ஆரம்பத்தில் சற்று குறைவு என்பதை மட்டும் மாணிக்க்திற்கு தெளிவு படுத்திவிடுங்கள்.

அடுத்ததாக உமையாளை பார்ப்பமோ… அவளின் விருப்பம் கட்டிட கலையெனறு இருக்கும் பட்சத்தில், அவள் அதிக மதிப்பெண்ணும் வைத்திருக்கிறாள். துறைகளில் முன்வகிப்பது ECE ( Electronics and Communication)… இதுவே அவளுக்கு எளிதாக கிடைக்கும் போது, யாராவது Civil போவார்களா என்று, ECE குள் தள்ள வேண்டாம். அவள் இஷ்டமின்றி படிப்பதால் இது வருடா வருடம் Arrears வாங்க வகை செய்யலாம். Circuit Branch என்று சொல்லபடும் ECE யில் அவளால் படிக்க முடியுமா என்று பாரக்கவேண்டும். நல்ல மதிபெண்கள் பெற்று பொறியியலில் சேர்ந்து, முதல் வருடத்திலேயே Arrears வைத்திருப்பவர்கள் ஏராளம்! (Arrears என்பது, பாடத்தில் பெயில் ஆவது )

சொக்கை எடுத்து கொள்ளுங்கள், அவன் கதை வேறுமாதிரியானது. எத்தனையோ மாணவர்களைப் போல், சாதாரணமாக படிப்பவன். அவன் ஆத்தா மங்கையர்க்கரசி அச்சியோ, மற்ற பிள்ளைகள் படிப்பது போல் பொறியியல் கல்லூரியில் தான் என் மகனும் படிக்கவேண்டும் என்று அவனை படுத்தி, அவளால் முடிந்த சிபாரிசு மூலம் நல்ல கல்லூரியில் கஷ்டமான துறையில் சொக்கை சேர்த்தால் எப்படி இருக்கும்? அவன் முதல் வருடத்திலேயே Arrears வாங்குவது, அன்றே முடிவு செய்யபட்ட நிகழ்வு ஆகிவிடும்.

வசதி இருக்கிறது வள்ளிக்கு… கல்யாணப் பத்திரிக்கையில் பொறியாளர் என்று போடவேண்டும். வேலை தேவையில்லை. இதற்கு சிரமப்பட வேண்டாம். அருகில் உள்ள கல்லூரியில், எளிய துறையில் படிக்கலாமே?!

இன்னும் ஒரு வகையுள்ளது... அந்த Adolescent வயதில், தனித்து தெளிவாக சிந்தித்து, விரும்பிய துறையை சொல்ல தெரியாத மெச்சி… தெரிந்தாலும் அப்பச்சிக்கு பயந்து சொல்லாமல் இருக்கும் கமலி… கேட்பதற்கெல்லாம் பூம், பூம் மாடு மாதிரி தலையாட்டும் அலமி… இவர்கள் என்ன துறையை எடுப்பார்கள்??

இப்போது தெளிவாக புரிந்து இருக்கும்… மகனோ மகளோ விரும்பிய, படிக்க முடிந்த துறையை ஒட்டி, பெற்றோர் நிதர்சனங்கள் புரிந்துகொண்டு, திரும்பவும் சொல்கிற்றேன்.. நிதர்சனங்கள் புரிந்துகொண்டு, அந்த நிதர்சனங்களை மக்களுக்கு புரியவைத்து, துறையை முடிவு செய்ய வாழ்த்துக்கள்!!

துறையை முடிவு செய்த பிறகு, அத்தியாண்டி சொன்னாள், மாப்பிள்ளை சொன்னார்கள் என்று மனம் மாறி மக்களை படுத்தாதீர்கள். ஆளுக்கு ஆள், எண்னையும் சேர்த்து, ஆயிரம் idea தருவார்கள். இதையல்லாம் விபரமாக, ஆராய உபயோக படுத்துங்கள். துறையை முடிவு செய்த பிறகு மாறாமல் இருப்பதே நண்மை பயக்கும். ஒரு வருடம் படித்த பின், வாத்தியார் சரியில்லை, பாடங்கள் பிடிக்கவில்லை என்று ஏதோ ஒரு காரணத்தை கொண்டு இராண்டாவது வருடம் வேறொரு துறைக்கு மாறுவார்கள். இதை தவிர்க்கலாம்.

