Tuesday 13 September 2016

விரல் நுனியில் தகவல்கள் - Technology: One touch away


This article has been recently published in "Nanayam Vikatan" dated 18/09/2016. Here's the link to read my article online, if you have online access in vikatan group. The same article is given below.

http://www.vikatan.com/nanayamvikatan/2016-sep-18/mutual-fund/123296-mutual-fund-tips.art

சமீபகாலமாக கையில் கருப்பு கலரில் ஒரு சென்சார் கட்டிக்கொன்டு திரிகின்றேன். அது எவ்ளோ தூரம் நடந்தேன் எவ்ளோ நேரம் தூங்கினேன் என்று என்னவெல்லாமோ, கையில் திரட்டிய தகவல்களை கைபேசியில் தருகிறது. காரணம்??? என்ன, தெரிந்ததுதானே!!! தகவல் தொழில்நுட்பம் தான்.. தற்போது யுவன்களும் யுவதிகளும் பயன்படுத்தும் செயலிகள் (Mobile Apps) நிறைய பேருக்கு சற்றும் பரிச்சியம் இல்லாதவை. ஆனால் பலன்களோ அதிகம் தான்!! இந்த தகவல் தொழில்நுட்பத்தை முதலீட்டு  தகவல்களை திரட்ட எப்படி பயன் படுத்தலாம் என்று பார்ப்போமா...

அன்றாடம் ஆயிரம் செயலிகள் (apps) வந்த வண்ணம் உள்ளன. விரல் நுனியில் வங்கி, பணம் என்றெல்லாம் வந்துவிட்டது. பரஸ்பர நிதி மட்டும் என்ன விதிவிலக்கா? அதுவும் உங்கள் ஆள்காட்டி விரலின் அடியில் தான் இருக்கிறது. தொடுங்கள், பெறுங்கள் யூனிட்டுகளை (unit). பரஸ்பர நிதி திட்டங்கள் பலருக்கு போய் சேரவில்லை என்று அரசாங்கத்திற்கு ஆதங்கம். திட்டங்கள் வைத்திருப்போரும் விடாமல் தினந்தோறும் படிவங்கள் பூர்த்தி செய்தவாறு உள்ளனர். இது மாற, எளிமையான புது உலகத்திற்குள் நுழைவோம்!! நேற்றுவரை KYC என்பது பெரியதொரு வேலை. இன்று அது maggi போல தான். புரிந்ததா?? online மூலம் இரண்டு நிமிடங்களில் adhaar அட்டையும், pan அட்டையும் இருந்தால் KYC தயார்!! தற்பொழுது kyc க்கு புதியதொரு நடைமுறை நடைமுறை வந்துள்ளது. இதனால் நாம் வங்கி கணக்கு, பரஸ்பர நிதி கணக்கு, அஞ்சல் அலுவுலக கணக்கு, காப்பீட்டு கணக்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக kyc செய்ய வேண்டாம். ஓர் இடத்தில kyc இருந்தால் போதுமானது. அது உங்கள் ஊருக்கு வர நாள் ஆகலாம், விசாரிப்பது உசிதமானது.

இரண்டாவதாக, வாங்குவதற்கோ, விற்பதற்க்கோ அதற்கான படிவங்கள் இல்லாதவர்கள் online மூலம் அணைத்து பரஸ்பர நிதி பரிமாற்றங்களை பண்ண முடியும். இதை கைபேசி செயலி மூலம் அல்லது கணினி , tablet மூலம் (மாத்திரை என நினைத்துக்கொள்ள வேணாம்..) அந்தந்த நிறுவனத்தின் வளையதளங்களுக்கு சென்று செய்ய முடியும். இந்த online வசதி பெறுவதற்கு பல படிவங்கள் பூர்த்தி செய்து, முத்திரை தாளில் கைநாட்டு போட்ட காலங்கள் மலையேறிவிட்டது. நாலே (4) கேள்வி தான்… பதில் சரியாக சொன்னால் அடுத்த நிமிடம், online access!! என்ன, நாலு கேள்வியை தெரிந்து கொள்ள ஆசைதானே..?? அந்த கேள்வியை நான் leak செய்து விடுகிறேன்!!
1) மின்னஞ்சல்
2) கைபேசி எண்
3) வங்கி கணக்கு எண்
4) பாண் அட்டை எண்

நீங்கள் ஒவ்வொரு நிதி நிறுவனங்களிலும் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தால் ஞாபகாமா online access வாங்க அதே மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டும். ஞாபக மறதி இருந்தால் சிக்கல் தான்!! பொதுவாக நான் கூறிய நாலு கேள்விகள் தான். ஆனாலும் அது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடலாம்.

ICICI Prudential பரஸ்பர நிதி நிறுவனத்தின் online access பெறுவதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம் - https://www.icicipruamc.com/ அதனுடைய தகவல் பக்கத்தின் மாதிரி இங்கு தரப்பட்டுள்ளது.


