Saturday, 16 July 2016

Performance of Investments - முதலீட்டின் மதிப்பீடு

Read/download this article in magazine/pdf format

கடந்த இதழ்களில் பணமும் காலம்மும் பற்றி தெரிந்துகொண்டோம். தனி வட்டி, கூட்டு வட்டியென்பதெல்லாம் படித்தோம். இந்த வட்டி கணக்கெல்லாம் கடனுக்கு மட்டும்தான், பங்கு, மற்றும் பரஸ்பர நிதிகளில் லாபம், மற்றும் டிவிண்டெண்டு தான். வட்டி விகிதம் போன்று அதன் லாப விகிதங்களை பார்க IRR மற்றும Xirr, CAGR, Yield என்று இருக்கிறது என்று அறிந்தோம். அதை இப்போது சற்று விரிவாக பார்ப்போம்.

அதற்கு முன், முந்தைய இதழில் படித்தின் சுருக்கம். குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட தொகை வட்டியாகவோ இல்லை வருமானமகாவோ(Dividend) கிடைத்தால், எளிதாக வட்டி வகிதம் அறியலாம். இது கடன்பத்திரங்களுக்கு மிகவும் பொருந்தும். ஆனால் பங்கு நிறுவனங்களில் இருந்து வருமானம் வரும் தேதி தெரியாது. சில நிறுவனங்களில் இருந்து ஆன்டிற்கு ஒரு முறைக்கு மேல் வருமானம் வரும். (Example TCS) இதற்கு இடைப்பட்ட வருமானம் என்று கொள்ளலாம் (Interim Dividend) சில நிறுவனங்களில் இருந்து வருமானமே வருமா என்றும் தெரியாது. பெரும்பாலும் பங்கு நிறுவனங்கள், மற்றும் பரஸ்பர நிதிகளில் இருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட தொகை கிடைக்க சாத்திய கூறுகள் இல்லை. எனவே வருமானமே இல்லை என்று பொருள் கொள்ளவேண்டாம். உதாரணமாக, சில நிறுவனங்கள், பரஸ்பர நிதி திட்டங்கள், இந்த வருடம், பிப்பிரவரியில் லாபத்தை நமக்கு தந்துதிருப்பார்கள். அடுத்த வருடம், பிப்பிரவரிக்கு பதிலாக ஆகஸ்டில் லாபத்தை நமக்கு தருவார்கள். சில வருடம் தராமலும் இருக்கலாம் ஆனாலும் வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு தொகை கிடைத்து கொண்டுதான் இருக்கிறது. இந்த மாதரி சமையங்களில் எப்படி நமக்கு வருமானமாக கிடைக்கும் தொகையின் வட்டி வகிதம், வருமானவகிதம், அறிவது. பார்கலாம்

சரியான் வருமானவிகிதம் தெரியாத்தால், நிறைய பேர், பங்கு நிறுவனங்கள், பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வது இல்லை. இது சற்று கடினம்தான். முயற்சியுங்களேன். வருமானவிகித்தை கணனியில் Excel மூலம் அறியலாம்.

முதலில். குறிப்பிட்ட கால இடைவெளியில், குறிப்பிட்ட தொகை வருமானமகவோ, செலவாகவோ இருக்கும் பட்சத்தில் வருமானவிகிதம் அறிய Rate Function in excel உபயோகபடுத்தலாம்.

உதாரணமாக நான் முன்னர் எழுதிய படி ஒருவர் மாதா மாதம், SIP ( Systematic investment Plan) வகையில் ஒரு வரி சேமிப்பு திட்டத்தில் ( Axis long term equity fund Elss) மாதாமாதம் Rs 5000 கட்டி சேரந்து 3 வருட முடிவில் Rs 1,80,000 கட்டி, திரும்ப Rs 2,35,812 பெற்றால், அட்டவணை (Table 1) படி இவருக்கு கிடைத்த வருமானவிகிதம் 17.8% இது வங்கி வைப்பு நிதியில் கிடைக்கும் 7% வட்டி விகித்த்தை விட சிறந்த முதலீடு என்பது தெளிவு.

Table 1- SIP returns using "Rate" Function in excel
Fund Name
Axis Long term equity fund
Category
Tax savings  - ELSS
Sip started
May-13
SIP End
May-16
Total period in months
36
Monthly contribution
5000
Total amount invested
180000
Current value after 3 year as on 11th may 2016
235812


Rate of return - monthly
1.49%
Rate of return - yearly
17.8%


இரண்டாவதாக. குறிப்பிட்ட கால இடைவெளியில், வெவ்வேறு தொகை வருமானமகவோ, செலவாகவோ இருக்கும் பட்சத்தில் வருமானவிகிதம் அறிய IRR Function in excel உபயோகபடுத்தலாம். நம்மில் பலர் சீட்டில் பணம் கட்டுபவர்களாக இருக்கலாம், சீட்டு முடிவில் நமக்கு எவ்வளவு லாபம் என்று பலருக்கும் புரிவதில்லை. சீட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில், வெவ்வேறு தொகை செலுத்திவருகின்றோம். நடுவில் பணம் கிடைக்கின்றது. இதன் லாபவிகிதம் அறிய IRR உபயோகபடுத்தலாம். அட்டவணை ( Table 2) பார்கவும். இதில் இரண்டு உதாரணம் கொடுக்கபட்டுள்ளது. இதன் மூலம், சீட்டில் , எவ்வளவு லாப விகிதம் கிடைக்கின்றது எனறு தெரிகிறது. சீட்டை வெவ்வேறு மாதங்களில் எடுக்கும் போது எவ்வாறு லாப விகிதம் மாறுகிறது எனறு தெரிகிறது. இது உதாரணமே, சீட்டின் லாபம், சீட்டுக்கு சீட்டு மாறுபடும்


