முதலீட்டு வகைகள் , அதன் நெளிவு சுளிவுகள், லாபம் ஈட்டும்
தன்மை என்று பலவாறு பார்த்தோம். அடுத்து எல்லோருக்கும் எழக்கூடிய சகஜமான கேள்விகள்
என்னென்ன?
1) பல பரஸ்பர
நிறுவனங்கள் உள்ளன
2) நமக்கு பிடித்த
முதலீட்டு வகையிலேயே பல திட்டங்களும் உள்ளன. உதரணமாக, நாம் கேட்கும் சம விகித பங்கு/கடன் திட்டங்கள் உள்ளன
3) இதில் பிரம்மப்ரயர்தனம்
என்னவென்றால்... இவைகளில் எதை நாம் தேர்வு செய்வது??
பங்கு வர்த்தகத்தில் ஜெய்க்கும் குதிரையை நாம் தேர்வு செய்வது கடினம் ஆனால் பரஸ்பர நிதிகளில் குதிரையை தேர்ந்தெடுப்பது சுலபம் தான். இதில்லாபம் கிடைக்க வாய்புகள் மிக அதிகம். இன்னும் ஒரு கூடுதல் போனஸ்... இதில் நமக்கேற்றவாறு சேவையும் நன்கிருக்கும். அதை எப்படி சல்லடை போட்டு சலித்து தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இனி பார்க்கலாம் வாருங்கள்!!
முதலாவதாக, எந்த பரஸ்பர நிதி நிறுவனத்தில் முதலீடு செய்கிறோம் என்று முடிவு செய்யவேண்டும். சற்று பெரிய நிதி மற்றும் நல்ல நிதி மேலாண்மை உள்ள நிறுவனமாகவும் தேர்வு செய்யலாம். அட்டவணை 1'ல் பரஸ்பர நிதி நிறுவங்களின் பெயரும் அதன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை பார்க்கலாம். (AUM - Assets under Management)
Mutual fund
house AUM data as on 31/3/2016 - Table 1 (Figure in Lakhs. Source: AMFI Data)
|
|
Mutual Fund Name
|
Average AUM
|
ICICI Prudential
Mutual Fund
|
1,75,88,087
|
HDFC Mutual Fund
|
1,75,77,939
|
Reliance Mutual
Fund
|
1,58,40,845
|
Birla Sun Life
Mutual Fund
|
1,36,50,341
|
SBI Mutual Fund
|
1,06,78,078
|
UTI Mutual Fund
|
1,06,30,922
|
Franklin
Templeton Mutual Fund
|
66,94,692
|
Kotak Mahindra
Mutual Fund
|
58,49,515
|
IDFC Mutual Fund
|
52,12,899
|
DSP BlackRock
Mutual Fund
|
39,13,331
|
Axis Mutual Fund
|
37,68,787
|
இரண்டாவதாக, நாம் தேர்வு செய்யும்
நிறுவனம் நல்ல சேவை அளிக்குமா என்று பார்க்கவேண்டும். சேவை என்று வரும்பொழுது தற்போதுள்ள "Technology" யுகத்தில் அந்த நிறுவனத்தின்
திட்டங்களைப் பற்றி தகவல் வாங்குவது ( buy), விற்பது (Redeeem) , ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுவது ( Switch) , சொத்து மதிப்பு பார்ப்பது ( Networth) வாடிக்கையாளர் சேவை தரம் , பதில் அளிக்கும்
வேகம் ஆகியவற்றை பரிசீளிக்கவேண்டும். இதெல்லாம் பார்த்த பின், இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களை
தேர்ந்தெடுங்கள். அடுத்து, அந்த
நிறுவனங்களின் சிறந்த திட்டங்களை எப்படி தேர்வு செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.
திட்டத்தின்
செலவினம் (Expense ratio): நாம் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் செலவினம்
குறைவாக இருக்குமாறு தேர்வு செய்யலாம். ஏனெனில் நமக்கு கிடைக்கும் லாப விகிதம்
திட்டத்தின் லாபத்தில் செலவினம் போக மீதம் தான் நமக்கு கிடைக்கும்.
திட்டத்தின் லாப
விகிதம் பரஸ்பர நிதிகளில் பங்குத் திட்டங்களில் லாப விகிதத்தை 3, 5, 10 வருட இடைவெளியில் எவ்வாறு கிடைத்துள்ளது என்பதை பார்த்து
தேர்வு செய்யலாம். பங்கு திட்டங்களில் 1 வருடத்திற்கு குறைந்த லாப
விகத்தை பார்க்கும்பொழுது Absolute return பார்க்க வேண்டும். இதை ஆண்டிற்கு மாற்றி பார்ப்பது அவ்வளவு உசிதம் அல்ல.
உதரணமாக , பங்கு திட்டங்களில் ஒரு காலாண்டில் 10% லாபம் கிடைத்தால்
அதை வருடத்திற்கு 40% என்று எண்ணி வருடா வருடம் 40% கிடைக்கும் என்று கொள்ளக்கூடாது. இருந்தாலும் 5 - 10 வருடங்களில்
நிலையான லாபம் தந்திருந்தால் அந்த நிதி திட்டம் நல்ல நிதி மேலான்மையோடு
செயல்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளவும்.
