Saturday 16 July 2016

Time Value of Money - பணமும் காலம்மும்

Read/download this article in magazine/pdf format

பணம் பற்றி தெரியுமா? இதெண்ன இப்படி கேட்டுவிட்டர்கள். பணம் பற்றி தெரியாதவர்கள் உண்டா? பணம் பத்தும் செய்யும், என்று பழமொழிகள் கேட்டதில்லையா? என்றெல்லாம்  "சண்டே சண்டை" என்று TV வந்த்ததே, அது போல் எண்னிடம் (சண்டைக்கு வராதீர்கள்) வாதங்கள் வைக்கும் முன்  மேலே படியுங்கள். படித்த பின் பணம் பற்றி  உங்களுக்கு எவ்வளவு தெரிந்திரிருந்து என்று நீங்களே அறிந்து கொள்வீர்கள். Time Value of Money என்று கேட்டுரிக்கிறிர்களா?  இல்லை படித்து இருக்கிரிர்களா? ஆம் எனில் சிறிது ஞாபகப்படுத்தி பாருங்கள். இல்லை என்பவர்களுக்காதன் இந்த கட்டுரை.
கடந்த இதழ்களில் பங்கு, கடன், கலப்பு, ஆகிய மூன்று  வகை முதலீடுகள் பற்றி பார்த்துவிட்டோம்.  எல்லவாற்றையும், தனித்தனியாக படிக்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் எதில் முதலீடு செய்யவேண்டும் என்று வரும் போது குழப்பம்தான்.

முன்னர் கூறியபடி பரஸ்பரநிதிகளில், பல திட்டங்கள், உள்ளன… எப்படி தேரந்தெடுப்பது? தங்கதின் வரும் லாபத்தயும், பங்கின்லாபத்தயும் எப்படி சீர் தூக்கி பார்பது என்றெல்லாம் கேள்விகள் வரலாம். முதலீட்டுகளை சீர் தூக்கி பார்க முதல் படி, பணமும் காலம்மும். இதை பற்றி இப்பொழுது விரிவாக பார்போம்.

இது மிக எளிதான கருத்துதான், இருந்தாலும், சிலருக்கு இலகுவாக வருவதில்லை. முடிந்தவரை எளிமையாக சொல்கின்றேன்
பணம் என்பது வெறும் காயிதம். ரூ 100 நோட்டும், காயிதம், ரூ 1000 நோட்டும், காயிதம்,  ஒன்று ஊதா காயிதம், இன்னொற்று சிவப்பு காயிதம் பின்னது சற்றி பெரிய காயிதம். மத்திய வங்கி தந்த காயிதங்கள். சிவப்பு நோட்டு அதிக பொருள்கள், அல்லது அதிக சேவைகள் வாங்கவல்லது, ஊதா  சற்று குறைவாக பொருள்கள், அல்லது சேவைகள்  வாங்கும்.  இதுவரை புரிந்த்தா? நல்லது, இனிதான் குழப்பமே. பார்போம்..

எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. நான் நடை பயின்றது, மரநடை வண்டியில். வீட்டில் ஆயாவீட்டு கயிறு கட்டிய மரநடை வண்டிகள் உள்ளது. இப்படி இருகையில், 1980 களில்  எனது ஆச்சி, மும்பையில் இருந்து இறக்குமதி செய்தாள், அவள் மகளுக்காக, ஒரு Walker  அப்பொழுது பேத்தியை Walker  பார்த்த எனது அப்பத்தாள், இந்த வண்டி  என்ற விலை என்றாள்? ஆச்சி சாதாரணமாக ரூ 100  என்றாள். அவ்வளவுதான் அப்பத்தா, அதிர்ந்த்துவிட்டாள். அவளுக்கு ரூ 100  என்பது, பெரிய, மிகபெரிய தொகை.  போடி, இதுவா ரூ 100, ஏண்டி என்னை ஏய்கிறாய்  என்று போய்விட்டார்கள். தற்போதைய இளம் தாய்மார்களுக்கு தெரியும், ரூ 100  , ஊதா காயித்திற்க்கு, Walker  ஒரு சக்கரம் கூட வாங்கமுடியாது என்று. போகட்டும் ஒரு சிவப்பு காயித்தில் வாங்கலாமா என்று பார்தால் அதுவும் முடியாது போல் உள்ளது. மூன்று, நான்கு காயித்தங்கள் தேவைபடலாம். இந்த அரிய ஊதா தாளின் வாங்கும் தண்மை குறைந்துவிட்டது. எனவே 1980 ஒருவரிடம் ரூ 100   கடன் வாங்கியிருந்தால் இன்று ரூ 100   திருப்பி கொடுத்தால் நியாயம், இல்லை வாங்கிய ரூ 100   திருப்பி கொடுத்தால் சரியாக வராது இல்ல்லயா. அன்றைய 100 ம், இன்றைய 3000 ம், ஒரே மாதிரியான பொருட்களை வாங்குகிறது. இரண்டின் மதிப்பும், ஒன்று போல் உள்ளது.  இதே மாதரி இனறு ரூ 10000   முதலீடு செய்யுங்கள், முப்பத்தாறு வருட்தில் ரூ 3,00,000   தருகிறோம் என்றால் வாய் பிளக்காதீர்கள். இரண்டும் ஒன்றே. இரண்டிலும் பணம் 30  மடங்கு பெருகியுள்ளது. முடிவு, பணத்தின் மதிப்பு காலம் ஏற ஏற, குறைகிறது இதுதான் பணமும் காலத்தின் சாராம்சம். இதன் முக்கிய காரணீ, பணவீக்கம்

எனவே நாளடைவில் நாம் கடன் கொடுக்கும் போது கொடுத்த பணத்திற்கும், சில காலம் கழித்து பணத்தை திரும்பி வாங்கும் போதும், மதிப்பு மாறுவதால், அதை ஈடு கட்ட, வட்டி வாங்கும் பழக்கம் வந்திருக்கலாம்.
செட்டியார்களுக்கு வட்டி பற்றி தெரியும்தானே. குழந்தைகள், பள்ளியில் கணித்தில் படித்துதானே. என்று நினைக்கலாம், படித்தை, தெரிந்த்தை நாம், தினசரி, வாழ்க்கையில், உபயோகபடுத்தகிறோமா, என்றால், இல்லையென்பதே நான் அறிந்த பதில். திரும்பவும், படிப்போம், தினசரி, வாழ்க்கையில், உபயோகபடுத்துவோம்.

நாம் வங்கியில் ரூ10000 வைப்பு நிதியில் 12% ஆண்டு வட்டிக்கு  போட்டு, அதற்கு ஒரு வருடம் கழித்து எவ்வளவு ரூ-  கிடைக்கும். ரூ 11,200.00, ரூ 11,236.00, ரூ 11,268.25 சரியாக சொல்லுங்கள் பார்போம்.  (தற்போது வங்கி ஆண்டு வட்டி  விகிதம் 8%, குறைவே. நான் உதாரண்திற்காக ஒரு வட்டியை எடுத்து கொண்டேன்.  ஒரு வட்டி என்பது 12%  ஆண்டு வட்டி, ரூ100 க்கு மாத்திற்கு , ரூ 1  வட்டியாக கிடைக்கும்). நீங்கள் ரூ 11,200.00 என்று கூறியிருந்தால், உங்களுக்கு தனி வட்டி புரிகின்றது. மற்ற இரண்டில்றொன்று, தேர்வு செய்தவரா, கூட்டுவட்டி பிடிபடுகின்றது. இல்லையா? மேலும் படியுங்கள். இந்த மூன்று விடையும் சரிதான், ஏன் வட்டி வருவதில் வித்தியாசம்? காரணம், காலம் மற்றும் கூட்டு வட்டி.
கூட்டு வட்டியென்பது, வட்டிக்கும் வட்டி போடுவது. மூன்று விடையில், முதல் வகை, தனிவட்டி, இராண்டாவது, அரைவருட கூட்டு வட்டி, மூன்றாவது, மாதாந்திர கூட்டு வட்டி. ஆக மூன்றுமே சரியான விடைதானே! இது போல் காலாண்டிற்கு ஒரு முறை(), அல்லது, தினசரி ()என்று  கூட்டு வட்டியின் காலத்தை மாற்றலாம். கூட்டு வட்டியின் காலம் குறைய குறைய வட்டி கிடைப்பது, கூடுகிறது.ஆக பணத்திற்க்கும் காலத்திற்க்கும், உள்ள உறவுமுறை பிடிபட்டதா? அட்டவணை 1  பார்கவும்