Table 2 - Chit return calculation using IRR - in Excel
Chit Period
20 months





Chit Value
50000

Chit taken in 2nd month - sample 1

Chit taken in 19th  month - sample 2





Sample 1


Sample 2


Month
Cash in flow
Cash out flow
net ( cashin - cash out)
Cash in flow
Cash out flow
net ( cashin - cash out)
1

2500
-2500

2500
-2500
2
37500
2000
35500

2000
-2000
3

2000
-2000

2000
-2000
4

2000
-2000

2000
-2000
5

2000
-2000

2000
-2000
6

2000
-2000

2000
-2000
7

2000
-2000

2000
-2000
8

2000
-2000

2000
-2000
9

2000
-2000

2000
-2000
10

2075
-2075

2075
-2075
11

2125
-2125

2125
-2125
12

2175
-2175

2175
-2175
13

2225
-2225

2225
-2225
14

2275
-2275

2275
-2275
15

2330
-2330

2330
-2330
16

2400
-2400

2400
-2400
17

2425
-2425

2425
-2425
18

2475
-2475

2475
-2475
19

2495
-2495
47400
2495
44905
20

2500
-2500

2500
-2500

Monthly
IRR
1.9%
Monthly
IRR
0.9%

Yearly
IRR
22.7%
Yearly
IRR
10.8%


மேலும். நாம் எல்லா முதலீட்டையும், ஒரேநாளில் செய்வது இல்லை. பங்கு என்று வரும்போது அது உகந்த்தும் இல்லை. உதாரணமாக 10-05-2013 அன்று Rs 40000 பரஸ்பர நிதி திட்டங்களில் ( axis long term equity - elss)முதலீடு செய்திருப்போம். திரும்பவும் 29-08-2013 அன்று Rs 60000 அதே பங்கு / பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்திருப்போம். இப்படியாக 4 முறை முதலீடு செய்து மொத்தில் Rs 1,80,000 முதலீடு செய்திருப்போம். திரும்ப Rs 2,93,372 பெற்றால், லாப விகிதம்25.3%. ( Table 3) இவ்வாறு வெவ்வேறு கால இடைவெளியில், வெவ்வேறு தொகை வருமானமகவோ, செலவாகவோ இருக்கும் பட்சத்தில் வருமானவிகிதம் அறிய XIRR Function in excel உபயோகபடுத்தலாம்


Table 3 - Random investment - Return calculation using Xirr - date vs cash flows in excel
Fund Name




Axis Long term equity fund
Category
Tax savings  - ELSS
Period
36 months
Total amount invested
                      1,80,000
Value as on 10/5/2016 -29.97*9788
                      2,93,373


Invested at random based on the view of markets at that point of time
Date
Invested amount
nav
Units
Date
Cash flow
10-05-2013
40000
15.27
2619.515
10-05-2013
-40000
29-08-2013
60000
13.8
4347.826
29-08-2013
-60000
20-10-2014
40000
25.34
1578.532
20-10-2014
-40000
11-08-2015
40000
32.18
1243.008
11-08-2015
-40000
10-05-2016
29.97
9788.882
10-05-2016
                      2,93,373




Xirr
25.3%


இது ஒருபுறம் இருக்க, சில பங்கு நிறுவனங்கள், நாங்கள் 100% Dividend pay out தந்து உள்ளோம் என்பார்கள். ஆக நாம் போட்ட பணம் திரும்ப கிடைத்துவிட்டது என்றுதானே அர்த்தம். அது வெகு சிலருக்கு மட்டுமே. நமக்கு இல்லை. காரணம் 100% என்பது, பங்கின் முகப்பு விலையில் ( Face value of Rs 10) கூறுவார்கள். நாம் அந்த பங்கை சந்தையில் Rs 200 விலைக்கு வாங்கி இருந்தால் நமக்கு கிடைத்த லாப விகிதம் 5% ( 10*100%/200). இதற்கு Yield என்று பெயர். பங்கு / பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடுகளில் நமக்கு எவ்வளவு Yield என்று பார்பது மிகவும் அவசியம்

{Yield = (Face value x Rate of return) / Purchase price}. இந்த கட்டுரையில் உபயோகபடுத்தபட்டுள்ள Excel மாதரிகளை, Excel file ஆக பெற என்னை அனுகலாம். இதன்மூலம், Excel உபயோகபடுத்தி, லாபவிகிதம் அறியலாம். Excel தெரியாதவர்களுக்கு, மற்றொரு இதழில் Excel பற்றி படிப்போம் .



No comments:

Post a Comment