பாதி கிணறு தாண்டிவிட்டோம்… ஆனால் பாதி கிணறு தாண்டுவது பலன் தராது. மீதி பாதியையும் தாண்டவேண்டுமே!! அதுதான் கல்லூரி தேரந்தெடுப்பது. நான் படித்த போது 8 பொறியியல் கல்லூரிகள், இப்பொழுது விக்கிபீடியாவின் நிலவரப்படி552 பொறியியல் கல்லூரிகள் நம் தமிழ் நாட்டில் உள்ளன. இதில் ஒன்றை தேரந்தெடுப்பது… அதில் இடம் கிடைப்பது… பகீரதப்பிரயத்தனம்தான். முதலில் உங்களுக்கு ஏற்ற கல்லூரிகள் பற்றி தகவல்கள் திரட்டுங்கள். அதில் படித்தவர்கள் இருந்தால், அவசியம் அவர்களிடம் விசாரியுங்கள். கல்லூரிகளின் தர வரிசை இருக்கிறதா என்று இணையத்தில் தேடுங்கள். கடினம்தான், முயற்ச்சி செய்யுங்கள்! Anna university தளத்தில் சிறிது காலம், மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் சார்ந்த தர வரிசை இருக்கும். அதை பாருங்கள். அடிப்படை வசதி இல்லாத, சரியான ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளை தவிர்த்துவிடுங்கள். வேலை கிடைக்க, படிப்பு போக Soft skills இப்போது அவசியம். Soft skills என்பது, நாம் எப்படி பேசுகின்றோம், எப்படி புரிந்துகொள்கின்றோம், என்று பலவாறு உள்ளது. சில கல்லூரிகள் இதில் கவனம் செலுத்துகிறாரக்ள். இதையும் கவனத்தில் கொள்க. இரண்டொரு கல்லூரிகள் முடிவானபிறகு, அந்த கல்லூரியை நேரில் பார்க்க முடிந்தால், அதையும் செய்துவிடுங்கள். இவ்வளவையும் அலசி ஆராய்ந்து கல்லூரியை முடிவு செய்யுங்கள்!!

கட்டுரையை முடிப்பதற்க்கு முன் மேலும் சில நிதர்சனங்கள். சமீபத்தில் Whatsapp’ல் படித்தது வலித்தது. “பல வருடங்கள் முன், ஊரில் "இஞ்சினியர் சார்” வீடு எங்கின இருக்கு? என்று கேட்டால், அதோ அந்த வெள்ளை பங்கிளாதான், என்று சொல்வதுண்டு. தற்போது அதே கேள்விக்கான பதில்.. எந்த இஞ்சினியர்? அவன் பேர் என்ன? அந்த மரத்தடியில் படுத்திருக்க பயலெல்லாம், இஞ்சினியர்தான், அங்கின போய் விசாரி" இதுதான் மறுக்கமுடியாத நிதர்சனம் - 1

சாதரண பொறியில் கல்லூரியில் Civil படித்துவிட்டு, ஏதோ ஒரு IT நிறவன்த்தில் வேலை செய்பவர்களுக்கும், அதே நிறுவனத்தில் BSc / MSc அல்லது BCA/MCA Computer science படித்துவிட்டு வேலை செய்பவர்களுக்கும், சம்பளத்தில் பெரிதாக வித்தியாசம் இருப்பதில்லை. பின்னவர் கணனி படித்துள்ளதால், சிறிது உயர்ந்த நிலையில் இருக்க வாய்புள்ளது. இது நிதர்சனம்- 2

ஒன்றை ஆனித்தரமாக நினைவில் கொள்க. நல்ல துறையில், நல்ல கல்லூரியில் படிப்பது ஆரம்பமே. நல்ல சம்பளத்தில் நல்ல நிறுவனத்தில் நல்ல நிலையில் தொடர்ந்து வேலை செய்து வெற்றி வாகை சூடுவது, அவரவர் திறமை. குணநலன்கள், பேச்சு திறமை, நிர்வாக பண்புகள் என்று பல காரணீகள் உள்ளது. இது நிதர்சனம்- 3

ஆக… நகையை அடகு வைத்து, வீட்டை விற்று படிக்க முயலும் முன், மாணவ மணிகளின் விருப்பதிர்க்கினங்க, பெற்றோர், அவர்களுக்கு நிதர்சனங்களை புரிய வைத்து, நல்ல கல்லுரியை தேரந்தெடுத்து, நல்ல துறையில் படிக்க வைக்க இன்னும் ஒரு முறை வாழ்த்துக்கள்!!





2 comments:

  1. Few months back i read one of yours about shares, very interesting. This subject not so interesting.
    When I was a school boy in my home town, Nagercoil everywhere we can see so many graduvates without job even after 5 years. It has been a normal trend that many will go to Bombay in search of job. now the unemployment time has reduced to 1 or 2 years and no one is going to Mumbai. many are going to Chennai & bangalore. There ia a great change.

    ReplyDelete
  2. Thanks Ambrose - my view is wards should choose the suitable branch and colleage with out so much pressure from parents

    ReplyDelete