Alpha, விகிதங்கள்: ஆல்பா என்பது நமது திட்டம் சந்தையின் லாபத்தை விட எவ்வளவு
அதிகமா தந்துள்ளது என்பதாகும். உதரணமாக, ஒரு வருடத்தில் மும்பை
பங்கு சந்தை குறியீடு எண் 17% ஏற்றமாக இருக்கும்போது நமது திட்டம் 22% ஏறி
இருந்தால் ஆல்பா என்பது 5%. எனவே நாம் தேர்ந்தெடுக்கும் திட்டம் ஆல்பா தரும்
திட்டமாக இருக்க வேண்டும். இங்கு இன்னொரு தகவல், நிதி திட்டங்களில், மற்றொரு
வகை பிரிவும் உள்ளது. ஒன்று, Active Investing என்று பெயர். அடுத்து Passive investing முதல் வகையில், திட்ட மேலாளர் Fund Manager திட்டத்தை நன்கு பராமரித்து, Alpha தரவேண்டும். இதில் Expense ratio சற்று கூடுதலாக இருக்கும்.
Beta விகிதங்கள்: அடுத்ததாக எல்லார்க்கும் தெரிந்த விஷயம் தான்... சந்தை
ஏறும்போது நமது திட்டத்தின் மதிப்பு கூடுகிறது. அதேபோல் இறங்கும் போது
இறங்குகிறது. இதைத்தான் பீட்டா என்று கூறுவார்கள். நமது திட்டத்தின் ஏற்ற இறக்கம்
சந்தையோடு ஒத்து இருந்தால் பீட்டா 1
என்று பெயர். திட்ட
மேலாளர் திறமையில் நம்பிக்கை வைக்காதவர்கள், சந்தை குறீயீட்டு என் சார்ந்த திட்டங்களில்
( index funds) மூதலீடு
செய்யலாம். இதற்கு Passive investing என்று
பெயர். இதில் Expense ratio சற்று
குறைவாக இருக்கும். நமது லாபம் சந்தையை ஒட்டியே இருக்கும்.
Beta 1 ஆக இருக்கும்.
Sharpe Ratio : நமது திட்டத்தின்பீட்டா எண் குறைய குறைய திட்டத்தின் ஏற்ற இறக்கம் சந்தையின்
ஏற்ற இரக்கத்தை விட குறைவாக இருக்கும். எனவே, ஆல்பா அதிகமாகவும் பீட்டா குறைவாகவும் இருக்கும் திட்டங்களை நாம் தேர்வு
செய்யவேண்டும். இது இரண்டையும், மேலும் திட்டத்தின் ரிஸ்கையும் சேர்த்து
பார்ப்பதற்கு உள்ள விகிதத்தின் பெயர் Sharpe Ratio. இது positive எண்ணாக இருக்க
வேண்டும்.
நிதி நிறுவன அறிக்கைகளை எடுத்து இந்த விவரங்களை பார்த்து "நமக்கு
நாமே" முடிவு செய்து திட்டத்தை தேர்வு செய்வது சற்று கடினம் தான்...
நமக்கு வாழைபழத்தை உரித்து கொடுத்தால் தானே சாப்பிட்டு பழக்கம்!! ஒரு சில ஆச்சிமார்கள் மாம்பழத்தை தோல் சீவி, நறுக்கி, நன்றாக இருக்கிறதா, இனிக்கிறதா என்றெல்லாம் பார்த்து செட்டியாருக்கு சாப்பிட குடுப்பது போல
(செட்டியார்களுக்கு ஆசைதான்), இந்த திட்டங்களை அலசி ஆராய்ந்து முதலீடு செய்ய
ஏற்றதா என்று திட்டங்களை தர வரிசை படுத்தி நட்சத்திர குறியீடு குடுக்கும்
இணையங்கள் சில உள்ளன. 5 நட்சத்திர
திட்டங்கள் மேலானவை. 1 நட்சத்திர திட்டங்கள் தவிர்க்கவேண்டியவை. இது
போன்று தர வரிசை தரும் இணையங்கள், இதோ உங்களுக்காக
சில:
1) http://www.morningstar.in/
2) https://www.valueresearchonline.com/
1) http://www.morningstar.in/
2) https://www.valueresearchonline.com/
Morning star என்பது அமெரிக்க
இணையதள நிறுவனம். இதன் இந்திய இணையதளம் எந்த நிதி நிறுவன சார்பும் இன்றி நடு
நிலையாக திட்டங்களை ஆராய்ந்து தர வரிசை அளிக்கிறது.
Value research online என்பது இந்திய பரஸ்பர நிதி இணையத்தளத்தில் முதன்மையான
ஒன்று. இதன் தரவரிசையும் தரம் வாய்ந்ததுதான்.
நாம் நல்ல
திட்டங்களை தேர்வு செய்ய கீழ் கண்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
1) திட்டம் எந்த வகையை சார்ந்தது - பங்கு, கடன், கலப்பு
2) இது Growth வகையா, value வகையா
3) Large, small, midcap வகையா
4) 3 , 5 வருட லாப விகிதங்கள்
5) திட்டம் எந்த பங்குகளில்
- கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது என்ற முழு விவரம்
6) திட்டத்தின் டிவிடெண்ட் குடுத்த
சரித்திரம்
7) நான் மேல் கூறிய expense ratio, alpha,
beta, sharpe ratio ஆகிய விவரங்கள்
இவற்றை பார்த்து
திட்டங்களை முடிவு செய்வது நல்ல பலன் தரும் என்று எதிர் பார்க்கலாம். மேலும் ஒரு எச்சரிக்கை.. கடந்த கால லாப விகிதங்கள் மற்றும் தரவரிசை எல்லாம், ஒரு குறியீடே! அதே போல் எதிர்கால லாபம் இருக்கும் என்று நிச்சியம் இல்லை என்று புரிந்துகொள்ளவேண்டும். இந்த கட்டுரையில் கூறிபடி, நல்ல திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். லாபம் சந்தையின் கையில்
No comments:
Post a Comment