இது நிதி மேலாண்மையில் முக்கிய பாடம். எனவே இரண்டு வங்கிகள், ஒரேமாதிரியான ஆண்டு வட்டிவிகிதம், தரும்போது, எந்த வங்கி, குறைந்த கால்தில் வட்டியை வரவு வைக்கிறதோ, அதில் வைப்பு நிதி வைப்பது, வட்டி சார்ந்து சிறந்த்து. வங்கியில் வைப்பு நிதி வைக்க மட்டும், இதை பார்க்கவேண்டுமென்பதில்லை. வங்கியில் கடன் வாங்கும்போதும், இதை பார்கவேண்டும். வங்கி குறைந்தகாலத்தில் கடனில் வட்டி போட்டால், நாம் நிறைய வட்டி கட்டவேண்டும்.



Table 1 - Effect of compounding

Principle
10000
Rate of interest per annum
12%
Maturing value after one year

yearly
₹ 11,200.00
Half year compounding
₹ 11,236.00
Quarterly compounding
₹ 11,255.09
Monthly compounding
₹ 11,268.25
Daily compounding

₹ 11,274.75


தனி வட்டி, கூட்டு வட்டியென்பதெல்லாம், ஒன்றும் கம்பசித்திரமல்ல, நாம், 7, 8 வகுப்பில் படித்த்துதான். ஆனால், அதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். நமது அறியாமையை பயன்படுத்தி அதிக லாபம் பார்க்க அகிலத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.


இப்போது  ஒரு உதாரண்த்தோடு பார்போம். பழம் ( நமது , பழம் நீ அப்பா, பழநியப்பன் தான்) ஆச்சியின் உத்தரவின் பேரில், மகள் நிகிதா கல்யாண்திற்கு, ( இப்போது யார் அலமீ என்றெல்லாம் அப்பத்தா, ஆயா பேரல்லாம் வைகிறார்கள்) நிகிதா பிறந்த மாதம் முதல ரூ 1000 மாத மாதம், 12% வட்டி விகித்த்தில சேர்க்க ஆரம்பதிது விட்டான்.  அவனது அண்ணன், அருணாவோ, ( அருணாசலம்தான்), ஆச்சியும், செட்டியாரும்,அவ்வளவு சமர்த்த்து இல்லாத்தால், தனது மகள் சித்திராவிற்கு  பத்து வயதாகும் போது, தம்பியை பாரத்து அதே திட்டத்தில் (Better late than never )  என்பது போல் சேரந்துவிட்டான். ஒற்றுவிட்ட சகோதரிகளின், 25  வயதில் ( 20  வயதில் எங்கே செய்ய முடிகிறது, என்ற குரல், எனக்கும் கேட்கிறது) அவர்கள் திருமணத்தின் போது ,  அப்பச்சியிடம், சீதனமாக கொடுக்க எவ்வளவு பணம் சேரந்திருக்கும், பார்கலாம். நிகிதாவிற்கு அதிகமாகவும், சித்திராவிற்கு குறைவாகவும் இருக்க காரணம், காலமும் கூட்டுவட்யும்தான். அருணா, செய்த முதலீடு, 1.8 இலட்சம், பழம், கூடுதலாக, 1.2  இலட்சம் முதலீடு செய்து பார்க்கும் லாபம்,  10 லட்சத்திற்கும் மேல், அட்டவணை 2  பார்கவும்



Table 2 - Example for longer the investment, effect of compounding is more
Description
Nikitha
Chitra
Monthly contribution
1,000
1,000
Period of contribution in years
25
15
Rate of interest per annum
12%
12%
Maturity value
₹ 18,78,846
₹ 4,99,580



Total contribution
3,00,000
1,80,000
Additional money received
₹ 15,78,846
₹ 3,19,580

இந்த வட்டி கணக்கெல்லாம் கடனுக்கு மட்டும்தான், பங்கு, மற்றும் பரஸ்பர நிதிகளில் லாபம், மற்றும் டிவிண்டெண்டு தான். வட்டி விகிதம் போன்று அதன் லாப விகிதங்களை பார்க IRR மற்றும Xirr, CAGR  உள்ளது. அதை மேலைக்கு பார்போம்.




No comments:

Post a Comment