செயலி என்று வரும்போது android மற்றும் iphone ஆகிய கைபேசிகளுக்கு நிறைய நிதி நிறுவன செயலிகள் உள்ளன. ஆனால் windows கைபேசியில் பார்க்க அவ்வளவு செயலிகள் இல்லை. அதற்காக அவர்கள் கவலை கொள்ள தேவை இல்லை. அதே சேவைகளை கணினி மூலம் பெறலாம். online மூலம் என்ன தான் பெற முடியும் என்று பார்த்துவிடுவோம்...
1) உங்களது கணக்கின் சமீபத்திய மதிப்பு , யூனிட்களின் கூட்டு தொகை ஆகிய summary விவரங்களை பார்க்கலாம். ICICI Prudential மாதிரி summary sheet தரப்பட்டுள்ளது.


Folio
Fund Name
Balance Units
NAV
Cost Value
Dividend Reinvested Value
Current Value
GainLoss (in Rs)
Return (XIRR)
XXX
Infrastructure Fund
2,222
15.8
27,180
0
35,112
7,932
27.70%
XXX
Dynamic
2,319
22.2
30,018
10300
51,564
21,546
13.13%
XXX
India Recovery Fund Series 1
9,990
10.0
99,900
0
99,800
-100
-0.24%
XXX
FMP Series 64
990
12.7
9,900
0
12,590
2,690
8.39%
XXX
Interval Fund Series VI
1,500
12.4
15,000
0
18,557
3,557
9.11%

2) மேலும் சில தளங்கள் மட்டும், உங்களுக்கு கிடைக்கும் வருடாந்தர லாப சதவீதம் (XIRR) திட்டவாரியாக கிடைத்தது என்ற தகவலை தரும். மாதிரியில்  காண்பித்திருக்கும் summary sheet இல் XIRR காணலாம். ஆனால் எல்லா நிறுவன தளங்களும் இவற்றை காண்பிப்பது இல்லை. எல்லா தளங்களும் தர வேண்டும் என்று சட்டங்கள் வந்தால் நல்லது!

3) விரிவாக பார்க்கவேணுமெனில் உங்கள் எல்லா பரிமாற்றங்களும் (நிதி பரிமாற்றம், நிதி இல்லா பரிமாற்றம்) போன்ற விவரங்களை பெரும்பாலும் pdf file ஆக தரவிறக்கம் (download) செய்யலாம். நாம் மேற்கொண்டு கூட்டி கழித்து பார்ப்பதற்கு pdf file ஆக இல்லாமல் excel ஆக இருப்பது உத்தமம். ஆனால் எல்லா தளங்களும் இவ்வாறு excel ஆக கொடுப்பது இல்லை. கொடுத்தால் உபயோக படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பது என் அவா.

4) மேற்கொண்டு online மூலமாக நீங்கள் வாங்க விற்க, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற முடியும் (switch)

5) முன்னர் கூறியபடி நிதி அல்லாத பரிமாற்ற சேவைகள் சிலவற்றை online மூலம் செய்யலாம். ஆனால் மிக முக்கியமாக வங்கி கணக்கு எண் மாற்றுவது போன்றவற்றை online மூலம் செய்ய முடியாது. காரணம்?? நமது நன்மைக்காக தான்... அதற்கு முதலீட்டாளர்கள் கையெழுத்திட்ட படிவங்கள் தேவை.

6) சமீபத்தில் அனைவரும் கடந்த வருட வரி கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்த்திருப்பீர்கள் (IT Return) , இந்த வரி கணக்கு சமர்ப்பிப்பதற்கு முக்கிய தேவை, பங்கு அல்லது பரஸ்பர நிதிகளில் எவ்வளவு லாப நஷ்ட விவரம் வேண்டும். இவற்றை மிக எளிதாக online மூலம் பெற்றுவிட முடியும். மேலும் உங்களுக்கு எவ்வளவு டிவிடெண்ட் கிடைத்தது என்பதையும் இந்த தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். வரி கணக்கு சமர்ப்பிப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும். இந்த capital gain , dividend distribution விவரங்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணக்காளர்களிடம் (auditor ) கொடுத்து விடலாம். இல்லை நீங்களே online மூலம் வரி கணக்குகளை சமர்ப்பிக்கும் முறைகளும் உள்ளன. அதை பற்றி தெரிந்து புரிந்து கொண்டு கணக்காளர்கள் இல்லாமல் நாமே நேராக return file செய்து விடலாம்.

தற்சமய நிலவரபடி இந்த செயலிகள், இணையதள உபயோகங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு ஆகும் செலவை திட்ட செலவினங்களோடு சேர்த்துவிடுவார்கள். எனவே ஏன் இன்னும் தயக்கம்?? நல்ல பயன்களை அனுபவித்து கொள்வோம். இதனால் நிதி நிறுவனங்களுக்கு நேரே செல்லும் பெட்ரோல் செலவு சிக்கனம் ஆகலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது தானே!! இதே போல் நாம், நமக்கு வரும் தகவலை ஈமெயில் மூலமாக பெறுவதால் காகிதங்களில் அச்சிடப்படுவது குறைகிறது. இது சுற்று சூழலுக்கு மிகவும் நல்லது. எனவே பங்கு, பரஸ்பர நிதி உபயோகிப்பவர்கள் வருடாந்திர கணக்கு புத்தகங்களை (Annual Report ) ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.

No comments:

Post a Comment